சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
கேரளா கலாகவ்முதி இதழ் : ஜனவரி 2025
எழுத்தும் வாழ்க்கையும் :சுப்ரபாரதிமணியன்:
எழுத்துலகம் 50 ஆண்டுகள்...
நவீன தமிழ் இலக்கியவாதிகளில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் சுப்ரபாரதிமணியன். நாவல்கள் சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகள் , திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் என நூற்றுக்கும் மேலான நூல்களை சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ளார். சமகால இலக்கியவாதிகளில் இவர் மிகவும் எளிமையானவராய் சாதாரண மக்களில் ஒருவனாய் வாழ்கின்றார். புதிய நல்ல பல எழுத்தாளர்களை இனம் கண்டு அவர்களை முன்னேறச் செய்து காணும் சிறப்புகள் கொண்டவர் சுப்ரபாரதி மணியன். இவரின்எழுத்துலக வாழ்க்கைக்கு இப்போது 50 ஆண்டுகள்
தமிழகத்திலிருந்து பரவலாக எழுதுகின்ற எழுத்தாளராக திகழும் இவர் திருப்பூரின் டெக்ஸ்டைல் தொழிலாளிகளின் துயரம் நிறைந்த வாழ்வினை மற்றும் இன்னல்களைக் குறித்து வாசகர்களுகளையும் விமரிசர்களையும் தமது எழுத்தால் அவர்களது கவனத்தை ஈர்த்தவரே சுப்ரபாரதிமணியன்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களும் கண்ணீரும், ஆசைகளும், நிராசைகளும், கனவுகளும் இவர் படைப்பில் நிறைந்து காணப்படும்.
திருப்பூரில் தொழிலாளிகளின் வாழ்க்கையை விவரிக்கும் "சாயத்திரை"எனும் நாவல் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத அபூர்வ சிருஷ்டி. சாயத்திரை நாவலுக்கு மிகச்சிறந்த நாவலுக்கான விருதை தமிழக அரசு வழங்கி கெளரவித்துள்ளது. சாயத்திரை ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல பல்கலைகழகங்களில் இவர் நூல்கள் பாட நூல்களாகவும் திகழ்கின்றது. இந்திய குடியரசுத் தலைவரின்
சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருதான "கதா புரஷ்காரம்" சுப்ரபாரதிமணியனுக்கு வழங்கப்பட்டுள்ளது 2020ம் ஆண்டில் "அன்னியர்" எனும் நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 2021ல் ஷார்ஜா புத்தகமேளயில் இவர்க்கு "புக்கிஷ்" விருதும் வழங்கினார்கள். இவருடைய நேர்முக உரையாடல்களை தொகுத்து சுப்ரபாரதிமணியன்ஒரு நூலாக காவ்யா பதிப்பகம் அன்மையில் வெளியிட்டுள்ளது.
சுப்ரபாரதிமணியன் கனவு எனும் மும்மாத இதழை 1987 முதல் நடத்தி வருகின்றார். கனவு ஃபிலிம் சொசைட்டியின் தலைவவராகவும் இருந்து வருகிறார். இவர் இங்கிலாந்து ஜெர்மனி, பிரான்சு, சிங்கப்பூர், மலேசியா,இந்தோனேசியா, பங்களாதேஷ், சிலோன், துபாய், ஷார்ஜா, அபுதாபி, இஸ்ரேல் வியட்னாம் ஆகிய இடங்களுக்கு தமிழார்வலராகவும், ஆளுமையாகவும் சென்றுள்ளார்.
சுப்ரபாரதிமணியன் " ஒன்பது திரைக்கதைகள் “ எனும் நூல் 2024 - ம் ஆண்டு, ஏப்ரல்மாதத்தில் வெளிவந்துள்ளது.
ஆர்.முத்து மணி இந்நூலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். திருப்பூரில் கனவு பிரசுரமாக இந்நூல் வெளியிட்டுள்ளது. மே மாதம் 2024 ல் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் பூஜைப் புரைத் தமிழ்ச் சங்கம் தலைமையில் இந்நூல் வெளியீடு நடந்தேறியது.
கவியும் எழுத்தாளருமான பி.ரவிகுமார் நூலை வெளியிட ,சரித்திர ஆய்வாளரும் எழுத்தாளருமான முனைவர். மோதிலால் நேரு அதை ஏற்று வாங்கினார். கவியும் நாவல் எழுத்தாளருமான க.வானமாமலை தலைமை வகித்தார்.
இந்நூலானது ஒரே மூச்சில் வாசிக்க கூடிய ஒன்றாகும். இதில் மதிமுகம், கோமணம், விமோசனம், சாயத் திரை ஆகியவரை நமது இரவையும், பகலையும் வேட்டையாடி ஆளுமை செய்யும். ஆழத்தில் வாழ்க்கை எதார்த்தங்களை இப்படைப்புகளில் இதயத்தை தொடுகின்ற எழுத்துகளால் சுப்ரபாரதி மணியன் வேறுபட்டதும் மிகச்சிறந்த கருத்துகளால் நிறைவு செய்துள்ளார்.
இந்நூலை வாசிக்கும் போது நெஞ்சை பிழிந்து ஆவலைத் தூண்டும் உணர்வுகள் மேலிடும். இந்த நூலில் ஆபாசம் சிறிய அளவில் கூட காண முடியாது. இக்காலத்திரைப்படங்கள் கூறுவது எதார்த்த வாழ்க்கையுமாக எந்த தொடர்புமில்லாதவை.
சுப்ரபாரதிமணியனின் கதைகள் திரைப்படங்களாக வரவேண்டும். வாழ்க்கையில் பொது நன்மைக்கான ஆழ்ந்த பார்வைகளே இவர் படைப்புகள் நம்மை தூய்மைப்படுத்தும் உயர்த்தவும் செய்யும்.
இவரது தமிழ்த் தொண்டானது மென்மேலும் சிறக்க வேண்டும்.
மொழியாக்கம் : கல்பனா ஜெயராம்