சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

சனி, 22 ஏப்ரல், 2017

நொய்யல் அறக்கட்டளை : வாசிப்பு முகாம்
உரையில் : சிறுகதை எழுத்தாளர் எஸ் ஏ காதர் , கவிஞர் ஜோதி, சைராபானு, சுப்ரபாரதிமணியன், கல்வியாளர்கள் மோகனப்ரியா, கிருஷ்ணகுமாரி, மருத்துவர்  முத்துச்சாமி
இடம் பெறும் நூல்கள்:  சுப்ரபாரதிமணியனின்
1. சிவப்புப் பட்டியல் ( அழிந்து வரும் உயிரினங்கள் பற்றி)
2. கதை சொல்லும் கலை
இடம் : தாய்த்தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர் ., திருப்பூர்

நாள் : 24/4/17 காலை 10 மணி முதல்.
கனவு இலக்கிய வட்டம் - உலகப் புத்தக தினம்  “
----------------------------------------------------------------------
* கனவு இலக்கிய வட்டம்   சார்பில் - உலகப் புத்தக தினம்  “
 23//4/17 ஞாயிறு மாலை 6 மணி :
சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நக்ர், திருப்பூர்
சமூகத்தை மாற்றும் நூல்கள் “ : உரைகள்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கவிஞர்கள் ஜோதி, பைரவராஜா, ஓவியர் விஜி சிவராமன், மோகன்ராஜ், கலாமணி, வளர்மதி, சைராபானு, விஜயா மற்றும் வாசகர்கள்.
வருக..

வியாழன், 20 ஏப்ரல், 2017

மரணம் : சுப்ரபாரதிமணியன்

    நாற்காலியிலிருந்து எழ முயன்றவருக்கு தலை சுற்றுவது போல் கிறுகிறுத்தது.அப்படியே படுத்துக்கிடக்கலாம் என்று தோன்றியது.மரணம் வாசலில் வந்து காத்திருப்பதாக பலர் எழுதுவார்கள் . சொல்வார்கள். தான் மரணத்தை எதிர்பார்த்துதான் இருக்கிறேனா என்று அவர் சிலசமயங்களில் சொல்லிக் கொள்வார்.
  கொஞ்ச நேரத்திற்கு முன் எதிர்த்த வீட்டுப் பெண் ஓடிவந்தாள். எட்டாம் வகுப்புப் படிக்கிறாள். ஒரு மதுக்கிடங்கு தீப்பற்றி எரிகிறதாம்.அந்த மதுக்கிடங்கு அவர்கள் பள்ளிக்கு அருகாமையில் இருக்கிறது. தீப்பற்றிய போது பலர் உள்ளே இருந்திருக்கிறார்கள்.  அவர்கள் என்னவாகியிருப்பார்கள். பள்ளிக்கு இன்றைக்கு விடுமுறை உண்டா. அவர்களின் கருகிய பிணத்தை பார்த்தால் பயம் வருமே.. எப்படி தவிர்க்கலாம் என்று படபடப்புடன் கேட்டாள். அவருக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை. அவள் பதிலை எதிர்பார்க்காதவள் போல் விருட்டென்று சென்று விட்டாள். பள்ளிக்கு இன்றைக்கு விடுமுறையா என்பதில் அவளின் அக்கறை இருந்திருக்கும் என்று நினைத்தார். அவரின் அக்கறை கறிக்கட்டையாய் போய் விட்ட மனிதர்களைப் பற்றி என்பதாய் நினைத்துக் கொண்டார்.
                  மேற்கு சன்னலின் ஓரத்தில் வந்து மின்னலென சென்ற பறவை என்னவாக இருக்கும் என்ற யோசனையில் மூழ்கியிருந்தார் மணியன். முந்தா நாள் பப்பாளி மரத்தடியில் ஒரு முட்டை கிடந்தது. காக்கை முட்டையாக இருக்கலாம். சின்னதாகத்தான் இருந்தது. ஆனால் அதன் ஓடு ரொம்பவும் மெல்லியதாக இருந்தததால் குழைந்து சிதைந்தபடியே  கிடந்தது. இவ்வளவு மெல்லிசான ஓட்டால் முட்டை சிதைந்து விட்டதா.. இல்லை கொத்தி அதுவே சிதைந்து விட்டதா.. என்பது யோசிப்பிற்குள் வந்தது மணியனுக்கு.
     தன் உடம்பு கூட இப்படித்தான் ஆகிவிட்டது. ஒரு சிதைந்து போன முட்டை போல கலகலத்துவிட்டது. ஓடு மெல்லிசானதால் சிதைந்தது போல உடம்பு ஹோட்டல் சாப்பாடு, அலைச்சல் என்று மெலிந்து விட்டது. உடம்பினுள் இருக்கும் பாகங்களெல்லாம் லொடலொடவென ஆடுவது போலிருந்தது. இந்த உடம்பை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்வி பிரமாண்டமாய் நின்றது.
     வெள்ளியங்கிரி மலைக்குப் போன வெங்கடாசலம் காணாமல் போய்விட்டர். சித்ரா பவுர்ணமியில் மலையேறுகிறேன் என்று போனவர் திரும்பி வரவில்லை. எங்கு தவறி வீழ்ந்திருப்பார் என்று தெரியவில்லை. கைபேசியும் ஸ்விட்ச் ஆப்நிலைக்கு காணாமல் போன அடுத்த நாளே வந்துவிட்டது. பிளாஸ்டிக்கைத் தவீர்ப்பீர் என்ற வாசகங்களுடன் அலைந்து திரிந்த ஓசைபணியாளர்களுக்கு கூட எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினரிடம் சொல்லிவிட்டனர். அதென்ன தற்கொலையா.. இருக்காது. அப்புறம் காணாமல் போனது எதேச்சையானதா.. தான் காணாமல் போனால் பழியைப் போட்டு விட பல காரணங்கள் இருந்தன. காணாமல் போகச் செய்யும் சதியில் காவல்துறை, முதலாளி வர்க்கம் என்று எதையாவது கற்பித்து விடலாம். ஆனால் வெங்கடாசலத்திற்கு அப்படியெதுவும் இல்லை. நல்ல லெளகீகவாதி. குடும்பத்திற்கென்று இருக்கும் தீயாகதீபம் போலானவர். அவர் காணாமல் போனது ஓடு சிதைந்து கூழாகிப் போன ஏதோ பறவையின் முட்டையை ஞாபகப்படுத்தியது அவருக்கு. அவர் கழுத்தில் புலியின் பல்லும், நகமும் கோர்த்து சிறு மாலையாக்கிப் போட்டிருப்பார். அது அவரை நெடுநாள் வாழ வைக்கும் என்று திடமாக நம்பினார். இதுக்கு சிட்டு குருவி லேகியம் சாப்புடலாங்கஎன்று அவர் மனைவியும் கிண்டல் செய்வாள்.இப்போதுதா சிட்டுக் குருவிக் கொறஞ்சு போச்சே. செல்போன் டவர் அவற்றை ஒழித்து விட்டதே. அவை அடைக்கலம் புக வீடுகளில் ஓடுகள் கூட இல்லையே.
மேசையின் மேல் விரிந்து கிடந்தது அந்த கவிதைப்புத்தகம்.
பஞ்சம் பிழைக்கத்
 தஞ்சை நோக்கி ..
 பழசானது சொலவடை.
இப்போது புழக்கத்தில்
தேகம் வளர்க்கத்
 திருப்பூர் நோக்கி..” ( மருதத்திணை-மீனாசுந்தர்  )
கவிதையெல்லாம் படிக்கிற பழக்கம் அவருக்கிலை. பழையபுத்தகக் கடையில் பழையதினசரி தாள்கள் போடும் போது  கண்ணீல் பட்ட இரண்டு கவிதை நூல்களை விலையில்லாமல் எடுத்து வந்திருந்தார். இலவசமாய் புத்தகம் படிப்பது நேற்று உறுத்தியது அவரை.
     அவரின் உடம்பின் வலது பகுதியிலிருந்து உயிரை ஊடுருவும் வலி பரவியது. வலது பகுதியை அறுத்தெடுத்து விட்ட மாதிரி இருந்தது. பட்டம்விடும் திருவிழாக்களில் இடையில் அகப்படும் பறவைகள் உடல் இப்படித்தான் அறுபட்டு இரத்தம் கசிய கிடக்கும். அதுபோல் எந்த மாஞ்சா கயிறு தன் உடம்பை அறுத்துக் கொண்டிருக்கிறது என்பது அவருக்கு யோசனையாக இருந்தது. ஜன்னல் பக்கமிருந்து ஏதோ சரிந்து விழுந்த சப்தம் கேட்டு மெல்ல எழுந்தார். சிறுமூங்கில் குச்சிகள் ஜன்னலின் ஓரம் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. உலக தண்ணீர் நான் ஊர்வலத்தின் போது அட்டைகள் கட்ட ஆல்பிரட் கொண்டு  வந்த மூங்கில் குச்சிகள் அவை. அவைகளை  காற்றோ, ஏதாவது பறவையின் இடைஞ்சலோ  சரிய வைத்திருக்கும் அவையென்ன ஈட்டிகளா.. போரில் மனிதர்களை, மிருகங்களைக் கொன்ற ஈட்டிகளா. அந்த முனைகளில் ஏதாவது மாமிசம் ஒட்டிக் கொண்டிருக்கிறதென்று ஏதாவது பருந்து வந்து போயிருக்குமா. பருந்தைப் பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டது. சாய்ந்து கிடக்கும் மூங்கில் குச்சிகளின் சலசலப்பு சப்தம் இன்னும் சற்றே கலவரமாக்கியது அவரை. ஏதாவது பூனை எலியைத் தேடி அலைகிறதா. பூனையைப் பார்த்து தேடி அலைகிறதா. பூனையைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது என்பதைச் சொல்லிக் கொண்டார். தேனம்மையைப் பார்த்தும் ரொம்ப நாளாகியிருந்தது அவருக்கு.
               சட்டென வலதுபக்க மூலை சன்னலில்  வெளிப்பட்டு மறைந்து விட்டப் பூனையின் வாயில் ஏதோ பறவை இருப்பதாகப்பட்டது.அதன் வாயில் ரத்தக்கறையும் இருந்த்தாகப்பட்ட்து. இது நிஜமா .. பிரமையா.. நாற்காலியிலிருந்து எழ் முயன்றவருக்கு தலை சுற்றுவது போல் கிறுகிறுத்தது.
 பறவை அந்தப்பூனையின் வாயிலிலிருந்து தப்பித்திருக்கலாம். எப்படி மாட்டிக் கொண்டது. தான் கொஞ்ச நேரம் முன் ரசித்தது குரூரக்காட்சியாக மீண்டும் நிகழ்ந்தேறியிருப்பது பற்றி யோசித்தார்,
       இந்த முறை ஏதோ பறவையொன்று இடது பக்கத்திலிருந்து  சன்னலில்  சர்ரேலென வெளியேறிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது..அது பறவையா, பூனையா என்றக் குழப்பம் சட்டென வந்து தலையை இன்னும் கிறுகிறுக்கச் செய்தது.
பறவையா.. பூனையா.. மரணமா .. எழுந்து நிற்க முயற்சிப்பதா..
அப்படியே படுத்துக்கிடக்கலாம்.
படுத்து கிடக்க..
படுத்து..
படு..


கனவு இலக்கிய வட்டம் - உலகப் புத்தக தினம்  “
----------------------------------------------------------------------
* கனவு இலக்கிய வட்டம்   சார்பில் - உலகப் புத்தக தினம்  “
 23//4/17 ஞாயிறு மாலை 6 மணி :
சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நக்ர், திருப்பூர்
சமூகத்தை மாற்றும் நூல்கள் “ : உரைகள்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கவிஞர்கள் ஜோதி, பைரவராஜா, ஓவியர் விஜி சிவராமன், மோகன்ராஜ், கலாமணி, வளர்மதி, சைராபானு, விஜயா மற்றும் வாசகர்கள்.
வருக..

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

.Kanavu  Film Society
'Iranian Film Festival' ( April 14,15,16 )
15 - 04-2017
Schedule :
1. 10.00 AM.
Melbourne | 2014 | 1h 31min | Directed by : Nima Javidi.
The Paternal House | 2012 | 1h 37min | Directed by : Kianoush Ayari.
2. 1.00 PM
3. 4.00 PM.

I'm Not Angry! | 2014 | Directed by Reza Dormishian.
Place : K'SIRS School auditorium,
Chinnavedampatti.

Near Kowmara Madam.

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

சிறுகதை : புதுப்புனல் இதழில்..
மணல்
                          : சுப்ரபாரதிமணியன்
            ”இந்த வீடுதானா.. ஆத்துமணலுக்காக செத்துபோன பையன் இருந்த வீடுன்னு சொல்லியிருந்தா இத்தனை அலைச்சல் இருக்காதுஆட்டோக்காரன் சற்று அலுப்புடன் வீதியில் நிறைந்திருந்த புழுதியைப் பார்த்தான். மணியனின் பார்வை இரண்டாம் மாடியில் குத்தியிருந்தது. கண்களின் கீழ் பூத்த வியர்வை சிறு தண்ணீர் பள்ளங்களாகியிருந்தது. உடம்பை ஒரு சிரமத்துடன் நகர்த்தி ஆட்டோவை விட்டு வெளியேறினார். அன்பு இல்லம்என்ற பெயர் அழுத்தமான நீல நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது.
 “பத்து நாளா இங்க வர்ரதுக்கு போலீஸ் தொந்தரவு இருந்துச்சு. யாரையும் இந்த பில்டிங் பக்கமே உடலே. எங்க போகணும்.
செத்துப்போன பையன் இருந்த ரூமுக்கு..
அது ரெண்டாம் மாடியாச்சே.
ஆமா.. அதெப் பாக்கணும்ன்னு வந்தேன்.
போயிருவிங்களா.
மணியனின் இயலாமையை அவர் முகம் காட்டிக் கொடுத்து துரோகம் செய்துவிட்டது போலிருக்கிறது. இல்லையென்றால் இப்படியொரு வார்த்தை வந்திருக்காது.
பதினெட்டு படியிருக்குமா..
ரெண்டாவது மாடி அதிகமாகவே இருக்கும்
பதினெட்டு படி என்று ஏன் கேட்டேன். ஏதோ யாத்திரை போகிற எண்ணத்தில் அந்த வார்த்தைகள் வந்து விட்டதா.. இரண்டு மாடிகளைக் கடந்து போயிட முடியுமா.. சின்ன ராமசாமி இப்படித்தான் பைபாஸ் என்று அறுவை சிகிச்சை செய்தவர் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு வாடகை வாங்கச் சென்றவருக்கு சிரமம் ஏற்பட்டு செத்துப் போனார்.
 கொஞ்சம் இனிப்பு நீர் வியாதி இருக்கிறது. அதற்கு மாத்திரை போட்டுக் கொண்டிருக்கிறார். நாலு வருடமாய் . இப்போது நிறைய மாத்திரைகள் சேர்ந்து விட்டன.
     இரண்டாம் மாடியில் அவரின் மூச்சிரைப்பை கவனித்த ஒரு முதியவள் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை கையில் எடுத்து திமுதிமுவென்று வந்தாள். வாயைத் திறந்த குருவி ஆகாயம் பார்ப்பது போல மணியன் வாயைத் திறந்து மூச்சு விட்டுக் கொண்டார்.மார்புக்கூடு மேலே கீழே என்று ஏறி இறங்கி இம்சை செய்தது. அவரின் சட்டை வியர்வை மணம் கொஞ்சம் தூரம் கடந்து போனது.
செத்துப் போன பையன் எங்கிருந்தான்
மணலாத்திலெ செத்துப் போனவனா..
ஆமா.
நீங்க உக்கார்ந்திருக்கற எடத்துக்கு எதிர் ரூம்தா. எதுக்கு..
பாக்கணும்ன்னு வந்தன்
சொந்தக்காரங்களா
ஆமா..
சொந்தக்காரங்கன்னா அவங்க வீட்டுக்கல்ல எழவு கேட்கப் போயிருக்கணும்..
அவன் இருந்த ரூமைப் பாக்கணும்ன்னு ஆசை வந்துச்சு..
பேருந்து பிடித்து ஒன்றரை மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு வந்து சேர்ந்திருந்தார். தெருவின் பெயரை மட்டும் சொன்னதால் ஆட்டோக்காரன் அலைந்து திரிந்தான்.
பாக்கணும்மா.. நீங்க யாரு.
இந்த பில்டிங் வாட்ச்மேன்னோட வீட்டுக்காரி..
அவர் இல்லியா..
போலீஸ் ஸ்டேசனுக்கு போயிருக்கார்
எதுக்கு..
வந்துட்டு போன்னு சொன்னாங்க. அதுதா..
எதுக்கு..
பையன் செத்தது செத்தான். எங்களுக்கு பெரிய இம்சை..
வீரண்ணண் மணலை அள்ளுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தான். இன்னும் பெரிய அமைப்பு  எதையும் உருவாக்கவில்லை. ஆற்று மணலை அள்ளிக் கொண்டிருந்த லாரி முன் கைகளை விரித்துக் கொண்டு நின்றிருக்கிறான். லாரி ஓட்டுனரும், கூட இருந்த இருவரும் மிரட்டி அவனை தூரத் தள்ளிப் போகச் சொல்லி தள்ளியிருக்கிறார்கள். மணலில் விழுந்தவன் எழுந்து மறுபடியும் லாரி போகாதபடி கைகளை விரித்துக் கொண்டு நின்றிருக்கிறான். லாரி அவனை அடித்து வீழ்த்திக் கொண்டு போய்விட்டது.
தாசில்தார், கலெக்டர், போலீஸ்சுன்னு தட்டிக் கேட்ட  பல பேரை இப்பிடித்தா கொன்னிருக்காங்க. பையனுக்கு விபரம் பத்தாது.. வீணா உசிரக் குடுத்திட்டான்.
ஆர்வந்தா அம்மா.. எதிர்க்கணும்ன்னு எண்ணம் வந்துட்டப்போ குருட்டு தைரியம் சாதாரணமா வந்திரும்..
ரூமைப் பாத்து என்ன பண்ணப் போறீங்க.
 “பாக்கணும்ன்னு தோணுச்சு. அதுதா பஸ் புடுச்சு வந்தேன்.
செரி.. இவ்வளவு தூரம் வந்ததுனால தொறந்து விடறன். பத்து நாளா போலீஸ்காரங்க சீல் வெச்ச மாதிரி மூடி வெச்சிருந்தாங்க. இன்னிக்குத்தா இங்கிருந்து எடுத்துட்டு போன கொஞ்சம் புஸ்தகம், போட்டோன்னு கொண்டு வந்து போட்டுட்டு போனாங்க.. இன்னம் வருவம்ன்னு சொல்லிட்டுப் போனாங்க.
     கட்டில் மேல் விரிக்கப்பட்டிருந்த போர்வை சற்றே அழுக்குத் தனத்துடன் கைவிரலில் பிசுபிசுப்பாய் ஓட்டும் என நினைத்தார். மெல்ல மெத்தையில் உட்கார்ந்து அதைத் தடவிக் கொண்டார். தலையணையின் ஓரம் பிய்ந்து பஞ்சு அழுக்காய் வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அவரது தடவலில் சற்றே பரபரவென்று உடம்பைத் தாண்டிச் சென்றது. அவர் உடம்பு பரபரத்துக் கொண்டது.
பாவம்.. மானாவரி பயிர் பண்ற குடும்பம். பையன் படிச்சு வந்து காப்பாத்துவாங்கன்னு நெனச்சிருப்பாங்க. இப்பிடி அல்பாயுசிலெ போயிட்டான்.
     கட்டிலின் வலது மூலையில் கொஞ்சம் புத்தகங்கள் தாறுமாறாய்  கலைந்து கிடந்தன. அவற்றிலிருந்து அவரின் இடது கால்பட்டு சிதைந்து பழுப்புத் தனத்துடன் வாடை வாசம் கிளம்பியது. கென்சரோ விவாவின் படம் ஒரு புத்தக முகப்பில் தென்பட்டது.
ஆர்வக் கோளாறு போல..
அதிலம்மா.. தீவிரமான பையந்தா..
என்ன  தீவிரமோ.. பெத்தவங்களுக்கு கூட பிரயோஜனமில்லாமெப் போனா..
அப்பிடி அர்த்தம் ஆகாதம்மா. அவன் உயிர் எத்தனை மதிப்புன்னு உலகமே தெரிஞ்சிருக்கு. பெரிய தியாகம்தான்..
தியாகம் சோறு போடுங்களா..
     எழ விருப்பமில்லாதது போல கைகளை மெத்தை மேல் ஊன்றிக் கொண்டு எழுந்தார். வராண்டாவின் இடிந்த கைப்பிடிச் சுவரை தடவிக் கொண்டே நடக்க ஆரம்பித்தார். சொர சொரவென்று அதன் சிமெண்ட் தளம் கைகளை உறுத்தியது. அந்த அம்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பாதவர் மாதிரி  இருந்தது. அவர் சட்டென கிளம்பியது. ஏனோ ஆச்சர்யம் தந்தது போல் முதியவள்  அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வெயிலின் உக்கிரம் அவள்  பார்வையை வேறு பக்கம் திருப்பச் செய்தது.

போராளியின் வாழ்வைவிட மரணம் அதிகமாகச் சாதிக்கும்என்ற முத்துகுமாரின் வரிகளை கென்சரோ விவாவின் படத்தினருகில் எழுதியிருந்ததை அவர் கவனித்திருந்தார்.
என் கண்ணை தோண்டி அமிலம் ஊற்றி, காலை வெட்டி, கையை உடைத்து, குடலை கிழித்து, சதையை அறுத்து, என்னை கொன்று விட்டதாக மார்தட்டும் என் இனிய எதிரியே, நீ அறிவாயா.. போராளியின் வாழ்வை விட மரணம் அதிகமாகச் சாதிக்கும்என்ற முழு வாக்கியத்தையும் மனதில் கொண்டு வந்து பார்த்துக் கொண்டார்.
     கைபேசியில் ஏழெட்டு புதுச் செய்திகள் வந்திருந்தன. தேனம்மை நான்கு முறை அழைத்திருக்கிறாள். அன்பு இல்லம்பார்க்கப் போவதாகச் சொல்லியிருந்தாள் தேனம்மை. அன்பு இல்லத்தில் அவரின் உறவினர் ஒருவரைச் சேர்க்கக் கேட்டிருந்தார். போய் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார். அந்த உறவினர் பெற்றக்குழந்தைகளால் நிராகரிக்கப்பட்டு தனிமையாக்கப்பட்டிருந்தார். தனிமை அவரை தற்கொலைக்குக் கூட தள்ளிக்கொண்டு போக பல சந்தர்ப்பங்கள் அமைந்து விட்டன.
இப்போது  கூட அரைமணி நேரமாய் இருந்த இடம் கூட  இன்னொரு  அன்பு இல்லம்’  என்பது ஞாபகம் வந்தது. இக்கட்டிடத்தில் அன்பு இல்லம்என்ற பெயர் அழுத்தமான நீல நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டார்.

T

திங்கள், 3 ஏப்ரல், 2017

1. கனவும், அசோகமித்திரனும்::
ஜெயமோகன் – ஆனந்த விகடனில்..
------------------------------------------
 1991-ம் ஆண்டில் அசோகமித்திரனுக்கு 60 வயது நிறைவடைந்தது. என் நண்பர் சுப்ரபாரதிமணியன், அன்று `கனவுஎன்னும் சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்தார். நானும் அவரும் திருப்பத்தூரில் அருகருகே குடியிருந்தோம். `அசோகமித்திரனுக்கு ஒரு விமர்சன மலர் கொண்டுவரலாம்என நான் சொன்னேன். என் முயற்சியில் அந்த மலர் மறு ஆண்டு வெளிவந்தது.
அப்போது திருப்பத்தூர் அருகே ஒரு கல்லூரியின் தமிழ் விழாவுக்கு  அசோகமித்திரன் விமர்சன மலரின் சில பிரதிகளை எடுத்துச் சென்றிருந்தேன். அந்தத் தமிழ் விழாவுக்கு வந்தவர்கள், நடத்தியவர்கள் எவருக்கும் அசோகமித்திரன் என்றால் யார் என்றே தெரிந்திருக்கவில்லை. என்னுடைய உறவினரா எனப் பலர் கேட்டனர்..

இதுதான் அசோகமித்திரனுக்கு தமிழ்ச்சூழல் அளித்திருந்த இடம். 1985-ம் ஆண்டில் எனக்குப் பழக்கமான நண்பரான ஆராவமுதன் என்னும் இதழாளர், அசோகமித்திரனின் `வாழ்விலே ஒருமுறைஎன்னும் நூலை வாங்கி எனக்கு அளித்து வாசிக்கும்படிச் சொன்னார்..
( மீதி ஆனந்த விகடன் மார்ச் 27ம்தேதிய இதழ் )2, பழனி பாதயாத்திரை சார்ந்த இந்நாவலில் ஒரு நாத்திகவாதியாகவே நான் பயணித்திருக்கிறேன். மார்க்சீய விஞ்ஞானம் தந்த வெளிச்சம் கடந்த 45 ஆண்டுகளாக சரியான வெளிச்சம் காட்டியிருக்கிறது, இன்றைய சூழலில் பகுத்தறிவு , நாத்திகம் குறித்து நிறைய முன்னெடுக்கவேண்டியுள்ளது.பல ஆன்மீகவிசயங்களை பாதயாத்திரையை முன்வைத்துக் கேள்விக்குறியாக்குவதே இந்நாவல்-சுப்ரபாரதிமணியன்..கோவை தமுஎகச சந்திப்பில் -கோமணம்~ சுப்ரபாரதி மணியன் நாவல்


Sumangali : Subrabharathimanians Tamil Novel in Translation

 Of the Scheme Shattering Her 'Auspicious' Dreams

சனி, 1 ஏப்ரல், 2017

Sumangali : Subrabharathimanians Tamil Novel in Translation
 Of the Scheme Shattering Her 'Auspicious' Dreams
----------------------------------------------------------------------------------------------


The young girls employed in textile mills under the scheme called 'Sumangali Thittam' are hardly given leave or rest even during their menstrual period. The scheme hires girls between 15 and 18 years old for work on contract basis, which promises a payment of lump sum, using which they could meet their marriage expenses. Sumangali, a novel on the misery of such girl workers, depicts their hardship of working long hours, bearing verbal and physical abuses of the factory supervisors. Worse still, the hostel wardens of mills even force the girls to have pills to postpone their menstrual period.

Portraying such shocking realities of the Sumangali scheme, Subrabharathimanian, a Tirupur-based popular writer has penned the Tamil novel Sumangali, which has been translated into English by P. Ramgopal, a retired professor of English.

'Andhra' Sujatha, a character portraying a Sumangali scheme worker, expresses a situation in the novel thus:

“ You know, once the mill's hostel warden remarked that it would be better if the uteri of the girl workers were removed so that they would not take leave citing their menstrual period”

But, another character answers 'Andhra' Sujatha thus:

“But, we are working here only to earn the lump sum and get married. And if our uteri were removed... Instead, they can take our kidneys and pay us the amount “

The novel centres round the character Muthulakshmi, the daughter of a spendthrift widower. The girl, advised by her uncle, joins work under Sumangali scheme. Though the author portrays her plight in the work place, he has created her as a symbol of self confidence and prototype to other suffering girls by narrating her fight against the odds.

The book also introduces another girl by name Catherine from the village Elachipalayam. A daughter of a liquor addict, she is forced to work under Sumangali scheme and commit suicide to escape an intolerable stomach ache by drinking the machine oil in her factory. The novel also informs about another girl, who is crushed to death after her clothes were caught in the machine while working in a mill at Karumathampatti near Tirupur.

Subrabharathimanian is an author of as many as 50 books. A recipient of Tamil Nadu state government award for his novel ' Saayathirai', which portrayed the environmental issues of Tirupur. The writer, who was also the Central Sahitya Akademi's advisory board member, has been editing the Tamil literary magazine Kanavu for over three decades.

“ I penned this novel after observing the plight of such girl workers under Sumangali scheme in the garment units and mills in Tirupur. And the character Muthulakshmi in my book represents such victims of the girl. A symbol of self reliance, Muthulakshmi fights unto the last despite losing her left hand in an accident at the factory “ avers Subrabharathimanian.

Ramgopal, who rendered the novel into English, said:

“ The novel Sumangali is a sad portrait of reality. With its literary merits inspiring me, I have translated it into English”


B. Meenakshi Sundaram


சனி, 25 மார்ச், 2017

                     THE HUNT 

   (          A COLLECTION OF SHORT STORIES on Sumangali victims   by                                           SUBRABHARATHI MANIAN             )     

                  Published in Tamil popular magazines Ananda Viketan,                                                                Kumudam Theeraanathi, Dinamanikathir. Translated from Tamil by P.RAMGOPAL


    1.                                 Foreword
           Comrade Subrabharathi Manian has been writing fiction and non-fiction for more than three decades with passion and compassion for the workers who are destined to work under pathetic and unpalatable conditions. His writings question the silent, stagnant and stinking irresponsibility of the society and the establishment.
           Subrabharathi Manian portrays the eye-wetting and heart- bleeding environment of the labourers, both men and women, almost bonded in the industries in and around Tirupur. He also focuses on child labour, labour disputes, the heartless pollution of rivers and the mindless destruction of forests.
         Mr. Manian is a recipient of several awards, including the katha award from the President of India and The Best Novelist Award from the Government of Tamilnadu.
         SAVE is extremely happy to publish Mr. Manian’s Sumangali, a short novel, and these stories on Sumangali victims  focussing on the trials and tribulations of a teen-age girl, Muthulakshmi, caught in the mire of the ‘Sumangali’ scheme. The novel may appear, in the first reading, as a story full of pathos, but one can realize its undercurrent of radiant optimism, if one ponders over it leisurely, afterwards. Ane here lies the greatness of Mr. Manian, both as a writer and as a human being. He tells us: “Friend, life is and will always be like that only. It is your duty to stand up and fight unto the last!”
        SAVE feels very proud of its continuing association with Mr. Manian and wishes him many more laurels!
Tirupur,                                                                                A. ALOYSIUS
                                                                                             DIRECTOR, SAVE

                              
  2.    A WORD about THE DISEASED ‘SUMANGALIS’ 
“If a woman wears a T- shirt, she is a worker in a garment factory; a shirt, a worker in a mill, a lungi, a house maid, a night gown a wife in a house who is ‘solely’ made for cooking!” It’s quite a surprise how such a ‘dress-code’ has become a common notion and crept into the public mind. The dress code of the women who work in the ‘Sumangali Scheme’ is not different from those who work in the houses. They would look as though they have come to the cotton mills straight from the kitchen.  
In many districts like Cuddalore, Perumbalur, Ariyalur, Tanjore and Nagapattinam, young women are roped into the schemes like, ‘Sumangali Scheme’,  ‘Marriage Scheme’, ‘Kanmani Plan’, ‘Gold for ‘Thali’  Scheme’ and are made to  work for more than five years.  Most of the schemes cheat the innocent. Many of them escape from these schemes with their legs or hands or both cut. Nearly two lakh women are in this condition in Tamilnadu knowing no way to swim across the river of life.  Those who stay until the end of the contract, face various charges. They also ‘receive’ sexual harassment. And even if they escape from these ‘awards’ they are branded as ‘Sumangali Girls’ in the marriage market and men hesitate to marry them.
 The above schemes have various contract periods. Some have five years, some two years and some one year! The court and ‘The Labour Welfare Board’ have stipulated that the minimum wages should be Rs. 692. 50. Can anyone believe this? The girls get only a quarter of it! The schemes themselves pave way for exploitation! The                                                        
NGOs divide the lives of mill- workers into two periods ,B.S.S
(before ‘Sumangali’ scheme) and A.S.S (after ‘Sumangali’ scheme)
  Even Thiruppur which earns a foreign exchange of Rs.30, 000 crores per year have started relishing these schemes and are exploiting people with schemes like these. Tamilnadu has witnessed so far 90 suicides of girls working under these schemes, the reasons mostly being wage-exploitation, sexual harassment, depression and tension. These include honour killings too. (The number of honour killings alone is 90 in Tamil Nadu- that’s a different story.)  Even though it is said that 10% of them are trainers, 90%the young girls are labourers. These places know only two languages: exploitation and profit. Most of these people who have taken refuge or asylum in Tamilnadu are from Bihar, Odissa and Bengal. Mostly, their common language is sign language. They take asylum even in small units. The developments in technology have made larger units possible. Much of the ‘rule-breaking’ is done in the small units.
Capitalism and the Corporates have almost succeeded in converting the labourers into slaves without any safety switches like permanent job or social security ; they have converted them into contract labourers, workers on daily wage and piece-rate workers. Most of those who are affected are girls in their teens. Either all roads are diverted to cities where there are big industries  or the roads have been laid anew! Those whom one can see or those who walk on them are mostly diseased young girls. For name sake only, they are, ‘Sumangalis’. (Men have different channels to escape- one of them is ‘drinking’. They are ready to ‘die’ after forty!)
Once, in the big cities, there were young men and women
f rom the South in huge numbers. Now they are joined by the crowds                                                              from North India. People from Bihar, Odissa and Bengal come in large numbers and take asylum here.  A sack of ‘atta’ and a few kilos of potatoes are enough to make them bonded labourers easily.
                    Education for their children has become a big problem in Tamilnadu. Some social organisations and NGOs run schools for them- that’s a consolation. Otherwise, their children would easily be converted into child labourers. If they become child labourers, due to work pressure, they rot, become addicts to drinking etc easily and indulge in all sorts of crimes and become culturally, members of criminal ‘clans’
                  The system of branding of some sects of society as ‘criminal tribes’ by the British Government had gone. The new insignia put on the new generation are different. The ink of the seals of Capitalism and the Corporates are blacker. The blackness is a symbol of the development which this century has witnessed. This blackness makes the faces of the diseased young, ‘Sumangali’ workers still blacker.
According to law the minimum age for marriage is 18. The age for exercising one’s franchise is 18. (Leave for two nights and no work during the day time is a concession given during the polls.) These ‘concessions’ are guaranteed by law; but no law prescribes the minimum age for working. People have started murmuring! Of late, the murmurs have grown louder!
 I saw recently a notice for recruiting girls: “If you join a young woman in our mill you’ll get 2gm. gold coin; if you join five, you’ll get 12gm;  for ten it is 24gm. You’ll also get Rs.1000/= as commission!”
                                            The ‘marketing culture’ has cut deep inroads into all aspects of our life. They are rough. A few of the diseased sumangali*s I’ve met on these rough roads are the heroines of these short-stories!
-Subrabharathi Manian
*sumangali : a happy married woman
Rs 50 :For Copies:                                 
 .. subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003

வெள்ளி, 24 மார்ச், 2017

கடத்தல் கலாச்சாரம் : எதிர்ப்பு தினம் கூட்டம்  , மார்ச் 29 திண்டுக்கல்லில்.
 சுப்ரபாரதிமணியன்

            குழந்தைகள் கடத்தல் என்பது விநோதமான விளையாட்டுத் தனமாய் உயிர்களை பலி வாங்குகின்றன குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பணம் பறிப்பதற்காய் நண்பர்களுடன் செய்த கடத்தல் நாடகம் கொலையாகியிருக்கிறது. குழந்தைகளுக்குள் இவ்வகை துர்குணங்கள் வளர்ந்து குடும்பச் சூழலைச் சீர்குலைக்கின்றன.
            இதன் மறுபுறமாய் குழந்தைகள் கடத்தல் என்பது சட்டநெறிமுறைகளுக்கு எதிராக குழந்தைகளை அழைத்துச் செல்லுதலும் குழந்தைக் கடத்தல் என்றே வரையறை செய்யப்படுகிறது. இவ்வகை சமூகக் கொடுமையாக நீண்டு வருகிறது.
            பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள் மற்றம் பொது இடங்களில் மிரண்டபடி தவித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை திசைமாற்றி கடத்தப்படுவது சாதாரணமாகி விட்டது. ஒரு சில நேரங்களில் அவ்வகைச் சிறார்களின் பரபரப்பை சுலபமாகக் கண்டிருக்கிறேன். அவர்களை அணுகி எதையாவது பேசினால் போதும், பெரிய ஆவலாகி விடுகிறது அவர்களுக்கு. சுலபமாக அடைக்கலமாகி விடுகிறார்கள். அன்பான வார்த்தைகள் போதும் அவர்களை வசியப்படுத்துவதற்கு, கொஞ்சம் வார்த்தைகளும் எளிமையான வாக்குறுதிகளும் போதும். தங்களின் திரை நாயகர்களைக் காண வீட்டைவிட்டு ஓடிவரும் சிறுவர் சிறுமியர் கூட்டங்கள்; பெற்றோரின் அரவணைப்பு இன்றி தவித்து வெளியேறி எங்காவது அடைக்கலமாகும் சிறுவர்கள்; கட்டுப்பாடு என்ற பெயரில் இறுக்கப்படும் சூழல்களின் மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்க ஒடி வருபவர்கள் எனத் தொடர்கிறது. சமீபமாய் பெற்றோரை மிரட்டிப் பணம் பெற நண்பர்களுடன் நாடகம் நடத்துவதும், பள்ளிகளில் சுமைகள் தாங்காமல் தாங்கள் கடத்தப்பட்டதாய் தகவல் தந்து பெற்றோரைப் பதற வைத்திருப்பதும் நடந்து வருகிறது. குழந்தைகள் தங்களின் எதிர்ப் புணர்வை வெளிக்காட்ட இவ்வகை நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். இதன் மறுபுறமாய் சமூகக் கொடுமையின் அங்கமாக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அடிமைப்படுத்தும் நோக்கங்கள், வறுமை, பண ஆசை, தவறான வழி காட்டல் போன்றவை குழந்தைக் கடத்தலுக்கு முக்கியமானக் காரணங்களாகின்றன. தெற்கு ஆசிய நாடுகளில் குழந்தைக் கடத்தல் வெகு சகஜமாகி விட்டது.
            தேவதாசி முறை மற்றும் பெண் குழந்தைகளை கோயிலுக்குக் காணிக்கையாக்குதல் போன்ற மதம் சார்ந்த நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 'மாத்தம்மாக்கள்' பெருகிக் கொண்டிருக்கின்றன. கன்னிப்பெண்களுடன் உடல் உறவு கொள்வதால் பாலின வியாதிகள் மறையும் என்ற மூட நம்பிக்கையும் தொடர்ந்து வருகிறது. விபச்சாரத்தால் பெருகும் பாலியல் நோய்களிலிருந்து தப்பிக்க இளம் பெண்களுடன் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது என்ற எண்ணத்தில் இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர்.
            வறுமையில் வாடுபவர்களை தொழில் வசதி காட்டி சட்டத்திற்குப் புறம்பாக கூட்டிச் செல்லப்பட்டு வெளி மாநிலங்களில் குறைந்த சம்பளத்திற்குக் கொத்தடிமைகளாக வைக்கப்படுகிறார்கள். படிப்பறிவில்லாதப் பெற்றோர்கள் இதற்கு உடன்பட்டு விடுகிறார்கள். விளிம்பு நிலை மக்களின் வெளி உலகு பற்றின அறிவின்மையும், வெகுளித்தனமும் இதற்கு உடந்தையாகி விடுகின்றன. உலகமயமாக்கல் இடம் பெயர்வைச் சாதாரணமாகிவிட்ட நிலையில் உள்ளூரிலேயே அகதிகள் உருவாக்கப்படுகிறார்கள். இயற்கைச் சார்ந்த நாசங்களும், தண்ணீர் பிரச்சனைகளும், வேலையின்மையும் அகதிகளாய் மக்களை இடம் பெயரச் செய்யும்போது குழந்தைகள் மலினமாகி விடுகிறார்கள். இவ்வகைத் தொழிலுக்கு உடன்படுவதும், அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் ஒருங்கிணைக்கப்பட்ட கும்பல்களால் நடைபெறுகிறது. இவற்றுக்கு பல இடங்களில் சில காவல்துறையினரும் உடந்தையாக இருக்கின்றனர். தார்மீக நெறிகளுக்கு எதிராகவும், குழந்தைகளை நேசிக்கும் மன இயல்பு அற்றவர்களும் இதை ஒரு தொழிலாகக் கைக்கொள்ளுவதில் அவர்களின் மனம் இறுகி வரும் சமூக நிர்பந்தத்தை காண முடிகிறது.
            வெளிமாநிலங்களுக்கு பல்வேறு வகைத் தொழில்களுக்கும் கொத்தடிமைகளுக்குமென்று குழந்தைகள் சாதாரணமாய் கடத்தப்படுகின்றனர். சென்னை போன்ற பெரும் நகரங்களில் புகைவண்டி நிலையங்களில் குழந்தைகள் கும்பலாய் கைது செய்யப்பட்டு மீட்கப்படுவது செய்தித்தாளின் சாதாரண நிகழ்ச்சிகளாகி விட்டன. தெருவோரச் சிறுவர்கள் தங்களின் பாதுகாப்பின்மையை உணர்ந்து அலைபாய்தலில் வெவ்வேறு வகை முதலாளிகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.
            சமீபத்தில் நண்பர் ஒருவரின் கல்லூரி படிக்கும் மகள் இவ்விதமான கடத்தலில் இருந்து தப்பித்தாள். அந்த நண்பர் நடந்ததை எண்ணி நிலை குலைந்து விட்டார். அப்பெண் கல்லூரியில் கம்யூட்டர் சயன்ஸ் படிப்பவள் என்ற முறையில் இமெயில் பெற்றிருக்கிறாள். நண்பர் தன் வசதியை மீறி அவளின் படிப்பிற்கென்று கணினி வாங்கித் தந்திருக்கிறார். ஒரு நகரத்தின் செல்வந்தர் மகன் ஒருவன் அப்பெண்ணின் இமெயில் முகவரியை அறிந்து கொண்டு தகவல்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறான். முதலில் அவற்றை அலட்சியப்படுத்தியப் பெண் சுவாரஸ்யம் பொருட்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். இருவரும் குடும்பம் பற்றியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். இமெயில் மூலமே கல்யாண விஷயங்களை பேசி இருக்கிறார்கள். எதேச்சையாக நண்பருக்கே இமெயில் ஒன்றின் 'பிரிண்ட் அவுட்' கிடைக்கவே பதறிப்போய் நண்பர் ஒருவரிடம் கொண்டு சென்று காட்டியிருக்கிறார். சந்திக்காமல் இமெயில் தகவல்கள் மூலம் பெற்றோரை முழுவதும் நிராகரித்து கல்யாணம் வரைக்கும் போய்விட்டிருக்கிறது. முழுத் தகவலையும் பெண்ணிடம் இருந்து பெற்றுக் கொண்ட நண்பர் நிலைகுலைந்து போனார். அந்தப் பெண் கல்லூரியில் படிப்பவளாக இருந்தாலும் வெளி உலகை அறியாதவள். இமெயில் மூலம் நண்பரைப் பெற்றதில் என்ன தவறு. கல்யாணம் வரைக்கும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டது என்ன தவறு என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டாள். குழந்தைகள், பெண்களைக் கடத்துவது சம்பந்தமாக கட்டுரையொன்று எதேச்சையாய் நண்பருக்கு நான் கொடுக்கவும் அதைப் படித்தவர் இன்னும் நிலைகுலைந்து போனார். அக்கட்டுரையை நண்பர் தன் பெண்ணிடம் தந்திருக்கிறார். அவள் அவளின் இமெயில் நண்பர் அப்படியானவர் அல்ல என்று தீர்க்கமாய் பேச ஆரம்பித்துவிட்டாள். அவளே கல்லூரித் தோழி ஒருத்தி மூலம் இமெயில் நண்பரின் நகர விலாசத்தைக் கண்டுபிடித்து விபரங்கள் சேகரித்திருக்கிறாள். தோழி தந்த விபரங்கள் அதிர்ச்சி தந்திருக்கின்றன. இமெயில் நண்பர் போலீசால் தேடப்படுபவர் என்பது இறுதியில் தெரிந்திருக்கிறது. அவனை நம்பி அவளின் கடைசி இமெயில் தகவலின்படி அவள் கிளம்பிப் போயிருந்தால் என்ன விபரீதம் நடந்திருக்கும் என்பதை அந்தப் பெண் உணர்ந்து ஆரம்பித்திருக்கிறாள்.
            திருமண வயதுப் பெண்கள் வசீகரமான வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். ஏழ்மையானப் பெற்றோர்கள் அவர்களுக்கு ஒரு திருமண வாய்ப்பு அமைந்தால் போதும் என்று ஒத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாடுகளுக்குள்ளோ, வெளிநாடுகளுக்குள்ளோ திருமணமான பின்பு கடத்தப்படுவதும், விபச்சாரத்திற்காக அலைக்கழிக்கப்படுவதும் பின்னர் நிகழ்கின்றன. எவ்விதப் புகார்களும் இல்லாமல் காவல்துறைக்கென்றத் தகவல்கள் கூட இல்லாமல் பல பெற்றோர்கள் முடங்கிவிடுகிறார்கள். உலகமயமாக்கலில் பெண்களும், குழந்தைகளும் சந்தைப் பொருளாகிவிட்டனர். பெண்களையும், குழந்தைகளையும் கடத்துவது என்பது நிறைய பணம் தரும் கவர்ச்சிகரமானத் தொழிலாகியும் விட்டது.
            இவை தவிர பிச்சையெடுத்தல், உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றி விற்பனை செய்தல், போதைப் பொருட்களைக் கடத்துதல், வீட்டு வேலைகளுக்காகக் கடத்துதல், தத்தெடுத்தல் என்ற பெயரில் குழந்தைகளைக் கூட்டிச் சென்றுத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.
            குழந்தைகள் கடத்தலில் சம்பந்தப்பட்ட சட்டங்கள் வலுவானதாக இல்லை. அவை குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கான பல்வேறு ஓட்டைகளை வைத்திருக்கின்றன. தொடர்பு சாதனங்களும், பத்திரிகைகளும் உலகத்தை நம் முன் சுலபமாகக் கொண்டு வந்த காரணங்களால் குழந்தைகள் கடத்தப்படுவது சாதாரணச் செய்திகளாக நமக்கு வந்து சேர்கின்றன.
            குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரச்சனையாக இது விசுவரூபிக்கப்படுகிற போது, அவை தடுக்கப்படுவதற்கான இன்னும் வழிகள் உருவாகும். தடுப்பு மற்றும் மறுவாழ்வு முறைகள் அவர்களை சாதாரண நிலைக்குக் கொண்ட வரும். இதற்காக பல தொண்டாகவே நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும், மீட்பு முயற்சிகளையும் எடுத்து வருவது சமீபமாய் அதிகரித்திருக்கிறது.
            இவ்வகைக் கடத்தல்கள் பெற்றோர் மத்தியில் குழந்தைகளைப் பேண வேண்டிய பொறுப்பையும், உளவியல் ரீதியாக அவர்களுக்குத் தர வேண்டியப் பாதுகாப்பைப் பற்றின எண்ணங்களை வலியுறுத்தலாம். குழந்தைகளுக்கும் வீட்டை விட்டு வெளியேறுதல் பற்றின அச்சத்தை மேலோட்டமாகக் கிளப்பலாம். ஆனால் சமூக நிலைக் காரணங்கள் இவ்வகைக் கடத்தல்களைத் தொடர்ந்து நிகழ்த்தாமல் தடுத்துவிடுமா என்ன?
            குழந்தைத் தொழில் உழைப்பு தடை செய்யப்படுதலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அமுலாக்களும், மறுவாழ்வும், அடிப்படைக் கல்வியின் அவசியமும் கடத்தல் கலாச்சாரத்தை வலு இழக்கச் செய்யும்.