சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 19 பிப்ரவரி, 2025

திருப்பூர் புத்தக கண்காட்சி 2025 சுப்ரபாரதிமணியன் வழக்கமாய் திருப்பூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை, , பொன்னுலகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகிய அரங்கங்களில் உட்கார்ந்து நண்பர்களைச் சந்திப்பது பேசுவது என்று புத்தக கண்காட்சி காலத்தில், மாலை நேரத்தில் என் பொழுது போகும். இந்த முறை பொன்னுலகம் பதிப்பகம் அரங்கம் போடவில்லை உயிர்மை பதிப்பகம் ஆண்டுதோறும் என்னுடைய புத்தகங்களை கொண்டு வந்து விடும். இந்த முறை கொண்டு வரவில்லை சுற்றுசூழல் திரைக்கதைகள் என்ற நூல் உயிர்மை பதிப்பகத்திற்கு அனுப்பி வைவித்தேன். அவருக்கு மின்னஞ்சல் செய்தேன் கூப்பிட்டேன். பதில் இல்லை தமிழ் பதிப்பாளர்கள் எழுத்தாளர்களை மதிக்கும் விதம்தான் இது. இந்த முறை திருப்பூர் புத்தக கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அரங்கத்தில் இருந்து கொண்டு நண்பர்களைச் சந்திப்பதும் பேசுவதும் என்று என்னுடைய புத்தக கண்காட்சி தினங்கள் மாலையில் கழிந்தன. இந்த முறை புத்தக வெளியீடுகள் அரங்குகுகளில் அதிகம் காணப்படவில்லை.. அப்போது அதிகம் விற்பனையாகும் நூல்கள் பற்றியும் சில கணிப்புகள் வந்தன.. நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் போட்டி தேர்வுகள் என்று பல புத்தகங்கள் அவர்கள் பதிப்பது நிறைய விற்பனையாகிறது. அவற்றை வாங்குவதற்காக கல்லூரி மாணவர்களும் போட்டியாளர்களும் நிறைய வந்து போகிறார்கள் அடுத்து இறையன்பு அவர்களின் நூல்கள் அதிகம் விற்பனையானது. அப்துல்கலாம் நூல்கள் விற்பனையாவது குறைவாக இருக்கிறது இறையன்பு நூல்கள் அதிகம் விற்பனைக்கு ஒரு காரணம் பல தலைப்புகளில் பல நூல்கள் வந்திருப்பதால் என்ன நினைக்கிறேன். அவை சுவாரஸ்யமாக இருப்பதாக வெகுஜன வாசர்கள் படிக்கிறார்கள். வெகு ஜன வாசகனுக்கு ஏதாவது நாவல் தேவைப்படுகிற போது அவன் தெரியாத பெயராக இருந்தால் கூட அதனை தேர்வு செய்து கொள்கிறான் அப்படித்தான் என்சிபிஎச் புத்தக நிலையம் வெளியிட்டிருக்கிற பல நாவல்களை பலர் தேர்வு செய்து இருந்தார்கள் என்பது தெரிந்தது. பெண் எழுத்தாளருடைய படைப்புகளை பலர் விரும்பி வாசிக்கிறார்கள் பாமா போன்ற தீவிர எழுத்தாளருடைய படைப்புகளுக்கும் ஒரு இடமிருந்த்தைக் கண்டு கொண்டேன் என்னுடைய படைப்புகளில் சிலுவை நாவலை நான் தனிப்பட்ட முறையில் 147 பிரதிகள் முன்பு விற்று இருக்கிறேன். இந்த புத்தக கண்காட்சியில் சிலுவை நாவலின் பத்துக்கு மேற்பட்ட பிரதிகளை விற்கப்பட்டது என்பது ஆறுதல். சிலர் என்னிடம் கூடுதலாக சலுகை விலையில் கிடைக்கும் என்று சொல்லி என்னிடம் தனிப்பட்ட முறையிலும் வாங்கினர் என்னுடைய சுற்றுச்சூழல் நூல்கள் நிறைய என்சிபிஎச் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது இந்த முறையும் வெப்பம் என்ற சிறுவர் நாவல் சுற்று சூழ்நிலை மையமாகக் கொண்டும் வேர்களை இழக்கும் பூமி என்ற சுற்றுச்சூழல் கட்டுரைகள் கொண்ட தொகுப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றும் வேட்டையாடிகள் சிவப்பு பட்டியல்., சூழல் அறம் போன்ற நூல்கள் நிறைய விற்பனையாகின. என்னுடைய சாயத்திரை மறுபதிப்பு கணிசமாக விற்றது. வாங்குகிற வாசகர்கள் பலர் புதியவர்களாக இருந்தார்கள் உள்ளூர் எழுத்தாளர்கள் புத்தகங்களை வாங்குவதில் சுணக்கம் காட்டினார்கள் வாசிப்பதிலும் சுணக்கம் காட்டுகிற பழக்கம் உள்ளவர்கள் அவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.. அவர்கள் படைப்புப் பயிற்சிகளுக்கு, முயற்சிகளுக்கு மேலாக புத்தகங்கள் வாங்குவதும் புத்தகங்களை படிப்பது முக்கியமானது என்பதை நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன் பக்கத்தில் இருந்த பெரியார் சுயமரியாதை இயக்க அரங்கத்தில் பெண் ஏன் அடிமையானாள் 50 பிரதிகள் விற்றதை அவர்கள் சாதனையாக சொன்னார்கள். ஆனால் சில நாட்களில் அந்த பிரதிகள் தீர்ந்து விட்டன அச்சில் இல்லை பிரதிகள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள. இன்னும் பக்கத்திலிருந்து தினமலர் அரங்கத்தில் திருப்பூர் கிருஷ்ணன், வரலொட்டி ரங்கசாமி போன்றோரின் புத்தகங்கள் அதிகம் விற்று இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் இரவு 9.30 மணி வரை காத்திராமல் சீக்கிரம் கடையை மூடினார்கள். திருப்பூர் போன்ற நகரங்களில் மக்கள் தினசரி அதிக நேரத்தை வேலைகளில் ஒதுக்குபவர்கள் என்பதால் படிக்க நேரம் இருக்காது ஆனால் ஆண்டு தோறும் இப்படி நடக்கிற கண்காட்சிகளை புத்தகங்களை வாங்குவது என்பது பலருக்கு பழக்கமாக இருக்கிறது.நல்லது திரைப்படத்துறையினர் சிபாரிசு செய்யும் நூல்கள் கவனம் பெற்றன. அரவிந்த சாமி சிபாரிசு செய்த பணம் சார் உளவியல் உதாரணம் என்சிபிஎச் பதிப்பகம் வெளியிட்ட நூல்களில் சிறுவர் நூல்கள் அதிகம் இருந்தன. அதிலும் குறிப்பாக ஆங்கிலத்தில் சிறுவர் நூல்கள் அவை சிறு வெளியிடானாலும் உலக இலக்கியம் என்று சுருக்கு பட்ட பிரதிகள் 99 ரூபாய்க்கு கிடைத்தாலும் அவை அதிகமாக விற்பனையாகின. அதேபோல பாரதி புத்தகாலயம் வெளியிட்ட சிறுவர் நூல்கள் நிறைய தமிழில் தென்பட்டன அவை அதிகம் விற்பனையாகின்றன. அங்குநிறைய சிறுவர் இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் தங்கள் படைப்புகளை பிரசிக்கிக்கிறார்கள் என்பதை கண்டு கொண்டேன் பெரிய வரவாக அவை இருந்தன திருப்பூர் தமிழ்ச்சங்கம் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது அவர்கள் எது சொன்னாலும் விரோதமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாது. திருப்பூர் தமிழ் சங்க இலக்கிய விருதுகள் மிக முக்கியமான தமிழின் நவீன இலக்கிய படைப்பாளிகளுக்கு முன்பு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சமீப ஆண்டுகளில் அவர்கள் விருது தருகிற நூல்கள் குறிப்பிடத்தக்கதா இல்லை என்பதை இந்த ஆண்டும் கண்டு வருத்தமாக இருந்தது. வழக்கமாக மூன்று பேர் கொண்ட நடுவர் குழு இருக்கும் இந்த ஆண்டு அந்த நடுவர் குழு பற்றிய, நடுவர் குழு பற்றிய அறிவிப்பு அழைப்பிதழில் இல்லை. நடுவர் குழு என்று யாரும் அறிமுகப்படுத்தவில்லை சிறந்த நவீன இலக்கியவாதிகளுக்கு அறிமுகம் , அவர்களின் , நடுவர் குழு.,, விருதுகள் என்று வழங்கிய தமிழ் சங்கத்தின் விருது பட்டியல் சமீபமாய் குறிப்பிடத்தக்கதாக இல்லை என்னுடைய முந்திய விமர்சனத்தையே மீண்டும் வருத்தத்துடன் வைக்கிறேன். தமிழ் சங்கத்தினர் விரோதமான எடுத்துக் கொள்ளாமல் என்னுடைய சிறு கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதை தமிழ்ச்சங்கத்தினுடைய தலைவர் செயலாளர் போன்றவர்கள் கவனிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மோசமாக எதிர்வினை தருவது, விரோதமாக பார்ப்பது என்ற போக்கைத் தமிழ்ச்சங்க நண்பர்கள் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். வேறு பதிப்பக விற்பனை பற்றி அதிகம் எழுதவில்லை இங்கு. உள்ளூர் படைப்பாளிகள் நூல்களுக்காக தனியிடம் இல்லை. ஆனால் கவியுழவன் அரங்கத்தில் பலர் வைத்திருந்தார்கள். அதுவும் கவனம் பெறவில்லை என்பது வருத்தமே புத்தக கண்காட்சியில் சனி ஞாயிறுகளில் தென்பட்ட கூட்டமும் புத்தகங்கள் வாங்கியதும் ஆறுதலாக இருந்தது.. இந்த ஆண்டு கொஞ்சம் பயம் இருந்து கொண்டிருக்கிறது காரணம் சென்னை புத்தகக் கண்காட்சி விற்பனை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பது தான் ஆனால் திருப்பூர் ஏமாற்றவில்லை சிந்து வெளி அரங்கம், தமிழக அரசின் பல துறை அரங்கங்களால் பல பிரிவினரும் பங்கு பெற்றார்கள். மேடைப்பேச்சின் அரசியல் சார்ந்து தள்ளுமுள்ளு, சர்ச்சைகள் இருந்தன. கண்காட்சி பற்ரி நான் எழுதிய சில கருத்ஹ்டுக்களை பலர் பகிர்ந்து கொண்டார்கள். சிலர் எரிச்சல்பட்டார்கள். பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் ஓரளவு ஆறுதல். பெற்றார்கள் என்று சொல்ல வேண்டும். தொடர்ந்த உழைப்பு தொடங்க செயல்பாடுகள் சார்ந்து திருப்பூர் புத்தக கண்காட்சி வெற்றிக்கு உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்