சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 30 ஆகஸ்ட், 2025

சுப்ரபாரதிமணியனின் திரில்லர் திரைப்படங்கள் - தூரிகை சின்னராஜ் சுப்ரபாரதி மணியனின் பல கதைகள் தமிழ்த்திரைப்படங்களில் தழுவப்பட்டு வெளிவந்துள்ளன, பல கதைகள் திருடப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. “ வட போச்சே “ என்று அலறிக் கொண்டிருப்பதை விட வடையை சுட்டு எப்படி தழுவுபவர்களுக்கு, திருடுபவர்களுக்கு நேரடியாகத் தரும் விஷயத்தை சமீப காலமாக சுப்ரபாதிமணியன் அவர்கள் செய்திருக்கிறார், அப்படித்தான் இதுவரை அவரின் பத்து திரைக்கதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன, அவற்றில் சுமார் 100 திரைக்கதைகள் உள்ளன , இந்த திரில்லர் திரைக்கதை நூல் வரிசையில் 5 திரில்லர் திரைக்கதைகள் உள்ளன இவை பல திரைக்கதைகள் திரைப்படங்களாகும் முழு தகுதி பெற்றவை. எளிமையான வடிவங்களில் குறைந்த காட்சிகளை வைத்து எழுதப்பட்டுள்ளன.. இவற்றை இன்னும் விரிவுபடுத்தி முழு திரைக்கதைகளை உருவாக்கிக் கொள்ளலாம் சுப்ரபாரதி மணியன் அவர்களுடைய படைப்பிலக்கிய உழைப்பின் இன்னொரு பகுதியாக இந்த திரைக்கதைகளைச் சொல்லலாம். சிறுகதை நாவல் போன்ற படைப்பிலக்கிய வடிவங்களில் இருந்து மாறுபட்டு வேறு வடிவ முயற்சியில் இந்த திரைக்கதைகள் அமைப்பு உள்ளன என்று அவர் கூறி வருகிறார் ஒவ்வொரு படைப்பாளிக்கும் இதுபோல் சில தேக்கங்கள் ஏற்படுகிற போது வேறு வடிவத்திற்கு சென்று எழுதுவது என்பது இயற்கை. தான். அப்படித்தான் சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் இப்போது திரைக்கதை என்ற ஒரு புதிய வடிவத்திலும் இயங்கிக் கொண்டு இருக்கிறார் இந்த திரில்லர் திரைக்கதை நூலில் 5 திரைக்கதைகள் உள்ளன. .இவற்றை எடுத்துக் கொண்டுள்ள முக்கியமான மையங்கள். இன்றைய திரைப்பட உலகங்களுக்கு தேவையான விஷயங்க.ள் இதில் உள்ளன. ஜாதி பிரச்சனை, காதல் பிரச்சனை முதற்கொண்டு வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றை இதில் திரைக்கதைகள் ஆக்கியிருக்கிறார். படைப்பில் வித்யாசத்தன்மை காட்டும் அவரின் வித்தியாசத்தன்மை உள்ள திரைக்கதைகளில் உள்ளன இந்த நூலில் திரில்லர் வகை திரைகதைகளைத் தந்துள்ளார். முதல் திரைக்கதை அவரின் ஒரு நாவலை ( 14/40 கொண்டை ஊசி வளைவு ) எடுத்துக் கொண்டு அதை திரில்லர் கதையாக்கியிருக்கிறார் . மற்றவை அவரின் புதிய களன்களைக் கொண்டவை. இளைஞர்களின் வேலையின்மை மற்றும் அலைக்கழிதல் அவர்களை பிரச்சினைகளுக்குள் மாட்டி அலைக்கழிப்பதை இன்னொரு திரைக்கதை சொல்கிறது. முரண்களை மையமாகக் கொண்டு நல்ல திரைக்கதை திருப்பங்களை இவை கொண்டிருக்கின்றன. மருத்துவ ஊழல் சார்ந்த ஒரு திரைக்கதையும் முக்கியமானது இயக்குனர் தங்கம் சமீபத்தில் ஒரு கருத்தை சொல்லியிருந்தார் : “ சுப்ரபாரதி மணியனின் இப்படி திரைக்கதைகளை நூலாக வெளியிட்டு இருக்கிறார். இதில் எத்தனை திரைப்படங்கள் ஆகுமோ. எத்தனை திரைக்கதைகளத் தழுவி படம் எடுப்பார்களோ எத்தனை திரைக்கதைகளை அப்பட்டமாக காப்பியடித்து திரைப்படம் எடுப்பார்களோ. சுப்ரபாraதிமணியின் எத்தனை வழக்குகள் போடுவாரோ” என்று ஒரு உரையில் குறிப்பிட்டு இருந்தார். இன்னொரு கருத்து இயக்குனர் ஞானராஜசேகரன் IAS இப்படி குறிப்பிடுகிறார் : “ திரைக்கதைக்கு அடிப்படை முரண் அல்லது CONFLICT என்பதை தெளிவாக புரிந்துகொண்டு திரைக்கதைகளை எழுதியிருக்கிறீர்கள்.. ஆனால் தமிழ் சினிமாவில் திரைப்படத்தைக் குறித்து புரிதல் ஒன்றுமின்றி தாறுமாறாக வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். உங்களைப்போன்ற GENUINE கதையாசிரியர்களை அவர்கள் எப்படி அணுகுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் திருடுவதற்கு நிச்சயம் முனைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.” அது உண்மைதான் இந்த திரைக்கதைகள் நல்ல தமிழ் திரைப்படங்களாக ஆகும் தகுதி கொண்டவை. இந்த திரைக்கதைகளை படிக்கிற போது தமிழ் திரை உலகம் எப்படி இருக்கிறது என்பதும், கதை பஞ்சத்தில் இருக்கிற தமிழ் திரை உலகம் எப்படி வெவ்வேறு வகையான கோணங்களில் இவ்வகைமையங்களை எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்கு அத்தாட்சியாக இந்த திரைக்கதை நூல் அமைந்திருக்கிறது.---- தூரிகை சின்னராஜ் ( தூரிகை சின்னராஜ் – ஓவியர்/ ஆசிரியர்/ குழந்தைகள் நூல் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். அவரின் பல ஓவியக்கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன ) ( ரூ 220 கோரல் ப்ப்ளிசர்ஸ், சென்னை பிரதிகளுக்கு : 90430 50666)