சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 19 பிப்ரவரி, 2025

கனவுகளின் வரைபடம் நாவல் : பெர்லின் வாழ் கருணாகரமூர்த்தி பலஆண்டுகள் வாசிப்பில் பழக்கம். அப்புறம் 1993 ல் பெர்லின் சென்ற போது சில நாட்கள் அவருடன் இருக்க முடிந்த வாய்ப்பு . எப்போதும் நினைவில் இருக்கும் ஞாபகங்கள் கருணாகரமூர்த்தி அவர்களின் எழுத்தில் இலங்கை மொழி வளமையும் கிண்டலும் எனக்குப் பிடித்தவை. ரசித்துப் படிக்க வைக்கும். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்களுக்கு இது சாதாரணம் இவர்கள் இலங்கை வாழ்கை, இலங்கையின் பால்ய பருவம், விடுதலை இயக்கச் செயல்பாடுகள், புலம் பெயர்தல், அங்கு சிரமதிசைகள், காதல் காம வாழ்க்கை.. பிறகு எப்பவாவது இலங்கை திரும்புதல் , அடைக்கலமாவது அல்லது மீண்டும் புகலிட நாட்டில் அடைக்கலம் என்பதாய் அவர்கள் எழுதும் நாவல்கள் அமையப் பெறுவது, சாதாரணம் இந்த சாதாரணத்தை அசாதரணமாக இந்த நாவலில் கையாண்டிருக்கிறார் நண்பர். பலஆண்டுகள் வாசிப்பில் பழக்கம். அப்புறம் 1993 ல் பெர்லின் சென்ற போது சில நாட்கள் அவருடன் இருக்க முடிந்த வாய்ப்பு . எப்போதும் நினைவில் இருக்கும் ஞாபகங்கள். ஞாபகங்கள் சாசுவதமானவை. இந்த நாவலைப் பற்றிய ஞாபகங்கள் கூட அப்படித்தான் இனி இருக்கும் . இலங்கையின் யோகபுரம். இது சொந்த ஊரா. இயல்பான பெயரா.. அங்கு இருக்கும் அத்தி மரம் முதல் சாதாரண மனிதர் கள் வரை பலரின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. அத்திமரம் புயலால் அலைவுறுவதைச் சொல்வதன் வழியே அந்த ஊர் மனிதர்களின் சிரமங்களும் சந்தோசமான கணங்களும் தெரிய வருகின்றன நாவலின் கதாநாயகன் பரம்குருவின் குடும்பக்கடமைகள், காந்திய இயக்க செயல்பாடுகள் ஆரம்பத்தில் கவனத்திற்குரியவை. பையன் இளம்பருதி . சுபாஷினி பிஸ்டல் பெண்ணாக அறிமுகம் .சந்தியார் உரை சிறப்பானவை. சோத்துக்கு வழியில்லாதவர்கள் கோசலிசம் பற்றிய விவாதம் எல்லாம் சுவாரஸ்யம். போராளிகள் வாழ்க்க்கை விரிவாகச் சொல்லப்படுகிறது. போராளி விசுவானந்தர் காணாமல் போகிறார் .. சிங்களவர் மத்தியில் பகைமையுடன் வாழ்க்கை.பாலியாற்று மாந்தர்களும் வந்து போகிறார்கள். சுபாஷிணி நாவல் தந்தாள் .கூடவே இரவு கூடலும் தந்தாள் குருவுக்கு. பாரிஜாதம் இளம் விதவையும் சபலப்படுத்துகிறாள். துப்பாக்கி ரவைகளுக்கு அரசியல் தெரியாது என்ற பாடங்களும் தரப்படுகின்றன.ரகுந்நன், அம்பேத்கார் போன்றவர்களும் வருகிறார்கள் இந்திய மண்ணில் ராணுவப் பயிற்சி பிறகு திரும்புதல். ஏதேதோ காரணங்களால் கடவுச்சீட்டும் தஞ்சமடைதலும் நடைபெறுகிறது.. கனடா நாட்டு லாட்டர் பரிசு விழுந்து அதன் அனுபங்களும் இளம்பரிதிக்குக் கிடைக்கின்றன. காதல் திருமணம், வீட்டுத்திருமணம் விசேசங்களாகிறது. கனடா நாட்டு சூழல் விவரிப்புகள் உயிருள்ளவை. வர்ஷிதாவோடு திருமணம் . அவள் குறித்து மொட்டைக்கடிதங்கள் வருகின்றன். கணவன் மனைவி மன சிரமங்கள் . அதிரன், அருவி என்று குழந்தைகள் இளம்பரிதிக்கு இலங்கைக்கு மீள ஆசை. வர்ஷிதாவும் வருகிறாள். பிறகொரு நாட்டின் தயவில் வாழும் குற்றவுணர்ச்சி, வாழ்விடத்தை விட்டு விரட்டப்பட்ட ஞாப்கங்கள், பெற்ரோர் சந்திப்பு என்று இலங்கையில் அனுபவங்கள். இலங்கையில் விவசாயப் பண்ணையோடு வாழ வர்ஷிதாவுக்கு ஆசை. பேரின்பம் தென்றலாக வந்து போகிறது. நீர்ப்பாசனம் , மரவகைகள் முதற்கொண்டு இயற்கை குறித்த புரிதல்கள் விரிவானக் களத்தைத் தருகின்றன. சந்யாசிக்கு சம்சாரம் தெகஞ்ச மாதிரி பல அனுபங்களும் இருவருக்கும் வாய்க்கின்றன. சித்தாந்தம், செல்னெறி , தேடல்கள்கடுனான கனவு வாழ்க்கை தொடர்வதை நாவல் முழுமையாகச் சொல்கிறது . சுவாரஸ்யமான வாசிப்புக்கு இட்டுச்செல்லும் பேரின்பம் கிடைக்கிறது. இந்த பேரின்பத்தை கருணாகர மூர்த்தி அவர்கள் தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டேயிருக்கிறார் தமிழ் படைப்புகள் மூலம் என்பதும் வரம்தான். -சுப்ரபாரதிமணியன்