சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 24 செப்டம்பர், 2013

பசுமை கட்சிகள்

பசுமை கட்சிகள்


    ஒவ்வொரு பத்தாண்டுகளும் அரசியல் பார்வை மாறுதலை முன் வைப்பவை. ஒவ்வொரு இருபத்தைந்தாண்டும் புதிய தலைமுறை உலகப் பார்வையூடே புதிய கண்ணோட்டத்திற்கு வந்தடைவதுண்டு.
சூழலியல் குறித்த கவனம் கடந்த 25 ஆண்டுகளில் முக்கியத்துவம் வாய்ந்தாக வளர்ந்திருக்கிறது. உற்பத்தித் திறனும் ஏற்றுமதியும் சூழலியலை நாசமாக்கியும், அது பற்றிய நம்பிக்கைகள் பொய்த்துப் போகிற சூழலில் நவீன சூழலியல் புதுவகைக் கருத்தாக்கமாக உருப்பெற்றது.

    இயற்கை மனிதனோடு சமன்பாட்டில் எப்போதும் இருந்து வருகிறது. எல்லா உயிர்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து பின்னி பல்வகை உயிர்களின் தொடர்ந்த இயக்கத்தைத் தக்க வைத்திருக்கிறது. மனிதனின் சமூகப் பொருளாதாரம் இயற்கையை நிராகரித்தத் தன்மையாலும், சுயநலத்தாலும் சீரழிந்து நிற்கிறது. பூமியில் உள்ள பிற உயிரினங்கள் மீது அதிகாரம் செலுத்துவது என்பது இயற்கையை அழிக்கிறது. இயற்கையின் சீரழிவுகளுக்கு ஒட்டு மொத்த மனித சமூகமும் பொறுப்பாகும். மனிதன் இயற்கையோடு சேர்ந்து சம உறவு நீடிப்பதற்கான காரியங்களில் ஈடுபட சூழலியல் விரும்புகிறது. இயற்கை சுமூகமாக இருந்தாலும், சுமூகமாக இருக்க விரும்பாவிட்டாலும் அதன் போக்கிலேயே தீர்வு காண்பது சூழலியலை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாகும்.

    உலக அளவிலான சூழலிய பாதுகாப்பு இயக்கங்களில் கல்வி முறையைக் காரணியாகக் கொண்டதும், மத நம்பிக்கையின் மீதானதுமானவை முக்கியப் போக்குகளை நிலை பெற்றிருக்கிறது. ஜனநாயகம், சோசலிசம், பெண்ணுரிமை, தொழிலாளர் உரிமைகளுக்கான இயக்கங்கள் போல சூழலியல் இயக்கங்கள் பெரிதளவில் இன்றும் இல்லை. மேற்சொன்ன இயக்கங்களின் தாக்கத்தை சூழலியல் அமைப்புகள் பெற்றிருக்கின்றன. மேற்படி இயக்கங்களிலிருந்து சூழலிய தாக்கம் பெற்று உலகளாவிய சூழலிய இயக்கமாக சற்று மாறியும் வந்துள்ளது.

    ஆறுகளும், நீரும், காட்டுப் பகுதிகளும் முக்யத்துவம் வாய்ந்தவையாக இருப்பதால் அவற்றுக்கான போராட்டங்கள் இந்திய சூழலில் சூழலியல் இயக்கங்களை அங்கங்கே உருவாக்கியிருக்கிறது. காடுகளின் வளர்ச்சிப் போக்கில் சாதாரண மக்களுக்கான வாழ்வாதரமும் அடங்கியிருப்பதைத் தெளிவாக்குகிறது. ஒவ்வொ மலையும், நதியும் அவனுக்கு தெய்வமே விவசாயிகள், ஆதிவாசிகளுக்கு வன நிலங்களை பயன்பாட்டிற்கு அளிப்பதன் மூலம் சுமூகமான சூழலைக் கொண்டு வர முடியும் இயற்கைச் செல்வங்களை சமூகப்பார்வையுடனும், அரசியல் செல்வாக்குடனும் முறையாகப் பேணுவதால் இயற்கையை முறையில்லாமல் சுரண்டி அழிவின் உச்சத்திற்கு கொண்டு சென்ற சந்தர்ப்பங்கள் நிறைய அமைந்திருக்கின்றன. வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் அனைத்து வகை பெண்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு வளர்ச்சி என்பது பெண்களுக்கு எதிராக அமைந்திருந்து அவர்களைச் சுரண்டவும் அவர்களின் உழைப்பை பன்படங்காக்கியிருப்பதும் தெரிகிறது. பெண்களின் தலைமையிலான பல்வேறு சூழலியல் இயக்கங்கள் இன்று முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

    நுகர்வு கலாச்சாரம் காடுகளைக் காக்க வேண்டும் என்ற குரலை உரத்து ஒலித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது. காடுகள் சுற்றுலாவிற்கான இடங்களாய் பிரதானப்படுத்தப்பட்டதால் நுகர்வு கலாச்சாரமும் காடுகள் மீதான அக்கறையை விரிவுபடுத்தியுள்ளது. மக்களின் வாழ்வாதாரமும் வாழ்வியலும் சூழலியல் பிரச்னைகளைக் கொண்டு வருகின்றன. காடுகள் அழிப்பு பெரும் அணைகள் கட்டப்படல், விவசாயம் கூலிகளின் இடப் பெயர்வு போன்றவை சூழலியல் போராட்டங்களாக வடிவெடுத்திருக்கிறது. சூழலியல் இயக்கத்தில் அக்கறை கொண்டிருப்பவர்களின் பார்வை என்பது அரசின் தொழில், விரிவாக்கம், பெரு நகர் ஆதரவுக் கொள்கை மீதான விமர்சனக் கண்ணோட்டமாக நவீனமாகியுள்ளது. இந்திய அரசியலில் சுற்றுச் சூழலியலாளர்களின் செயல் உணர்வு முதலாளித்துவ, கார்பரேட் சக்திகளால் திணறடிக்கப்படுகிறது.

    பின் நவீனத்துவ அரசியல் சூழலில் பிற இயக்கங்கள் போல பசுமைக் கட்சிகள் விரிவாகாததும் விவாத்த்திற்கு வருகிறது. நவீன நாகரீகம் தனது ஆசைகளை முடிவில்லாமல் பெருக்கிக் கொண்டே போகிறது. நவீன வாழ்க்கை முறையும் நுகர்வு கலாச்சாரமும் சுய ஆசைகளை வெகுவாகக் கட்டுப்படுத்தி இந்த உலகம் மனிதன் வாழத் தேவையானதை தரும்போது பேராசைப்படாமல் இருக்க உபதேசங்களும் தேவையாக இருக்கிறது. பெருமளவு காடுகள் அழிப்பு, மலைப்பகுதிகளை கனிம வளங்களுக்காகச் சூறையாடுதல், ஆறுகளின் மாசுபாடு போன்றவை சூழலியல் பேரழிவுகளைத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கின்றன. இது சாதாரண விளிம்பு நிலை மக்களை வஞ்சிக்கிறது. இந்த விளிம்பு நிலை மக்கள் தங்களின் பொருளாதாரத் தேவைகளுக்காக இயற்கையை பெருமளவில் நம்பியிருப்பவர்கள். மேற்கத்திய நாடுகள் இயற்கை ஆற்றலை பேரழிவு எனும் வகையில் சீரழிக்காமல், சந்தையில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தாமல் தங்கள் தொழில் மயத்தை விரிவுபடுத்தியுள்ளன. ஆனால் இந்தியாவில் தொழில் வளர்ச்சி என்ற பெயரால் இயற்கை வளமும், மக்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது. இந்தியாவில் சூழலியல் சார்ந்த மக்கள் என்றும், நகரவாசிகள் என்ற வகைப்படுத்தலும் பிளவும் பெரும் பின்னடைவுகளை உருவாக்கி வருகிறது. அரசியல் அதிகாரம், முடிவெடுக்கும் அதிகாரம் நகர மக்களிடம் குவிந்து, வளர்ச்சியின் பெயரால் சூழல் சார்ந்த மக்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து விரட்டி விட்டது. நுகர்வு கலாச்சாரமும், அதிகாரமும் சமூக வேறுபாடுகளை அதிகரிக்கச் செய்து கொண்டே இருக்கிறது.

    இந்தச் சூழலில் சூழலியல் நடவடிக்கைகளை அமுல்படுத்துவதும் உலகமயத்திற்கு எதிரான இயக்கங்களும் மிகவும் அவசியமாகிறது. அடிப்படைக் கல்வி, இலவசக் கல்வி, எளிய மருத்துவ வசதி சேவைகள் தருவதன் மூலம் சுமூகமாக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் இன்றைய அதிகாரத்துவத்தின் சமூகக் கொள்கைகளால் புறக்கணிக்கப்படுகின்றன. எனவேதான் மிகவும் எளிமையாக தீர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் பெரும் சூழலியல் பிரச்னைகளாக விரிவடைந்துள்ளனர். தனி மனிதர்களின் கற்பனாவாத நம்பிக்கைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. நுகர்வின் மீது மாற்றங்களை யோசிக்கிற போது இந்த கற்பனாவாத நம்பிக்கைகள் இன்னும் பெருகும். இந்த கற்பனாவாத நம்பிக்கைகள் பசுமை இயக்கங்களை அரசியல் இயக்கங்களாக மாற்றும் வல்லமையை நோக்கி பிரச்னைகளை தள்ளிக் கொண்டிருக்கின்றன. பணபலமும், அதிகாரமும் இல்லாத எந்த இயக்கமும் கற்பனாவாதமோ.... விளிம்பு நிலை மக்கள், தலித்துகள், பெண்களுக்கான தனிக்கட்சியின் நிலை பெற்றிருக்கிற இந்திய சூழலில் மேற்கத்திய நாடுகள் போல் பசுமைக் கட்சிகள் இன்றைய சூழலில் மிகவும் அவசியம். அதற்கான சூழலும் கட்டாயமும் இன்றுள்ளது. சூழலியலை முன் வைக்கும் பிற கட்சிகளோ, விவசாயிகளின் கட்சிகளோ பசுமைக் கட்சிக்கு மாற்றாக இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன்