சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 23 ஜூன், 2012

சில விருதுகள்

1.ஜெயந்தன் படைப்பிலக்கியப்பரிசு 2012
=================================
பெற்றபடைப்புகள்:நாவல்கள்:”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்( உயிர்மை பதிப்பகம்)“நிழலின் தனிமை” :தேவி பாரதி (காலச்சுவடு)சிறுகதைகள்:’’ அப்பத்தா’ பாரதி கிருஸ்ணகுமார் ( வேர்கள்)“சிவபாலனின் இடப்பெயர்ச்சி குறிப்புகள்” அழகிய பெரியவன் ( நற்றிணை)கவிதைகள்:“இறக்கி வைக்க முடியாத சுமை” எஸ்.பாபு”அந்த நான் இல்லை நான்” பிச்சினிக்காடு இளங்கோ(ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது குழு, மணப்பாறை தமிழ்ச்சங்கம்)

2. திருப்பூர் அரிமா குறும்பட விருது 2012 ========================================================== பெறுவோர்:1.ச.பாலமுருகன் , கோவை ( ஓயாமாரி)2.தவமுதல்வன் , கோத்தகிரி ( பச்சை இரத்தம்)3.புதுகை யுகபாரதி , புதுச்சேரி ( குருவி தலையில் பனங்காய்)——* சக்தி விருது2012
——————------------

பெறுவோர்: 1. சுமதிஸ்ரீ , கோபி (தகப்பன் சாமி- கவிதைத்தொகுதி )2. மஞ்சுளா. மதுரை ( மொழியின் கதவு-கவிதைத் தொகுதி)(திருப்பூர் மத்திய அரிமா சங்கம், இலக்கியக்குழு)

புதன், 13 ஜூன், 2012

ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..

கோவை இலக்கியச் சந்திப்பு என்ற இலக்கிய நிகழ்ச்சி மாதந்தோறும் கோவையில் இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு போன்றவர்களால் காத்திரமான இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய உரைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. மே மாத நிகழ்வில் கனடாவில் வாழும் அகிலின் “ கூடுகள் சிதைந்த போது..” சிறுகதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டமாக அமைந்திருந்தது. ஞானி, யுகமாயினி சித்தன், செல்வி, சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அந்த நூலை பற்றிப் பேசினர். பொதிகைச் சித்தர் சோலை சுந்தரப் பெருமாளின் “ தாண்டபுரம்” நாவலிப்பற்றி விரிவான விமர்சனக்கட்டுரையை வாசித்தார்.அகிலின் தொகுப்பு பற்றி சுப்ரபாரதிமணியன் உரை:புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை அனுபவங்களும், புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஈழ மண்ணின் போர், மற்றும் துயரங்கள் பற்றி எழுதுவதும் 30 ஆண்டுகளுக்கு மேலாக நமக்குக் கிடைத்து வருகிறது. அந்த வகை எழுத்துக்களின் பொது மாதிரிகளை இந்த்த் தொகுப்பும் கொண்டிருக்கிறது.. புலம் பெயர்கையில் நாடுகளின் எல்லைகளைத் தாண்டும் போது அவர்களின் அவஸ்தை, தப்பிக்கிற போது எழும் ஆசுவாசம் கணிசமான கதைகளில் வலி உணர்கிற வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இன்று பெருகி வரும் முதியோர் இல்லங்கள் புலம் பெயர்ந்த மக்கள் உள்ள மேற்கத்திய நாடுகளில் சுலபமாகக் காண்க் கிடைகிற அவலம் பற்றி அகிலும் திரும்பத்திரும்ப்ப் பேசுகிறார். முதியோர்களின் ஏக்கம், கை விடுபவர்களின் உறுத்தல் வெளிப்படுகிறது.தமிழனின் உயர்வு, சிங்களவனின் சிறுமை போன்றவை கட்டமைக்கப்படும் சிறுகதைகள் வழமையானவையே. வெகுவாகச் சிலாகிக்கப்படும் பதவி உயர்வு கதையில் சிங்களவனின் மனமாற்றம் இத்தகையதே.அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருப்பவன் புலம் பெயர்கையில் ஏற்படும் அனுபவங்கள் சைவனாக மன மாற்றம் ஆவதைக் கூட வேறு வகையில் சொல்லியிருந்தால் திணிக்கப்பட்ட்தாய் தோன்றும் மன்மாற்றம் இயல்பானதாய் இருந்திருக்கும்..இத்தொகுப்பின் போர் சூழல் கதைகளை முள்ளிவாய்க்காலோ, வேறு எந்த ஈழப்பகுதி நிகழ்வாகவே எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் துயரங்களின் சர்வ மயம். . ரேடியோபெட்டியோ, வீடோ தரும் நினைவுகளும், அவை சார்ந்த ஆறுதல்களும் குறியீடாக இயங்குகின்றன. ஒன்று செயல் இழக்கையில் மனிதர்கள் சிதைந்தும், சாவை ஏற்றும் கொள்கிறார்கள். தமிழகச்சூழலில் தென்படும் போலித்தனமும் கடவுளும் கந்தசாமியும் போல் அண்ணாநகரில் கடவுள் என்ற கதையில் வெளிப்பட்டிருக்கிறது. சாதியம் செயல்படும் தளங்களைக் கொண்ட கதைகளை துணிச்சலாக எழுதியிருக்கிறார். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இதை ஈழ்மக்கள் தீவிரமாகக் கைகொள்கிறார்கள்.இது ஈழசூழலிலும் அயல் மண்ணில் திருமண பேரங்களின் போதும் வெளிபடுவதை சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.ஈழ மண்ணில் வெள்ளாளர் அல்லாத் தலையாக போராளிகள் உருவாகினர். தலைமையில் தலித்துகள் இருந்திருக்கின்றனர். சாதி ஒழிப்பை முன் நிறுத்துவது பெரும்பான்மையான ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்தும் என்பதால் முன் எடுக்கப்படவில்லை.போராளிகள் நிர்வாகத்தில் இருந்த பகுதிகளில் இருந்த இந்து கோயில்களில் தலித்துகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. முஸ்லீம்கள் விரட்டப்பட்டது ஞாபகம் வருகிறது. இந்த வகை உள் முரண்கள் முழு விடுதலைக்கு பின் கவனிக்கபடும் என்ற சமாதானங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.. இன ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டி சாதியவிடுதலையை கவனிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. இதே நிலைமை அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கள் சாதியைச் சார்ந்தவர்கள் தனி அமைப்புகளை உருவாக்கிக் கொள்வதும், கோயில் கட்டுவதும், திருமண பந்தங்களில் சாதி சார்ந்த இறுக்கமும் தொடர்ந்திருக்கிறது. இது இரண்டு கதைகளில் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நினைவுகளை மீட்டெடுக்கவும் அதில் தோய்ந்து போவதும் குடும்ப நிலையை பேணும் நிர்பந்தங்களும் அவர்களின் வாழ்நிலை நிர்பந்தங்களாய் எழில் வெளிபடுத்தியிருக்கிறார்.ஈழ மக்களின் உள்ளூர் அனுபவங்களை உள்ளூரில் எழுத முடியாது. ராஜ துரோகம் வரை செல்லும் ஒரு குற்றம் அது என்கிறார் முன்னுரையில் கார்த்திகேசு சிவத்தம்பி. அவற்றை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து எழுதுவதும் போராட்டத்திற்கான நிதி அளிப்புமே போராட்டத்தை நீண்ட காலம் கொண்டு சென்றதாக அகில் கூறுகிறார். = சுப்ரபாரதிமணியன் ( subrabharathi@gmail.com)

திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “சுடுமணல்” நாவலின் மலையாள மொழி பெயர்ப்பு நூல் வெளியிட்டு விழா!


திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “சுடுமணல்” நாவலின் மலையாள மொழி பெயர்ப்பு நூல் வெளியிட்டு விழா ஞாயிறு மாலை காந்திநகர் மத்திய அரிமா சங்கத்தில் நடைபெற்றது. சு. மூர்த்தி ( கல்விக் கூட்டமைப்பு , தலைவர், திருப்பூர்), தலைமை தாங்கினார். மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கனடா நாட்டில் வாழும் தமிழ் எழுத்தாளர் அகில் நூலை வெளியிட மணி ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநிலத் தலைவர்) பெற்றுக்கொண்டார்.. தேசியம் என்பது கற்பிதம் என்பதினை வெளிப்படுத்தும் வகையில் நதிநீர் பிரச்சினையில் தமிழர்கள் அவதியுறுவதை இந்த நாவல் வெளிப்படுகிறது. இது தமிழில் 3 பதிப்புகள் வந்துள்ளது. மலையாளத்தில் சபி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதை திருவனந்தபுரத்தைச் சார்ந்த சிந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.( இதற்கு முன்பே சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை என்ற நாவல் மலையாளத்தில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளது. )மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். * கனடா அகிலின் “ கூடுகள் சிதைந்தபோது “ சிறுகதை தொகுப்பை வழக்கறிஞர் ரவி அறிமுகம் செய்தார்.* மாற்றுக் கல்வி குறித்த நூல்கள் பாவ்லோவின் ” யதார்தத்தை வாசித்தலும் எழுதுதலும்” மற்றும் கிருஸ்ணகுமாரின் “முரண்பாடுகளிலிருந்து கற்றல்” ஆகியவற்றை பற்றி மருத்துவர் சு. முத்துசாமி(தாய்த்தமிழ்ப் பள்ளி, பாண்டியன்நகர்), வழக்கறிஞர்கள் நீலவேந்தன், கனகசபை, சிவகாமி,ஈஸ்வரன், இளஞாயிறு, வெற்றிச் செல்வன், நந்த கோபால் ஆகியோர் பேசினர்.கனடா எழுத்தாளர் அகில் ”புகலிடத்தில் தனி ஈழம் சம்பந்தமான குரல் வலுவிழந்து வருகிறது. அதே சமயம் புகலிடத்தில் வாழும் ஈழத்தமிழர்களின் இளம் வாரிசுகள் ஈழப்பிரச்சினையை மனித உரிமை மீறல் பிரச்சினகளாக எடுத்துக் கொண்டு வெளிப்படுத்துவதால் அய். நா. சபை தீர்மானம் ஆகியவை சமீபத்தில் நிறைவேறியுள்ளன. இலங்கையில் இப்போது நடைபெறும் சிங்கள் அரசின் தாக்குதல் வன்முறையும், அழித்தொழிப்பும் தொடருமானால் இன்னும் அய்ந்து ஆண்டுகளில் இலங்கையில் தமிழ் இனமே இல்லாமல் போய் விடும்" என்றார். இலங்கைப் படிப்பாளிகள் அச்சூழலை இலக்கியத்தில் பதிவு செய்திருப்பதை பல்வேறு நாவல்கள் மூலம் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் விளக்கிப் பேசினார்.. தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தை சார்ந்த மாநிலத்தலைவர் மணி பேசுகையில் ”கற்பித்தல் என்பது ஒரு அரசியல் செயல்பாடே. ஆசிரியன் என்பவன் நடுநிலையாளனாக இருக்க முடியாது. . கல்வி வியாபாரமாகியிருக்கும் இன்றையச் சூழலில் மாற்றுகல்வி, மற்றும் தாய்வழிக்கல்வி ஆகியவற்றை முன்னேடுத்துச் செல்லவேண்டிய அவசியம் ஆசிரியர் சமூதாயத்திற்கு உள்ளது. இல்லையெனில் எதிர்காலச் சமூகம் ஆசியர்களை நிச்சயம் சபிக்கும். ஆசிரியர்கள் சமூகப் பொறுப்புடன் எல்லாதளங்களிலும் செயல்படவேண்டும்“ என்று விரிவாய் பேசினார். நீணிப்பவளக்குன்றன் உட்பட பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். (சுடுமணல் மலையாள மொழி பெயர்ப்புவெளியீடு : சிந்தா பதிப்பகம், திருவனந்தபுரம், விலை: ரூ.60/-, அகிலின் “கூடுகள் சிதைந்த போது ” வம்சி, திருவண்ணாமலை, ரூ120, மாற்று கல்வி நூலகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை வெளியீடு ) செய்தி: சுபமுகி (கனவு இலக்கிய வட்டத்திற்காக) 4/6/2012 ( கனவு,8/2635, pandiyan nagar, TIRUPUR – 641602. 9486101003.)
subrabharathi@gmail.com