சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 19 அக்டோபர், 2023

மனிதர்கள் நடைபாதையில் இருக்கிறார்கள் - ஹரணி சிறுகதைகள் சுப்ரபாரதி மணியன் கல்வித்துறை சார்ந்தவர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் முந்தைய தலைமுறையினர் எழுத்தாளர்களாக இருந்து எழுதுகிற போது அவர்கள் நிறைய லட்சிய மனிதர்களை காட்டினார்கள். அந்த லட்சிய மனிதர்கள் இன்று பல வகைகளில் கேலிக்குரியவர்களான மனிதர்களாகி விட்டார்கள். . ஆனால் அவர்களுடைய லட்சியங்களும் வாழ்க்கை பற்றிய கோணங்களும் இன்றைக்கும் தேவையாக இருக்கின்றன. இப்போது கல்வித்துறை சார்ந்து இருக்கக்கூடிய எழுத்தாளர்களில் பலர் ” மாதிரி மனிதர்களை” உருவாக்குகிறார்கள். எழுத்திலும் சில செயல்பாட்டிலும். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகளில் நல்ல கல்வி, மற்றும் ஒழுக்கத்துடனும் மாணவர்களை உருவாக்க ஆசைப்படுகிறார்கள். அதே பிம்பங்களைக் கொண்டு சமூகத்தில் மனிதர்கள் இருக்க வேண்டும் என்று பல மாதிரி மனிதர்களை கதைகளில் உருவாக்குகிறார்கள்.. இந்த மாதிரி மனிதர்கள் எல்லோர் கண்களிலும் படுவதில்லை.. எல்லோரும் அவர்களுடன் உறவு கொள்வது இல்லை ஆனால் சிலரின் கண்களில் படுகிறார்கள். சிலரோடு உறவுகள் கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம். எழுத்தாளர்கள் கலைஞர்கள் தாங்கள் விரும்புகிற விஷயத்தை படைப்புகளில் மனிதர்கள் மேல் ஏற்றி பல சமயங்களில் மாதிரி மனிதர்களை உருவாக்குகிறார்கள். பல சமயங்களில் அவர்கள் இயல்பாகவே நம் வாழ்க்கையில் கூடவே இருக்கிறார்கள் அவற்றையெல்லாம் அவர்கள் தொகுத்து பார்க்கிறார்கள்.. . தான் பணிபுரிந்த கல்வித்துறை சார்ந்த அனுபவங்களை பல கதைகளில் கொட்டி இருக்கிறார் ஹாரணி அவர்கள். முன்பே தான் பணிபுரிந்த பள்ளிக்கூடம் இடிக்கப்பட்டு பிளாட் போடப்படுகிறது. காலமாய் சிரமப்பட்டு கட்டி உருவாக்கிய பள்ளியை இப்படி நிலமாக்கி விற்கிற கோரத்தை கண்டு உயிர் விடுகிற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஹாரணியின் கதைகளில் . இப்படித்தான் பலர் இருக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிரபல பின்னலாடை நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஒரு இலவச பள்ளியை பல ஆண்டுகளாக நடத்தி வந்தார்கள். கட்டணம், புத்தகங்கள் உட்பட அனைத்தும் இலவசம். ஆனால் அந்த வெளிநாட்டு நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு பின்னலாடை நிறுவனத்தை அவர்களே நிதி வசதியை உருவாக்கிக் கொண்டு கல்வி பணி நடத்த வேண்டும் என்று சொன்னபோது பின்னலாடை நிறுவனம் அந்த முயற்சியை கைவிட்டு அந்த பிரமாண்டமான பல ஆண்டுகள் நடந்த பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு நிலத்தை கூறு போட்டு விற்றார்கள். அந்தப் பள்ளியை இடித்துத் தரை மட்டமாக்கியபோது அந்த புல்டோசர் முன் விழுந்து தடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றி மனம் நொந்தேன். ஹாரணியின் ஒரு கதையை படிக்கும் போது இது ஞாபகம் வந்து வருத்தியது எப்போதுதான் நம்மவர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள்.. வீட்டிற்கு வயது வந்த பெண்ணிற்கு யார் சடங்கு செய்வது என்ற கேள்வி வருகிறது உற்றார் உறவினர் கண்டுகொள்ளாத போது அந்த குடும்பத்திற்கு உதவி செய்து வரும் ஒரு பெண் அக்காவாகிறாள், அதேபோல திருநங்கையின் வாழ்க்கைக்கு ஒளியூட்ட ஒருவர் மனைவியாக்கி கொள்கிறார். அந்த திருநங்கை குடும்பத்திற்காக உழைக்கிறார். ஆனால் அவளை வீட்டுத் திருமணத்திற்கு அழைக்கக் கூடாது என்ற நிர்ப்பந்தம் வருகிற போது திருநங்கையின் இருப்பு பற்றி நியாயம் சொல்லப்படுகிறது. வித்தியாசமான ஒரு கோணத்தில் சொல்லப்பட்ட கதை ஆகிறது வாழ்வதற்கு வயதிருக்கிறது. இறக்கிறபோது பலருக்கு பலர் தெரிய வருகிறார்கள். அப்படித்தான் இறப்புக்கு வயது 46 என்றொரு கதையில் இறந்தபின் நினைக்கப்படும் கருணையுள்ள மனிதர்கள் பற்றி சொல்கிறார். லஞ்சமற்ற வாழ்க்கை, நேர்மையான வாழ்க்கை பற்றி தொடர்ந்து ஹரணி பேசிக் கொண்டே இருக்கிறார். வீட்டில் மனைவி போன்றவர்கள் லஞ்சத்தை விரும்புபவர்கள். ஆனால் கணவர் அதை எதிர்த்து வாழ்க்கை முழுவதும் போராடி ஏதோ ஒரு கட்டத்தில் மனைவி அதை உணர்ந்து கொள்வதை தெரிவிக்கும் கதையில் உயர்ந்த லட்சியங்கள் இருக்கின்றன. கடைசி காலம் தங்க இடமில்லை மருமகன் அடைக்கலம் கொடுக்கிறார் .ஆனால் அவர் லஞ்சம் வாங்கி மோசமானவராக காட்டப்படுகிற போது அந்த அடைக்கலம் தமக்கு தேவையில்லை என்று வெளியேறுகிற மனிதர்கள் இருக்கிறார்கள் . திருடு போன நகை திரும்ப கிடைக்கும் என்ற வகையில் பாதையில் திறந்து விடப்படுகிற போது அதற்காக செய்யப்படும் வழிமுறைகள் ஒரு பெண்ணை நிராகரிக்க சொல்கிறது .இவர்களெல்லாம் ஒருவகையில் உயர்ந்த மனிதர்களாக நிற்கிறார்கள்.பல விசயங்களில் ” மாதிரி மனிதர்களாக” இருக்கிறார்கள் ஒரு கதையில் கணேசமூர்த்தி போல வாழ்வது எளிதான அல்ல தவக்கோலம் தான் என்று சொல்லுகிறார் .அப்படி தவக்கோலத்தில் இருக்கிற பல மனிதர்களை காட்டுவது இந்த தொகுப்பில் அடையாளமாக இருக்கிறது. வீட்டில் வசிக்கும் கடவுளாக வீட்டிற்காக உழைப்பவர்கள் தரிசனம் செய்யப்படுகிறார்கள் .இந்த வாழ்க்கையை தான் அந்த கஷ்டங்களுடன் மனிதர்கள் இலக்கிய பாத்திரங்களாக உலாவும் இருப்பை காட்டுகிறார். இலக்கியம் செய்வோம் என்ற வகையில் வாழ்க்கையின் , நேர்மறையான எண்ணங்கள் கொண்ட வாழ்க்கையை காட்டும் எழுத்தாளர்கள் மத்தியில் நல்ல மனிதர்களை பட்டியலிடுவது தான் ஹரணி அவர்களின் பங்காக இருக்கிறது. கசடுகள் நீங்கி வாழ்ந்த மனிதர்கள், வாழும் மனிதர்கள் பற்றிய கதைகளை எடுத்துக்கொண்டு எழுதுவது சுலபமா என்ன..... ஆனால் அந்த சுலபத்தை சுலபமாக கையாண்டு இருக்கிறார் ஹரணி அவர்கள் . கல்லூரி பணி வாழ்க்கையில் இருந்த ஓய்வு பெற்றாலும் பல கல்லூரியில் அவருடைய பணியை தொடர கேட்டுக் கொண்டாலும் போதும் கல்லூரி வாழ்க்கை இலக்கியப் பணியாற்றலாம் என்று அவருடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்ட போது மகிழ்ச்சி அடைந்தேன். அதேபோல விடாத முயற்சியும் தரளாத ஒழுக்கமும் கடுமையான உழைப்பும் நியாயமான செயல்பாடுகளும் என்றைக்கும் எல்லாம் கடந்து பேசப்படும் என்று ஹரிணி அவர்கள் முன்னுரையில் சொல்கிறார். அப்படி காலம் கடந்து பேசப்படுகிற மனிதர்களை இந்த கதைகளில் காட்டுகிறார் நாராயணன் என்ற கதாபாத்திரம் பல கதைகளில் வருகிறது இந்த நாராயணன் கதாபாத்திரங்கள் அப்பாக்களாக, தம்பிகளாக தாத்தாக்களா, உறவினர்களாக இருக்கிறார்கள் அல்லது எல்லாமே நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புகிற நல்ல உறவுகளாக இருக்கிறார்கள். இந்த நாராயணங்களின் எண்ணங்கள் உயர்ந்தவை சக மனிதனை நேசிக்கச் சொல்பவை சக மனிதனோடு நீண்ட பயணம் செய்பவை. நாராயணன் போன்ற மனிதர்களை அடையாளம் கண்டு கொள்வது சுலபமல்ல அவ்வாறான மனிதர்களை கண்டு கொள்வதற்கு நல்ல மனம் வேண்டும். அப்படியான மனிதர்கள் ” கண்டவர் “ கண்களுக்கு எல்லாம் கட்டுப்பட மாட்டார்கள். தட்டுப்பட மாட்டார்கள். ஆனால் கருணையின் கண்களுக்கு கட்டுப்படுவார்கள். காரணம் அவரின் நேர்மையான எண்ணங்கள் தான் அடிப்படையாக இருக்கின்றன. அந்த எண்ணங்களின் அடிப்படையில் பல “ மாதிரி மனிதர்களை” அவர் இந்த தொகுப்பில் காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது ( ரூபாய் 200 கேஜி பப்ளிகேஷன் தஞ்சாவூர்)
2 சுப்ரபாரதிமணியனின் “ சிலுவை “ நாவல் 300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது. சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்.. “ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது சுப்ரபாரதிமணியன் திருப்பூர் 9486101003/ subrabharathi@gmail.com/ fb lkanavusubrbharathimanian tiruppru (( ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற புத்தக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் 25 நூல்கள் வெளியிட்டு விழாவில் சிலுவை வெளியிட்ட போது பேசியது:: ( சிலுவையாய் சுமக்கும் அனுபவங்கள்/ சுப்ரபாரதிமணியன் என் ” சிலுவை “ நாவல், என் நாவல்களின் பட்டியலில் இருபத்தைந்தாவது என்றும் புத்தகங்களின் எண்ணிக்கையில் நூறாவது என்றும் எதேச்சையாக அமைந்திருக்கிறது. பத்து ஆண்டுகளின் கனவுகளாக இருந்து இப்போது இந்த நாவல் வெளியாகி இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கிற மற்ற நூல்கள் பல ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என்ற ரீதியில் அமைந்திருக்கின்றன. இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம் செயல் சென்று சேர வேண்டும் என்று ஸ்டாலின் குணசேகர் அவர்களும் ஓடைத்துரையரசன் அவர்களும். சொன்னார்கள் பொதுவாக இத்தகைய ஆய்வுகள் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் என்று இருப்பதாகும். இது பொது மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற ஆசைப்படுவது வினோதமாக தான் இருக்கிறது. ஆனால் எல்லா படைப்புகளும் இதுபோல் பொதுமக்களிடம் சென்று தான் அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக கூட இருக்கிறது. கிறிஸ்துவ பாதிரியாக இருந்த எபிரேம் என்ற முதியவரை பனிரெண்டு ஆண்டுகளூக்கு முன் சேவூர் புளியம்பட்டி சாலையில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தித்தேன். பைபிளில் வரும் பல நிகழ்ச்சிகள் அந்த தேவாலயத்தின் உள்ளேயிருந்த சுவர்களில் சித்திரங்களாக வரையபட்டும் தூண்களாக அமைக்கப்பட்டு இருந்தன. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது அவர் அறிமுகமானார. அவர் ஒரு ஆய்வாளர் என்று சொல்லிக் கொண்டார். அவர் சோமனூர் என்ற பகுதியைச் சார்ந்தவர் என்ற வகையில் அவருடைய ஆய்வைப் பற்றி சொன்னார்.. நான் அவரின் சொந்த ஊரான சோமனூர் பக்கத்தில் உள்ள செகடந்தாளி என்ற கிராமத்தை சார்ந்தவன் என்ற வகையில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நானும் பேசினேன். அவர் ஆய்வாளர் என்ற வகையில் சோமனூர் பற்றி செய்திருக்கிற ஆய்வுகளையும் அவை கிறிஸ்துவ பத்திரிகைகளில் வந்திருப்பது பற்றியும் நிறைய சொன்னார். எனக்கு பெரிய நாவல்கள் எழுத வேண்டிய ஆசை இருந்தது ஆனால் அதற்கான களம் என் மனதில் இல்லை. என் நாவல்கள் எல்லாம் 300 பக்கங்களுக்குள் அடங்கிப் போகும் அளவில் இருந்திருக்கின்றன. இந்த சூழலில் ஒரு பெரிய நாவலை சோமனூரைக் களனாகக் கொண்டு கடந்து போன 300 ஆண்டு சரித்திரத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நான் வாழ்ந்த மக்கள், நிலம் பற்றி நான் அதிகம் எழுதவில்லை என்னுடைய மூதாதையர்ளின் தொழில் சார்ந்தும் என்னுடைய பரம்பரை சார்ந்தும் அவர்களுடைய அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் நான் பெரிதாக எதுவும் எழுதவில்லை. எனவே சோமனூரை பற்றி எழுதுவது என்பது என் மூதாதையர் நிலம் சார்ந்தும், என் மூதாதியர் தொழில் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்தும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது என்று பட்டது .அந்த கிறிஸ்துவ பாதிரியார் ஏறத்தாழ ஒரு முதுமை இல்லத்தில் தான் இருந்தார். அவரிடம் இருந்து சில சேகரித்துக் கொண்ட தகவல்கள் நாவல்கள் எழுத உதவினார். பின்னால் அவர் வால்பாறைக்கு சென்று விட்டதாக சொன்னார்கள். வால்பாறை போன்ற இடங்களின் சீதோஷ்ணம் அவருடைய உடல்நிலை எப்படி ஒத்துவரும் என்பதுதான் என்னுடைய கவலையாக இருந்தது. ஆனால் எந்த தொடர்பும் இல்லாமல் தான் இருந்தேன் அவரை தேடி சென்ற ஒரு முறை அவர் இறந்து போய்விட்டார் என்று சொன்னார்கள். ஆனாலும் அவர் சொன்னபடி இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம் தான் சென்று சேர வேண்டும் என்பதால் நான் அதை ஒரு நாவலாக்கும் பணியில் உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் இந்த நாவலை நான் எழுதினேன் இந்த நாவல் நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போதுஅச்சிலும் புத்தகமாகவும் வருவது என்பது எனக்கு ஆறுதலாக இருக்கிறது நீண்ட நெடுங்காலமாக இதை எதிர்பார்த்து இருந்தேன். இடையில் வந்த கொரோனா காலம் இந்த தாமதத்தை அதிகப்படுத்தி விட்டது. அந்த வகையில் இந்த நாவல் என்னுடைய நூறாவது புத்தகமாகவும் அமைந்துவிட்டது. கலாச்சார சரித்திரம் என்பது அரசியல் சரித்திரம் மற்றும் கடந்து போகும்ஆண்டுகளின் நிகழ்வுகளின் தொகுப்புகள் என்றபடி இருக்கும். இந்த கலாச்சார சரித்திர நிகழ்வுகளை ஒரு நாவலுக்குள் கொண்டு வருவது , அந்த மனிதர்கள் வாழ்க்கையை இதற்குள் வைத்துப் பார்ப்பது எனக்கு தேவையானதாக இருந்தது சோமனூர் என்ற பகுதியில் திப்பு சுல்தான் போன்றவரின் வருகை கிறிஸ்தவர்களின் முக்கிய இடமாக இருந்த சத்தியமங்கலம், கொடிவேரி போன்று சோமனூர் விளங்கிய விதம், நெசவாளர் குடும்பங்களின் நிலை, பஞ்ச காலங்கள், மக்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிய வித்தைகள் என்று தொடர்ந்தது, என் நாவல் பின்னால் இரண்டாவது பாகமாக சோமனூர் மற்றும் கோவை பகுதிகளில் தொழிற்சங்க வரலாற்றுப் பதிவுகளாவும் மாறிவிட்டது. இன்னொரு பகுதியாக நான் அவர்களை திருப்பூருக்கு கொண்டு போனேன். காரணம் 10 வயது வரை தான் அந்த செகடந்தாளி கிராமத்தில் நான் வசித்து வந்தேன், தண்ணீர் பிரச்சினை, மேல் சாதி ஆதிக்கவாதிகளின் வன்முறை காரணமாக திருப்பூருக்கு குடி பெயர்ந்த நெசவாளர் குடும்பங்களில் என் குடும்பம் ஒன்றாகிவிட்டது. எனவே என் நாவலைக்கு அங்கு நகர்த்துவதும் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டு வந்த அந்த நெசவாளி குடும்பத்தை சார்ந்த ஒருவனின் பொதுவுடமை இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளும் தலைமறை வாழ்க்கையும் என்று தொடர்ந்தது .பின்னால் திருப்பூரில் பின்னலாடை வளர்ச்சியும் நவீன யுகத்தில் மற்றும் உலகமயமாக்களில் தொழிலாளர்கள் நிலைமை என்று தொடர்ந்தது. என் வாழ்க்கைஅனுபவங்களையும் உள்வாங்கிக் கொண்டவற்றையும் சோமனூர், திருப்பூர். திருப்பத்தூர் என்று விரிவாக்கிக் கொண்டேன். நினைவுகளை, கலாச்சார பதிவுகளை பகிர்ந்து கொள்கிற அனுபவத்தில் இந்த நாவலை வடிவமைத்தேன், எனது பல படைப்புகளுக்குள் வந்த அமைந்திருந்த பின்னல் தொழிலும் விசைத்தறி தொழிலும் நெசவுத் தொழிலும் இயல்பாகவே இந்த நாவலுக்குள்ளும் வந்துவிட்டன சமீப காலம் வரை. நீண்ட கடல் பயணத்தில் அலைக்கடிக்கப்படுகிற படகு வாசிகள், படகு பயண வாதிகள் போல இருத்தலியல் சிக்கல்களும் வாழ்க்கை மீது மீதான நம்பிக்கையும் மாறி மாறி செயல்பட என் கதாபாத்திரங்கள் அமைந்து விட்டார்கள். அந்த வகையில் நினைவுகளையும் சரித்திரம் சொல்லும் மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் நினைவுகளாகப் பகிர்ந்து கொள்கிற வாய்ப்பும் இந்த நாவல் மூலம் ஏற்பட்டதும் இந்த நாவல் அனுபவங்கள் போல் பல அனுபவங்களும் வாழ்க்கையை கடந்து போக செய்திருந்தாலும் ஒரு பெரிய நாவலையே பதிப்பித்தலில் இருக்கும் சிரமங்களால் இன்னும் ஒரு பெரிய நாவலை எழுதுகிற ஆசையும் இப்போதைக்கு இல்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் வாழ்க்கை பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். அதை அடுத்த தலைமுறைக்கு கடத்திக் கொண்டே இருக்கலாம். அது கலாச்சார இயல்புகளூம் மொழியும் மாறிக்கொண்டிருக்கும் தன்மையில் அதை செய்து கொண்டே இருக்கலாம் என்றுதான் எனக்கு இந்த நாவல் வெளியிட்டில் தோன்றுகிறது.. 300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது. சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..நாவலை வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்கு நன்றி, ( ரூபாய் 1200 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை வெளியீடு) ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற புத்தக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் 25 நூல்கள் வெளியிட்டு விழாவில் சிலுவை வெளியிட்ட போது பேசியது
சிலுவை நாவல் Ra 1220 சிலுவை நாவல் ஒரு விதவையை மைய கதாபாத்திரமாக கொண்டு ஆரம்பிக்கிறது. அவள் ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த குடும்பத்தினர். நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இந்துவை திருமணம் செய்து கொண்டு அவளின் கிறிஸ்துவ குடும்பம் விரிவடைகிறது. பின்னால் அந்த நெசவாளர் கிறிஸ்துவத்துக்கு மாறி விடுவதால் சுமூகமாக அவருடைய வாழ்க்கை நடக்கிறது. இந்த இடத்தில் ஒரு விதவைப் பெண்ணை கதாநாயகியாகக் கொண்டு இந்த நாவல் அமைந்திருப்பதை பாராட்ட வேண்டும் அதேசமயம் பெண்களுடைய மனது விசித்திரமாக இருக்கிறது. அந்தப் பெண் விதவையாக இருந்தாலும் தன்னுடைய மகனுக்கு திருமணம் என்று வருகிற போது மகன் ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பும் சூழ்நிலையால், அவன் விரும்புகிற போது அந்த்த் தாய் அதை மறுத்து விடுகிறாள்.. . அது விசித்திரமானது பெண்ணுடைய மனது. விசித்திரமானது. அவளே விதவையாக இருந்து திருமணம் செய்து கொண்டவள் .ஆனால் அவள் தன் மகனுக்கு ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுப்பது விசித்திரமாக இருக்கிறது. இந்த விஷயத்தைப் போல பெண்களின் மனதை இந்த நாவலில் பல பெண்கள் கதாபாத்திரத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில் வருகிற தொலைபேசி துறையைச் சார்ந்த ஒருவருடைய வாழ்க்கையில் துணைவியாக வருகிற பெண் அவன் தற்காலிக ஊழியர் ஆகவே இருக்கிறார் என்ற காரணத்தைக் காட்டி அவரிடம் இருந்து விலகி விடுகிறாள் .அதேபோல இதில் வருகிற ஒரு கிறிஸ்துவ இளைஞருடைய மனைவி அவள் விரும்புகிறதெல்லாம் கிடைக்கவில்லை என்று கணவனிடமிருந்து விலகி விடுகிறாள். மத்திய தர குடும்பத்தில் ஒரு கணவன் ஒரு பெண்ணின் விருப்பங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றப்பட முடியாது. பொருளாதார சிரமங்கள் உண்டு .ஆனால் அதை எல்லாம் மனதில் கொள்ளாமல் அந்த பெண் அவரிடம் இருந்து விலகி விடுகிறாள் .பின்னால் அவளுக்கு ஒரு சின்ன நோய் வருகிறது உடம்பில் வெள்ளைப்படுதல் என்ற நோய்.. வெள்ளையணுக்கள் குறைவாக இருப்பதால் உடம்பில் வரும் வெள்ளை தேமல்கள் போன்ற ஒரு வியாதி ..அந்த வியாதி வந்த பின்னால் அவள் இயேசு கிறிஸ்து அவளுக்கு தண்டனை தந்து விட்டதாக கருதி கணவரிடம் திரும்புகிறாள் இப்படி விசித்திரமான பல நுணுக்கமான கதாபாத்திரங்களை, பெண் கதாபாத்திரங்களை இந்த நாவலில் சந்திக்க முடிகிறது ( சே சோமசுந்தரம் தொலைபேசி உரையாடலில் ) சுப்ரபாரதி மணியன், திருப்பூர் ( 9486101003 ) --------------------------------------------------------------------------------- வணக்கம் . நலம் குறித்த விருப்பம். என் சி பி எச் வெளியீடான “ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது = NCBH Rs 1200 . 10 வருடக் கனவு. ( பதிப்பகத்தில் தந்து 6 ஆண்டுகள். அதற்கு முன் 3/4 ஆண்டுகள் தயாரிப்பும் எழுதுவதும் ) 0 நானே கொஞ்சம் பிரதிகளை விற்க வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறேன். தாங்கள் / தாங்கள் சார்ந்த அறக்கட்டளை / நிறுவனங்கள் சார்ந்து பிரதிகள் என்னிடமே வாங்கி இந்த முயற்சிக்கு கை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் Subrabharathimanian ( g pay no. 9486101003 ) A/c No; 1408522610. Central bank of india bank, ATL branch perumanallur road, Tiruppur IFCS no: CBIN0284145 MICR no; 6410 16104 Pan no.. AOYPS 7998R அன்புடன், சுப்ரபாரதிமணியன் 17/8/23
எழுத்தாளர் கி ராஜநாராயணன் நூற்றாண்டு விழா நிறைவு எழுத்தாளர் கி ராஜநாராயணன் நூற்றாண்டு நிறைவை ஒட்டி சிறப்பு கூட்டம் திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது . மக்கள் மாமன்ற பொருளாளர் சு.சுந்தரேசன் தலைமை தாங்கினார் செயலாளர். சத்ருக்கன் முன்னிலை வகித்தார். ராக தீபம் ராஜா கூட்டத்தைத் துவக்கி வைத்து பேசினார் . “ தமிழக அரசு இதுவரை எந்த தமிழ் எழுத்தாளருக்கும் நினைவு மண்டபம் அமைக்கவில்லை. ஆனால் கரிசல் காட்டு கதைகள் எழுதி சாகித்ய அகாதமி பரிசு பெற்று 99 வயதில் மறைந்த எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்களுக்கு இவ்வாண்டு கோவில்பட்டியில் நினைவு மண்டபம் எழுப்பி கௌரவத்திருக்கிறது .. தமிழில் முதல் முதலாக அரசு சார்பில் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டு இருப்பது கி ராஜநாராயணன் அவர்ளுக்கு தான். அதற்காக தமிழக அரசைப் பாராட்ட வேண்டும்” என்று ராஜா குறிப்பிட்டார் கவிஞர் நாதன்ரகு நாதன் கி . ராஜநாராயணனின் படைப்புகள், அவர் பெற்ற விருதுகள், அவர் சாகித்ய பரிசு பெற காரணமாக இருந்த கோபால கிராமம் நாவல் ஆகியவற்றைப் பற்றியும் மற்றும் கரிசல்காட்டு கதைகள் பற்றியும் விளக்கமாகப் பேசினார். ” கி ரா நூறு ” என்ற இரண்டு தொகுதிகளை கொண்ட கட்டுரை நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கி ராஜநாராயணன் பற்றி 170 எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. 1200 பக்கங்கள் கொண்ட இந்த நூலை வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். இதை கதை சொல்லி பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இதில் திருப்பூர் சுப்ரபாரதிமணியன் கட்டுரைகள் உட்பட 170 எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.இந்த இருதொகுப்பு நூல்கள் பற்றிய அறிமுகம் கூட்டத்தில் நடைபெற்றது. முன்னதாக திருப்பூர் குமரன் பிறந்த தினத்தை ஒட்டி அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரைப் பற்றி கவிஞர் ஆ.அருணாச்சலம் விரிவாகப் பேசினார். . திருப்பூர் குமரன் நினைவு மண்டபம் தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ளது. அங்குள்ள நூலகம் செயல்பட வேண்டும் அதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்பாடுகள் செய்து திருப்பூர் குமரன் நூலகம் செயல்படும் விதமாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நூலகர் வின்சென்ட் ராஜ் நன்றி கூறினார். கி ராஜநாராயணன் நூற்றாண்டு நிறைவு விழாவும் குமரன் திருப்பூர் குமரன் பிறந்த தின விழாவும் சிறப்பாக நடந்தேறின
நெல்லை அன்புடன் ஆனந்தி கவிதைகள் இந்த உடம்பு என்பது நிலையாமை கொண்டது. அப்படியானால் நிலைத்தது எது என்ற கேள்வியும் வருகிறது. மனதில் எது நின்றுவிடுவது என்று சில விஷயங்கள் இருக்கின்றன. அந்த விஷயங்களில் ஞாபகங்கள், நினைவுகள், அனுபவங்கள், சில மகிழ்ச்சியான தருணங்கள் என்று சிலவை வரிசை கட்டுகின்றன இந்த தருணங்கள் பற்றி கூர்மையாக பார்த்து அவற்றை கவிதை ஆக்கி இருக்கிறார் நெல்லை அன்புடன் ஆனந்தி .அவற்றில் கவிதை மிளிர்கிறது . அவரது பயிற்சியும் குறுகத் தரித்த வடிவமும் அவருடைய மொழி ஆளுமையும் பயன்படுகிறது அதில் அழகு மிளிர்கிறது. ஆசை துளிர்க்கிறது. இவற்றை கவிதையாகவோ உரைநடை சித்திரமாகவோ ஆனந்தி அவர்கள் இந்த வகையில் கொடுத்திருக்கிறார். நல்ல சிறு வடிவத்துடன் வெளிப்படுவதே சிறந்த கவிதைகள். உரைநடை என்பது விரிவாக சொல்வது. பாலை காய்ச்சுவது போல குறுகிய வடிவத்துடன் வார்த்தைச் சிக்கனத்துடன் செயல்படுவதே நல்ல கவிதையின் அடையாளங்கள் அந்த கவிதையின் அடையாளங்களை நாம் நெல்லை ஆனந்தி அவர்களின் கவிதை நூல்களில் காணலாம் சுப்ர பாரதி மணியன் பின் அட்டைக்குறிப்பு ஏழு சகோதரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் வட மாநில பகுதி பற்றிய பூகோளம் மற்றும் கலாச்சார விஷயங்களை இந்த நூல் சொல்கிறது.. அணுக முடியாத நிலப்பரப்பு என்று சொன்னாலும் அணைத்துக் கொள்ளும் மக்களின் இயல்பும் அவர்களின் வாழ்வு முறையும் இந்த நூலில் பயண அனுபவத்தின் மூலம் சுப்ர பாரதி மணியன் தந்திருக்கிறார் 15க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்.. அவரது ஐந்து வெளி நாட்டுப் பயண அனுபவ நூல்கள வெளிவந்திருக்கின்றன. அவரின் உள்நாட்டு பயண அனுபவம் இது.. 25 நாவல்கள் உட்பட 100 நூல்களை எழுதி இருக்கிறார். இந்திய ஜனாதிபதி வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது, தமிழ் செம்மல் விருது உட்பட நிறைய இலக்கிய விருதுகளை பெற்றவ.ர் அவருடைய படைப்பிலக்கியத்தில் பயண நூல்களும் ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கிறது என்பதை இந்த நூலும் சொல்கிறது திருப்பூர் இலக்கிய விருது இவ்வாண்டுக்கான திருப்பூர் இலக்கிய விருதுக்காக தமிழ் நூல்கள் எல்லா பிரிவுகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த நூல்களை அனுப்பலாம். ஒரு பிரதி அனுப்பவும் நூல்கள் அனுப்ப கடைசி தேதி: 15 -11- 2023 நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி: திருப்பூர் மக்கள் மாமன்றம் டைமண்ட் திரையரங்கு அருகில் மங்கலம் சாலை திருப்பூர் 641 604 ( 95008 17499) ( வரவேற்கும் முத்தமிழ் சங்கம் / கனவு )
பங்குடி நாவல் ; கா மூர்த்தி / சுப்ரபாரதிமணியன் கரிசல் படைப்புகளை தொடர்ந்து வாசித்ததன் மூலம் அந்த பகுதி வட்டார வாழ்க்கை வழக்கு, பேச்சு வழக்கு போன்றவற்றை இப்போதெல்லாம் சுலபமாக தான் புரிந்து கொள்ள முடிகிறது க. மூர்த்தி அவர்கள் இந்த நாவலில் வரையும் பெரம்பலூர் வட்டார வழக்கு பேச்சு வழக்கு சார்ந்த விஷயங்கள் புதிதாக இருப்பதால் இறுக்கமாக தோன்றுகின்றது. பெரம்பலூர் பகுதியில் இருந்து எழுத்தாளர்கள் அதிகப்படியானவர்கள் வரவில்லை என்பதால் இந்த குறை . பங்குடி என்ற வார்த்தையே புதிதாக இருந்தது. இடம்பெயர்ந்து வந்தவர்கள் இருக்க கூடிய இடம் என்றார்கள். அங்கு எல்லா சாதி மக்களும் இருக்கிறார்கள். வருத்த புளியங்கொட்டையை சாப்பிடும் மக்கள் அல்லது புளியங்கட்டையை அவித்து சாப்பிடும் மக்கள் வறுமையில் என்ற சித்திரங்கள் காணக் கிடைக்கின்றன விதைப்பட்டியை எடுத்து சோற்றுக்காக குத்தி போடு என்ற என்று சொல்கிற சோகமும் வருகிறது. ஒரு மலை இருக்கிறது அந்த மலையை உடைத்து துண்டு துண்டாக செய்து அதில் சில பொருட்களை உருவாக்குவதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஆதாரங்களை அந்த பகுதி ஒட்டக்குடியினர் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் “ சீலை இல்லைன்னு சின்னாயி வீட்டுக்கு போனாங்க அவ ஈச்சம்பாயைக் கட்டிட்டு எதுத்தாப்புல வந்தாங்கற கதை “ போல்தான் அந்த பகுதி மக்களின் வாழ்க்கை இருந்து கொண்டிருக்கிறது. மலைப்பாறைகளை சிறு வடிவமாகி விற்பவர்கள் அவர்கள். அங்கு விளைந்த பாறைகளை கொஞ்சம் கொஞ்சமாக துண்டுகளாக்கும் பொறுப்பு அவர்களுடையது அப்படித்தான் மூப்பனார் சிலை சிவப்பாக தொப்புள் கொடி கொப்பளித்து வருகிற வரை அந்த வேலையை செய்கிறவர்கள் அவர்கள். அங்கு வருகிற ஒரு புல்டோசர் வடக்கு பாரத பகுதியில் நிறுவப்பட இருக்கிற ஒரு கோயிலுக்காக பெரும் பாறைகளை கொண்டு செல்கிறது. அதற்காக அந்தப் பகுதியை சுத்தமாக்குகிறது பாறைகளை உடைத்து . பெரும் தேரைகள் போல் புல்டோசர்கள் அந்த பகுதியில் நடமாடுகிறது. வடநாட்டு கோயிலுக்கு இங்க இருக்கும் மலை அழிய பாறைகளை கொண்டு போகிறார்கள். அந்த மக்கள் கூட்டம் சோர்ந்து போகிறது. அங்கே பல சாதிப்பிரிவினைகள். மதப் பிரிவுகள் இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கை ஆழமாக தான் மூர்த்தி சொல்கிறார். பேரிங்கை என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கை முக்கியமாக இதில் இடம் பெறுகிறது. அவளுக்கு இரண்டு பெண்கள் அமைகிறார்கள். கணவனாக அமைகிறவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பெண்களும் சிரமப்படுகிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பாறைகளை நொறுக்கி எடுத்துச் செல்லும் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி நசுங்கிப் போகிற மனிதர்கள் போல பேரிங்கின் வாழ்க்கையும் ஆகிறது. வேறு எங்கே போல பல பெண்கள் வாழ்க்கை இங்கே இப்படி சொல்லப்படுகிறது. இப்படி புல்டோசர் நடமாடிக் கொண்டிருப்பதால் அந்தப் பங்குடி ரத்த நிலமாக மாறிப் பொழிகிறது . இந்த ரத்த காயப்பட்ட இரண்டு பகுதிகள் என்னை பாதித்தனர். ஒன்று பள்ளிகூடம். பள்ளிக்கூடம் இடிந்து மாணவருடைய வாழ்க்கை தவிக்கும் விதமாய் மாறிவிடுகிறது இன்னொன்று மக்கள் பீக்காட்டை சகஜமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் பின்னால் அதற்காக கழிவறைக்காக அவர்கள் வேறு இடம் தேடி போக வேண்டி இருக்கிறது. சாதியின் அதிகாரத்தின் வடிவமாக மலக்கரசலை வாயில் ஊற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதேசமயம் எதிரிடையாக பெருமாள் சாமிக்கு பீவாடையை காட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். மக்கள், பன்னி மாடு திங்கிற மக்கள் என்ற வகையில் பல பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன மலைகள் பாறையில் இடிக்கப்பட்டு மண் குவியல் ஆகிறது .மலைக்காடு கைவிட்டு போறதிலிருந்து புத்தி பேதலித்து ஊரை விட்டு பலர் போகிறார்கள் பலர். அங்கேயே திரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர் குடித்தெருவும் பங்குடி தெருவும் பகைத்திருக்க இருந்து கொண்டிருக்கிறன. அங்கு ஒட்டக் குடிகளாக இருந்தவர்கள் கூலி வேலைக்கும் செல்கிறார்கள் .பலர் வெட்டியாய் திரிகிறார்கள் சிலருக்கு பண்ணை வேலை தூரத்தில் அமைகிறது. பழங்குடிகளின் ஆதாரமாக இருந்த மலை பெட்ரோல் ஆகிறது கல் அரவை மெஷின்களின் சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது கல் அரவை மெஷின்கள் இருந்த இடம் பள்ளிக்கூடத்துக்கு என்று ஆகிறது .பேரிங்கையோடு உறவு கொண்டிருந்த காண்டீபன் செய்யும் ரகளையும் அதனால் கொலையும் நிகழ்கிறது ஆண்குறியை அறுத்து கொலை செய்யப்படுகிறான். அந்த பெண்ணுக்கு பின்னால் பித்தன் என்பவன் அலைகிறான் பனங்கறுக்கு நெஞ்சில் கீறுவது போல பல துயரங்கள் அந்த பெண்ணுக்கு நிகழ்கிறது. பாறைகள் இல்லாத போன காலத்தில் வெறும் குன்றுகள் ஆறுதல் தருவது போல அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய மகள்கள் ஆறுதல் தருகிறார்கள். புது வெள்ளத்தைக் கண்ட கெளுத்தி மாதிரி குதித்து விழும் வாழ்க்கை மின்னல்கள் எப்போது வரும் என்று அவள் காத்திருக்கிறாள்.. பல ஆண்களுடன் வாழ நினைக்கிற அந்த பெண்ணின் துயரம் நாவல் முழக்க இருக்கிறது. மலைகளை பாறைகளை துண்டாக்கிய புல்டோசர்கள் வேறு ஊர்களுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அக்காட்சிகளோடு நாவல் முடிகிறது. ஒட்டக்குடிகள் சார்ந்த மக்களின் வாழ்க்கையும் வடநாட்டு கோயிலுக்காக இங்கிருந்து பாறையில் கொண்டு செல்லப்படுவதற்காக சிதைக்கப்படும் மலைப் பகுதிகளும் இந்த நாவலில் மிக முக்கியமான இடங்களை அமைக்கின்றன. பெரம்பலூர் பகுதியை மக்களின் வாழ்க்கையை மிகவும் துல்லியமாக அவர்களின் மொழி மற்றவர்களுக்கு படிக்க சிரமம் ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை மீறி அப்படியே கொடுக்கப்பட்டிருப்பது மூர்த்தி அவர்கள் தொடர்ந்து அந்த மொழியில் இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம் ( .ரூ 300 வெற்றி மொழி பதிப்பகம் திண்டுக்கல்)
அறிவுச்செல்வன் நூல்கள் நீரா நீர் வார்த்தீர் கட்டுரைகள் ஒரு கட்டுரை எழுத காரணமாக அறிவு பகிர்வு இரண்டு ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் இரண்டும் இருந்தால் ஒரே கல்லில் இரு மாங்காய். கவிதையோ கதையோ கற்பனை அடித்தளமாக கொண்டு கட்டமைத்து விடலாம். கட்டுரையின் திசை அதற்கு எதிரானது .ஆதாரங்கள் கூறுவது அறிவியல் ஆனது எழுதப்பட்ட வரிகளை தாண்டி குறியீடோ ஏதுமற்ற பேசுபொருள் பற்றிய வெள்ளை அறிக்கை. இது புத்திசாலி வாசகர் வந்து போகும் பொழுது போகும் போர் இது என்று அறிவுச்செல்வன் பொதுவாக கட்டுரைகள் பற்றிச் சொல்கிறார் இந்த கட்டுரைகளில் வழக்கம் போல் அவருடைய பல அனுபவங்களை பிழிந்து தந்திருக்கிறார். ஆறாகட்டும் தனியாளாகட்டும்., தேனி ஆகட்டும் சாதாரண ஈச்சம்பாய் ஆகட்டும் இவருக்கு எல்லாமே கட்டுரைகளுக்கான விஷயங்களாகின்றன. அவற்றை சொல்லும்போது தன் அனுபவங்களை உள்ளே வைக்கிறார் பொதுவான அப்பிராயங்களை வைக்கிறார். அவற்றின் உடையே கொஞ்சம் கிண்டலும் நவீன இலக்கியம் சார்ந்த சிக்கல்களும் மரபு இலக்கியம் சார்ந்த பிழியும் எல்லாம் வந்து விடுகின்றன. எல்லா விஷயங்களையும் எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரு அக்கறையில் இந்த கட்டுரைகள் அமைந்திருக்கிறது. நாம் இந்த உரை கட்டிடங்கள் மூலம் எல்லா வாசல்களுக்கும் சுலபமாக திறக்க வழி சொல்ல கூடியவை விண்ணாசை வெளியிட்டகம் மணப்பாறை திருச்சி மாவட்டம் அறிவுச்செல்வன் நூல்கள் 2 குடும்பத்தில் ஒரு குதிரை அறிவுச்செல்வன் குறுநாவல்கள் அறிவுச்செல்வன் நாவல் தான் எழுதவில்லை அதற்கான நல்ல முத்திரைகளாக பல குறுந்தது குருநாவல்களை எழுதிவிட்டார் அந்த நாவல் எல்லாம் நீட்சி செய்து கொண்டு போய் நாவல் தளத்தில் நிறுத்தலாம் சென்ற முறை அவள் அவர் வெளியிட்டிருந்த குறு நாவல் தொகுப்பில் இப்படித்தான் 140 பக்கங்களுக்கு கூட ஒரு குரு நாவல் இருந்தது. அதை கூட நாவல் என்ற வகையில் கூட கொண்டு செல்லலாம் ஆனால் அவர் அது குறுநாவல் என்று அடம்பிடித்து வைத்திருக்கிறார் இதில் உள்ள கதைகள் நல்ல குறுந்கதைகளாக சிறப்பாக வந்திருக்கின்றன. குடும்பத்தில் ஒரு குதிரை என்று கார் வாங்கி பயணப்பட்டு அனுபவத்தை சொல்கிறார். தீவட்டி கொள்ளை என்பது நமக்கு தாத்தா சொன்ன கதைகள் இது ஒரு பகுதியாக இருக்கிறது, மாக்கோலும் மனக்கோலமும் என்ற கதையில் கோலம் போடுவதில் அக்கறை கொண்ட ஒரு பெண் நகர வாழ்க்கையில் அப்பார்ட்மெண்டில் கோலம் போட முடியாத ஒரு சிரமத்தை ஒரு சிறப்பாக சொல்லி இருக்கிறார். அருமையான நாவல் கூத்தாடிகள் பிழைப்பு என்பது சாதாரணமானது ஆனால் அவர்களும் இருக்கின்ற திடமும் மனோ தைரியமும் மனிதாபிமானமும் சிறந்தது. இதை இவர் இந்த கதையில் சொல்கிறார் இந்த தொகுப்பு இந்த கதைகளை வேறு திசையில் இருந்து கூட நாம் நாவலாக்க சொல்லலாம் .ஆனால் நாவல் என்ற வடிவத்தில் அவர் கொண்டு வர இன்னும் தயக்கம் இருக்கிறது அதை அவர் விடுவித்து செய்ய வேண்டும் நல்ல நாவல்கள் அவரிடம் உருவாகும் விண்ணாசை வெளியிட்டகம் மணப்பாறை திருச்சி மாவட்டம்
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் 9486101003 இயக்குநர் இரா. ரவிக்குமார் குறும் படம் சுமங்கலி - இரா. ரவிக்குமார் - ஒரு பார்வை - பொன். குமார் மாற்று ஊடக முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருபவர் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். உலகப்படங்களையும் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வருபவர்., குறும்பட, ஆவணப்படத் துறையிலும் பங்கெடுத்து வருபவர். எட்டாம் வகுப்பு, சுழல் என்னும் குறும்படங்கள் மூலம் குறும்பட உலகில் ஓரிடத்தைப் பிடித்து இருப்பவர் இரா. ரவிக்குமார். இருவரும் இணைந்து அளித்திருக்கும் குறும்படம் ' சுமங்கலி'. எழுத்து சுப்ரபாரதிமணியன். ஒளிப்பதிவு இயக்கம் இரா.ன்ன ரவிக்குமார்.னனனனன்ன மில் முதலாளிகள் பெண் தொழிலாளிகளுக்கு ' சுமங்கலி' திட்டம் என்னும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தி மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்து மூன்றாண்டுகளுக்குப் பின் தொகை தருவதாகக் கூறி பின்னர் ஏமாற்றி வருகிறது. ஏமாற்றுவது என்பது பெண்களை ஒழுக்கம் கெட்டவள் என குற்றஞ்சுமத்தி வெளியேற்றுவது. இத்திட்டத்தில், இம் மாய வலையில் ஏராளமான பெண்கள் சிக்கியுள்ளனர். இப்பிரச்சனை திருப்பூர் மில்களில் மிகுதியாக நடைமுறையில் உள்ளன. ' தேநீர் இடைவேளை' என்னும் நாவல் உள்பட பல படைப்புகளின் மூலம் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் இத்திட்டத்தை எதிர்த்துள்ளார். அம்பலப்படுத்தியுள்ளார். பெண்களுக்கு புரியச்செய்துள்ளார். விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். ' கூண்டில் அடைபட்ட பெண் தொழிலாளர்கள்' என்னும் கட்டுரைத் தொகுப்பு மூலமும் இச் ' சுமங்கலி' திட்டத்தை விரிவாக எழுதி அதன் உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளார். இத்திட்டத்தை மனிதத் தன்மையறறது மற்றும் சுரண்டல் தன்மையானது என சாடியுள்ளார். இத்துடன் இத்திட்டத்தை மையமாக்கி ' சுமங்கலி ' என்னும் தலைப்பிலே ஒரு கவிதையும் எழுதியுள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். கவிதையைக் காட்சிப்படுத்தியதே ' சுமங்கலி' என்னும் இக்குறும்படம். வரிக்கு வரி அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவு செய்து இயக்கிய இரா. ரவிக்குமார். காட்சிகளின் மூலம் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார். கவிதையின் கருவைச் சிதையாமல் தந்துள்ளார். கவிதை பெண் குரலாக ஒலிக்கிறது. பெண்களின் பிரதிநிதியாக பேசுகிறது. ' சுமங்கலி' திட்டத்தைக் கூறி '" முப்பதாயிரம்' கனவை ஏற்படுத்தி பெண்களை அழைத்து வந்ததைக் கூறுகிறது. முப்பதாயிரம் தொகையை எத்தனை பெண்கள் வாங்கியிருப்பார்கள் என்னும் வினாவையும் எழுப்புகிறது. தினமும் 16 மணி நேரம் பணி என்றும் மாதத்தில் ஒரு நாளே விடுமுறை என்னும் உழைப்புச் சுரண்டலையும் சொல்கிறது. ஊருக்குப் போன பெண்களில் பலர் பணிக்கு திரும்பவில்லை என்றும் சுவரேறி தப்பித்துச் சென்று விட்டனர் சிலர் என்றும் கூறுகிறது. பெரும்பாலும் மச்சான்கள் குடித்து விட்டுத்தான் வருவார்கள் என்பது ஆண்கள் மீதான விமர்சனம். ' சுமங்கலி' என்னும் அட்டை கழுத்தில் தொங்கவிட்படுவதை அவமானமாகக் கருதுகிறாள். ஒரு நாயின் கழுத்தில் தொங்கவிடப்பட்டது போல கூசுகிறாள். ' சுமங்கலி' என திட்டத்தின் பேரால் அழைக்கப்பட வேண்டாம் என்றும் உண்மையிலேயே ' சுமங்கலி' யாக விரும்புவதாகவும் கவிதை விவரிக்கிறது. தாலியைக் கொடுத்து விட்டு சுமங்கலி அட்டையை வாங்கிக் கொண்டாலும் சரி என்னும் இறுதி வரிகள் பெண்களின் கோரிக்கையாக வெளிப்பட்டுள்ளது. இக்கவிதை' ச்மங்கலி' திட்டத்தை மறுக்கிறது உழைப்பைச் சுரண்டும் முதலாளிகளை எதிர்க்கிறது சிக்கிச்சுழலும் பெண்களுக்கு விடுதலையைக் கோருகிறது. இருப்பவர்களுக்கு எச்சரிக்கிறது. விழிப்புணர்வை ஊட்டுகிறது. கவிதையாக வாசிப்பதை விட காட்சியினூடாக கவிதையைக் கேட்பது தாக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. எழுதிய சுப்ரபாரதி மணியனும் இயக்கிய இரா. ரவிக்குமாரும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்துள்ளனர். உடன் நடித்து உதவியது சு. சுபமுகி. கவிதையின் நாயகியாக குறும்படத்தில் காணப்படுகிறார். இயல்பாக இயக்கத்திற்குக் கட்டுப்பட்டுள்ளார். படைப்பின் தன்மையை அவரிடம் முழுமையாகக் காணமுடியவில்லை. பெயர். சு. சுபமுகி. இவர் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் மகள் இவரும் ஒரு கவிஞர். கவிதையைக் காட்சிப்படுத்துவது குறும்படத்துறையில் புதிதல்ல எனினும் ' சுமங்கலி' என்னும் ஏமாற்றுத் திட்டததை வெளிச்சப்படுத்தியிருப்பதால் சிறப்புப் பெறுகிறது. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனுக்கும் இயக்குநர் இரா. ரவிக்குமாருக்கும் பாராட்டுக்கள். குறும்படத்துறையில் ஒரு கலைக் குடும்பத்தின் வாரிசாக பிரவேசித்திருக்கும் சு. சுபமுகி வாழ்த்துகள். வழங்கியிருக்கும் ' திருப்பூர் மக்கள் அமைப்பு' க்கு தன்றி. தொடர்புக்கு எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் 9486101003 இயக்குநர் இரா. ரவிக்குமார் 9894982525. நன்றி : கனவு
பிரமிளும், சுப்ரபாரதிமணியனும் திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் ..சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளை சொற்பொழிவு -- பிரமிள் கவிதைகள் குறித்து “ கணத்தில் மொக்கவிழும் காலாதீதம் “ என்ற தலைப்பில் -இயக்குனர் தங்கம் அவர்கள் வழங்கினார் அக்டோபர் மாதத்தில் 0 0 0 இயக்குனர் தங்கம் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் இயக்குனர் தங்கம் அவர்களின் வேங்கை சாமி என்ற திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டது . இந்தக்குறிப்புகள் விடுதலை படத்தின் டைட்டிலிலும் இடம்பெறுகின்றன வெற்றிமாறனின் விடுதலை 1 , விடுதலை 2 ஆகிய இரண்டு பாகங்களைக் கொண்ட படங்களிலும் இயக்குனர் தங்கம் பணிபுரிந்து இருக்கிறார் . பாலு மகேந்திரா அவரிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர் .அவர் இயக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட கதைநேரம் தொடரில் பெரும் பங்கு வைத்தவர் ... பல திரைக்கதைகளை உருவாக்கியவர் ..இறைவன் என்பது வரம் என்ற இவருடைய கதையை இப்போது அமீர் அவர்கள் திரைப்படமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் ..புதிய திரைப்படம் ஒன்று இயக்குகிற வேலையில் தங்கம் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார் ....தொடர்ந்து இலக்கியவாசிப்பிலும் அக்கறையும் கொண்டவர் பிரமிள் அவர்களுடைய மறைவுக்கு பின்னால் அவர் நினைவிடத்தில் சமாதி ஒன்று எழுப்பி இருக்கிறார் . ஓவியர் சந்துவை வைத்துக்கொண்டு பிரமிள் அவர்களுடைய சிலை ஒன்றை நிறுவி இருக்கிறார் ...அது அவருடைய சமாதி நினைவு மண்டலத்தில் விரைவில் வைக்கப்பட உள்ளது .பிரமிள் பற்றிய ஒரு ஆவணப்படம் ஒன்றையும் கால சுப்பிரமணியம் போன்றோரின் ஒருங்கிணைப்பிலும் ஆலோசனையிலும் எடுத்து வருகிறார் .அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது . 0 இயக்குனர் தங்கம் :உரை : சென்ற நூற்றாண்டில் பாரதிக்கும் புதுமைப்புத்தனுக்கும் பிறகு பிரமிள் என்ற ஒரு கருத்தை பலரும் வெளிப்படுத்துகின்றனர் த.மிழ் மரபிலிருந்து கிளர்ந்தெழுந்து வந்தவர்களான மேற்கண்ட முப்பெரும் மகனார் தமிழை தத்தமது வாழ்கால மாற்றங்களுக்கு இசைவுறும்படியும் வருங்கால மாற்றங்களை மேற்கொள்ளும்படியும் புத்தாற்றலூட்டிய புதுக்கியவர்கள் என்பதால் இணைமதிப்பீட்டுக்கு உரியவர்களாகிறார்கள் என்பது வரலாற்றில் நிலைத்து விட்ட பார்வை. . இது எவரது மதிப்பீட்டு புலனாய்வுத் துறை கொண்டும் துப்பறிந்து மேலே கொண்டுவரப்பட்ட மறைவு உண்மையும் அன்று பாரதியும் புதுமைப்பித்தனும் தமிழ் இலக்கிய போக்கியின் எதிர்காலத்தில் நேரடியாக பங்கு செலுத்துகின்றனர் தாக்கமானது பெரும் இலக்கிய போக்குகளோடு மட்டும் நின்று விடுகிற ஒன்று அல்ல. முன்னையர் இருவரை காட்டிலும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் பழைய காலத்தில் குடும்ப சோதிடர் என்றவர் இருப்பாரே அதுபோல் தமிழினத்தின் தமிழ் சமூகத்தின் எதிர்கால கலை இலக்கிய பண்பாட்டு வரலாற்று ஆன்மீக மதவாத விபத்துக்களை குறித்து ஆருடம் சொன்னவர் .உலக வரலாறாது தமிழின வரலாற்றை ஒருவழிக்க போகிறது என்பதையும் தமிழ் சமூகம் இந்த பூவில் அழியாது உயிர் தரிக்க வேண்டுமானால் தமிழ் சமூகத்திற்குள் ஏற்பட்டாக வேண்டிய அகவடிப்பு குறித்தும் ஒரு மாயக்காரனைப் போல குறிப்புகள் கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் அதனால் தான் முப்பெரும் மகனான பிரமிள் தனி பெரும் மகனார் என்று ஆகிறார் இப்படி சொல்வதனால் முன்னைவரை விட இவர் பெரிய ஆளாக்கும் என்பதே அல்ல பொருள் . புதுமையும் நவீனமும் கலந்தவர் பாரதியும் புதுப்பித்தாலும் பிரமிளும் ஒரே ஆற்றலே என்றும் வெவ்வேறு கால வெளிகளின் வெவ்வேறு வடிவுகள் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம் என்று பிரமிடு கவிதைகளைப் பற்றி தன் உரையில் குறிப்பிட்டு உரையை ஆரம்பித்து விரிவாகப் பேசினார். 0 சுப்ர பாரதி மணி யன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பான ” அப்பா ”வில் தொகுப்பில் இடம்பெற்று இருந்த சேவல் சண்டை பற்றிய கதைகள் எங்களின் கோவை நண்பர்களை மிகவும் உலுக்கியது அவர்கள் சொல்ல நானும் அந்த தொகுப்பில் உள்ள சேவல் சண்டை மற்றும் பிறகதைகளை வாசித்தேன் .பிடித்தைருந்தன. அவரை அப்போதே கோவையில் சந்தித்திருக்கிறேன். அவருடைய முதல் நாவல் “ மற்றும் சிலர் “ திண்டுக்கல் சின்னாளப்பட்டி கிராமத்திலிருந்து ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்த மக்களைப் பெற்றது. சமீபத்தில் அவரில் ஆயிரம் பக்க நாவல் சிலுவை வெளிவந்திருக்கிறது. அதனை விலைக்கு வாங்கி இருக்கிறேன் விரைவில் படித்து முடித்து விடுவேன் . தொடர்ந்து நான் அவர் படிப்புகளை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் சமீபத்தில் சுப்ரபாரதிமணியன் தன்னுடைய நாவல்களை திரைக்கதைகள் ஆக்கி நான்கு புத்தங்களை வெளியிட்டு இருக்கிறார் . தமிழ் நாவல்களில் இருந்து சின்ன விஷயங்களை திருடிக் கொண்டு திரைப்படமாக்குகிற போக்கு இருக்கிறது ..இந்த சூழலில் நாவல்களை முழு திரைக்கதைகள் ஆக்கிக் கொண்டு நூலாக வெளியிட்டு இருக்கிறார் சுப்ரபாரதிமணியன் ...இதிலிருந்து எவ்வளவு திருடு போகப் போகிறது எவ்வளவு பேர் மீது இவர் வழக்கு என்று வழக்காடு மன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் வழக்குகள் பதிவு செய்ய இருக்கிறாரோ . .இவரின் தொடர்ந்து இலக்கிய செயல்பாடுகளில் இந்த நாவல்களை திரைக்கதை ஆக்கும் அம்சமும் முக்கியமாகும் . திரைக்கதைக்கும் இலக்கியத்திற்குமான இடையிலான பொருத்தப்பாடுகளையும் வேறுபாடுகளையும் உணர்ந்த முடித்தவன் என்கிற முறையிலும் திரை கதைக்கும் இலக்கியத்திற்கும் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவன் என்ற முறையிலும் இந்தப் பார்வை கோணம் சுப்ரபாரதிமணியனின் திரைக்கதை நூல்களில் இருக்கிறது . (திண்டுக்கல் காந்திகிராமம் அறக்கட்டளையில் பல்கலைக்கழகத்தில் சுப்ரபாரதிமணியின் அறக்கட்டளை சொற்பொழிவு -- பிரமிள் கவிதைகள் -இயக்குனர் தங்கம் அவர்கள் வழங்கினார் அப்போது பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார் ” ) சுப்ரபாரதிமணீயன் நடத்தி வரும் பல இதழ்களில் பிரமிள் அவர்களின் படைப்புகள் வெளியாகியுள்ளன. அவரின் படைப்புகளுக்கு அவருக்கான பொருளாதார உதவியை மனதில் கொண்டு சன்மானங்கள் வழங்கியிருக்கிறார். இந்த விசயத்தை காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “ கனவு “ இலக்கிய இதழ் தொகுப்பில் கூடத் தெரிவிட்த்துள்ளார். “ கனவு “ இலக்கிய இதழ் முதல் 25 ஆண்டுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் 400 பக்கத் தொகுப்பாகும் அது பேராசிரியர் ஆனந்தகுமார் அவர்கள் சுப்ர பாரதி மணியன் அறக்கட்டளையின் சொற்பொழிவின் போது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஆனந்தகுமார் அவர்கள் பேசும்போது : சுப்ரபாரதி படைப்புகள் பற்றி அவரின் ஹைதராபாத் மற்றும் திருப்பூர் மைய படைப்புகளை வைத்துக்கொண்டு இரட்டை நகர்களின் கதை சொல்லி என்று நான் ஒரு நீண்ட கட்டுரை எழுதி இருக்கிறேன். திருப்பூர் நெசவாளர்களின் மற்றும் விவசாயிகளின் பூமியாக இருந்தது .அது பின்னலாடை நகரமாக மாறிய பின்னால் விவசாய சீரழிவும் சுற்றுச்சூழல் சீரழிவும் எப்படி நடந்தது என்பதை இவரின் சாயத்திரை நாவல் விளக்குகிறது .நெசவாளர்களின் வாழ்விடமாக இருந்த பூமி இயந்திர பூமியாகி விட்டது. இப்போது வெளிவந்திருக்கும் அவரின் ஆயிரம் பக்க நாவலான சிலுவையில் கூட நெசவாளர் வாழ்க்கை பற்றி அதிகம் பேசுகிறார் கொங்கு பூமி என்றால் அது கவுண்டர்களின் விவசாய வாழ்க்கை சொல்லப்பட்ட இலக்கிய பிரதிகள் அதிகம் என்ற நிலையில் நெசவாளர் வாழ்க்கை பற்றி இவருடைய நாவல்கள் பெரும்பாலும் பேசி இருக்கின்றன . இன்றைக்கு உலகமயமாக்களுக்கு பின்னால் வணிகம் என்பது எல்லா நகரங்களுக்கும் சாதாரணமாகிவிட்டது .எல்லா நாடுகளுக்கும் பொதுவாகிவிட்டது இந்த சூழலில் பல வெளிமாநில மக்கள் வந்து தொழிலாளராக பணிபுரியும் இடமாக இருக்கிறது திருப்பூர் நைஜீரிய ஆப்பிரிக்கர்கள் வந்து குடியேறியிருக்கிற பிரதேசமாகவும் இருக்கிறது .இப்படி தமிழக நகரம் இந்தியாவின் பல மாநில தமிழ் அடையாளங்களை , பிரச்சனைகளை உள்ளடக்கிய நகரமாக திருப்பூர் மாறி இருப்பதை இவரின் படைப்புகள் சொல்கின்றன. தமிழ் பண்பாடு வட்டாரத் தன்மை வாய்ந்ததா அது அந்த பண்பு நீடிக்கிறதா என்ற கேள்வியை இவருடைய படைப்புகள் உள்ளே வைத்திருக்கின்றன வட்டார முதன்மையான இடம் பெற்றதும் அவற்றின் தன்மையும் காலமாற்றத்தால் நிகழ்ந்த விஷயங்களும் இவரின் படைப்புகளில் வெளிவந்திருக்கின்றன .உலக அளவில் பல விசயங்கள் பாதிக்கும் தொழில் நகரம் சார்ந்த இலக்கியப் பதிவுகளை இவருடைய படைப்புகள் கொண்டிருக்கின்றன சுப்ர பாரதி மணியன் அறக்கட்டளையின் சொற்பொழிவின் போது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஆனந்தகுமார் அவர்கள் பேசும்போது : சுப்ரபாரதி படைப்புகள் பற்றி அவரின் ஹைதராபாத் மற்றும் திருப்பூர் மைய படைப்புகளை வைத்துக்கொண்டு இரட்டை நகர்களின் கதை சொல்லி என்று நான் ஒரு நீண்ட கட்டுரை எழுதி இருக்கிறேன். திருப்பூர் நெசவாளர்களின் மற்றும் விவசாயிகளின் பூமியாக இருந்தது .அது பின்னலாடை நகரமாக மாறிய பின்னால் விவசாய சீரழிவும் சுற்றுச்சூழல் சீரழிவும் எப்படி நடந்தது என்பதை இவரின் சாயத்திரை நாவல் விளக்குகிறது .நெசவாளர்களின் வாழ்விடமாக இருந்த பூமி இயந்திர பூமியாகி விட்டது. இப்போது வெளிவந்திருக்கும் அவரின் ஆயிரம் பக்க நாவலான சிலுவையில் கூட நெசவாளர் வாழ்க்கை பற்றி அதிகம் பேசுகிறார் கொங்கு பூமி என்றால் அது கவுண்டர்களின் விவசாய வாழ்க்கை சொல்லப்பட்ட இலக்கிய பிரதிகள் அதிகம் என்ற நிலையில் நெசவாளர் வாழ்க்கை பற்றி இவருடைய நாவல்கள் பெரும்பாலும் பேசி இருக்கின்றன . இன்றைக்கு உலகமயமாக்களுக்கு பின்னால் வணிகம் என்பது எல்லா நகரங்களுக்கும் சாதாரணமாகிவிட்டது .எல்லா நாடுகளுக்கும் பொதுவாகிவிட்டது இந்த சூழலில் பல வெளிமாநில மக்கள் வந்து தொழிலாளராக பணிபுரியும் இடமாக இருக்கிறது திருப்பூர் நைஜீரிய ஆப்பிரிக்கர்கள் வந்து குடியேறியிருக்கிற பிரதேசமாகவும் இருக்கிறது .இப்படி தமிழக நகரம் இந்தியாவின் பல மாநில தமிழ் அடையாளங்களை , பிரச்சனைகளை உள்ளடக்கிய நகரமாக திருப்பூர் மாறி இருப்பதை இவரின் படைப்புகள் சொல்கின்றன. தமிழ் பண்பாடு வட்டாரத் தன்மை வாய்ந்ததா அது அந்த பண்பு நீடிக்கிறதா என்ற கேள்வியை இவருடைய படைப்புகள் உள்ளே வைத்திருக்கின்றன வட்டார முதன்மையான இடம் பெற்றதும் அவற்றின் தன்மையும் காலமாற்றத்தால் நிகழ்ந்த விஷயங்களும் இவரின் படைப்புகளில் வெளிவந்திருக்கின்றன .உலக அளவில் பல விசயங்கள் பாதிக்கும் தொழில் நகரம் சார்ந்த இலக்கியப் பதிவுகளை இவருடைய படைப்புகள் கொண்டிருக்கின்றன. (திண்டுக்கல் காந்திகிராமம் அறக்கட்டளையில் பல்கலைக்கழகத்தில் சுப்ரபாரதிமணியின் அறக்கட்டளை சொற்பொழிவு -- பிரமிள் கவிதைகள் -இயக்குனர் தங்கம் அவர்கள் வழங்கினார் அப்போது பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார் ” )
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு 0 இறந்துபோன ஒரு சாலையை சாலையில் பார்த்தேன் அஹ்லாம் பஸ்ஹாரத் (Ahlam Bsharat) அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: ஜெய்னா ஹாஸ்ஸன் பெக் (Zeina Hashem Beck) ஆங்கிலம் வழி தமிழில் : எஸ்.வி.ராஜதுரை இறந்துபோன ஒரு சாலையை சாலையில் பார்த்தேன் அங்கேயே அதை விட்டுவிட்டேன் இறந்துபோன ஒரு சாலையை தரையிலிருந்து எப்படித் தூக்குவது என்பதையோ பதினான்கு தளங்களைக் கொண்ட ஒர் கட்டடத்தை நடுங்கிக் கொண்டே எப்படிக் கையில் வைத்திருப்பது என்பதையோ யாரும் எனக்குச் சொல்லித் தரவில்லை. * பீதியுற்ற என் நண்பர்களை அழைப்பதற்கு அஞ்சுகிறேன் ஏனெனில் அவர்களிடம் கடசி வார்த்தையென்று எதைச் சொல்ல வேஎண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை எப்படியிருந்தாலும் அப்படி ஒன்றும் இருக்காது அது உண்மை. * போரில் தப்பிப் பிழைத்த ஒரு மீனைப் பற்றி எழுதுகிறேன் அதை எழுதுவது எளிது: அந்த மீன் போரில் தப்பிப் பிழைத்தது * பீதியுற்ற பெயரில்லாத ஒரு பூனையின் புகைப்படத்தைப் பகிர்கிறேன் இது நல்லது: பெயரில்லாமல் இருப்பது எனவே சாவு உங்களை அழைக்காது * எனது நண்பர்கள் பசு எனப் பெயரிடப்பட்ட ஒரு பூனையைப் பற்றிச் சொல்கிறார்கள் ஆம், போரின் நடுவே பசு என்ற சொல்லைக் கேட்பது எனக்குத் தேவைப்பட்டது ஏனெனில் இந்த பயங்கரம் அனைத்துக்கும் பிறகு பால் என் நெஞ்சை வறண்டுபோகச் செய்துவிட்டது * பேட்மேன் , பாண்டா என்ற இரு பெயர்களைக் கொண்ட ஒரு பூனையைத் தூக்கிக் கொண்டிருக்கும் காஸாவின் குழந்தையொன்றின் வீடியோவைப் பார்த்தேன் இரண்டு பெயர்களைக் கொண்டிருப்பது நல்லது * அவற்றில் ஒன்றால் சாவு உன்னை அழைக்கும்போது , நண்பனே இன்னொன்றுடன் ஓடு * பூனையே சாவு உன்னை பேட்மேன் என்று அழைக்கும்போது வேகமாக ஓடு ஏனெனில் உன் பெயர் பாண்டா ஆக்கிரமிப்பினால் பாண்டா என்ற பூனையைக் கொல்ல முடியாது. குறிப்பு: காஸா மீது 2011 மே மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் வான் வழித் தாக்குதல் நடத்தியபோது எழுதப்பட்டது. Translated by SVR நன்றி: ArabLit from ArabLit’s Wednesday Poetry, https://arablitpoetry.substack.com/p/wednesday-poetry-raad-abdul-qadirs?utm_campaign=email-half- post&r=2hqww&utm_source=substack&utm_medium=email
சுப்ரபாரதிமணியன் 25 நாவல்கள் உட்பட் 100 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து திரைப்பட விழாக்களில் பங்கு பெறுபவர். கனவு என்ற இலக்கிய இதழை 37 ஆண்டுகளாக நடத்தி வருபவர்.அதில் இடம்பெற்றத் திரைப்படக்கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. திரைப்படங்கள் பற்றி 5 நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளார். சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார். இவரின் 5 நாவல்கள் வீதம் மலையாளம், இந்தியிலும் , 15 நூல்கள் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்: 2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது. திரைக்கதைகள் 4 நூல்களும் , திரைப்பட கட்டுரைகள் என 5 நூல்களும் வெளிவந்துள்ளன. குழந்தைகளுக்கான நாவல் ஒன்றும், சிறுகதைத் தொகுப்புகள் மூன்றும், குழந்தைகள் நாடக நூல் ஒன்றும் வெளியிட்டிருகிறார். இவரின் 1000 பக்க நாவல் “ சிலுவை “ சமீபத்தில் வெளிவந்துள்ளது