சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 30 ஆகஸ்ட், 2025
0
ஈரோடு புத்தக கண்காட்சி
முக்கியமாய் 50 நூல்கள் மெகா வெளியீட்டு விழா பற்றியது. என் சி பி என் பதிப்பகம் நூல் வெளியீட்டு விழா அது..
அந்த விழாவில் என் “ பள்ளிக்கூடம் போகலாமா “ என்ற திரை நாவல் வெளியிடப்பட்டது.
திரை நாவல் என்ற வடிவம் பற்றியும் திரைத்துறையும் ஆட்சி அதிகாரமும் பற்றியும் நான் பேசினேன்.
0
ஈரோடு புத்தக கண்காட்சி
தோழர் சந்தானம் நிர்வாக மேலாளர் என் சி பி எச் நிறுவனம் இறுதி நாளில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார் அவருடைய உரையாடலின் சில குறிப்புகள்
1. என் சி பி எச் பதிப்பகம் வெளியிட்ட அம்பேத்கர் பத்து நூல்கள் நல்ல வரவேற்பு பெற்றன. 10 நூல்கள் ஆயிரம் ரூபாய் மட்டும் .ஒரு புத்தகம் 100 ரூபாய் ஆனால் அதை தயாரிப்பு செலவு 180 ரூபாய் .தமிழ் வளர்ச்சித் துறை போன்ற நிறுவனங்கள் உதவி செய்ததால் சலுகை விலைக்கு கிடைத்தது இப்போது இன்னும் 17 நூல்கள் வெளியாக உள்ளன அவையும் குறைந்த விலையில் சிறப்பாக வெளியிடப்படும்
2. நான்காண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசாங்கம் நூலக ஆணையை வழங்கி இருக்கிறது. சில நூல்களுக்கு பிரதிநிதிகள் குறைவாக கேட்டிருக்கிறார்கள் சுப்ரபாரதி மணியின் நூல்கள் கணிசமாக நூலக ஆணை பெற்றிருக்கிறது. அவரின் ஆயிரம் பக்க நாவல் சிலுவை கூட நூலக று ஆணை பெற்றிருக்கிறது
3. ஈரோடு புத்தக கண்காட்சியில் ஆக்கர் புத்தக நிலையம் இரண்டு அரங்குகளை அமைத்திருக்கிறார்கள். அவர்களின் டெல்லியில் உள்ள இடதுசாரி பதிப்பகம் சென்னையில் கூட புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனைக்கு போட்டதில்லை ஆனால் ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடைய முயற்சியில் இங்கே இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டன விற்பனை குறைவு தான், வாடகை, விற்பனையாளர்கள் சம்பளம் கணக்கெடுக்கும் போது பெரிய பாரம் இதனால் ஏறிவிட்டது எங்களுக்கு. என் சி பி எச் பதிப்பகம் இதன் பொறுப்பை ஏற்று இருந்தது எங்களுக்கு பெரிய சுமையாக போய்விட்டது
4. கோவையில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் சுப்ரபாரதிமணியன் பற்றிய ஒரு கருத்தரங்கை நடத்தியது மகிழ்ச்சி
5. திருப்பூர் எழுத்தாளர்கள் ncb பதிப்பகத்திற்கு தரும் தொல்லைகள் புதிய ரகமாக இருக்கிறது
6. ஈரோட்டில் இருக்கும் என்சிபிச் பதிப்பகத்தின் கடை பெரிய இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் .கோவையில் ஸ்சேடியத்தில் இருந்த கடை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது இப்போது மாற்ற வேண்டி உள்ளது
7. ஈரோட்டில் பாரதிபுத்தகாலயம் விற்பனை தமிழ்நாட்டில் மற்ற கிளைகளை விட அதிகமாக இருக்கிறது.
8. திருப்பூர் என் சி பி எச் ஸ்டால் விற்பனையை பெருக்க திருப்பூர் எம்.பி,, மற்றும் கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்கள் முயற்சிகள் எடுப்பார்கள்.( தோழர் சந்தானம் உரையாடலில் இருந்த மற்ற செய்திகள் பகிர தேவையில்லாதவை )
9. அடுத்து என் அனுபவங்கள் சில ..
10.
11. ஈரோடு புத்தக கண்காட்சி
12. உங்கள் பாரதி போன்ற எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் கோவை கண்காட்சியோடு ஒப்பிட்டு ஈரோடு புத்தக கண்காட்சி விற்பனை சிறப்பாக இருந்தது தாகச் சொன்னார்கள். பெண் விற்பனையாளர்களுக்கு அறை மற்றும் தங்குமிடம் கழிப்பறை சரியாக இல்லை என்ற குறையை சொல்லியிருந்தார். அது போன்ற குறைகளை நான் ஈரோடு புத்தக கண்காட்சி அமைப்பாளருக்கு ஆலோசனை பெட்டியில் போட்டிருந்தேன். அவர்கள் அடுத்த ஆண்டில் கவனித்தால் ந்ல்லது
13. கோரல் பதிப்பகம் புதிதாக என்னுடைய மூன்று நூல்களை வெளியிட்டு இருந்தார்கள் ஞாயிறு களில் நல்ல விற்பனை இருந்தது. மற்ற நாட்களில் சுமார் என்று சொல்லிக் கொண்டார்கள
14. திண்டுக்கலை சார்ந்த கவிஞர் பூர்ணா என் சி பி எச் பதிப்பகத்தின் ஈரோடு மேலாளராக பதவி ஏற்றியுள்ளார் இனிமேல் கொங்கு இலக்கிய படைப்புகள் என்சிபி பதிப்பகம் மூலமாக வரும் என்று எதிர்பார்க்கலாம். அவர் இந்த உங்கள் நூலகம் இதழில் புதுவை ரஜினியின் புத்தகத்திற்கு போட்ட தலைப்பை தலைப்பு சரியானது அல்ல அது புதுக்கோட்டை வரலாறு சார்ந்த நூலல்ல புதுச்சேரி சேர்ந்த நூல் என்று அவர்களிடம் விளக்கமாக சொன்னேன்
15. ஈரோடு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நாட்கள் சென்று இருந்தேன் அடிக்கடி காணப்பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள் கோவைக்கு வரவில்லை என்பதை குறையாக சொன்னார்கள். கோவை புத்தக கண்காட்சியின் போது ஒரு திரைப்பட விழாவும் வெளியூர் பயணங்களும் அமைந்து கோவைக்கு செல்ல விடவில்லை ஆனால் ஈரோடு எப்போதும் உழைப்பாளர்கள் மண். ஸ்டாலின் குணசேகரின் உழைப்பும் பெரிய அளவில் கவர்ச்சிகரமாக இருக்கும்
16. எல்லா நாட்களும் காட்டிலகா சார்பாக இலவச முறையில் செடிகள் வழங்கினார்கள் ஆதார் கார்டு விவரங்களை பெற்று வழங்கினார்கள் ஆயிரக்கணக்கான செடிகளை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
17. சில பதிப்பாளர்களை மட்டும் பார்க்க முடிந்தது தமிழினி வசந்தகுமார் அதில் ஒருவர் அவரின் விசாரிப்பு என்னை எப்போதும் நெநிகழவைக்கும் .அழுத்தமான தாடியில் இருந்தார். அவருக்கு ஓய்வு தர அவர் குடும்பத்தினர் யோசிக்க வேண்டும்
18. ஈரோடு புத்தக கண்காட்சியில் இரவு பிரபலங்கள் பேசுவதற்காக ஒரு அரங்கம் , புத்தக வெளியீட்டுக்காக ஒரு அரங்கம், கதை சொல்லி நிகழ்ச்சிக்காக ஒரு அரங்கம் உலக படைப்பாளிகளின் புத்தகங்களை வெளிக்காட்டிய உலக படைப்பு அரங்கம் என்பவை முக்கியமான அம்சங்களாக இருந்தன
19. ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு வெள்ளைச் சட்டையும் கேடயங்களும் மிகவும் பிடிக்கும். வெள்ளை சட்டையில் இருந்து மாறவே மாட்டார். நான் அவருக்கு வர்ண சட்டைகளை வாங்கி தரட்டுமா என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் தரவில்லை எல்லாருக்கும் சுலபமாக கேடயத்தை கொடுக்கிறார். 3 படைப்பாளிகளுக்கு 3 கேடயங்கள். நாடகத்தில் நடிப்பவர்கள் 30 பேரானாலும் கேடயம் படைப்பாளிகளுக்கு பாராட்டு என்று கேடயம். 122 அரங்கம் அமைத்தவர்களுக்கு ஆளுக்க்கொன்றாய் கேடயம். கேடயம் அவர் கையில் இருந்து நழுவி கொண்டே இருக்கிறது. கேடயம் அண்ணன் என்ற புது பெயரையும் அவர் பெற்றுக் கொண்டார்
20. இந்த முறை மக்கள் சிந்தனை பேரின் வெள்ளி விழா மலர் சிறப்பம்சம் அதை வெளியிட்ட சிறப்பாக நடத்தினார் இந்த முறை அவரின் நூல்களும் வெளியிடப்பட்டன முக்கியமானது ஸ்டாலின் குணசேகரன் வழக்கமான அவருடைய பேவரெட்ட சப்ஜெக்ட். சுதந்திரச் சுடர்கள் நன்கு விற்பனையானது
21. என் மூன்று நூல்களை கோரல் பதிப்பகம் வெளியிட்டிருந்தது அந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ந. கந்தசாமி, ஸ்டாலின் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் திரைநாவலின் ஆங்கில வடிவம் அதில் ஒன்று அது இவ்வளவு விரைவாக வரும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. கோரல் பதிப்பகம் புத்தக வெளியீடுகளை நடத்தியது தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் வெண்பா வெளியிடப்பட்டது அவர் கவிதையில் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் மூன்று நூல்களை வெளியிட்டிருக்கிக்கிறார். அந்த விழாவில் நவகவி ஆண்டின் பெனி உட்பட பலரை சந்திக்க முடிகிறது ஆண்டன் பெனி சேலத்தில் பணிபுரிகிறார் என்பது புது தகவலாக இருந்தது. என் நூல்கள் வெளியிட்டில் சேலம் மோகன் குமார் எடுத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்து இருந்தார்.
22. பிரபல பேச்சாளர்கள் நிறைய கலந்து கொண்டார்கள் யாரையும் சந்தித்து பேச முடியவில்லை இறையன்பு அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தேன். அவ்வளவுதான்
23. 3எழுத்தாளர்களுக்கு பாராட்டு என்று சுப்ர பாரதி மணியன் வாமு கோமு உமையவன் ஆகியோருக்கு பாராட்டு நடந்தது மேடை விட்டு கீழ் இறங்கும்போது என் கண்ணாடியை விட்டு விட்டு வந்து விட்டேன். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று முக்கியமான கொங்கு படைப்பாளிகள் பெரியசாமி தூரன், புலவர் குழந்தை ஆர் சண்முகசுந்தரம் படங்களும் திறந்துவைக்கப்பட்டன அந்த படங்களை வேடிக்கை பார்த்து படி வந்த நான் என் மூக்கு கண்ணாடியை தவற விட்டு விட்டேன். நாடகம் ஆரம்பித்துவிட்டது. கோமல் சுவாமிநாதன் அவர்களின் மகள் இயக்கியிருந்த நாடகம் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி ஜானகிராமன் போன்றவர்களின் சிறுகதைகளை மையமாகக் கொண்ட நாடகம். மூக்கு கண்ணாடிக்காக அங்கேயும் அலைந்தேன். மேடையில் இருந்து பொருட்களை அகற்றினவர்கள் உட்பட பலரை விசாரித்தேன். சோர் வாகி விட்டது. நாடகம் பார்க்கிற ஆவலை இல்லாமல் போய்விட்டது. நண்பர்கள் கண்ணாடியை பிறகு பார்க்கலாம் முதலில் நாடகம் பார்க்க வேண்டும் என்றார்கள் ஆனால் கண்ணாடி இல்லாத நான்ள் தவித்துக் கொண்டிருந்தேன் கொஞ்சம் விலை உயர்ந்த கண்ணாடி 7000 ரூபாய். ஆகவே திரும்ப பெற வேண்டும் புதிய கண்ணாடிக்கு கிடைக்கப் போனால் பரிசோதனை காத்திருப்பு என்று பத்து நாள்ஆகிவிடும். ஆகவே கண்ணாடியை தேடி தேடி அலைந்து கொண்டே இருந்தேன் கடைசியில் வாய்ப்பில்லை என்று நாடகங்கள் முடிந்து கிளம்பும்போது மைக்கில் ஒரு விண்ணப்பம் வைத்தேன் என் மூக்கு கண்ணாடி தொலைந்து விட்டது.. மூக்கு கண்ணாடி தொலைந்து விட்டது யாராவது கண்டால் கொண்டு வந்து தாருங்கள் என்று . ஸ்டாலின் குணசேகரன் உதவியாளர் ஓடோடி வந்து கண்ணாடியைக் கொடுத்தார் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தவறுதலாக அவருடைய சட்டை பையில் அதை வைத்து விட்டதாக சொன்னார் எப்படியோ இரண்டு மணி நேரம் இருந்த டென்ஷன் குறைந்தது. கண்ணாடி கிடைத்தது கண்ணாடி பாதுகாப்பாக இருந்தது
24. பல ஓவியர்கள் தென்பட்டார்கள் தூரிகை சின்னராஜ் அவர்கள் என்னுடைய மூன்று நூல்களை பற்றியும் விரைவாக ஒரு உரை நிகழ்த்தினார் மூன்று முக்கிய படைப்பாளிகள் உட்பட பலரின் ஓவியங்களை சிறப்பாக காணமுடித்தது
25. கதைக்களம் அரங்கியில் ஸ்டாலின் குணசேகரன் மகள் வடிவமைத்திருந்த ஓவியங்களும் சிறுவர் சித்திரங்களும் பிரமாதமாக அமைந்திருந்தன. ஒரு நாள் மட்டும் கதைக்களம் நிகழ்ச்சியில் கொஞ்ச நேரம் பார்த்தேன். சரிதா ஜோ அவர்களின் பேச்சும் நடையும் பல குரல் இசையும் பிரமாதமாக அமைந்திருந்தது மற்ற 10 பெண்மணிகளும் உரையாளர்களும் அதே வகையில் தான் இருந்திருக்கும் என்று நினைத்தேன்
26. சுற்றுச்சூழல் சார்ந்த நூல்களை தேடினேன் சரிவர கிடைக்கவில்லை பால் பாஸ்கரின் தண்ணீர் யாருக்குச் சொந்தம் நூல் பிரதி பரிசில் பதிப்பகத்துக்காரர் காட்டினார் ஆனால் அந்த பிரதியை நான் முன்பு வைத்திருந்தேன் அது மறுபதிப்பு என்பது தான் வந்தது மற்றும் எதிர்பதிப்பகத்தில் சில சுற்றுச்சூழல் நூல்களில் முன்பு வாங்கியது பிரதிகள் இருந்தன
27. என் சி பி எச் v ஊழியர்கள் பலர் தங்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேறி வேறு அரங்கங்களில் விற்பனையாளராக இருந்தார்கள்
28. 24 என் பத்து திரைக்கதை நூல்கள் வெளியாகி உள்ளன அவற்றை டிஸ்கவரி புக் பேலஸ் ,பியூர் சினிமா, நிவேதா பதிப்பகங்களுகு நான் விற்பனைக்கு அனுப்புவது வழக்கம் நிவேதா பகுதியில் மட்டும் சில பிரதிகள் விற்பனைக்கு இருந்தன. மற்றதயில் காணோம்
29. உயிர்மை பதிப்பகம் என்னும் என் 15 நூல்களை வெளியிட்டு இருக்கிறார்கள் இந்த ஆண்டுதான்என் நூல் எதுவும் வெளியிடவில்லை பழைய நூல்களின் பிரதிகளைத் தேடி கிரி அவர்களிடம் அலைந்தான்.. கிடைக்கவில்லை பெற்று தகவல் சொல்வதாக சொன்னார் எதுவும் வரவில்லை
30. ஜீரோடிகிரி பதிப்பகத்தில் திரை போன்ற நாவல்கள் வாங்கினேன். அவர்களிடம் என்னுடைய 10 98,,பறக்க மறுத்த பறவைகள்,, மூன்று நதிகள் திரை போன்ற புத்தகங்களின் பிரதிகள் அதிகம் தேவை என்று தொடர்பு எண் தொடர்பு முகவரி எல்லாம் கொடுத்தேன் அவர்களும் கண்டு கொள்ளவில்லை
31. கல்லூரி பேராசிரியர்கள் சிலபஸில் இருக்கும் புத்தகங்களை தேடி அலைந்தார்கள். படைப்பிலக்கியப் புத்தகங்களில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை இப்போது எல்லாம் கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்வி தவிர வெவ்வேறு வேலைகள் தரப்படுகின்றன அதுவும் தனியார் கல்லூரியில் எந்த வேலை என்று சொல்ல வேண்டியது இல்லை. படிப்பவர்கள் படிக்கிறார்கள் படிக்க சோம்பல் படுகிற கல்லூரி பேராசிரியர்கள் ரொம்ப தூரம் போய்விட்டார்கள் அவர்களை இழுத்துக் கொண்டு வருவது சிரமம் தான்
32. இந்த முறை பென்குயின் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட ஆங்கில பதிப்பாளர்கள் கடைகள் இருந்தன
33.
குழந்தைகள் காலை நேரங்களில் பள்ளியில் இருந்து பேருந்துகளில் வந்து கூட்டம் சேர்த்தனர் கையில் இருக்கிற காசுக்கு திருக்குறள் பாரதியார் கவிதை என்று வாங்கினார்கள் பெரும்பாலும் சிறுவர் நூல்களில் ஆங்கில நூல்கள் தான் வாங்கினார்கள் தமிழ் வழி நூல்கள் அவ்வளவ்ய் வாங்கவில்லை