சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 14 அக்டோபர், 2017

சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்   கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு
------------------------------------------------------------------------------------------
சுப்ரபாரதிமணியனின் புதியநாவல்   கடவுச்சீட்டு மலேசியப்பின்னணி நாவலை பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்  அவர்கள் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கக்கட்டிடத்தில்- கோலாலம்பூர்  ஜலான் ஈப்போவில் - நடைபெற்ற விழாவொன்றில் வெளியிட்டார். எழுத்தாளர்கள் அர்ஜினன், ஈப்போ முல்லைச் செல்வன் போன்றோர் பெற்றுக்கொண்டனர்.
நாவலை வெளியிட்டு பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர்  அவர்கள் பேசினார்
          சுப்ரபாரதிமணியன் தன் தொடர்ந்த நாவல் செயல்பாடுகளில் அவரின் 15 வது நாவலாக                 கடவுச்சீட்டு “  மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. அவரின் மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதைத் தந்திருக்கிறார்.அதுவும் கோலாலம்பூர்-செந்தூல் பகுதியில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையை இந்நாவல் சொல்லுகிறது.
      ஒரு வெளிநாட்டு தமிழ்ப்பெண்ணின் கனவு சிதநிது போவதை இந்நாவல் காட்டுகிறது.
மலேசிய தமிழ் குடும்பம் ஒன்றின்யதார்த்ததை இதில் வெளிக்காட்டியிருக்கிறார். அகிலனின்          “ பால் மரக்காட்டினிலே “ அறுபதில் இருந்த மலேசியா தமிழ்ச்சமூகத்தை பிரதிபலித்தது என்றால் சுப்ரபாரதிமணியனின் நாவல் இப்போதையச் சூழலில் எழுதப்பட்டிருக்கும் படைப்பு என்ற சிறப்பு பெறுகிறது என்றார்.
சுப்ரபாரதிமணியன் ஏற்புரை வழங்கினார்.
வீரபாலன் ( முன்னேற்றப் பதிப்பகம் சென்னை) பதிப்பாளர் பேசினார் -  எழுத்தாளர்சுப்ரபாரதிமணியன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதும் எழுத்தாளர் என்பதை அவரின் 15 நாவல்கள் உட்பட 50 நூல்களின் மடைப்பு மையங்களே சொல்லும்.எதிர்கால சமூகம் பற்றிய நல்ல கனவுகளை நோக்கி இன்றைய யதார்த்த உலகை அவரின் படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன..மனசாட்சியின் குரலாய் ஒலிக்கும் அவரின் இலக்கியக் குரல் தனித்துவமானது. எழுத்துப்போராளியாகவும் அவர் விளங்கி வருவதை சுற்றுச்சூழல் சார்ந்த அவரின் நூல்கள் அடையாளம் காட்டும்.
         என் முன்னேற்றப்பதிப்பகம் வெளியிடும் கடவுச்சீட்டு என்ற இந்நாவல் மலேசியா பின்னணி நாவல் ஆகும். மலேசியா வாழ் தமிழ்மக்களின் வாழ்க்கையைச் சொல்லுவது. அமரர் அகிலன் அவர்களின்                          பால்மரக்காட்டினிலே நாவல் மலேசியாவைப் பின்புலமாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர் எழுதிய நாவல் என்ற வகையில் பெருமை கொண்டது . அது போல் கடவுச்சீட்டு என்ற இந்நாவல் மலேசியாவைப் பின்புலமாகக் கொண்டது. அம்மக்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து மொழி, கலாச்சாரம் சார்ந்த விசயங்களின் சாரமாக இதை எழுதி உள்ளார். மலேசியாவைப் பின்புலமாகக் கொண்ட இவரின் இன்னொரு நாவல்          மாலு “ ( மாலு- ரப்பர் மரத்தில் பால் எடுக்கப் போடப்படும் கோடு )வை உயிர்மை பதிப்பகம் முன்னர் வெளியிட்டுள்ளது.
சுப்ரபாரதிமணியனின் கோமணம் என்ற நாவலை சென்றாண்டு வெளியிட்டேன். சிறந்த வரவேற்பு பெற்ற அந்நாவலை அடுத்து இந்நாவலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.சமூகத்தில் எழுத்தாளர்கள் சமூக யதார்த்தை எழுதி சமூக மாற்றங்களுக்கு வித்திட வேண்டும். பயமற்ற எழுத்து பயமற்றப்பதிவு. மலேசியா தமிழர்களின் வாழ்க்கையின் ஒருபகுதியை இந்நாவல் வெளிப்படுத்தியுள்ளது  என்றார்.
அருள் ஆறுமுகம் ( துணைத் தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் ) எழுத்தாளர்கள் ரேவதி, கண்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 ( ரூ120 முன்னேற்றப் பதிப்பகம் சென்னை வெளியீடு. 94867 32652 )




* என் நாவல் சப்பரம் படமாகிறது.
சப்பரம் நாவல் , ரூ 80 என்சிபிஎச் வெளியீடு
Pl see Utube -Raghavanthambi chapparam


*  திரைப்பட உதவி இயக்குனர் அய்யனார் இரு மாதங்களாக என் இருநாவல்கள் 

திரைப்படங்களுக்கு உகந்ததாக இருப்பதாகவும் திரைக்கதை எழுதப்போவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.


1. நைரா-திருப்பூர் சூழல். நைஜீரியன் -தமிழ்ப்பெண் காதல் ( என்சிபிஎச் வெளியீடு )

2. கோமணம் ( முன்னேற்றப்பதிப்பகம் ) .இதில் பழனி பாதயாத்திரை அனுபவங்கள்.இதில் தப்பித்து வரும் காதலர்கள் இருவர் உண்டு. அவர்களை ஆவணக்கொலைக்காகத் தேடும் கும்பலை 

இணைத்து உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

                             கனவு இலக்கிய வட்டம்
---------------------------------------------------------------------
                    நூல்கள் வெளியீடு / அறிமுகம்




கனவு இலக்கிய வட்டம் “ அக்டோபர் மாதக் கூட்டம்  பாண்டியன்நகர் அம்மா உணவகம் அருகிலான அலுவலகத்தில் வியாழன் அன்று மாலை நடைபெற்றது. தலைவர் கலாமணி கணேசன்  தலைமை  தாங்கினார்

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல் “ என்ற நூலை தமிழறிஞர் சொக்கலிங்கம் வெளியிட சமூக ஆர்வலர்   மோகன்குமார் பெற்றுக்கொண்டார்.இந்த நூலை  பேரா. முனைவர் த .தமிழரசி எழுதியுள்ளார். இவர் கோவை அவனாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மற்றும் சென்னையிலிருந்து வெளிவரும் “ இலக்கியச் சோலை “ மாத இதழ் வெளியிட்டுள்ள திருப்பூர் சிறப்பிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் திருப்பூரைச் சார்ந்த பல்வேறு எழுத்தாளர்கள், தொழிலதிபர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் வாழ்வியல் “ என்ற நூலை தஞ்சை அம்மா வெளியீட்டகம் .வெளியிட்டுள்ளது. பக்கங்கள் 210 விலை ரூ 200.

இக்கூட்டத்தில் சுப்ரபாரதிமணியன் பேசுகையில் : “ படைப்பிலக்கியம் என்றைக்கும் குறிப்பிட்டவர்களாலேயே வாசிக்கப்படுவது. அதிலும் மொழி சார்ந்த இலக்கியத் துறைமாணவர்களால்அதிகம் வாசிக்கப்படுகிறது. அதை மீறிய  பொது எழுத்து வாசிப்பு சாதாரண எழுத்துக்களாக உள்ளன. பரபரப்பு உலகத்தில் சரியான தீனி அது. இப்போதைய தீனி மசாலா கலந்த உடனடி  சுவை கொண்டது. இலக்கிய வாசிப்பிற்கு ஆட்களைக் கண்டடைவது  குதிரைக்கொம்புதான் . ஆனால் இலக்கியம் எப்போதும் காலத்தின் கண்ணாடியாக விளங்குவது என்றார். விஜயா நன்றி கூறினார்..

வியாழன், 5 அக்டோபர், 2017

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
                    திருப்பூர்  மாவட்டம்


நவம்பர் மாதக்கூட்டம் .5/11/17 மாலை.5 மணி..              பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு                                 (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்


முன்னிலை:  கே.சுப்பராயன் ( Ex MP ), எம்.இரவி.


* நூல்  அறிமுகம்..:  .மார்க்சீய மெய்ஞானம்
  நூல் பற்றி  :   
 தொழிற்சங்கத் தலைவர்   பிஆர் நடராசன்


* உரைகள் : முதல் ( நாவல் ) அனுபவம் :
      கொங்கு நாவலாசிரியர்கள்    
            வா.மு. கோமு ,கோவை இளஞ்சேரல்

* உரைகள் : பெண் படைப்பு :
 கோவை அகிலா *  பொள்ளாச்சி செங்கவின்


* : மாற்றுக்கலாச்சாரம் எது
உரைகள்  :சு.மூர்த்தி, பாண்டிசெல்வம், ஹீலர் மோகன்ராஜ்
( மாற்றுகல்வி, மாற்று மருத்துவம், மாற்று உணவு பற்றி )


 மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள் வருக..
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488

வருக..தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூ



தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
             திருப்பூர் மாவட்டம்   



* அக்டோபர் மாதக்கூட்டம் .1/10/17 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம்., பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது

தலைமை : வங்கி சண்முகம்
சிறப்புரை : தோழர் ஜீவ பாரதி ( மேன்மை இலக்கிய இதழின் ஆசிரியர் –திரைப்பட பாடலாசிரியர்  சென்னை )  வாழ்வும் இலக்கியமும்  “ என்றத் தலைப்பில் உரையாற்றினார்.

ஜீவபாரதி  உரையில்: பாடல்கள் மனிதனின் ஆன்மாவின் வெளிப்பாடுகள்.குடும்பத்தில் உள்ளோர்களுடன் பாடல்கள், விடுகதைகள், உரையாடல்கள் தொடரும்போது மன நெகிழ்வு ஏற்படும் வாய்ப்புகள் இன்று குறைந்து விட்டன. பாடல்களை வணிகம், திரைப்பட நோக்கமின்றி பாடும், பயிற்சி செய்யும் இளைஞர்கள் குறைந்து விட்டார்கள். பாடல்கள் மூலம் மக்களின் மனதை படைப்பாளிகள்   விரைவில் சென்றடையலாம்.


               * நூல்  அறிமுகம்..:  . காரல்மார்க்ஸ் 200-  காரல்மார்க்ஸ் வாழ்வும் பணியும் தா.பாண்டியன் எழுதிய நூல் – அறிமுகம் எம். இரவி ( திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூ. கட்சித்தலைவர் ) செய்து விரிவான உரை நிகழ்த்தினார் *
 பெண் படைப்பு  குறித்து   சிவகாமி, கனல்மதி, ஆகியோர் உரைகள் நிகழ்த்தினர் *

 மற்றும் கவிஞர் ஜோதியின்  கவிதைகள் வாசிப்பும் நடந்தது.பங்கேற்பாளர்கள் .கருத்துரைகள் வழங்கினர். தொழிற்சங்கத்தலைவர்கள், இலக்கிய வாசகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கே.கோவிந்தசாமி நன்றி கூறினார்...
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488




திருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “ சூழல் அறம் “


திருப்பூர் குமரன் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “ சூழல் அறம் “ என்றத் தலைப்பில் கருத்தரங்கம் புதன் அன்று  நடைபெற்றது. பேரா. கண்ணகி ( தமிழ்த்துறைத்தலைவர் ) தலைமை வகித்து திருப்பூர் குமரன் பிறந்த தினத்தையொட்டி குமரன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். முன்னதாக அவரின் படத்திற்கு மாலை அணிவித்து நினைவு கூறப்பட்டது.


கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் “ சூழல் அறம் “ – சுற்றுச்சூழலும் உணவும் என்றத் தலைப்பில் பேசினார் . அப்போது இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும், உடல் நலமும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவரின் பேச்சில்:
இளைய தலைமுறையினரை பாதிக்கும் துரித உணவும் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. துரித, ஜங்க் உணவுகள் உடல் ரீதியான பாதிப்புகளையும், உளவியல் பாதிப்புகளையும் தொடர்ந்து தருகின்றன. மூளையும், நாக்கும் அதே வகை சுவை உணவை தொடர்ந்து வேண்டுகின்றன. நல்ல சுவைக்காகச் சேர்க்கப்படும் அதிக அளவிலான ரசாயன உப்பு, செயற்கை இனிப்பு, செயற்கை நார்சத்து, ரசாயன கலவைகள், கொழுப்பு வகைகள் என்று அவை உணவில் கலந்து விட்டன. இவ்வகை அதீத சுவைப் பொருட்கள் ரத்தத்தில் குளுகோசின் அளவைக் கூட்டியும் குறைத்தும் விளையாட்டு காட்டுவதுண்டு. இது மன அழுத்தம், மனச் சிதைவிற்கும் உடல் உபாதை மீறி கொண்டு செல்கிறது. இவ்வகை உணவுகளைத் தொடர்ந்து உண்ணும் ஒருவர் மிக எளிதாக சக்கரை நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்.
            பெரும் சந்தையும், வணிக அம்சங்களும் கொண்ட இவ்வகை உணவு பரிமாறலில் பல நூற்றாண்டின் தமிழர்களின் வாழ்வியல் முற்றிலும் மறுக்கப்பட்டு வருவதை காண இயலும். தமிழகத்தின் பண்டைய ஐவகை நிலப் பிரிவில் குறிஞ்சி (கனி, கிழங்கு, தேன், தினை, விலங்குகளின் ஊன்), முல்லை (பால், தயிர், நெய்), ஆட்டிறைச்சி சோளம்), மருதம் (நெல்லரிசி, வாழைப்பழம் ஆடு கோழி இறைச்சி, பத நீர், கள்), நெய்தல் (மீன், ஆமை, நண்டு இறால்) குறிஞ்சி (தேன்), முல்லை (பால் நெய்). பாலை இவற்றை விற்கும் சந்தையானது.ஆகியவற்றில் கிடைத்த வெவ்வேறு பொருட்கள் மக்களுக்கு தினசரி உணவாகவும், இவற்றை பண்டமாற்றாக்கி வேறு உணவுகள் பெறவும் ஏதுவாகின.
            தொழிலுக்கு தகுந்தபடியும், வருமானம், பருவ காலத்திற்கு ஏற்பவும் உணவு முறைகளை தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். வெக்கை காலத்தில் தண்ணீர் கஞ்சி, குளிர் காலத்தில் சுடு சோறு கம்பு, களி உணவுகள் என்றும் வழக்கத்திலிருந்தது. தங்களுக்கு கிடைக்கும் இளநீர் நுங்கு மாம்பழம், கொய்யா ஆகியவற்றை சுலபமாக எடுத்துக் கொண்டனர். சமைக்காத சத்துள்ள உணவுகள் தொடர்ந்து கிடைக்க வழி இருந்தது. உணவை சமைக்க ஆரம்பித்த பின் அவை வெகு சுவையாகவும், எளிதில் செரிக்கும் தன்மையும் கொண்டிருந்ததால் சமையல் கலை என்பது வளர்ந்தது. சமையல் கலை இன்று ஒரு வகைப் படிப்பாகவும் வளர்ந்து விட்டது. சிறு நகரங்களின் உணவு விடுதிகள், பள்ளி மாணவர் விடுதிகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவுக் கூடங்களில் கூட இவ்வகை படிப்பு படித்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சமையல் கலை சார்ந்த படிப்புகளும், கல்வி நிறுவனங்களும் வளர்ந்து அத்துறையிலும் வேலையில்லாத பட்டதாரிகளை உருவாக்கி விட்டது. பரோட்டா, பிரியாணி, குஸ்கா, பிரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் என்று தமிழ்ப் பெயர்களற்று உணவுப் பண்டங்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. தினசரி சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட மாற்று உணவுகளை தேடிப் போனான் தமிழன். ஆனால் இன்று நமது பாரம்பரிய உணவுகளை மாற்று உணவு என்று மீண்டும் தேடி வர வேண்டியுள்ளது. நம்மிடம் நோய் தீர்க்கும் உணவுப் பொருட்கள் இருந்தன. இன்று நோய் கொண்டு வரும் உணவுப் பொருளைத் தேடுவதில் சுகம் கண்டு கொண்டான். பெண்கள் தங்களின் பணி நேரம் தவிர சமையலில் அதிக நேரம் செலுத்த இயலாமல் துரித வகை உணவு பழக்கங்களில் முடங்கிப் போய்விடுகிறவர்களாக இருக்கிறார்கள். நோய்களுக்கும் வகை வகையான மருந்துகளைத் தேடிப் போக வேண்டியிருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, சுடுக்காய், சித்தரத்தை, மதுரம், கிராம்பு, வெட்டி வேர் வசம்பு, இஞ்சி, வேம்பு, பூண்டு, மஞ்சள் என்றும் மணத் தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, முங்கைக் கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, புதினா, மல்லி, கீழா நெல்லி என்று வெவ்வேறு கீரை வகைகளும் சாதாரண உணவில் சேர்க்கப்படும் பொழுது நோய்க்கு மருந்தாகும். இன்று மருந்தை தனியாக தேடி நிறைய செலவு செய்து உடம்பை மோசமான இயந்திரமாக்க வேண்டியிருக்கிறது.
            வயிற்றைக் குப்பையாக்கும் குப்பை தீனிப் பழக்கம் இன்றைய இயந்திர வாழ்க்கையின் நெருக்கடியால் தவிர்க்க இயலாமல் வந்து சேர்ந்து விட்டாலும் நுகர்வு கலாச்சார உணவுப் பண்பாடு ரத்தத்தில் கலந்து விட்டதை அறுவை சிகிச்சை மூலமே தவிர்க்க இயலும் நிலைக்கு வந்தாகி விட்டது.  இதை கவனத்தில் படிக்கும் மாணவ மாணவியர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். “ என்றார் .
பேராசிரியைகள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் நொய்யலைத் தூய்மையாக்கும் பணி
---------------------------------

நொய்யலைத் தூய்மையாக்கும் பணி குமரன் பிறந்த நாளான  அக்டோபர் 4ம்தேதி 2017 - திருப்பூரில் நொய்யல் கரையில் தொழில் துறையினர் சார்பில் ஆரம்பிக்கப்பட்டது.
  நொய்யல் கழிவுகளின் இருப்பிடமாகவே மாறிவிட்ட்து. சாய்ம் மற்றும் சாக்கடைக்கழிவுகள் சாதாரணமாய் கலக்கிறது. சமீபத்திய வெள்ளப்பெருக்கின் போது  அளவுக்கு அதிகமான நெகிழிக்கழிவுகள் மலைபோல் குவிந்து விட்டன.தி