சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 30 ஆகஸ்ட், 2025

சுற்றுச்சூழல் பிரார்த்தனை 0 போப் பிரான்சிஸ்: ( தமிழில்: சுப்ரபாரதி மணியன் ) 0 இந்த பூமி நமது பொதுவான வீடு நம்மை அணைத்துக் கொள்ளும் தாய் எமது சகோதரியும் தாயுமான பூமி எம்மை காக்கிறது அதன் மலர்களும் கனிகளும் வாழ்விக்கின்றன இறைவா உம்மைப் புகழ்கின்றோம் “ என்கிறார் அசிசியின் புனித பிரான்சிஸ் 0 இன்று என் தாய் கதறுகிறாள். அலட்சியத்தால் பேராசையால் கடவுளின் வரங்களை அழைத்தோம். நாங்களே எஜமானது என்ற எண்ணத்தில் சுரண்டினோம். அவள் உடல் நோயடைந்தது காற்றும், நீரும் மண்ணும் உயிரினம் அனைத்தும் புண்பட்டு பூமி சுமையாகிப் போனது.. சிரமத்தில் முணுமுணுக்கிறாள். நாமே மண்ணின் புழுதி தான். நாம் சுவாசிப்பது அவளது சுவாசமே அவளது நீரே நமக்கு உயிர் தருகிறது பேராசை கொண்ட இயற்கை நுகர்வால் மானுடம் தன்னை அழித்துச் சாகிறது அதீக நுகர்வு அறிவியல் தொழில் நுட்ப பொருளாதாரம் சமூக உணர்வும் அற உணர்வும் அற்றுப்போனால் அழிவே வரும். இயற்கை காப்பதே மனிதரை காப்பது மனித வாழ்வை அழியாது காப்பது மனிதர் கடமை ஒவ்வொரு உயிரின் பெருமையையும் உணர்போம். ஒவ்வொன்றும் இணைந்த இணைப்பே இவ்வுலகம். 0 இயற்கை நேயம் அனைத்திலும் கடவுளைக் காணும் ஒவ்வொரு உயிரிலும் அளவற்ற அன்பு கொள். மரமும் பட்டாம்பூச்சியும் உன் சகோதரர் ஆகும் .இயற்கை ஓர் நல்ல புத்தகம் என்பார் அசிசி இறைவனின் பேச்சை நீ அதில் கேட்கலாம் காட்டை அழிக்காதே .போற்றி வழிபடு. பெயரிடாத மருந்துகள் அதிலே உள்ளன. நம் ஒரே வீடான பூமியை எப்படிக் காப்பது 0 பூமியில் பெரியதுமில்லை சிறியதுமில்லை பருவநிலை மாற்றம் நம் பாவத்தின் சம்பளம் பூமியை போர்த்திய காடுகளை அழித்தோம். வளமான நிலங்களை வீணாக்கினோம் காற்றை, நீரை, சிறு உயிரினங்களைக் கொன்றோம் இதற்கெல்லாம் மன்னிப்பு ஏது இயற்கை அழிப்பு,, இறைவனுக்கெதிரான பாவம் கண்மூடித்தனமான வளர்ச்சி. மனிதர் திறனில், அறிவியலில் இன்னும் அளவற்ற நம்பிக்கை அறிவியல் மட்டும் தீர்வாகாது. உணர்வும் தேவை அணுவுலைக் கழிவுகள் ஆபத்தானவை நெகிழி கழிவில் பூமி மூச்சு திணறுது மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரிப்பது மிகவும் நல்லது பசுங்குடி வாயுவால் பூமி வெப்பமாகிறது காட்டை அழித்து நாடு செய்தது போதும் நாடு அழியும் முன் மீண்டும் காட்டை வளர் பருவ மழை மாற்றம் உலகையே அழித்துவிடும் வாழ்விடமிழந்து அலைபவர் கோடி நோவாவின் கப்பல் காப்பாற்ற மீண்டும் வராது 0 நீரில்லாமல் தொழில் மற்றும் விவசாயம் நடக்குமா டாலரை, , யென்னைக் குடிக்க முடியுமா ஜீவ நதிகளை கழிவுகளாலே அழித்தோம் நிலத்தடி நீரை உறிஞ்சு எடுத்தோம் குடிநீர் கூட விலையாகிறது ஆறுகள் கூட விலையாகிறது நீரின்றி அமையாது உலகு நல்லோர் வாக்கு குடிநீர் உரிமை, அடிப்படை உரிமை ஒவ்வொரு சொட்டும் உயிர் தரும் சொத்து தண்ணீர் தனியார் சொத்தாகி விட்டது தண்ணீருக்கான உலகப் போர் நிச்சயம். பூமி பல்லுயிர் காக்கும் பெட்டகம் கடவுள் படைத்ததை மனிதன் அழிப்பதா ‘ஆல்கே’ கூட மானுட மூத்தோர் உயிரின சங்கிலி அழித்தால் இன்னும் அழிவே. 0 மலர்களும் பறவைகளும் அழிந்து போனால் உலகம் வர்ண மையம் இல்லாமல் மாறுமே. நாற்கர சாலையில் தேயிலை தோட்டம் பணம் தரலாம் , காற்று தருமா ’ ‘ டோடோ ‘ அழிவில் கல்வாரியா மரம் காணாமல் போனதே மண்புழு அளித்தோம் மண் மலடானதே அமேசான் அழித்து சோயா வளர்ப்பதா ராட்சத ” ட்ராலர்கள் ‘ திமிங்கலம் தின்றன விதைக்காது விளையும் அட்சய பாத்திரம் கடல் எண்ணெய் கசிவில் மாகடல் அழிப்பதா கொதிக்கும் அணுவுலைக் கழிவில் உயிர் முட்டை வேகுது நிறவெறி இடத்தை பணவெறி பிடித்தது அறிவியல் நுட்பம் ஆட்களுக்கு வேலை இல்லை போதை காசில் அரசு ஓடுது ” டச் கிரீன் வைப்பில் “ உறவுகள் விரிந்தன 0 காதலி கூட கைப்பேசி தயவில் ஞானிகள் அமர்ந்த மரத்தடியில்லை குடும்ப உறவை டாலர் பிரிக்கிறது கல்லறை நிகழும் காணொளி காட்சியில் வளங்களை அழித்து வளம் பெற துடிக்கிறோம் கோடுகள் எல்லாம் மனிதர் போட்டது கோடிகள் எல்லாம் கொள்ளையில் சேர்வது 0 என்றாலும் மீதம் இருக்கிறது நம்பிக்கை இயற்கையை விரும்பும் மனிதர்களின் வளர்ச்சி ஊழலை தடுக்க உயிர் தரும் சிலர் சிக்கன வாழ்வுக்கு திரும்பும் நல்லவர் இயற்கை விவசாயம் போற்றும் சிலர் மகிழ்வுந்து ஒதுக்கி மிதிவண்டியில் செல்வோர் தேம்சில் “மசீர் “ மீன்கள் மீண்டும் இயற்கையின் வடிவில் இறைவனைக்காண்போர் நுகர்வு வெறியைக் குறைக்கும் நல்லோர். உலகின் உப்பாய் வாழ்வோர் இவர் பிரச்சினைகளைப் படிக்கல்லாக்குவோம் விலங்கு மாட்டும் சந்தையை உடைப்போம் சிந்தனையை விதைக்கும் கல்வி பயில்வோம் மனிதனை மாற்றினால் உலகம் மாறும் ஒழுகும் குழாயை நிறுத்த நதிகள் பாயும். 0 விளக்கை,குளிர்சாதனத்தை நிறுத்து. கரிமிலா காற்றை குறை நெகிழியை ஒதுக்கு. புற்றுநோய் ஒழியும். மரம் நடு பூமி குளிரும் நம்பிக்கை கொள் நம்மால் முடியும் தன்னை இழப்பவன் உலகை வெல்வான் உலகை நேசிக்கும் ஆன்மீகம் தேவை ஏழைத் தச்சனின் மகனே நமக்கு அரசன் குறைந்த உடமை நிறைந்த வாழ்வு குறைந்த பொருட்கள் நிறைந்த வாழ்வு பொருட்களின் குவிப்பில் அருமை புதையுறும். விதைத்தவர் அறுத்தவர் உழைத்தவர் யாரோ. 0 உறவைத் தொடுகையில் நன்றிகள் சொல்வோம் சமத்துவம் நோக்கியா நீண்ட பயணம் பசித்தவர்களுக்கெல்லாம் அப்பமும் ரசமும் லாசரஸ் எழுப்பிடும் அன்பு வைத்தியம் புதிய ஜெருசலம் தொலைவில் தெரியது உயிரினம் அனைத்திற்கும் ஒரே வீடு நம் பூமி ( போப் பிரான்சிஸ் தேவாலயங்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தின் சுருக்கம் ) \\ தமிழில்: சுப்ரபாதி மணியன் சுப்ரபாரதிமணியன் 27 நாவல்கள் உட்பட 125 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன். சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது, மொழிபெயர்ப்பாளர் விருது இரண்டு லட்சம் தொகையுடன் உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் பெற்ற முக்கிய விருதுகள்: 2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை / 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது. /சிலுவை நாவல் 2023 எஸ் ஆரெம் தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் பெற்றுள்ளது. இவரின் 10 சிறுகதைகள் குறும்படங்களாகியுள்ளன ( அயலான் இயக்குனர் ரவிக்குமார், பேரெழில் குமரன் உட்பட பலரின் இயக்கத்தில் அந்தக்குறும்படங்கள் வந்துள்ளன ).இவரின் இயக்கத்தில் வந்த குறும்படம் “ நாணல் ”. 5 திரைப்பட நூல்கள் வெளியிட்டுள்ளார், இதைத் தவிர 10 திரைக்கதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார்.கனவு இலக்கிய இதழை 39 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.கனவு திரைப்பட சங்கத்தையும் நடத்தி வருகிறார்.திரைப்பட சங்க கூட்டமைப்பின் ரீஜினல் கவுன்சில் உறுப்பினர். பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்கு பெறுகிறார். 0 இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் நாவல், நாடகம் ஒவ்வொன்றும் சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை . இவரின் கட்டுரைத் தொகுப்புகளில் சுற்றுச்சூழல், திரைப்படக் கட்டுரைகள், இலக்கியக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என் 35 நூல்கள் அடங்கும். இவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நூல்கள் அதிகம் விற்பனையான நூல்கள். கவிதை நூல் ஒன்றும், நாடக நூல் ஒன்றும் இவரின் 125 நூல்களில் அடங்கும். 0 இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் , நாடகம் ஒன்றும் நாவல், சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை நாவல்கள் .. வெப்பம், கொரானா தடுப்பூசி சிறுகதைகள் : அன்பே உலகம், சிந்திக்க வைக்கும் சிறுவர்கதைகள் : நாடகம் : பசுமைப்பூங்கா.. SUBRABHARATHIMANIAN சுப்ரபாரதிமணியன் 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199 --------------------------------------------------------------------------------------------------------------------------------FB kanavu subrabharathimanian tirupur/ Subrabharathimanian palaniasamy ------------------------------------------------------------------------------------------------------------------------------ subrabharathi@gmail.com/ rpsubrabharathimanian@gmail.com