சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 30 ஜூலை, 2014



கொலைக்களன்களின் மறு உருவாக்கம்

சுப்ரபாரதிமணியன்

the-act-of-killing-anwar-congo
பொதுவுடமையாளர்கள், பொதுவுடமை ஆதரவாளர்கள், தங்களுக்குப் பணம் தர மறுப்பவர்கள் என்று 5 லட்சம் பேரை 1965ல் இந்தோனொசியாவில் கொன்று குவித்தார்கள். தொடர்ந்து மனிதகுலம் இன, துவேச அழிப்பால் துயரங்களைத் தந்து வருவதைக் காணமுடிகிறது. இரண்டு உலக் யுத்தங்கள் முதல் முள்ளிவாய்க்கால் நிகழ்வு வரை இவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிபர் சுகர்னோ தூக்கி எறியப்பட்டு சுகர்தோவின் ஆட்சி வந்தது. அந்த வகை கொலைச் செயலுக்கு பலர் பயன்படுத்தப்பட்டனர். அதில் அன்வர் காங்கோ என்ற சுமித்ராவைச் சார்ந்தவரைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட ஆவணப்படம் இது. அன்வர் காங்கோ மட்டும் தனிப்பட்ட முறையில் 1000 பேரைக் கொன்றிருக்கிறார். பொதுவுடமைக்காரர்கள் என்றில்லாமல் பொதுவுடமைக்காரர்கள் எனச் சந்தேகம் கொண்டவர்கள், தங்கள் மிரட்டலுக்கு அடிபணியாதவர்கள் என்று சகட்டு மேனிக்கு கொலை செய்யப்பட்டார்கள். திரைப்படக் கொட்டகையில் நுழைவுச்சீட்டு விற்பவராக இருந்த அன்வர் அங்கு திரையிடப்பட்ட அமெரிக்கப் படங்களால் பெரிதும் கவரப்பட்டவர். அமெரிக்க படங்களின் கதாநாயகர்களாகவும், கிளிண்ட் ஈஸ்ட்வுட்டாகவும் தன்னை பாவித்துக் கொண்டு அந்த கொடூரச் செயல்களைச் செய்திருக்கிறார். அவருக்குத் தேவை துப்பாக்கி கூட அல்ல . இரும்புக் கயிறு.

இந்தோனிசியாவில் 1965-67ல் நடந்த இந்தப் படுகொலையில் பாதிக்கப்பட்டக்குடும்பங்கள், உயிர் பிழைத்தவர்களை வைத்து இந்தப் படத்தைத் தயாரிக்க இயக்குனர் ஜோஸ்யு ஓபன்ஹெய்மர் திட்டமிட்டுருக்கிறார். ஆனால் 1000 கொலைகளைச் செய்த அன்வரின் செயல்களை மையமிட்டு அது மாறிப்போயிருக்கிறது. அன்வர் கொலை செய்தவற்றை நிகழ்த்திக் காட்டுகிறார்.வெறும் இரும்ப்க் கயிறு. கழுத்தைச் சுற்றி இறுக்கி இரத்தமின்றி கொஞ்சம் அலறலுடன் கொலை செய்தலை மறு உருவாக்கம் செய்து காட்டுகிறார்.அவர் கொலைகளன்களுக்கு கூட்டிச் சென்று காட்டுகிறார். முன்பு செய்ததை நிகழ்த்திக் காட்டுகிறார். முதலில் எவ்வித குற்ற உணர்வும் இல்லை. ஆனால் இப்படம் உருவாக்கப்பட்ட இறுதி கணங்களில் குற்றவுணர்வு அவரைப் பீடித்துச் சிரமப்படுத்துகிறது. சாகும்போது கண்கள் வெறித்த நிலையிலான ஒருவரின் பார்வை அவரை இம்சிக்க ஆரம்பிக்கிறது.பான்காசியா இளைஞர் படையில் எப்போதும் சார்பும் ஆதரவும் கொண்டவர். அந்த அதிகார மிதப்பு அவரைக் குற்றம் குறித்த குற்றவுணர்வைக் குறைத்துக் கொண்டே இருக்கிறது. கொலைக்காலத்தில்   அவர்கள் சுயேச்சையானவர்கள்.சுதந்திரமானவர்கள். கொலைகளை சுலபமாகச் செய்கிறார்கள். தொழுகை நேரத்து அழைப்புகள் மட்டும் சில சம்யம் அதை ஒத்தி வைக்கிறது. நட்த்திக் காடப்படும் போது அதை வேடிக்கைப் பார்க்கிற பெண்களும் குழந்தைகளும் கத்றுகிறார்கள். மயங்கி விழுகிறார்கள். கொலைகள சூழல் மட்டுமில்லாமல் கொலையுண்டவ்ர்களின் முகங்களின் தோற்ற மாதிரிகள், கொலை செய்தவர்களின் முகத் தோற்றங்கள் முக வடிவமைப்பில், ஒப்பனையில் கொண்டு வரப்படுவது நிகழ்த்திக் காட்டப்படுகிறது. ஒப்பனையில் அவர்களின் குரூர முகங்கள் வெளிப்படுகின்றன. கொல்லப்பட்டு மூட்டைகளால், சிறு உருளைகளில் போட்டு மூடி தூக்கி எறியப்பட்டவர்களின் கதைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவ்வகைகொலை செய்த இன்னொருவர் இப்போதைய பத்திரிக்கை அதிபராக இருக்கிறார். பத்திரிக்கை மூலம் மனித உரிமை பற்றிப் பேசுகிறார்…
தொலைக்காட்ட்சிகளோ, பத்திரிக்கைகளோ தரும் செய்திகளின் தன்மையின் பின் பெரும் அரசியல் இருக்கிறது. சமூகச் சூழலில் முதலாளித்துவத்தின் பார்வை ஒளிந்து கொண்டே இருக்கிறது. எந்தச் செய்தியை எப்படி வெளியீடுவது, எந்தப்பக்கத்தில் , சிறிய செய்தியாகவா, பெரிய செய்தியாகவா என்பதை அவை தீர்மானிக்கும். முக்கியதுவமற்றதாக செய்திகளை மாற்றும் திறன் கொண்டதும் கூட் நடைபெறுகிறது..முதலாளித்துவத்தின் லாப் வேடடை, எதிர்ப்பாளர்களைக் கொச்சைப்படுத்தும் தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கும் இதில் பெரும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாக எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் சுலபமாக நடக்கிறது.இதை அந்தப் பழைய கொலைகாரரும் செய்கிறார் பெருமிதத்தோடு என்பதை அவரும் அவரைச் சார்ந்தவர்களும் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஆனால் அவர் நிகழ்த்திய கொலைகள் பற்றி அவருக்கு கொஞ்சமும் உறுத்தல் இல்லை.ஆதிக்கம் செலுதுதும் ஊடக நிறுவனங்களின் கைக்கூலியாக அவர் செயல்படுவது என அவர் வாழ்க்கையை அடக்கிக் கொண்டிருக்கிறார்.

சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்கும் விதமாய் இந்த நிகழ்வுகளிம் மறு உருவாக்கமும் வீதிகளில் அலைந்து கொண்டும் , வாகனங்களில் சுற்றிக்கொண்டும் கொலையாளிகள் பேட்டிகள் கொடுக்கிறார்கள். கொலைக்களன்கள் நகரம் முழுக்க நிறைந்திருக்கின்றன். அன்வர் இப்படி எடுக்கப்பட்டபடத்தின் சில பகுதிகளைத் தன் பேரப்பிள்ளைகளுக்கு போட்டுக் காட்டிப் பெருமை கொள்கிறார். அவர்கள் கேள்வி கேட்கும் வயதில் இல்லை. கேள்வி கேட்கும் அறிவில் இல்லை.அதுவெ அன்வருக்குச் சாதகமாக இருக்கிறது.ஆனால் படத்தின்ல் இறுதியில் அவர் மனம் கொள்ளும் குற்றவுணர்வு இப்படம் பார்க்கிறவர்களையும் தொற்றிக் கொள்ளும்.
இன்று ஆட்சி நடத்துபவ்ர்கள் இந்த வன்முறையை நியாயப்படுத்துகிறார்கள். இன்றும் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள இவையெல்லாம் அவசியம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தங்களின் முதிர்ந்த வயது, அனுபவம் – இவையெல்லாம் மீறி சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வ்கை வன்முறைகளும் கொலைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுவது துயரமாகவே இருக்கிறது.
ஆரம்பக்காட்சிகளில் இடம் பெறும் பெண்களின் இந்தோனிசிய நடனக்காட்சிகளும் அருவிகளின் பின்னணியும் அபத்தங்களை நகைக்க வைக்கிறது என்றே சொல்லலாம். நீளநீளமான காட்சி அமைப்புகள், படத்தின் மொத்த நீளம் இவையெல்லாம் உறுத்தவே செய்கின்றன.இப்படம் மனித உரிமைகள் குறித்த பல கேள்விக்ளை முன் வைப்பதால் பல உயரிய விருதுகளைப் பெற்றிருகிறது. இதன் தயாரிப்பாள்ர்களில் ஒருவர் பிரபல இயக்குனர் வெர்னர் ஹெர்ஜோக் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

திரைப்படம் மனித நடத்தையை விளக்க முயலும் காட்சிரூப மொழியிலானது. இலக்கியம் மனித உளவியலை விளக்க முயலும் குறியீடுகளான சொற்களால் ஆனது. திரைப்படத்தில் மனிதர்களின் உடல்மொழி அடிப்படையானது எனில், இயற்கை அதனது துணைப்பிரதி. மௌன இடைவெளி திரைப்படத்தில் பெரும் அர்த்தம் உளவியல் மொழியிலானது. இலக்கியத்தில் மௌன இடைவெளி கற்பனைக்கு உரிய இடம். ஸ்பரிச அனுபவம் என்பதனை திரைப்படம் பாவனைகளாலும் இலக்கியம் சொற்களாலும் பற்றிப் பிடிக்க முனைகிறது. இரண்டும் தத்தம் அளவில் வெகுதூரம்-காலம் பயணம் செய்து தமக்கென தனித்தனி தர்க்கங்களையும் கொண்டிருக்கிறது. ஓன்றைவிடப் பிறிதொன்று மேன்மையானது என இதன் இரண்டினதும் வரலாற்றினையும் சாதனைகளையும் கொடுமுடிகளையும் அறிந்த எவரும் சொல்ல மாட்டார்கள். இப்படிச் சொல்ல முனையும் இலக்கியவாதியை திரைப்படக் கலையை அறியாதவன் எனவும், திரைப்பட இயக்குனரை இலக்கியம் அறியாதவன் எனவுமே சொல்ல முடியும்.என்கிறார் யமுனா ராஜேந்திரன்

இலக்கியப்பிரதியைத்தாண்டி சொல்லுக்கும் காட்சிக்குமான பதட்டத்தை இப்படப்பிரதி தந்து கொண்டே இருக்கிறது.

சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602   / 9486101003 / subrabharathi@gmail.com )



காது கேளாமை, வாய் பேசாமையைக் குணப்படுத்தும் சிகிச்சை இரகசியங்கள் ( சீனா வெற்றிகரமான தேடல் அனுபவங்கள்)

சுப்ரபாரதிமணியன்


             மாற்று மருத்துவம் பற்றி தீவிரமான அக்கறையை கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆங்கில மருத்துவ முறைகள் சாதாரண மக்களுக்கு எட்ட முடியாத உயரத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் குறைபாடுகளும், மோசமான சுகாதாரமும் விளிம்பு நிலை மக்களை நிரந்தர நோயாளிகளாக்கியுள்ளன. தமிழ் மரபின் மருத்துவ முறை சித்த வைத்தியம் உலகிற்கு இன்னும் இன்றும் பல விசயங்களைக் கற்றுக் கொடுக்கிறது.
சீனாவின் அக்குபஞ்சர் மருத்துவ முறை இந்தியாவில் 2003ல்தான் சட்டமுறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. தமிழர்கள் பார்வையில் அதற்கு அங்கீகாரம் சமீபமாய் கிடைத்திருப்பதை அங்கங்கு தென்படும் அக்குபஞ்சர் மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன். சிகிச்சைக்கு வருபவரிடம் எதுவும் கேட்காமல் நோயை கண்டு பிடிக்கிற வித்தை அக்குபஞ்சர் மருத்துவருக்கு உண்டு. நம் உடம்பிற்கான மருந்து வேறெங்குமில்லை. நம் உடம்பிலேயே உண்டு என்பதைத் தெரிவிக்கும் எளிமையான, செலவு குறைவான மருத்துவ முறை அது..
சீனாவில் காது கேளாமை, வாய் பேசாமையையும் கூட குணப்படுத்தும் வெற்றிகரமான அனுபவங்கள் மாவோவின் புரட்சிகர காலத்தில் பொதுவுடமைத் தொண்டர்களால் நடந்தேறியிருப்பதை இந்நூலில்     ( மூல ஆங்கில நூல் வெளியீடு 1972) செ. நடேசன் அவர்கள் மொழிபெயர்ப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். மாவோவின் தத்துவார்த்த முறை ஒரு மருத்துவரை சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதோடு குணப்படுத்த முடியாத நோயையும் குணப்படுத்தும் என்பது நிருபணமாகிறது. அதிசய நிகழ்வு அது. பொதுவுடமைத்தத்துவத்திற்கு அந்த வலிமை உண்டு. மக்கள் விடுதலை இராணுவத்தின் மருத்துவர் சாவோ பு யு
பெற்ற வெற்றிகளை இந்நூல் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறது.இது போல் மாற்று மருத்துவம் பற்றிய பல நூல்கள் தமிழுக்குத் தேவை..சாவோ பு யு போல் சமீபத்தில் நான் அறிந்து கொண்ட ஒரு மருத்துவர் இலங்கையைச் சார்ந்த ( 1822-1884 ) சாமுவேல் பிஸ்கிரின் தமிழில் மருத்துவப் பாடத்தைப் பயிற்றுவித்தவர். மருத்துவம் பற்றியக் கட்டுரைகள் 5000 பக்கங்கள் மொழிபெயர்த்தவர் 7 அறிவியல் நூல்களை வெளியிட்டவர். பாமரருக்கும் புரியும் வகையில் மருந்து, மகப்பேறு, மகளிர் நோயியல் குறித்து மருத்துவக் குறிப்பேடுகளை வெளியிட்டிருக்கிறார்.இலங்கையின் பூர்வீகத் தமிழரிடம் தமிழ் கற்ற கிரீன் “ மனிதனால் பேசப்படும் மொழிகளிலேயே மிகத் தூய்மையான, மெருகூட்டிய மொழி தமிழ் “ என்று குறிப்பிட்டிருக்கிறார். தனது கல்லறையின் மீது “ தமிழருக்கான மருத்துவ ஊழியர் “ என்ற வாசகம் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டதால் அமெரிக்காவில் உள்ள அவரது வொர்ஸ்டர் கிராமத்தில் நினைவுக்கல்லொன்று இந்த வாசகங்களுடன் இருக்கிறது. சாபோ பு யு, பிஸ்க்கிரின் போல் பலர் தமிழுக்கு அறிமுகப்படுத்தட வேண்டியவர்கள்,
தோழர் செ. நடேசன் அவர்கள் ஆசிரியர் கூட்டமைப்பின் தொழிற்சங்க செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டவர். கலை இலக்கிய இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர். அகால மரணமடைந்த அவரின் மகனின் பெயரில் இப்பதிப்பகம் மூலம் புத்தகங்களை வெளியிடுவது என்ற எண்ணத்தில் அவரின் இந்த மொழிபெயர்ப்பு நூல் வெளிவருவது அவரின் தொடர்ந்த சமூக செயல்பாடுகளின் ஓர் அங்கமாக இருக்கிறது.


மீத்தேன் எமன்

சுப்ரபாரதிமணியன் 


meeththen3
“மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானை கட்டிப் போரடித்த
அழகாய தென் மதுரை” என்று பாடப்பெற்ற தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகைப் பகுதிகளில் மீத்தேன் எடுக்கப்பட்டால் பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதி எப்படியிருக்கும்?
meeththen1மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக நிலத்தடி நீரை வெளியேற்ற வேண்டியக் கட்டாயத்தால் குடிநீர், விவசாயத்திற்கான நீர் வெகுவாகக் குறைந்து போய் காவிரி படுகை வறட்சியானதாகிவிடும். பாலைவனமாக ஆகக் கூட வாய்ப்புகள் உள்ளன. வெகு ஆழமாய் உள்ள நிலத்தடி நீர் வெளியேற்றப்படும்போது அந்நீர் கடல் நீரைவிட அதிக உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால், உப்பு படிவது ஏற்படும். வயல் வரப்புகள், கால்வாய்களில் பெருமளவில் உப்பு படிந்து விடும். நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டதால் நிலத்தடி நீர் இல்லாத வெற்று இடத்தில் கடல் நீர் புக வாய்ப்பு இருப்பதால் மிச்சம் இருக்கும் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறும். நிலத்துக்கடியில் பக்கவாட்டில் பல கி.மீ என்று குழாய்கள் போட்டு உறிஞ்சப்படுவதால் (500 அடு முதல் 1700 அடி வரை) சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிலத்தடி நீர் குறையும். நீர்த்தொகுப்புகளும் வறண்டு போகும். வறண்டத்தனம், நில நடுக்கம், மண்ணை உள்வாங்கிக் கொள்ளுதல், நிலச்சரிவு, பள்ளங்களையும் உருவாக்கும்.. உப்புத் தன்மை நிலத்தடி நீரில் அதிகமாவதால் வெளியேறும் இரசாயனக் கழிவு புற்று நோய், கதிரியக்க நோய்கள் மூளை பாதிப்பு நோய்களைச் சுலபமாக உருவாக்கும்.
திருவாரூரில் அமைக்கப்பட்டிருக்கும் மத்திய பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது 2013ன் இறுதியில் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை எடுத்துவிட்டு மீத்தேன் உறிஞ்ச போடப்பட்டக் குழாய்களைக் கண்டேன். மத்திய தர உணவு விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தபோது புதிதாய் இருந்த என்னையும் வேறொரு நண்பரையும் மீத்தேன் வாயு சம்பந்தமான கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்ரேசன் நிறுவனம் சார்ந்தவரா என்று கேட்டார்கள். புதியவர்கள் யார் தட்டுப்பட்டாலும் அப்படித்தான் கேட்பார்களாம். அது மத்திய தர விடுதி என்றாலும், குளிரூட்டப்பட்டது என்றாலும் அந்த விடுதி உணவுக்கட்டணம் அதிகமில்லாமல் இருந்தது. அந்த விவசாய பகுதியின் பொருளாதார நிலையும், மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை பாடத் திட்டங்களில் மாணவர்கள் பணம் கட்டமுடியாமல் திணறுவதையும், செம்மொழித் திட்டத்தின் உதவி மாணவர்களைக் காப்பாற்றுவதாயும் பேரா.ஜவஹர் சொன்னார் பெரும்பான்மை மாணவர்கள் விவசாயக் கூலிகளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அதை வைத்து அந்த உணவு விடுதிக் கட்டணத்தை நான் யூகித்துக் கொண்டேன்.
meeththen2500அடி முதல் 1700 அடி ஆழம் வரை காவிரிப் படுகையில் வளமான நிலக்கரி படிமங்கள் உள்ளன. இந்தப் படிமங்களின் இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை ‘நீரியல் விரிசல்’ முறையில் எடுக்கிற திட்டம் பாண்டிச்சேரி அருகிலான பாகூர் தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம் ஜெயங்கொண்ட சோழபுரம் வழியாக மன்னார்குடி வரை  தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிலத்துக்கடியில் 2000 அடி வரை துளையிடுவது, பக்கவாட்டில் இரண்டு கி.மீ வரை குழாய்களைச் செலுத்துவது, நிலக்கரி பாளங்களை நொறுக்குவது என்பது அதன் ஆரம்பநிலை செயல்கள் கூடவே பல வேதிப் பொருட்களை கொண்ட கலவையை பீச்சி இதை சுலபமாக்க வேண்டியிருக்கிறது அவர்களுக்கு. இதில் முக்கால்பகுதி வேதிப் பொருட்கள் நிலத்துக்கடியில் தங்கி நிலத்தடி நீர் முழுவதையும் நச்சாக்கும் என்பது இன்னும் அபாயகரமானது. 6 லட்சம் கோடி மதிப்புள்ள எரிவாயு இதன் மூலம், இங்கு எடுக்கப்படும். ஆனால் 50,000 கோடி ரூபாய்க்கே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. மீத்தேன் திட்டம் 35 வருட காலம் நடைபெறும். அதற்குள் அப்பகுதி பாலைவனமாகிவிடும்.
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக் அரசு அறிவித்தது. மீத்தேன் வாயு நச்சுத் தன்மை வாய்ந்ததால் வாயு கசிவு ஏற்படுவது அணுசக்தி மின் நிலையங்களில் ஏற்படும் கழிவுக்கு இணையானது என்பதால் மக்களும் பயப்படுகிறார்கள். 690 சதுர கி.மீ பரப்பளவும் பாலையாகும்.
இந்த 690 சதுர கி.மீ பரப்பின் தன்மையை அமெரிக்காவின் வயோமிங், மோண்டானா மாநில நிலக்கரி படுகையை ஒப்பிடுகிறார்கள். மீத்தேனிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தண்ணீரில் இருக்கும் சோடியம் மண் வளத்தை வெகுவாக பாதிக்கும். கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறையும் என்கிறார்கள். வெளியேற்றப்படும் தண்ணீரில் பல ரசாயன்ப் பொருட்கள் நச்சுத் தன்மை உடையனவாக இருக்கின்றன. தண்ணீரில் கரையக் கூடிய கதிரியக்கம் கொண்டதாகவும் அவை உள்ளன என்பது பேராபத்தாகி்றது.
மீத்தேன் எடுக்கும் அமெரிக்க நிலப்பகுதிகளில் பல முறை நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது மன்னார்குடிப் பகுதியை மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் பாதித்து நீர்த்தாரைகள் சேதப்படுத்தப்பட்டு சென்னை முதல் ராமேஷ்வரம் வரை குடிநீருக்கும் சிக்கல்கள் ஏற்படும். வளைகுடா நாடுகளில் மண்வளம் இல்லை. மழை இல்லை. எனவே அங்கு நிலத்தைத் தோண்டி எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் வெற்றி பெறலாம். மழையும், இயற்கைச் செழிப்பும் உள்ள தஞ்சை பகுதி மண் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.
meeththen4ஆழ்குழாய் கிணறுகளின் மூலம்தான் மீத்தேன் எடுக்க முடியும் என்ற தவறான கருத்துக்கு மாறாக மனிதக் கழிவுகளிலிருந்து எடுக்கலாம் என்ற மாற்று வழியை சீக்கிரம் பணம் பண்ணும் கும்பல் அக்கறை எடுப்பதில்லை.
இதை எதிர்த்து பல வகைப் போராட்டங்கள் தொட்ர்ந்து நடந்து வருகின்றன. போராளி நம்மாழ்வார் மரணமும் மீத்தேன் வாயு படுகையில் தான் போராட்டத்தின் குறியீட்டால் நடந்துவிட்டது. வளர்ச்சி என்ற பெயரில் முன்வெளியிடப்படும் இது போன்ற திட்டங்கள் மக்களை விரட்டியடிக்கும் திட்டங்களாக இருக்கிறது. உலகமய பொருளாதாரக் கொள்கை  எவ்வளவு சீக்கிரம் பணம் சேர்க்க முடியுமோ அந்த வழிமுறைகளைப் பின்பற்றும் ’ குரோனி சேப்ட்டலிசத்’ தில்   மீத்தேன் துரப்பணம் ’ தூரப்பணமாக’  பலருக்கு பிரகாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.சாதாரண மக்களின்  வாழ்நிலைக்கு இருட்டையும் கூட.

புதன், 23 ஜூலை, 2014

வெப்பத்துள் கருகும் மனிதன்


சுப்ரபாரதிமணியன் 

veppaththul1இவ்வாண்டின அக்னி நட்சத்திர சமயத்தில் பெய்த மழை கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளச் செய்தது.
மூன்றாவது உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் என்று சமீபமாய் இருபது ஆண்டுகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சமீபமாய் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நாடுகளுக்கிடையில் யுத்தம் வரும் என்ற புது கருத்து நிலைகொள்ள ஆரம்பித்துவிட்டது.
யுத்தத்திற்கு முன் ஏற்பாடாக வெவ்வேறு விசயங்கள் இப்படியாக நடந்தும் வருகின்றன. இந்த ஆண்டின் கோடை கடந்த ஆண்டின் கோடைகளைவிட உட்சபட்ச வெப்பத்தைக் கொண்டிருந்தது. வெப்ப தினங்கள் அப்புறம் வெப்பக் காற்று அலைமோதி மக்களைத் திணற வைத்தது. இதன் காரணமாய் வெயிலில் சுருண்டு விழுகிற சாதாரண மக்களின் படங்களைப் பத்திரிக்கைகளில் காண நேரிட்டது. இறந்து போனவர்களில் பெரும்பாலும் வயதானவர்கள். வெயிலின் உச்சத்தைத் தாங்க இயலாமல் உயிரையும் சேர்த்து சுருண்டு கொண்டவர்கள். அதுவும் பெருநகரத்தின் சூடு சாதாரண சாலையோர மக்களையும் கருகிப் பிணமாக்கியது. மனிதர்களுக்கே இந்த கதியென்றால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு அளவில்லை. அவை குடிக்க நீர்தேடி அலைய வேண்டியதாகிவிட்டது. காட்டு மிருகங்களும் வீதிற்கு வந்து உலவி பயம் தந்தன.
வெப்பத்தைக் குறைத்து கொள்ளலாம் என்று கோடை வாசஸ்தலங்களுக்கு பண மூட்டைகளைக் கட்டிக் கொண்டு போனவர்கள் அங்கும் சூடு ஜிங்ஜிங்கென்று ஆட்டம் போட திணற வேண்டியதாகிவிட்டது. கோடை வாசஸ்தலங்கள் நெரிசலில் சிக்கி திணறி எல்லோரையும் திரும்பி வீட்டை நோக்கிய சாலைகளைப் பார்க்கச் செய்து விட்டது. விவசாயப் பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு தற்கொலை எண்ணங்களை தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருந்தது. ஏர்கண்டிசனுக்குள் எல்லோரும் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வது சாத்யமா என்ன… காற்று பதனாக்கி பொருட்கள் விலை தாறுமாறாய் உயர்ந்து சாதாரண மக்களிடமிருந்து விலகிப் போய் விட்டன. காற்று பதனாக்கி தரும் இதத்தை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வந்து சேரும் வியாதிகளுக்கும் குறைவில்லையென்றாகிவிட்டது. நிலங்கள் பாலைவனமாகிக் கொண்டிருக்க, வீடுகள் பாலைவனங்களுக்கு இடையில் கட்டப்பட்டவை போலாகிவிட்டன. வீடுகளின் அடிப்பாகத் திடம் சுருங்கிப் போக அவற்றின் மொத்த ஸ்திரத் தன்மையும் சற்றே நிலைகுலைந்து போக ஆட்டம் கண்டு கொண்டிருந்த அஸ்திவாரங்கள் மோசமாக பல பழைய கால வீடுகள் நிலநடுக்கம் ஏற்பட்டது போல் நடுங்கி சரிந்தன. நீர் நிலைகள் காய்ந்து போக எதிர்காலத்தில் முன்பு நிகழ்ந்தது போல காய்ந்த ஏரிகளும், குளங்களும் புது பேருந்து நிலையங்களும், அடுக்குமாடி வணிகக் கட்டிடங்களும் கட்ட தயார் செய்யப்பட்டது போலாகிவிட்டன. சூடு தொற்று நோய்களை சுலபமாகப் பரப்பும் என்பதால் தொற்று நோய் சார்ந்த சிரமங்கள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்பட்டு சிரமங்கள் விளைவித்தன. கடலோரங்களில் வறட்சி, கடலை உள்வாங்கச் செய்து கடலையொட்டிய கட்டிடங்களை நிலை குலையச் செய்து தரையோடு வீழ்த்தின. அவற்றின் சாட்சிகளை தொலைகாட்சிகளில் காண நேர்ந்தது.
பருவநிலைகளும், பருவ மழைகளும் தாறுமாறாய் மாற வெள்ளமும், வறட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல மாறி மாறி அலைக்கழித்து வருகின்றன. நீர் மின்சாரம் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள பற்றாக்குறைக்கு இன்னும் உதவியாயின அவை. இவையெல்லாம் சேர்ந்து பலவகை சொத்துகளுக்கு சேதம் விளைவித்து விட்டன.
veppaththul2மிகுந்த வறட்சி நிலத்தின் நீர்த்தன்மையை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதனால் மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவு சாதாரணமாகிவிட்டது. மலைப்பிரதேசத்திற்கு வரும் வாகனங்கள் அதிகமாகி விட்டதால் மலைச்சரிவுகள் பிடிப்பை இழந்து மனிதர்களை சரிந்து விழச் செய்து வேடிக்கை பார்த்தன. சாவுகளும், பயிர்களின் நாசங்களும் அரசாங்க மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை நிலைகுலைய வைத்திருக்கின்றன. பெரும் லாபம் நோக்கியே ஆரம்பிக்கப்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கான இழப்பை சரிகட்டிக் கொள்ள முடியாமல் கடைகளை மூடிக் கொண்டு தப்பித்துப் போக வழி பார்த்துக் கொண்டிருக்கின்றன. பயிர் மற்றும் நிலம் சார்ந்த காப்புரிமைத் திட்டங்களை அவை கைவிடுவதற்கான ஆயத்தங்களில் மூழ்க ஆரம்பித்துள்ளன. காடுகள் தீப்பற்றி எரிவதும் காட்டுப் பயிர்கள், மூலிகைச் செடிகள் கருகி நாசமாவதும் நிகழ்ந்து வருகிறது.
இந்த பாதிப்புகள் நம்மை சுற்றி யாருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், சீனா போன்ற நாடுகளுடன் நமக்கு பிணக்கை ஏற்படுத்தி போர் வெடிக்கலாம் என்று பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழு என்ற அய்..நா.வின் துணை அமைப்பொன்று பல ஆய்வுகளுக்குப் பின் தன் முடிவைத் தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் அந்தமான் சென்று வந்த நண்பர் ஒருவர் பருவநிலை மாற்றத்தால் அங்குள்ள பல தீவுகளில் காணப்படும் பவளப் பாறைகள் சிதைந்து விட்டதைப் பற்றிச் சொன்னார். கண்ணாடிகள், மூக மூடிகள் அணிந்து கடல் நீருள் சென்று பவளப் பாறைகளின் அழகை ரசிக்கும் சந்தர்ப்பங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன் என்றார். பவளத்திட்டுகள் அளவில் சிறிதாகி வருகின்றன. அவற்றின் நிறங்களில் காணப்படும் பளிரிடும் தன்மை குறைந்து மங்கலாகக் காட்சியளிக்கின்றன. மேற்கு வங்க சுந்தரக் காட்டு கடல் பகுதிகளில் பல தீவுகள் மூழ்கிவிட்டன. இந்தியாவின் ஜீவநதிகள் வறட்சிக்கு உள்ளாகிவிட்டன. கங்கை பள்ளத்தாக்கு பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு இமயமலை பனி உருகுவதால் ஏற்படுவதும் தொடர்ந்து பின் வறட்சியைக் கொண்டு வந்து விடுவதற்கான ஆயத்தங்களுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன. இமய நதிப் பாசன பகுதிகளில் நன்னீர் ஆதாரம் குறையும் என்பதால் இதுவே தெற்காசிய நாடுகளுக்கு மத்தியில் கசப்பை விதைத்து போருக்கு கூட வழிவகுக்க வாய்ப்புகள் இருப்பதாலேயே பருவநிலை மாற்றங்களும் புவி வெப்பமடைதலும் காரணங்களாக இருக்கும்.
கடல் மட்டம் உயர்ந்தால் நாம் கேரளத்திற்கு சுற்றுலா செல்வது கூடத் தடைபடலாம். சுற்றுலா சார்ந்த பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் கடலுக்குள் கேரள நகரங்கள் மூழக் நூறு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்றால் மும்பை, கலகத்தா போன்ற பெரு நகரங்கள் அதற்கு பின் 50 ஆண்டுகளில் கடலில் மூழ்கும் அபாயங்களைக் கொண்டிருக்கிறது. நாம் சுவைத்து சாப்பிடும் கடல் மீன்கள் குறைந்து விடும். கடலின் உயிரினங்கள் 50 ஆண்டுகளில் கண்காட்சியில் வைக்கப்படும் அளவிற்கு அபூர்வமாகிவிடும்.
புவி சார்ந்த பொருளாதார பாதிப்புகளை ஈடு செய்வது சாதாரணமல்ல. உள்நாட்டின் உற்பத்தின் சரிவும், அதனால் வருமான இழப்பும் சாதாரணமாகிவிடும். வருமான இழப்பு ஏழைகளையும் வறுமைக் கோட்டையும் தளர்த்தி 32 ரூபாய், 26ரூபாய் என்ற இலக்கைத் தாண்டி ஏழ்மையை விரித்துக் கொண்டே சென்றுவிடும். உணவுப் பொருட்களின் விளைச்சல் பாதிக்கப்படுவதால் அவற்றின் விலை வெகுவாக உயரக்கூடும். நிச்சயம் உயரும்.
பருவநிலை மாறுதல்கள் தரும் சேதங்கள் ஏற்படுத்தும் குப்பைகளும், கழிவுகளும் அகற்றவும், இல்லாமல் செய்கிற முயற்சிகளுக்காகவும் புது வகை வரி சுமத்தப்படுவது பற்றி பல நாடுகள் யோசித்து வருகின்றன. வருமான வரி, கம்பனி வரி, கரிம வரி போடப்படலாம். வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் என்று எல்லாவற்றிலுமே எரிபொருள் உபயோகத்திற்காக சட்டரீதியான நடவடிக்கைகளும், சட்டத்திருத்தங்களும் செய்யப்படவேண்டியிருக்கிறது. காற்றில் மாசு உருவாவதும், கலப்பதும் வெகுவாக குறைக்க அச்சட்டங்கள் பயன்படும்.
வளிமண்டலத்தில் கரியமிலவாயு அடர்த்தி அதிகரிக்கிறது. நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு, மீதேன், கார்பன்டை ஆக்சைடு போன்ற வாயுக்களின் அதீத வெளியீட்டால் இந்த வெப்பநிலை உயர்தல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்பு இந்த வெப்ப நிலை சிரமங்களுக்கு மனிதன் காரணம் என்ற குற்றச் சாட்டை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு பல ஆய்வுகள் நடைபெற்றன. ஆனால் 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் இந்த கேடுகெட்ட நிலைக்குக் காரணம் மனிதர்களின் நடவடிக்கைகள்தான் என்று முடிவுக்கு வந்திருக்கின்றன. அறிவியலாளர்கள் பல காரணங்களை ஆய்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர். 60 நாடுகளைச் சார்ந்த 800 அறிவியலாளர்களின் ஆய்வு இந்த முடிவிற்கு வந்து மனிதனின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியை அடையாளம் காட்டியது சென்றாண்டில்தான்.

செவ்வாய், 22 ஜூலை, 2014


பெரு நகர மக்களின் வாழ்வியல்


நிஜந்தனின் பேரலை “  நாவலை முன் வைத்து....


                                                                                      சுப்ரபாரதிமணியன்


ஏழு நாவல்களை இதுவரை எழுதி வெளியிட்டிருக்கிறார் நிஜந்தன்.
பேரலை  “  நிஜந்தனின் ஆறாவது நாவல்.முந்தின நாவல்களைப் போலவே இதிலும் பெரு நகர மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்திருக்கிறார்.இவரின்
முதல் நாவல்மேக மூட்டம்  ரமணி, மீனலோசனி தம்பதிகளின் பிணக்கையும் மீனலோசினியின் முன்னாள் காதலன் பீட்டரின் குறுக்கீட்டால் சிதையும் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் விவரித்தது. மனநலவியாதியில் எதிர் விளைவு இல்லாத மருந்தைக்  கண்டு பிடிக்கும் மனநல வைத்தியர் முயற்சிகளையும், சாவு பற்றிய மனக்குழப்பங்களையும் விவரித்தது. “ பாபுஜியின் மரணம் ‘
 நான் நிழல் நாவலில் ஒரு புகைப்படக்காரரை முன்வைத்து வாழ்வு பற்றிய பார்வை நகர்ந்தது. புகைப்படங்கள் பார்த்து கதை சொல்லும் நினைவுகளும் ஆக்கிரமிக்கின்றன. அம்மாவுடன்  சித்தப்பாவின் உறவும் அவர்களுக்கு குழந்தை பிறப்பதும் அப்பாவுக்கு மட்டும் அல்ல சுற்றியுள்ளவர்களுக்கும் மவுனத்தையே எதிர்வினையாக்க் கொள்ள  வைக்கிறது.  திருடர்கள் வந்து போவது இன்னொரு தளத்திலும் நிகழ்கிறது. கதாநாயகனுக்கு இடுப்பில் சீழ் கட்டி . இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அது உடைந்து அவஸ்தப்பட வைகிறது.அதன் காரணமாக சகித்துக் கொள்ள முடியாமல் மனைவி மகாலட்சுமி  விவாகரத்து கோருகிறாள்.அவனை ஆறுதல் படுத்துகிறவர்களாக ஆர்த்தி  போன்ற நர்ஸ்கள் இருக்கிறார்கள் அது ஒரு குறியீடாக நாவல் முழுக்கக் கட்டமைக்கப்பட்டிருக்கிரது. .புதிய வெயிலும் நீலக்கடலும்”  நாவலில் குறும்படம், நவீனநாடகம் சர்ந்து இயங்குகிறவர்களின் உலகம் சொல்லப்பட்டிருக்கிறது.  லதா வண்ணாத்திப் பெண் அம்மாவிற்குப் புற்று நோய்.  சித்தப்பா  சேகர் சலவைத் தொழில் செய்கிறவர். சித்த்ப்பா எய்ட்ஸ் வந்து செத்துப் போகிறவர். கோபால் பேசன் டெக்னாலஜி படித்து விட்டு தொழில் செய்கிறவன்.  இடதுசாரி மனப்பான்மை கொண்ட கண்ணகி கணவனைச் சுட்டு  கொலை செய்கிறவளாக அவள் வாழ்க்கை மாறி விடுகிறது.லதா கோபாலுடன் இருந்த வாழ்க்கையின் எச்சமாக கருக்கலைப்பு செய்து கொள்ள வேண்டியதாகிறது.  இசை அமைப்பாளரான செல்லம் கண் பார்வை இல்லாதவன். மைத்துனியுடன் சேர்ந்து வாழ்கிறவன்.  சிவலிங்கம் போலீஸ் அதிகாரி ஆக இருந்து அதிகாரத்தை அனுபவிக்கிறவர்.  எய்ட்ஸ் வந்து சாகுமவரின் மனைவி சாவு அவருள்ளும் சாவு பயத்தைக் கொண்டு வருகிறது. கோபால் துணிக்கடை ஆரம்பித்து  நடிகையைத் திறப்பு விழாவிற்கு அழைக்கிறான். லதாவுடன் உறவு கொண்டதை குறுந்தகடில் வைத்து மிரட்டுகிறான்.  பைரவன் என்ற சாமியார் பெரும் அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.  இதய வலி வந்து செத்துப் போகிறார். தோழர் அய்யாவு லவுகீகக் கடமைகள் முடிந்து புரட்சிக்கான ஆயத்தங்களும், நடவடிக்கைகளும் இனி தன் வாழ்க்கையாக அமையப் போவதாக முடிவெடுத்துக் கொள்கிறார்.கோபாலும் அசோக்கும் ஒவ்வொருவரும் பெண் பிரச்சினை காரணமாக  அடித்துக் கொண்டு சாவின் எல்லைக்குப் போகிறார்கள். இருப்பும் இல்லாமையும், குற்றமும் தண்டனையும், ஏற்றமும் இறக்கமும்     பல்வேறு உணர்வுத்தளங்களை எழுப்புவதை இந்நாவல் சித்தரித்தது. சுவை மணம் நிறம் “ நாவலில் நட்சத்திர விடுதியில் பெரும் சமையல்காரராக இருப்பவரின் வாழ்க்கையில் திரைப்படம்  சார்ந்தவர்கள் குறுக்கிடுவதையும்,  பிரியும் மனைவியின் தனித்த வாழ்க்கையும் கோவை குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்ணணியும் வாழ்வின் அபத்ததையும் வெளிக்காட்டுகிறது.குறும்படம், திரைப்படம், சார்ந்த பெருநகர மனிதர்களின் வாழ்க்கையை இந்நாவல்கள் கோடிடுகின்றன.

 எண்பதுகளில் எழுதத் துவங்கிய நிஜந்தன் முன்பு சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள், அரசியல் தொடர்பான கட்டுரைகள், செய்தி தொலைக்காட்சி வேலை , ஆங்கிலப் பத்திரிக்கையாளர் வேலை, தொலைக்காட்சி பொறுப்பாளர்  என்று பலநிலைகளில் பெருநகர வாழ்க்கையை மேகொண்டிருப்பவர். உடுமலை நகரத்தில் பிறந்து, கோவையில் பள்ளிப் படிப்பை தொடர்ந்து சென்னை வாழக்கையில் சங்கமித்தவர். பெரும்பாலும் நகர அனுபவங்களில் திளைத்தவர். இவரின் படைப்புகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவை பெரு நகர  மனிதர்களின் வாழக்கையைப் பேசுபவை. யதார்த்த வாழ்க்கையின் எல்லையில்லாத சமரசப் போக்குகளை கோடிடுபவை. வாழ்வின் அனுபவங்களூடே சமூக வரலாற்றையும், சில கால கட்டத்தின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக அமைகிறது. வாழ்வின் அபத்தத்தை மெல்லிய நக்கல்தன்மையுடன் விவரிக்கிறது. விழிப்பு கொண்டவன் உயர்ந்து கொண்டே போவதும் தெரிகிறது. சமூக நிகழ்வுகளை பதிவு செய்வதன் மூலம் அது எழுப்பும் தார்மீகக் கேள்விகளையும் முன் வைக்கிறார்.  வாழும் காலத்தில் நிகழ் காலத்திற்கு எதிரான அவலங்களையும், சந்தோசங்களையும் இயல்பாக பதிவு செய்கிறார். புனைவுகள்  என்று ஒதுக்க முடியாத அளவில் அவரின் பாத்திரங்கள் யதார்த்த ஒழுங்குக்குள்ளேயே வலம் வருகின்றன.  நடந்து முடிந்த வாழக்கை நினைவுகளை அசை போடுவது நடக்கிறது. மூன்றாம் மனிதர்களின் வாழ்க்கை என்றாலும் அதில் சுயம் கலந்திருப்பதை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. மனிதர்கள் உடலை பெரும் பாரமாகச் சுமந்து செல்கிறார்கள். பாரத்திற்கு காரணமாக ஏதாவது நோய் இருந்து கொண்டே இருக்கிறது. அது மரணத்தை நிழல் போல் படரச் செய்து கொண்டே இருக்கிறது. உடல் சார்ந்த புலன் இன்பங்கள், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்பட்டு மனிதர்கள் இயங்குவதும் திருத்திக் கொள்வதும் நடக்கிறது. சிறிய கதாபாத்திரங்களையும் முழுமையாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். வாழ்க்கையின் அபத்தங்களை நிலயின்மை, நிச்சயமின்மை, தெளிவின்மை , கண நேர தடுமாற்றத்தின் விளைவுகள், புதிர்தன்மை நிறைந்த யோசனைகள், கால இட வெளி சம்பந்தமான தகவல்கள் என்று சொல்லிக் கொண்டே போகிறார். அவமானங்களும், பிரிவுகளும் பகையும் தொடர்கிறது.  மனிதர்களின் இறப்பு துயரமானதாக இருக்கிறது. துன்பவியல் மரணத்தின் மூலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. . கொண்டாட்டங்கள் மனிதர்களின் அலைச்சல் மூலம் தெரிகிறது. சடங்குகள் தொலைந்து போய் விட்ட நகர வாழ்க்கை. எல்லாம் அவசரகதியில் நடக்கிறது.  பழகிய நாவல் மொழியை உடைத்தெறிகிறார். இதுவரை தமிழ் நாவல் பரப்பில் தென்படாத மனிதர்களையும் அறிமுகப்படுத்துகிறார். வெளிமாநிலமனிதர்கள், வெளிநாட்டு மேல்தட்டு மனிதர்களின் வாழ்க்கையும் சொல்லப்பட்டிருக்கிறது. நிஜந்தன்  இயங்கும் தொலைக்காட்சியின் மொழியோ, திரைப்பட மொழியோ இவரின் நாவல் கட்டமைப்பிலும் வடிவத்திலும் கூட பாதிப்பு செய்வதை நான்லீனியர் முறை, நாவலின் வடிவத்தை சீர்குலைப்பது, நாவலின் கட்டுமானத்தை சமையல் குறிப்பு போல்  புட்டு புட்டு முன்வைப்பது ஆகியவற்றில் காணலாம். திரைமொழியில் வாய் மொழியும், காட்சி மொழியும், உடல் மொழியும் கலந்திருக்கும். இந்த திரை மொழி நாவல்களின் காட்சி விவரிப்பில் பதிகிறது. உறவுகளுக்குள், உரையாடலாகும் பயன்பாட்டு மொழி துண்டுதுண்டாக இருந்தாலும் காலகட்ட சம்பவங்களை , நினைவுகளை  இணைக்கும் பொதுக்களமாக நாவலில் விரிகிறது.  ஆண் மையம் கொண்ட அதிகார அரசியலை நுணுக்கமாக இந்நாவல்களில் கண்டு கொள்ளலாம்.

ஆறாவது நாவலான “ பேரலையில்   இதே அம்சங்களை காண முடியும். பேரலை ஏற்படுத்தும் பவுதீக விளைவுகளைத்தாண்டி பேரலை உருவகமாக ஒவ்வொருவரின் வாழக்கையிலும் வந்து போகிறது. புரட்டிப் போட்டு விடுகிறது. முதல் பகுதியில் விளம்பரக் கம்பனியில் வேலை பார்க்கும் அலிமா மற்றும் அவளின் இரட்டையர்களில் இன்னொருவளான அதிபா முக்கிய கதாபாத்திரங்களாகச் சொல்லலாம். ஆயிசாவிற்கு கணவனை ( கபீர்) மீறி உமருடன் தொடர்பு இருக்கிறது. பத்மலட்சுமி  பாதுகாப்பு பணி செய்கிறவள். பீனா பாஷ் சமூக சேவை, நாடகத்தயாரிப்புகளில் அக்கறை கொண்டவள். கபிலன் குருடன் பாடகன் சரிதாவிற்கு திரைப்பட இயக்குனர் ஆகும் ஆசையில் அவளின் செயல்பாடுகள் அமைகின்றன.. இந்தியாவிலும் இந்தோனிசியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்க விவரிப்புகள் தகவல்களாக விரிவாக அமைகின்றன.         வாழ்நாளில் சுனாமி பார்த்து இறப்பதும் கஷ்டம், சுனாமி பார்க்காமல் இறப்பதும் கஷ்டம் “ என்று பழமொழி இக்கதாபாத்திரங்களால் கட்டமைக்கப்பட்டது போல் சுனாமி அலைக்கழிக்கிறது,  ஆயிஷாவின் கணவன் முதல் சுனாமியில் காணாமல் போகிறான். இரண்டாம் சுனாமியில் அவளின் காதலன் காணாமல் போகிறான்.நாவலின் இரண்டாம் பகுதி -“ எல்லையற்ற மகிழ்ச்சி “   இதில் நகுலன், ராமசேசன்( பங்குதரகன் ), பீனபாஷ் ( நாடகக் காரன் ) அருணா ராம்சந்திரா ஷன்பாக்  ( செவிலி. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறவள். ஆசனவாய் பலாத்காரம், ),  பூவரசன் ( அரசியல்வாதி, கட்சி விளம்பரப்பட பிரியன் ). மூன்றாம் பகுதி “ உள்ளடுக்குகள் “- சரிதா குறும்படங்கள் தயாரிக்கிறாள். டார்வின் தத்துவம் அலசப்படுகிறது.  அணு சமாச்சாரம், கூடாங்குளம்  சர்ச்சை  கூடவே வருகிறது . நான்காம் பகுதி “ என் பேரரசு “ என்று ஆயிஷாவின் கதை சொல்லப்படுகிறது.  அய்ந்தாம் பாகம் “ அருள் “  பாபா இறந்து போகிறார். பத்மலட்சுமி அவரின் சடலம் காண செல்கிறாள். கபிலன் வேளாஙகண்ணிக்கும், ராமசேசன் மொட்டை போட திருப்பதிக்கு, அலிமா தர்க்காவிற்கு என்று பயணங்கள் தொடர்கின்றன. ஆறாம் பகுதி “ நூல் “  புத்தகக்கண்காட்சி, பதிப்பகம் ஒன்றின் 50 புத்தகங்கள் வெளியீடு,  சுனாமி நாள் நூல்கள் வெளியியீடு, 50 நூல்கள் பற்றி விரிவான அறிமுகம், அந்தப்திப்பாளர் பற்றிய குறிப்புகள் என்று எழுத்தாளர்களின் உலகத்தைக் கோடிடுகின்றன.
இப்படி இன்னும் நான்கு அத்தியாயங்கள் நீள்கின்றன. இந்தக்கதைகளிலிருந்து  எங்களை விடுவியுங்கள் என்று கதாபாத்திரங்கள் பல சமயங்களில் அலறுகின்றன. நாவல் கதாபாத்திரங்களை எப்படி முடித்து விடலாம் என்ற யோசிப்பும் ஒரு அத்தியாயமாக விரிகிறது. நாவல் எழுதி முடித்த பின் வெளியீட்டு விழா பேச்சும் இருக்கிறது. பதிப்பாளர் அரவிந் அப்பாத்துரையும் ஒரு பகுதியில் வருகிறார் “  நூல் அத்தியாயத்தில் முன்பு ஒரு பதிப்பாளரும் வந்தார். ஒரே பெயரில் இருக்கும் பல கதாபாத்திரங்கள் ஆண்களின் பல வடிவங்களாக, பெண்களின் பல வடிவங்களாக அமைந்திருப்பதைப் பற்றி சர்ச்சை தொடர்கிறது.
முந்தின நாவல்களின் கதாபாத்திரங்களும் இதில் வருகிறார்கள். இலக்கிய எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள், அறிஞர்கள் பலர்  ஊடாக வந்து நாவலின் தளத்தை விரிவாக்கிக் கொண்டே போகிறார்கள்.பல்வேறு தத்துவார்த்த சிந்தனைகளைப் பதிவு செய்ய்யும் முயற்சியாக அக்கதாபாத்திரங்களின் வாக்கு மூலங்கள் அமைந்திருக்கின்றன.விரிந்த அளவு  பரப்பில் வாழ்க்கை எதிர்கொள்ளுமொருவனுக்கு இந்த வகை கதாபாத்திரங்களை , மனிதர்களை சந்திப்பது சுலபம். அதுவும் பெரு நகர மனிதனுக்கு சுலபம்... பெரு நகர மனிதனல்லாதவனுக்கு இதெல்லாம் ஆச்சர்யம் தரும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் ஆனால் புனைவுகள் அல்ல என்பதையும் அவன் உணர்வான்..

என்பெயர் ராமசேசன் என்று இரண்டாம் பகுதியில் ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அவன் பங்கு தரகன். ஒரு உரையாடல் :
 பிம்பங்களை உண்டு திருப்தி அடைந்து விட வேண்டுமா ராமசேசன் ‘ 
“ இல்லை மாலா. பிமபங்களைத் துரத்துவதுதான் திருப்தி என்று நினைக்கிறேன். அதுவும் பணம் என்ற பெரும் பிமபம்.  அதுவும் பங்குச் சண்டையில் புரளும் பணம் என்பது உண்மையில் இல்லாதது, அது வெறும் கற்பனையாக, குறியீடாகத்தான் இருந்து விடுகிறது. அதை உண்மையாக மாற்ற முயல்வதுதான் தொடர்ந்து ஒரு போராட்டமாக இருக்கிறது மாலா “
“ இறுதியில் மிஞ்சுவது பணம்தான் ராமசேசன். தத்துவம் அல்ல. பணத்திற்கு கணக்கு உண்டு  .தத்துவங்களுக்கு  அல்ல “ 

ஏழாம் பகுதியில் இந்த வரிகள் தென்படுகின்றன.
“ வாழ வாருங்கள் . வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறது. “ என்பது நான் எழுதிய விளம்பர வரி.      “ வாழ மறுங்கள் . வாழ்க்கை உங்களை விட்டுப் போய் விட்டது “
.
இந்த வகைத் தத்துவங்களுக்குள்  பெருநகரத்தின் பெரும்பான்மையான மனிதர்கள் அடங்கிப் போகிறார்கள்  என்பதை  அபத்தவகை கட்டுடைத்தலில் பேரலை நாவல் விரவிக்கிடக்கிறது.

அவரின் ஏழாவது நாவல் என் பெயர் ’ . நிஜந்தன் என்ற பெயரில் பலர்  இந்த நாவலில் வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வெவ்வேறான வாழக்கை பற்றி விரிவாகவே பேசுகிறார்.. ஒவ்வொருவருக்குள் தேடினால் வெவ்வேறு தத்துவ அம்சங்களும் சிதிலமும் புதைந்து கிடைக்கிறது.  இந்த நாவலில் அவரின் முந்தைய நாவல்கள் பற்றிய அபிப்பிராயங்களும், அந்த நாவல்களின் கதாபாத்திரங்களும் ஊடாடிச் செல்கின்றன.  பலர் அந்த கதாபாத்திரங்களின் பாதிப்பால் தங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதும், பாதிக்கப்படுவதும் புனைவு யதார்த்த வாழ்வில் தரும்  பிரதிபலிப்பும் காணக்கூடியதாக இருக்கிறது.
லட்சியங்களைக் கோடிடும் நாவல்களின் காலம் எப்போதோ முடிந்து விட்டது. சரிவுகளும், மீறல்களும்., மதிப்பீடுகள் உடைபடுவதும் சாதாரணமாகிப் போன காலத்தின் குறியீடுகளாக இந்த நாவல்கள் அமைந்திருகின்றன.  மையம் அதிகாரக் குவிப்பை உண்டு பண்ணும்  என்று நம்புகிறவர் நிஜந்தன். அதிகாரப் பீடங்களைக் கொண்ட சமூகப் போக்கில்  படைப்புகள் மையம் சார்ந்தவையாக பெரும்பாலும் அமையும் போது அந்த மையத்தைத் தகர்க்கும் முயற்சியில் இவரின் படைப்புகள் தொடர்ந்து  கட்டமைக்கப்பட்டு தமிழின் குறிப்பிடத்தக்க படைப்புகளை  வெளிப்படுத்தியுள்ளதுபுனைவின் மயக்கம் எப்போதும் தீராதது. புனைவின் சவாலும் சலிக்காதது. இந்தப்பிரதிக்கான புனைவின்  போக்கும் அப்படியே “ என்கிறார் நிஜந்தன்.
இவ்வகை விரிவான களங்களில் ஏழு நாவல்கள் மூலம்  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களில் நிஜந்தனின் படைப்புலகம் தமிழில் வெகுவாக கவனத்தில்  கொள்ளப்பட வேண்டி விரிந்து கிடக்கிறது..

(விலை ரூ 200, பாலம் பதிப்பகம், சென்னை 42  044-22434212 .,    நிஜந்தன் 9884032075)



   ( சுப்ரபாரதிமணியன்.,           8/2635 பாண்டியன் நகர்.,          திருப்பூர் 641 602.              9486101003  )





வெப்பத்துள் கருகும் மனிதன்

சுப்ரபாரதிமணியன் 

veppaththul1இவ்வாண்டின அக்னி நட்சத்திர சமயத்தில் பெய்த மழை கொஞ்சம் ஆசுவாசம் கொள்ளச் செய்தது.
மூன்றாவது உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் என்று சமீபமாய் இருபது ஆண்டுகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சமீபமாய் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நாடுகளுக்கிடையில் யுத்தம் வரும் என்ற புது கருத்து நிலைகொள்ள ஆரம்பித்துவிட்டது.
யுத்தத்திற்கு முன் ஏற்பாடாக வெவ்வேறு விசயங்கள் இப்படியாக நடந்தும் வருகின்றன. இந்த ஆண்டின் கோடை கடந்த ஆண்டின் கோடைகளைவிட உட்சபட்ச வெப்பத்தைக் கொண்டிருந்தது. வெப்ப தினங்கள் அப்புறம் வெப்பக் காற்று அலைமோதி மக்களைத் திணற வைத்தது. இதன் காரணமாய் வெயிலில் சுருண்டு விழுகிற சாதாரண மக்களின் படங்களைப் பத்திரிக்கைகளில் காண நேரிட்டது. இறந்து போனவர்களில் பெரும்பாலும் வயதானவர்கள். வெயிலின் உச்சத்தைத் தாங்க இயலாமல் உயிரையும் சேர்த்து சுருண்டு கொண்டவர்கள். அதுவும் பெருநகரத்தின் சூடு சாதாரண சாலையோர மக்களையும் கருகிப் பிணமாக்கியது. மனிதர்களுக்கே இந்த கதியென்றால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு அளவில்லை. அவை குடிக்க நீர்தேடி அலைய வேண்டியதாகிவிட்டது. காட்டு மிருகங்களும் வீதிற்கு வந்து உலவி பயம் தந்தன.
வெப்பத்தைக் குறைத்து கொள்ளலாம் என்று கோடை வாசஸ்தலங்களுக்கு பண மூட்டைகளைக் கட்டிக் கொண்டு போனவர்கள் அங்கும் சூடு ஜிங்ஜிங்கென்று ஆட்டம் போட திணற வேண்டியதாகிவிட்டது. கோடை வாசஸ்தலங்கள் நெரிசலில் சிக்கி திணறி எல்லோரையும் திரும்பி வீட்டை நோக்கிய சாலைகளைப் பார்க்கச் செய்து விட்டது. விவசாயப் பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு தற்கொலை எண்ணங்களை தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருந்தது. ஏர்கண்டிசனுக்குள் எல்லோரும் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வது சாத்யமா என்ன… காற்று பதனாக்கி பொருட்கள் விலை தாறுமாறாய் உயர்ந்து சாதாரண மக்களிடமிருந்து விலகிப் போய் விட்டன. காற்று பதனாக்கி தரும் இதத்தை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வந்து சேரும் வியாதிகளுக்கும் குறைவில்லையென்றாகிவிட்டது. நிலங்கள் பாலைவனமாகிக் கொண்டிருக்க, வீடுகள் பாலைவனங்களுக்கு இடையில் கட்டப்பட்டவை போலாகிவிட்டன. வீடுகளின் அடிப்பாகத் திடம் சுருங்கிப் போக அவற்றின் மொத்த ஸ்திரத் தன்மையும் சற்றே நிலைகுலைந்து போக ஆட்டம் கண்டு கொண்டிருந்த அஸ்திவாரங்கள் மோசமாக பல பழைய கால வீடுகள் நிலநடுக்கம் ஏற்பட்டது போல் நடுங்கி சரிந்தன. நீர் நிலைகள் காய்ந்து போக எதிர்காலத்தில் முன்பு நிகழ்ந்தது போல காய்ந்த ஏரிகளும், குளங்களும் புது பேருந்து நிலையங்களும், அடுக்குமாடி வணிகக் கட்டிடங்களும் கட்ட தயார் செய்யப்பட்டது போலாகிவிட்டன. சூடு தொற்று நோய்களை சுலபமாகப் பரப்பும் என்பதால் தொற்று நோய் சார்ந்த சிரமங்கள் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்பட்டு சிரமங்கள் விளைவித்தன. கடலோரங்களில் வறட்சி, கடலை உள்வாங்கச் செய்து கடலையொட்டிய கட்டிடங்களை நிலை குலையச் செய்து தரையோடு வீழ்த்தின. அவற்றின் சாட்சிகளை தொலைகாட்சிகளில் காண நேர்ந்தது.
பருவநிலைகளும், பருவ மழைகளும் தாறுமாறாய் மாற வெள்ளமும், வறட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல மாறி மாறி அலைக்கழித்து வருகின்றன. நீர் மின்சாரம் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள பற்றாக்குறைக்கு இன்னும் உதவியாயின அவை. இவையெல்லாம் சேர்ந்து பலவகை சொத்துகளுக்கு சேதம் விளைவித்து விட்டன.
veppaththul2மிகுந்த வறட்சி நிலத்தின் நீர்த்தன்மையை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதனால் மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவு சாதாரணமாகிவிட்டது. மலைப்பிரதேசத்திற்கு வரும் வாகனங்கள் அதிகமாகி விட்டதால் மலைச்சரிவுகள் பிடிப்பை இழந்து மனிதர்களை சரிந்து விழச் செய்து வேடிக்கை பார்த்தன. சாவுகளும், பயிர்களின் நாசங்களும் அரசாங்க மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை நிலைகுலைய வைத்திருக்கின்றன. பெரும் லாபம் நோக்கியே ஆரம்பிக்கப்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கான இழப்பை சரிகட்டிக் கொள்ள முடியாமல் கடைகளை மூடிக் கொண்டு தப்பித்துப் போக வழி பார்த்துக் கொண்டிருக்கின்றன. பயிர் மற்றும் நிலம் சார்ந்த காப்புரிமைத் திட்டங்களை அவை கைவிடுவதற்கான ஆயத்தங்களில் மூழ்க ஆரம்பித்துள்ளன. காடுகள் தீப்பற்றி எரிவதும் காட்டுப் பயிர்கள், மூலிகைச் செடிகள் கருகி நாசமாவதும் நிகழ்ந்து வருகிறது.
இந்த பாதிப்புகள் நம்மை சுற்றி யாருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம், சீனா போன்ற நாடுகளுடன் நமக்கு பிணக்கை ஏற்படுத்தி போர் வெடிக்கலாம் என்று பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழு என்ற அய்..நா.வின் துணை அமைப்பொன்று பல ஆய்வுகளுக்குப் பின் தன் முடிவைத் தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் அந்தமான் சென்று வந்த நண்பர் ஒருவர் பருவநிலை மாற்றத்தால் அங்குள்ள பல தீவுகளில் காணப்படும் பவளப் பாறைகள் சிதைந்து விட்டதைப் பற்றிச் சொன்னார். கண்ணாடிகள், மூக மூடிகள் அணிந்து கடல் நீருள் சென்று பவளப் பாறைகளின் அழகை ரசிக்கும் சந்தர்ப்பங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன் என்றார். பவளத்திட்டுகள் அளவில் சிறிதாகி வருகின்றன. அவற்றின் நிறங்களில் காணப்படும் பளிரிடும் தன்மை குறைந்து மங்கலாகக் காட்சியளிக்கின்றன. மேற்கு வங்க சுந்தரக் காட்டு கடல் பகுதிகளில் பல தீவுகள் மூழ்கிவிட்டன. இந்தியாவின் ஜீவநதிகள் வறட்சிக்கு உள்ளாகிவிட்டன. கங்கை பள்ளத்தாக்கு பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு இமயமலை பனி உருகுவதால் ஏற்படுவதும் தொடர்ந்து பின் வறட்சியைக் கொண்டு வந்து விடுவதற்கான ஆயத்தங்களுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன. இமய நதிப் பாசன பகுதிகளில் நன்னீர் ஆதாரம் குறையும் என்பதால் இதுவே தெற்காசிய நாடுகளுக்கு மத்தியில் கசப்பை விதைத்து போருக்கு கூட வழிவகுக்க வாய்ப்புகள் இருப்பதாலேயே பருவநிலை மாற்றங்களும் புவி வெப்பமடைதலும் காரணங்களாக இருக்கும்.
கடல் மட்டம் உயர்ந்தால் நாம் கேரளத்திற்கு சுற்றுலா செல்வது கூடத் தடைபடலாம். சுற்றுலா சார்ந்த பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் கடலுக்குள் கேரள நகரங்கள் மூழக் நூறு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்றால் மும்பை, கலகத்தா போன்ற பெரு நகரங்கள் அதற்கு பின் 50 ஆண்டுகளில் கடலில் மூழ்கும் அபாயங்களைக் கொண்டிருக்கிறது. நாம் சுவைத்து சாப்பிடும் கடல் மீன்கள் குறைந்து விடும். கடலின் உயிரினங்கள் 50 ஆண்டுகளில் கண்காட்சியில் வைக்கப்படும் அளவிற்கு அபூர்வமாகிவிடும்.
புவி சார்ந்த பொருளாதார பாதிப்புகளை ஈடு செய்வது சாதாரணமல்ல. உள்நாட்டின் உற்பத்தின் சரிவும், அதனால் வருமான இழப்பும் சாதாரணமாகிவிடும். வருமான இழப்பு ஏழைகளையும் வறுமைக் கோட்டையும் தளர்த்தி 32 ரூபாய், 26ரூபாய் என்ற இலக்கைத் தாண்டி ஏழ்மையை விரித்துக் கொண்டே சென்றுவிடும். உணவுப் பொருட்களின் விளைச்சல் பாதிக்கப்படுவதால் அவற்றின் விலை வெகுவாக உயரக்கூடும். நிச்சயம் உயரும்.
பருவநிலை மாறுதல்கள் தரும் சேதங்கள் ஏற்படுத்தும் குப்பைகளும், கழிவுகளும் அகற்றவும், இல்லாமல் செய்கிற முயற்சிகளுக்காகவும் புது வகை வரி சுமத்தப்படுவது பற்றி பல நாடுகள் யோசித்து வருகின்றன. வருமான வரி, கம்பனி வரி, கரிம வரி போடப்படலாம். வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் என்று எல்லாவற்றிலுமே எரிபொருள் உபயோகத்திற்காக சட்டரீதியான நடவடிக்கைகளும், சட்டத்திருத்தங்களும் செய்யப்படவேண்டியிருக்கிறது. காற்றில் மாசு உருவாவதும், கலப்பதும் வெகுவாக குறைக்க அச்சட்டங்கள் பயன்படும்.
வளிமண்டலத்தில் கரியமிலவாயு அடர்த்தி அதிகரிக்கிறது. நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு, மீதேன், கார்பன்டை ஆக்சைடு போன்ற வாயுக்களின் அதீத வெளியீட்டால் இந்த வெப்பநிலை உயர்தல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்பு இந்த வெப்ப நிலை சிரமங்களுக்கு மனிதன் காரணம் என்ற குற்றச் சாட்டை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு பல ஆய்வுகள் நடைபெற்றன. ஆனால் 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் இந்த கேடுகெட்ட நிலைக்குக் காரணம் மனிதர்களின் நடவடிக்கைகள்தான் என்று முடிவுக்கு வந்திருக்கின்றன. அறிவியலாளர்கள் பல காரணங்களை ஆய்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கின்றனர். 60 நாடுகளைச் சார்ந்த 800 அறிவியலாளர்களின் ஆய்வு இந்த முடிவிற்கு வந்து மனிதனின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியை அடையாளம் காட்டியது சென்றாண்டில்தான்.

செவ்வாய், 8 ஜூலை, 2014

* “ தூங்குவது போலும் சாக்காடு தூங்கி விழிப்பதும் போலும் பிறப்பு “- – சித்தர் பாடலொன்று.* “ காலா என்னருகில் வாடா
உனை காலால் மிதிக்கிறேன் “ –பாரதி* சாவே உனக்கொரு சாவு வராதா” – கண்ணதாசன் 
* “ சாவு சாவல்லசாவுக்கு முன் நிகழும்போராட்டமே சாவு “ – புகாரி
* “இறந்து போகிறவனின் சரீரம், இந்திரியம், மனம், புத்தி இவைகளிலிருந்து வேறாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா. அது ஒருவனுடைய மரணத்திற்குப் பிறகு வேறு தேகத்தை அடைகிறது என்றும் அப்படி வேறான ஆத்மா எதுவும் இல்லை என்றும் இரு கருத்துக்கள் உள்ளன. இதன் தத்துவத்தை எனக்குத் தாங்கள் விளக்கவேண்டும். யமதர்மரே, இதுதான் நான் கேட்கும் மூன்றாவது வரமாகும்வாமனனின் மூன்றாவது அடியையும் நசிகேதன் கேட்ட வரம் மிஞ்சிவிட்டது போலிருந்தது. யமதர்மனின் அருகிலிருந்த சிரவணர்களுக்கும் யமதர்மனுக்கும் கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டானே என்ற மலைப்பு. ஒரு மானுடப்பிறவிக்கு ஆத்மஞான உபதேசம் பெற பூரணமான யோக்கியதை இருக்கிறதா என்று முதலில் பரிசீலிக்க வேண்டும். சுகபோகங்களுக்கு மயங்காதவனா என்று கண்டு கொள்ள வேண்டும் என்றிருந்தது. “ என்ன அசட்டுத்தனமான கேள்வி. இது சாதாரண ஜன்ங்களால் அறிய முடியாதது. இந்த ஆத்ம தத்துவ விசயமாக தேவர்களுக்கே இன்னும் சந்தேகம் இருக்கிறது. எளிதில் அறிய முடியாத விசயம். இதை விட்டு வேறு வரத்தைக் கேள். என்னை இம்சிக்காதே.மரணத்திற்குப் பின் உலகம் இருக்கிறதா இல்லையா என்பதை மட்டும் கேட்காதே
( –
சுப்ரபாரதிமணியனின்மூன்றாவது வரம்சிறுகதையிலிருந்து-சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் தொகுப்பு 333ம் பக்கம்-காவ்யா வெளியீடு )
* அவ்வுலகம் நினைவின் நீட்சியாகவும் அமைவதுண்டு. கனவின் காட்சியாகவும் அமைவதுண்டு. நம்மைச் சுற்றி உள்ள உலகங்களை நாமே சிருஷ்டித்துக் கொள்கிறோம் “- வெ.இறையன்பு
* * *
இறையன்புவின்அவ்வுலகம்நாவலில் இதுவரைக் கடலைப் பார்த்திராத மனைவி கடலைப் பார்த்து வியந்து போவது பற்றி கணவனுடன் டைரிக்குறிப்பொன்றில் பகிர்ந்து கொள்வவதாய் ஒரு பத்தி உள்ளது. கடல் பற்றிய வியப்பு அதில் உள்ளது. அம்மனைவியின் பெருமிதம் போல் இறையன்புவின் படைப்புகள் தமிழ்ச்சூழலில் வாசகர்களை வெகுவாக வியப்பு ஏற்படுத்துபவை. சந்தோசப்படுத்துபவை. சுயமுன்னேற்ற நூல்கள், உரைகள், படைப்பிலக்கிய அம்சங்கள் என்று எல்லா தளங்களிலும் வியாபித்து பல லட்சம் தமிழ் வாசகர்களை தன்னுள் கொண்டு மகிழ்வித்துக் கொண்டிருப்பவர். நாவலிலும் அவரின் பங்களிப்பு தொடர்கிறது.மரணம் பற்றிய அவரின்சாகாவரம் “, “ அவ்வுலகம்நாவல்களில் மரணம் பற்றிய தத்துவ விசாரங்களைக் காண்கிறோம்.சிந்தனையும் புனைவும் கூடின கருத்துலக நாவல்களாக இவை பரிமளித்துள்ளன.
அவரின்சாகாவரம்நாவல் நசிகேதன் எதிர்கொள்ளும் மரணம் பற்றிய போசிப்புகளூம், தேடலும் சில அனுபவங்களில் விரிந்துள்ளது.நசிகேதன் தொடர்ந்து சிலரின் மரணங்களைப் பார்க்கிறான். கபீர் அலி செத்து விடுகிறான். உணர்வில் ஒன்றி விட்ட மனிதனை பூமிக்குத் தின்னக் கொடுப்பது பெரிய அதிர்ச்சியாய் அவனுக்கு அமைந்து விடுகிறது. விவரம் தெரியாத வயதில் இறந்து போகிற தாத்தா பாட்டியின் மரணத்தின் போதுகலயாண சாவாய்அனுபவங்கள் உற்சாகமாய் அமைந்து விடுகின்றன, உறவுகளும், சடங்குகளும், கொண்டாட்டமுமாக இருந்தது சின்னவயதிற்கு மகிழ்ச்சி தந்திருகிறது. முன்பு முப்பது வருடங்களாக செய்தித்தாள்களில் வருகிற மரண செய்திகளால் அவை அமைகிற போது மூன்று மாதங்களில் நிகழும் சிலரின் மரணங்கள் அவனை நிலை குலைய வைக்கின்றன.தனிமையும் வெறுமையும் அலைக்கழிக்கின்றன. எல்லோரூக்கும் வேலை, எல்லோருக்கும் சாப்பாடு, எந்த உயிருக்கும் கெடுதல் பண்ணக் கூடாதென்ற திடமான எண்ணம். திருமணமும் கை கூடி வரவில்லை. முதல் மரணத்தில் ஒரு தற்கொலையை தரிசிக்க நேர்கிறது அவனுக்கு.அது பார்த்திபனுடையது. திருமணம் செய்து கொண்டவன். கல் குவாரியில் நஷ்டம் அனுபவித்தவன்.கடன் அவனைத் துன்புறுத்துகிறது. தற்கொலை செய்து கொள்கிறான்.கோபி ஏழ்மையில் உழன்றவன்.படித்து குடும்பத்திற்கு உதவுபவன். மார்அடைப்பால் இறந்து போகிறான்.
நசிகேதனுக்கு தொடர்ச்சியான மரணச் செய்திகள் நிலைகுலைய வைக்கின்றன. தாவரவியல் ஆசிரியரான அவன் வேலையை சரிவர கவனிக்க முடியாமல் அலைக்கழிகிறான்.அவனை ஒரு நிலைப்படுத்த ரூப் என்ற நண்பன் பேரிஜம் என்ற காட்டுப்பகுதிக்கு அனுப்புகிறான். ரூப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கையில் அவன் மரணம் பற்றிய செய்தி கிடைக்கிறது.மன அமைதிக்காக பூர்ணானந்தா என்ற சாமியாரைப்பார்க்கிறான். அது பழைய கல்லூரி சேர்மனின் வேறு ரூபம் என்பது தெரிகிறது. சாமியாரின் நிஜம் தெரிகிறபோது வெறுக்கிறான்.மரணத்தைப் பற்றிக்கடோ உபநிடதம்படிக்கிறான். அதில் வரும் நசிகேதாவைப் போல் அவனும் மாற ஆசைப்படுகிறான். தம்பியின் மரணத்தை, உயிர் பிரிவதை விபத்து மூலம் காண்கிறான்.நாவலின் அடுத்த பகுதிபயணமா அமைகிறது. சிந்தனையாளர் சபையின் உபந்யாசங்களுக்கு செல்கிறான். பல பயிற்சிகளைச் செய்கிறான்.கொல்லிமலைக்குப் போகிறான். மலைப்பகுதியில் ஏழு நாட்கள் நடக்கிறான். ஞானி ஒருவரைச் சந்திக்கிறான். கடிகாரமும், நாள்காட்டியும் இல்லாத இடத்தில் புது அனுபவம், வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பாக அமைகிறது.ஏழு சக்கரங்கள், கிடைக்கும் ஓலைச்சுவடிகளில் உணவு முறை பற்றித் தெரிந்து கொள்கிறான்.சாட்சிகளாக நின்று பார்க்கும் பக்குவம் பற்றியும் தெரிந்து கொள்கிறான். மனிதர்களை அலைக்கழிக்கிற பாலுணர்வு பற்றி அறிந்து கொள்கிறான்.ஞானியின் மரணத்தை முக்தியாக எடுத்துக் கொள்கிறான். மலையிலிருந்து திரும்புகையில் ஆதிவாசிகளுடன் பழகுகிறான்மீண்டும் நாமக்கல் வந்து ஒரு பரதேசியுடன் சில நாட்களைக் கழிக்கிறான்.தமிழ் வளர்ந்த பொதிகை மலைக்குச் செல்கிறான்.சிரஞ்சிவி வெளியை அடைகிறான்.அடுத்துசலனம்என்ற தலைப்பில் நாவல் அமைந்திருக்கிறது. அங்கே சாவு கிடையாது. சாவு பற்றிய சிந்தனை உள்ள மனிதர்களைப்பார்க்கிறான். இலைகள் பழுக்கவோ, தளிர்கள் துளிர்க்கவோ செய்யாத மரங்களைக் காண்கிறான். நிர்வாணம் என்றாலும் ஆண், பெண் என்கிற படைப்பின் அடிப்படை நோக்கமே தேவையில்லாத இடத்தில் வெட்கமும் காமமும் இல்லாதிருப்பதைக் காண்கிறான். பழங்களின் சுவை என்பது கூட இல்லை. பசி எடுக்காத நிலை எதையும் சாப்பிட முடியாத உடல் ஸ்திதி.அங்கு வாழ்வது சாவின் நீட்சி. இயங்குவது வாழ்வு. தேங்குவது சாவு என்பதும் தெரிகிறது. அவனுடைய நெடிய தேடல் சூன்யத்தில் முடிந்து விட்டது எல்லோருடைய மரணத்திலும் அவன் மரணமும் சின்னதாக ஒட்டிக் கொண்டிருக்கப் போகிறது. மரணமற்ற மரணத்தின் சாயலையும், பார்வையற்ற வாழ்வின் ஆரம்பத்தையும் உணர்கிறான். சாவு பற்றிய யோசிப்பும் விசாரணையுமாக நாவல் நிரப்பப்பட்டிருக்கிரது.
மரணத்தைப் பற்றி யோசிக்கிற போதே அதற்குப் பின் என்ன என்பதும் யோசிப்பும் வந்து விடுகிறது. அந்த யோசிப்பில் நீள்கிறதுஅவ்வுலகம்நாவல். த்ரிவிக்ரமனுக்கு தாத்தாவின் சாவு பற்றிய செய்தி கிடைக்கிறபோது துர்நாற்றத்துடன் ஈக்கள் மொய்த்த பிணமும் அதன் நெற்றியில் இருக்கும் அய்ந்து ரூபாய் நாணயமும் ஞாபகம் வருகிறது. “ ஹை அய்ந்து ரூபாய்க்கு எவ்ளோ தேன் மிட்டாய் வாங்கிச் சாப்டலம். இப்படி வீண் பண்றாங்களேஎன்று வெகுளித்தனமாக நினைக்கிறான். இப்படியும்: “ சாமியைத் தொட்டுப் பாக்கணும். நிறைய பேசணும். எப்பப்பாத்தாலும் கடிக்கிற மாதிரி கொலைக்கற கோடி வீட்டு நாயோட வாயை அடைக்கச் சொல்லிக் கேக்கணும்சாமி வெறும் சிலைதான் என்பது தெரிகிறது. புத்தக வாசிப்பாய் உயிர் வாழ்ந்த காளிதாசை அவ்வப்போது பார்க்கிறான்.த்ரிவிக்ரமனுக்கு வயதாகி உடம்பு சுகமில்லாமல் போகிறது.காளிதாசின் புத்தகங்கள் அவனுக்குத் துணையாகிறது.
திடிரென வேறு அனுபவம் கிட்டுகிறது. வேறு உலகம். எங்கு வேண்டுமானாலும் சென்று வரும் சுதந்திரம் கிடைக்கிறது. கண்ணிற்கு ஏற்கனவே பரிச்சயமானவர்கள் மட்டுமே தெரிய ஆரம்பிப்பார்கள் என்பது நிபந்தனையாகிறது.மரணத்தைக் கொண்டாடும் மனநிலையோடு அங்கு வருபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவன் பலரைச் சந்திக்கிறான். வியாபார தந்திரம் கொண்ட உபதேசி தென்படுகிறார்.பழைய காதலி சாயாவைச் சந்திக்கிறான். குழந்தைகளின் சாகச விளையாட்டில் செத்துப்போன மகன் சத்யகாம் தென்படுகிறான். விதவிதமான சாவுகள். மனைவி கங்காவைச் சந்திக்கிற போது அவளின் உயில் போன்ற நோட்டுப்புத்தகம் அவளின் வாழ்க்கைச் சித்திரத்தை விவரிக்கிறது. வாழாமப் போனதைப் பத்தி யோசிக்கறதும் வாழ்ந்ததைப் பற்றி கவலைப்படறதும் பிரயோசமில்லாதது என்பது தெரிகிறது.
மறு உலக அனுபவம் முடிந்து விடுகிறது. வாழ்க்கையின் போது சிந்திக்காதவற்றை செத்தபின் சிந்திக்கிற அவகாசம் ஏற்படுகிறது. மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகள் கொஞ்ச நஞ்சத்தை நீக்கும் குளியலாக அமைகிறது
த்ரிவிக்ரமனுக்கு மரணம் நிகழ்கிறது. வாழும் போதே மரணத்தைக் கடந்தவாராகத் தென்படுகிறார்.மரணம் இருளையும் வெளிச்சத்தையும் ஒரு சேர கொண்டு வந்திருக்கிறது.மரணம் பற்றிய சிந்தனைகள் ஒவ்வொருவரும் கடந்து செல்ல வேண்டிய குகைகளின் திறவு கோலாக இந்நாவலில் சித்தரிகப்படிருக்கிறது.சிந்தனைகளின் குவியலும் கற்பனையும் முயங்கி மரணம் பற்றிச் சிந்திக்க வைக்கிறது.. மனம் விசித்திரமாக இருக்கிறது. இந்த விசித்திர மனமும் சதா சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. சிந்தனையில் பல சமயங்களில் மரணம் பற்றி அதிக விசயங்கள் ஆக்கிரமித்து விடுகின்றன.உலகவாழ்வு, மரணம் பற்றி வியாகியானங்கள் செய்பவர்களை அடையாளம் காட்டி பரிகாசம் செய்யும் தன்மையும் இதில் உள்ளது.
இரண்டு நாவல்களும் மரணத்திலிருந்து தொடங்கின்றன. அது வாழ்க்கைக் கதையாக பின்னால் விரிகிறது. நினைவுகள் ஓயாமல் அந்தக் கதாபாத்திரங்களை அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. நினைவுகளின் மீதான சஞ்சலங்களும் பலரின் மரணம் பற்றிய நினைவுகளும் ஊடாடிப் போகின்றன. நினைவுகள் மூலமும், பயணங்கள் மூலமும் மரணத்தைத் தாண்டிச் செல்வதற்கான ஆயத்தங்களைக் காண்கிறோம். எல்லோரும் மரண பயம் இல்லாமல்தான் கடந்து கொண்டிருக்கிறார்கள், நோய்களும் விபத்துகளும், மரண செய்திகளும் மரணத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன, மரணத்திடம் ஏதாவது வகையில் சமரசம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. நினைவுகள் அதிலிருந்து மீளவும் சில சமயங்களில் உதவுகிறது. இதைத்தான் சில அனுபவங்கள் மூலம் இந்நாவல்கள் சொல்லிச் செல்கின்றன.நாம் வாழும் வாழ்வின் உருவாக்கங்களில் பிறப்பும், மரணமும்,நினைவுகளும் துரத்திக் கொண்டே இருக்கின்றன. மரணம் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது மரணம் எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைத்து. விடுகிறது.இதை தேடலின் அம்சங்களாக்குகிறார் இறையன்பு.
தேர்ந்த உரையாடலாராக, பேச்சாளராக , கதை சொல்லியாக பரிணமித்திருக்கும் இறையன்பு உரைநடையிலும் ஜாலங்களைக் காட்டுபவராக கவர்ச்சிகரமான தத்துவ சாயல் கொண்ட சொற்றொடர்கள், உரைநடை மூலம் நாவலை புதுப்பித்துக் கொண்டே செல்கிறார். காட்சிமொழி கதையாடல், உயிர்ப்பான உரையாடல்கள் , டைரிக்குறிப்புகள், நனவிலி மனத்தின் சிக்கல்கள் என்று கதைப்பிரதியை வடிவமைத்துள்ளார்.
வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தத்துவசாரத்திற்குச் செல்லாமல் தத்துவத்தை மனதில் கொண்டு அந்த வகை அனுபவங்களை தேடிச் செல்கிற வித்தையை இறையன்பின் இந்த இரண்டு நாவல்களில் காண்கிறோம். அதை விவரிப்பதில் அவரின் வேறுபட்ட கருத்துலபரிமாணங்களில் தென்படும் புனைவுலகத்தின் நீட்சி சுவாரஸ்யத்தன்மையுடன் வெளிப்பட்டிருக்கிறது..மரணத்தை எல்லோரும் ருசித்துப் பார்க்கலாம்.
( சுப்ரபாரதிமணியன்., 8/2635 பாண்டியன் நகர்., திருப்பூர் 641 602.