சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 30 ஆகஸ்ட், 2025

சுற்றுச்சூழல் திரைக்கதைகள் சுப்ரபாரதிமணியன் 1. இயற்கை எனும் இளையக்கன்னி. கேரளா அட்டப்பாடி பள்ளத்தாக்கின் அருகிலான சைலண்ட் வேலி பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா செல்லும் தமிழக கல்லூரி பெண் ஒருத்தி அதன் அழகில் தன் மனதைப் பறி கொடுத்து விடுகிறாள்.அங்கு வாழ ஆசை ஏற்படுகிறது . அங்குள்ள எளிமையானக் குடும்பத்தைச் சார்ந்தவனைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள். பின்னால்.. அந்தப்பகுதியின் நிலங்கள் பழையபடி அதன் மூதாதையரான பழங்குடிகளுக்குத் தரப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அவர்களை கலங்கடிக்கிறது. அங்கிருந்து காலி செய்ய வேண்டியிருக்கிறது அங்கு தாங்கள் வளர்த்த மரங்களை எதற்காக அப்படியே விட்டுச் செல்வது என்று வெட்டி காசாக்கி விட்டு அங்கிருந்து காலி செய்ய எண்ணி மக்கள் மரங்களை வெட்ட மரங்களற்ற அந்தப்பகுதி சூடான பகுதியாகிறது. பிரசவத்திற்கு சென்ற மனைவி அங்கு குழந்தையுடன் மீண்டும் வர மறுக்கிறாள். காடுகள் மரங்கள் அழிக்கப்பட்ட வெப்ப பூமியை தான் விரும்பவில்லை.. தான் விரும்பியது இயற்கை சூழல் உள்ள பகுதி என்று தன் முடிவை கணவனிடம் சொல்கிறாள்..பிரிந்து போகத் தயாராகிறாள். அப்போது என்ன நடந்தது அங்கு .. சாயத்திரை (சுப்ரபாதிமணியின் சாயத்திரை நாவல் சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசு பெற்றது. இந்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளது. இது கஸார்கள் பிரதி * ) கதைச்சுருக்கம்: வெளிநாட்டிலிருந்து பின்னலாடை துறை ஆய்வு சார்ந்த வரும் ஒரு வழிகாட்டு பெண்ணின் பார்வையில் ஆரம்பமாகிறது. அவளுக்கு வழிகாட்டும் பக்தவச்சலம் என்பவனின் பனியன் கம்பெனி மற்றும் வேலையில்லாத வாழ்க்கை என ஓடுகிறது ஆனால் இடம்பெயர்ந்து வந்து அங்கிருக்கும் ஜோதிமணி என்ற பெண்ணுடன் அவன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான். அந்தப் பெண்மணி கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறாள். ஒரு லட்சம் கோடி அன்னிய செலவாணி வருமானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் சாயக்கழிவுகள், நதிநீர் மாசு என்பதை பற்றிய பார்வைகள் திருப்பூர் விளிம்பு நிலை மனிதர்களின் நோக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. சுற்றுசூழல் பாதிப்பும் மக்களின் அவல் நிலையும் தொழில் தாறுமாறாக சூதாட்டமாக போய்க் கொண்டிருப்பதும் அதில் பகடைக்காய்களாக சாதாரண தொழிலாளர்கள் இருப்பதும் இந்த கதையில் மையமாக இருக்கிறது. (* கஸார்கள் : பெரும் வல்லரசுகள் அல்லது பெரும் மதங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்ட நிச்சயமற்ற எதிர்காலத்துடன் கூடிய சிறுபான்மை மக்களின் குறியீடு. சுற்றுச்சூழலில் நச்சாக்கப்பட்ட ஒரு கால கட்டத்தில் வாழும் நாம் எல்லோருமே கஸார்களே- செர்பிய எழுத்தாளர் மிலோராட் பாவிச் எழுதிய புகழ் பெற்ற நாவல் “ கஸார்களின் அகராதி “ ) 0 நொய்யல் ஆற்றங்கரை ஓரத்திலே... நதி மகிழ்ச்சியை தருகிற இடமாக இருக்கிறது. ஆனால் இன்று கழிவுகள் ஓடக்கூடிய இடமாக மாறிவிட்டது. அந்த நதியில் ரத்த ஆறுகளும் கல்ந்து ஓடுகின்றன. இரண்டு வெவ்வேறு சாதிகளை சார்ந்தவர்கள் நண்பராக இருந்து பனியன் வியாபாரத்தில் பெரிய பணக்காரர்கள் ஆக இருக்கிறார்கள். சிறிய பிரச்சனைகள் காரணமாக பிரிந்து போகிறார்கள்.ஆனால் அவர்களின் ரத்த உறவுகள் ஆண்களும் பெண்களும் சிறுவயது முதல் நட்போடு இருக்கிறார்கள் .காதல் புரிகிறார்கள். காதலுக்கு சாதி தடைதானே .சாதி பிரச்சனை காதலர்கள் காரணமாக பல வழக்குகளை உண்டு பண்ணுகிறது. அந்த ரத்த உறவுகள், காதல் என்ன ஆகிறது. காதலர்களை இரு சாதிகளைச் சார்ந்த பணக்காரர்கள் அனுமதித்தார்களா. ரத்தம் ஓட விட்டார்களா. காதலர்கள் என்ன ஆகிறார்கள். நதி இது எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா? -0 ( பூமிக்கு மனிதன் தலைவனா ) கிராமத்துப் பள்ளிக்கூடம். அருகில் நீர்நிலைகள்.இயற்கையை காக்க வேண்டும் என்று ஆசிரியர் பாடம் எடுக்கிறார். முன்பு இந்த இடத்தில் கடல் நீர் வந்து சூழ்ந்து கொண்டது. ஆகவே அங்கிருந்து பள்ளிக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்றுகிறார்கள்.படகில் போய் படித்த குழந்தைகள் வேறு இடத்திற்கு போக வேண்டி இருக்கிறது படகோட்டிகள் கூட செத்துப் போகிறார்கள். இந்த நிலையில் அந்தப் பள்ளியில் படித்த ஒருவன் வளர்ந்து ஆசிரியராக வருகிறான். இப்போது உலகம் வெப்பமய சூழலில் எல்லாம் தலைகீழாக மாறி கொண்டிருக்கிறது. தீவில் உள்ள பள்ளிக்கூடம் மூடப்போகிறது. உலகம் முழுக்க வெப்பமய சூழலில் பல தீவுகள் மற்றும் அவற்றில் உள்ள பள்ளிகள் காணாமல் போகின்றன.. அனைவருக்கும் பள்ளிக் கல்வி என்பதும் கேள்விக்குறியாகிறது. ... மக்களின் பரிதவிப்பு காலநிலை மாற்றத்தால் என்ன ஆனது.. 0 நாடோடி காற்று" காட்டுப்பகுதி. மக்கள் ஆடு, மாடு மேய்த்தும் சிறு அளவில் விவசாயம் செய்தும் வருகிறார்கள். கால்நடைகள் மாமிசத்திற்காக கடத்தப்படுவது, கொல்லப்படுவது அவர்களுக்கு அதிர்ச்சி. பாறுக்கழுகுகள் உள்ள பகுதி அது. . அவை இறந்த கால்நடைகளை தின்னும். கால்நடைகளுக்கு வைத்தியமுறையில் தர்ப்படும் மருந்துகள் ரசயானக்கலப்பாகி அவை இறக்கும் போதும் பாறுக்கழுகுகள் உண்கின்றன. ஆனால் ரசாயனக்கலப்பால் அவை சாகின்றன. குறைந்து வருகின்றன. இதை அறிந்து விசப்படும் மக்கள் ரசாயனம் உபயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பு தெரிவிக்கிறவர்கள் அங்கே நீடிக்க முடிந்ததா. காலம் அவர்களைக் காட்டுக்குள் விட்டு வைத்ததா