சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

திங்கள், 6 பிப்ரவரி, 2012

அ. முத்துலிங்கம் அவர்களின் “அமெரிக்க உளவாளி”: போட்டி

திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்ற நூலில் ஒன்றுஅ. முத்துலிங்கம் அவர்களின் “ அமெரிக்க உளவாளி ‘’ .தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத்தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் எழுத்து புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது.முத்துலிங்கத்தின் கவனம்பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச்சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீன தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார்.அவ்வகையில் அவரின் சமீப நூல்களான, ” அமெரிக்க உளவாளி”,” உண்மை கலந்த நாட்குறிப்புகள்” , ” ஒன்றுக்கும் உதவாதவன் ”‘,” அமெரிக்கக்காரி “ ஆகிய நூல்களில் ஏதாவது ஒன்று பற்றிய ஆய்வு, ரசனை சார்ந்த சிறந்த எட்டு கட்டுரைகளுக்கு ரூ4,000 பகிர்ந்தளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட எந்த நூல் பற்றியும் இருக்கலாம். பக்கக் கட்டுப்பாடு இல்லை. தபாலில் அனுப்புதல் சிறந்தது. மின்னஞ்சலிலும் அனுப்பலாம்.


முகவரி: சுப்ரபாரதிமணியன்,கனவு காலாண்டிதழ்,8/2635 பாண்டியன் நகர்,திருப்பூர் 641 602.
subrabharathi@gmail.com