சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 19 பிப்ரவரி, 2025

கண்மணியும், அவரின் காதல் நிலமும் சுப்ரபாரதி மணியன் நல்ல பெயர் எடுக்க வேண்டும் தான்.. ஆனால் யாரிடம் நல்ல பெயர் எடுப்பது. அந்த நல்ல பெயர் முத்திரையைத் தருகிற மனிதனுடைய நியாயங்கள் எப்படி இருக்கின்றன என்று நியாயத்தின் பக்கம் எப்போதும் என்று பேசுகிறவர் கண்மணி. பணம் , அந்தஸ்து சார்ந்து அக்கறையாய் கேள்விகள் எழுப்புகிறவர். அவருடைய பெரும்பான்மையான படைப்புகளில் இந்த நியாயத்தின் அக்கறையும் அறம் சார்ந்த கருத்துகளும் இருந்திருக்கின்றன.. இந்த சிறுகதைகளில் கூட அந்த அம்சம் இருக்கிறது. அதற்காக அவர் உடன் பயணப்படுகிற கலை, இலக்கிய சக மனிதர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் இதன் மையங்கள் சார்ந்து.. வெளியே நீர் பரப்பாக விரிந்திருக்கும் கடல் உள்ளுக்குள் ஆயிரம் கதைகளை மறைத்து வைத்திருக்கும் என்று அவர் சொல்வது போல் கண்மணி அவர்கள் தன் திரைப்பட பணியினுடைய இப்படி ஆயிரம் கதைகளை சுமந்து கொண்டு திரிகிறார்.. அவையெல்லாம் இப்படி சிறுகதைகளாக, தொகுப்புகளாக, திரைப்படங்களாக வந்தால் நன்றாக இருக்கும் ஆனால் அவையெல்லாம் அவர் மனதில் புதைந்து கிடக்கின்றன. இதற்கு காலமும் மனிதர்களும் சரியான ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த கதைகளில் உள்ள மனிதர்கள் சார்ந்த சித்தரிப்புகளும் அதன் மீதான தரிசனமும், நிலம் சார்ந்த விவரிப்புகளும் இறுதியில் அது கொண்டு செல்லும் நியாயமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை அவரின் நிலம் சார்ந்தக் கதைகளில் இறுதியில் ஒரு மாற்றம் திருப்பம் இருந்து கொண்டிருக்கிறது இது மரப ரீதியான சிறுகதைகளின் திருப்பமாக இருக்கிறது. வடிவ ரீதியாகச் சிறுகதையை புரிந்து கொள்ளும் இளம் வாசகன் இந்த திருப்பத்தை சரியாகவே புரிந்து கொள்வான். பாவைக்கூத்க்காரர்களிடம் தென்படும் அன்பும் நியாயமும் அந்த பெண்கள் சார்ந்த கோபமும் சரியாக வெளிப்பட்டிருக்கிறது. பஸ் பயண நேரத்து மனிதர்களாகட்டும். தொழுகை நேரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகட்டும், வெளிநாட்டில் இருந்து ஊர் திருப்பி அவன் பயணப்படுகிற நேரத்தில் அவன் எதிர்கொள்ளும் மனித உறவுகள் ஆகட்டும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து இந்த கதைகளை உருவாக்கி இருக்கிறார் களத்தில் காணப்படும் மையங்களும் அதை சொல்கிற நேர்த்தியும் எளிமையும் சிறப்பாக இருக்கின்றன. . மகிழ்ச்சியாக இருக்கிற ஒரு தருணத்தை அவர் ஒரு கவித்துவமாக சொல்கிறார் : தான் இன்றுதான் பூப்பெய்தியதாக உணர்ந்தாள் என்று. இப்படி கவித்துவமான வார்த்தைகளை ஒவ்வொரு சிறுகதைகளிலும் தேடி எடுத்துக் கொள்ளலாம் . சாவுகள் நிறைய வருகின்றன. அந்த சாவுகள் தரும் வெளிச்சப் புள்ளிகள் வித்தியாசமானவை. ஓர் ஊரின் நடப்பு விசயங்கள் சார்ந்து எழுதும் கடிதம் ஆனால் அந்த கடிதம் பயனில்லாதபடி வந்து சேரும் தந்தி .அது திரும்பத் தரும் ஒரு திருப்பம்…. இதுபோல் மனிதர்கள் கடிதம் எழுதுவது போல பேசிக் கொண்டே இருக்கிறார்கள் தங்களின் ஜீவனான மொழியில், பல சிற்பங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள், அந்தச் சிற்பங்களின் சிறப்புகள் பற்றி கண்மணி அவர்கள் தன் கதைகளை சொல்லிக் கொண்டே இருக்கிறார். இந்த திருப்பங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிக்க வைக்கும் திருப்பங்களாகவும் அமைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியானது சுப்ரபாரதி மணியன், திருப்பூர்