சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
நெல்லியம்பதி
இருவாட்சிப்பறவையைக் கண்டதும் கனகராஜ் மகிழ்ச்சி அடைந்தார். நான் மூன்று முறை வந்திருக்கிறேன். இருவாட்சிப் பறவை தட்டுப்பட்டதில்லை. இம்முறை தட்டுப்பட்டது என்று மகிழ்ச்சி அடைந்தார்,
தேடியதில் மலபார் அணில் கண்ணில்பட்டது. அணில் என்றால் நம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் குட்டி அணில் என நினைக்க வேண்டாம். நம்மை மிரட்டும் அளவிலிருக்கின்றன மலபார் அணில்கள்
கண்ட நெல்லியம்பதி :
நெல்லியம்பதி எனும் மலைத்தலம் கேரளத்தில் பாலக்காடு அருகில் நெம்மாரா எனும் ஊரிலிருந்து 30 கிமீ மலைப்பாதையில் பயணம் செய்து இவ்விடத்தை அடைய வேண்டும்.
குறுகிய வளைவுப்பாதைகள் நிறைய உள்ளன. சில காட்சி முனைகள், ஆரஞ்சு பண்ணை, அணைக்கட்டு முதலிய சுற்றுலா இடங்கள்உள்ளன .
Green Fields resort என்ற ஓர் அழகிய தங்குவதற்கு ஏற்ற இடம் உள்ளது . இங்குள்ள பசும்புல்வெளி, நீரோடை, அரிய வகை ஆடுகள், பறவைகள் மனம் கவர்கின்றன. வன விலங்குகளையும் அங்கு இரவில் காணலாம். வழி நெடுக அடர்ந்த காடுகள் காபி தேயிலைத் தோட்டங்கள், இதமான குளிர்ந்த காற்று பயணத்தை இனிதாக்குகிறன.
இந்தச் சுற்றுலாவின் முத்தாய்ப்பே கரடு முரடுமாய் மற்றும் மேடுபள்ளமுமாயுள்ள பாறைப்பாதையில், அடர்ந்த காட்டினூடே ஜீப்பில் பயணிக்கும் off road trekking தான். இதற்கென பிரத்யேகமான மகேந்திரா ஜீப்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன.வாடகை ஜீப்புக்கு 1800 முதல் 2000 வரை வாங்குவார்கள். ஐந்து அல்லது ஆறு நபருக்கு ஒரு ஜீப் என அமர்த்தி கொள்ளலாம். பாறைகள் மீது தத்தித் தத்திச் செல்லும். வண்டியின் அபரிதமான குலுக்கலில் இடுப்பும் தலையும் அடிபட வாய்ப்புகள் அதிகம். சில இடங்களில் நான்கு சக்கர சுழற்சியில்(Four wheel drive) மட்டுமே வண்டி ஏறுகிறது. ஓட்டுநர்கள் அசாத்திய திறமைசாலிகளாயுள்ளனர். மூத்தோர் இதனைத் தவிர்த்தல் நலம். பயணத்தில் இரண்டு காட்சிமுனைகளில் இயற்கை அழகை ரசிக்கலாம். இறுதிக் காட்சி முனையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகு கண்கொள்ளாக் காட்சி. திரும்பும் வழியில் ஆரஞ்சுப் பழங்கள் மலிவான விலைக்கு கிடைக்கும் . மாலையில் வாகனங்கள் மலைஏற அனுமதி இல்லை.
நெல்லியம்பதியிலிருந்து திரும்பி வரும் போது இயற்கை அழகு மிக்க போத்துண்டி டேமில் சிறிது நேரம் செலவிடலாம்.சென்று செலவிட்டோம்.
• ஆரஞ்சு தோட்டம் ஞாயிறு விடுமுறை டிசம்பர் சீசன். பூக்காதவை கண்ணில் பட்டன.
• ஆரஞ்சு பழங்களும் கிடைக்கவில்லை சுவைக்க. காபி, தேயிலைத் தோட்டங்கள்.. நல்ல சுவையான தேனீர் கிடைத்தது.
• அதிக இரைச்சல் இல்லாத அமைதியான மலைப்பாதை. வளைந்து வளைந்து மலையேறும் சாலையில், எப்போதாவது வாகனங்கள் கடந்து செல்லும். மலை உச்சியில் இருந்து பாலக்காட்டின் அழகை பார்த்து இரசிக்க காட்சி முனைகளும் உண்டு. அங்கு சற்று நேரம் இளைப்பாறி விட்டு, புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடரலாம். சாலைகளில் ஆங்காங்கே யானை சாணங்கள் கிடப்பதை பார்க்கலாம். வால்பாறையின் சாயலை, நெல்லியம்பதி ஒத்திருக்கும். தேயிலை, காப்பித் தோட்டங்கள் அப்பகுதி மக்களின் வாழ்வாதாராம். அதிகளவிலான கடைகள் இருக்காது. மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படும்.
சீதார்குண்டு காட்சி முனை முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சூஸைட் பாயிண்டும் உள்ளது. இங்கிருந்து கேரளாவின் பள்ளத்தாக்கு காட்சிகளை கண்டு மகிழலாம். மலை உச்சியை ஒட்டிச் செல்லும் ஒற்றையடி பாதை நடப்பது திரில்லாக இருக்கும். சற்று தூரம் நடந்தால் 100 மீட்டர் உயரமுள்ள சீதார் குண்டு நீர்வீழ்ச்சியை கண்டு இரசிக்கலாம். கூகுளில் நெல்லியம்பதி எனத் தேடினால், முதலில் வரும் கூஸ்பெர்ரி மரங்கள் நெல்லியம்பதியின் அடையாளம். அம்மரத்தை இங்கு காண முடியும். இப்பகுதி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது.
அங்கிருந்து தேயிலைத் தோட்டங்கள் வழியாக சென்றால் காரப்பாரா தொங்குப்பாலத்தை அடையலாம்.. விடுமுறை நாட்கள் தவிர்த்த நாட்களில் அதிக கூட்டம் இருக்காது. இயற்கைச் சூழலில் அழகான புகைப்படங்கள் எடுக்க அருமையான இடம். இதற்கு அருகே காரப்பாரா அருவியும் இருக்கும். மழைக் காலங்களில் மனதை கவர்ந்திழுக்கும் ஓரிடம். இதேபோல பலக் காட்சி முனைகளும், அருவிகளும், இரம்மியமான சூழலும் இயற்கையின் கொடையாக விரிந்து கிடக்கின்றன.
ஜீப் டிரெக்கிங். அது சாகசங்கள் நிரம்பிய ஆப் ரோடு பயணம். அது நாம் நினைப்பது போன்ற குண்டும் குழியுமான சாலை அல்ல. குண்டும், குழியும் தான், சாலையே. வளைந்து நெளிந்து ஏறும். நெத்தலும் குத்தலுமாக இறங்கும். ஆப் ரோடுகளில் சீறிப்பாயும் ஜீப்களே இந்தப் பாதையில், திக்கித் திணறி தான் செல்லும் என்றால் எப்படி இருக்கும் என நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளையும் அவ்வப்போது காண முடியும். ஒரு முறை சென்று வந்தால், என்றும் மறக்க முடியாத திரில் அனுபவமாக அமையும்.
இருள் போர்த்திய நெல்லியம்பதி காடுகள் ஒளிரும். அதற்கு அங்கு கூடும் மின்மினி பூச்சிகளே காரணம். ஒன்றிரண்டு அல்ல. நூறு, ஆயிரமும் அல்ல. ஒரே இடத்தில் இலட்சக்கணக்ககான மின்மினி பூச்சிகளால் காடு, திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ஆயிரக்கணக்கில் சுற்றி நிற்கும் மரக்கிளைகள் முழுவதும் சிறிய அளவிலான சீரியல் ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்தது போல காட்சியளிக்கும் . இரவில் திரும்புகையில் இதை அனுபவித்தோம்
நெல்லியம்பதி பற்றிநினைக்கிற போதெல்லாம் சூரிய நெல்லி
நெல்லியம்பதி பற்றிநினைக்கிற போதெல்லாம் சூரிய நெல்லியும் ஞாபகம் வரும். காரணம் சூரிய நெல்லி பாலியல் வழக்கு சம்பந்தமாக வந்த ஒரு மலையாளம் படம் என்னை முன்பு உலுக்கியிருக்கிறது. மீண்டும் தேடி அதிப் பார்க்கவேண்டும்.
. சூரியநெல்லி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாநிலங்களவை துணை சபாநாயகர் பி.ஜே. குரியனுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஆனது.
கேரளாவில் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பெண் கடந்த 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல்வேறு இடங்களுக்கு அந்தப் பெண்ணை கடத்திச் சென்று சுமார் 40 பேர் வரை பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கேரள உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. பின்னர் கேரள அரசின் மேல்முறையீட்டையடுத்து, உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை மறு விசாரணை செய்யவும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தொடுபுழா செசன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது இந்த குற்றத்தில் பி.ஜே.குரியனுக்கும் தொடர்பு உள்ளது என்றும், அவரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கோரி பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்ததால் இவ்வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. மேலும் அந்த பெண்ணை தாம் குரியனிடம் அழைத்துச் சென்றதாக முக்கிய குற்றவாளியான தர்மராஜன் தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே குரியனை தாம் சந்திக்கவே இல்லை என்றும், குடிபோதையில் தாம் அவ்வாறு பேட்டியளித்ததாகவும் கடந்த மே 28 ஆம் தேதியன்று தர்மராஜன் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குரியன் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் புதிதாக எந்த உண்மைகளும் இல்லை என்று கூறி, குரியனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவு கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளபோதிலும், குரியனுக்கு மிகப்பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது. ( இணையதளக் குறிப்பு )
வறட்சி என்பது மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் ஏற்படும் . ஆனால் இன்றைக்கு காலநிலை மாற்றத்தால் அது வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. சில நாட்டில் மழை பெய்தல் என்பது 2 மில்லி மீட்டருக்கு குறைவாக இருக்கும் போது வறட்சி .அமெரிக்க நாட்டில் இரண்டு தினங்களுக்கு 2.5 மில்லியன் குறைவானால் வறட்சி. இலங்கையின் அந்தந்த காலத்திற்கு தகுந்த மாதிரி இது மாறுகிறது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சி காணப்படுகிறது. வறட்சி மண்ணில் உள்ள நீர் குறைந்து பயிர் பெற முடியாத அளவுக்கு ஏற்படுகிறது. நீரில் வறட்சி என்பது குளம் குட்டைகள் எல்லாம் மறைந்து போவதால் ஏற்படுகிறது. இதனால் பயிர்கள் வாடுவதும் கால்நடைகள் இறப்பதும் சாதாரண ஆகிறது .குழந்தைகளை வெகுவாக பாதிக்கிற பிரச்சனைகளில் இந்த வறட்சி ஒன்றாக இருக்கிறது. இன்னும் 15 ஆண்டுகளில் நாலில் ஒரு குழந்தை கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும். ஆப்பிரிக்காவில் எப்போது குறைந்த மழை அளவே இருக்கும். சோமாலியாவில் பேரழிவுகளை தருகின்றது இந்த வறட்சி .பல நாடுகளில் கால்நடை பண்ணை வியாபாரம் கைவிடுகிறார்கள். சிறிய அளவிலான தோட்டங்கள் மட்டும் பராமரிக்க முடிகிறது இந்தியாவில் கூட வறட்சி என்பது நிலங்களை மக்கள் கைவிட்டு வேறு இடங்களுக்கு போக வைக்கிறது
இந்திய அரசாங்கம் குடிநீர் பாதுகாப்பு சட்டம் என்பதை நடைமுறையில் கொண்டு வரும் போது பல சிக்கல்கள் உள்ளன இது முதன்மையான கூட்டாட்சி சட்டமாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இந்த சட்டத்தின் பிரகாரம் வலியுறுத்தப்படுகிறது தனியார் கிணறுகள் மற்றும் பொது கிணறுகள் போன்றவற்றின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் மாசு பாடும் முக்கியமானது. அசத்துமான நிலைமை ஏற்படுகிற போது அவற்றின் நிலைமை குறித்து ஆராயப்படுகின்றன, நுண்ணுயிர்கள், கிருமி நாசினிகள் கனிம ரசாயனங்கள் போன்றவை இந்த மாசுபாட்டை உருவாக்குகின்றன. ஆனால் மனிதர்கள் ஏற்படுத்தும் சுகாதார கு மாசுபாடு தண்ணீரை மூலகமாக இருக்கிறது
சுற்றுலா என்று உலகம் முழுக்க பெரும் வருமானம் தரக்கூடிய துறையாக இருக்கிறது அமெரிக்காவில் பல ஆண்டுகளாக சுற்றுலா விருந்தாகப் பேசப்படுகிறது. அந்த நாட்டின் பொருளாதாரநிலைமையை பல வகைகளில் குலைக்கிறது. தமிழருடைய பயண வரலாற்றின் இலங்கைக்கு தெற்காசியாவிற்கும் ஆரம்பத்தில் வணிகத்திற்காக சென்றார்கள் அவர்கள் சேர்ந்து சுற்றுலாவும் சென்றார்கள். வணிக விருந்தோம்பல் என்பது சுற்றுலாவில் மிக முக்கியமாக இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா என்பது பெரும் வருவாய் தருகிற விஷயமாக இருக்கிறது. மேற்கு நாட்டினர் பண மதிப்பை மனதில் கொண்டு மூன்றாம் உலக நாடுகளுக்கு சுலபமாக வருகிறார்கள். இலங்கை பர்மா போன்ற நாடுகள் சுற்றுலாவுக்கு என்று தனித்துறைகளை நிறைய செலவு செய்து நிர்வகிக்கிறன. தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மரபு ரீதியான விஷயங்களைக் கொண்டிருக்கிறது. இயற்கை சுற்றுலா என்றால் அது இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது இப்போது இயற்கை சுற்றுலா கூட எக்கோ டூரிசம் என்ற பெயரில் சுற்றுச்சூழல் சார்ந்தும் இருக்கிறது.
0