சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 30 ஆகஸ்ட், 2025

நெசவுச் சிறுகதைகள் / சுப்ரபாரதிமணியன் தொகுப்பாசிரியர் : பொன் குமார் 0 பொன் குமார் தொகுப்பு நூல்களின் சிகரம்.இந்த நூல் சிகரத்தில் ஒரு முத்து. இதில் 18 முத்தான கதைகள் நெசவாளர் வாழ்வியலைச்சொல்லும் கதைகள். ஆர். சண்முகசுந்தரம் முதல், சுப்ரபாரதிமணியன், பல்லவி குமார் வரைக்கும். ஆர். சண்முகசுந்தரம் கதை: பரிகாரம் ஜீவனம் : ஆர். சண்முகசுந்தரம் கொங்கு மண்ணின் மனிதர்களைப் பற்றி நிறைய எழுதியவர். அவர் சார்ந்த முதலியார் சமூகத்தை பற்றி நிறைய எழுதி இருக்கிறார். இதுலயும் சென்னியப்ப முதலியார் என்ற நெசவாளர் பற்றிய கதை எழுதி இருக்கிறார். அவர் வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் தினசரி நெசவு வேலைகள் பற்றி எழுதி இருக்கிறார் மனிதருடைய வாழ்க்கையில் தூக்கம் பாதிவாழ்க்கையை வீணாக்கி விடுகிறது என்பார்கள் ஆனால் தூக்கம் இல்லாத இருந்தால் என்னவாக இருக்கும் என்று அந்த கதை முடிகிறது. சிறந்த கதை வாழ்வுக்கே ஒரு நாள் என்ற ஒரு கதை தொமுசி ரகுநாதன் அவர்கள் எழுதியது. இவர் எழுதிய பஞ்சும் பசியும் தமிழின் முதல் சோசலிச யதார்த்த வகை நாவல் என்பதாக உள்ளது இதில் உள்ள சுப்பையா முதலியார் என்ற ஒரு நெசவாளியை பற்றி கதையைச் சொல்கிறார். இவர் சேலையை விற்பவராக இருக்கிறார் ஆனால் அந்த சேலை தீபாவளி சமயத்தில் கூட சரியாக விற்பதில்லை ஆனாலும் அவர் மனைவியிடம் காட்டும் சிறு அன்பு என்பது எப்போதைக்குமானதாக இருக்கிறது. சுப்ரபாரதி மணியனின் துண்டு துணி என்ற கதையில் சேலையில் நெய்கிற போது மிச்சமாகிற துண்டுத் துணியை பெண்கள் ஜாக்கெட்டாக பயன்படுத்துவார்கள் அல்லது அதை விற்று சினிமா பார்க்க பயன்படுத்துவார்கள். இந்த அனுபவம், ஒரு குடும்பத்தில் நிகழும் சின்ன சின்ன சந்தோஷங்களை பற்றி இந்த கதை சொல்கிறது பார்வைகள் என்ற சுப்ரபாரதி மணியனின் கதையில் ரங்கசாமி என்ற நெசவாளர் பற்றி சொல்லப்படுகிறது. தங்களுடைய கூலி சார்ந்த போராட்டம் பெரிதாக ஆகும் என்று பயந்து அவர்கள் மனது நடுங்குவது பற்றிய சித்திரங்கள் இந்த கதையில் உள்ளன சுப்ரபாரதி மணியின் கீறல் கதையில் ஒரு கோயிலில் இருக்கும் வேலையில் வைக்கப்படும் பூஜைப் பொருட்களும் அதனால் சமூகத்தில் ஏற்படும் எதிர் வினைகளும் பற்றி பேசுகிறது. மிச்சமிருக்கும் . ஒருவன் என்ற லட்சுமி சரவணகுமாரின் கதை சிப்ட் முறையில் நெசவு ரிசர்வ் செய்யும் தொழிலாளரைப் பற்றி, இருக்கிறது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான நெசவு தொழில் முறைகள் இருக்கின்றன .லட்சுமி சரவணகுமார் அவர் பகுதி நெசவாளர்கள் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். அதில் வருகிற கூலி நெசவு செய்யும் ஒருவன் ஏழை. கூலி நெசவு செய்யும் ஒருவன் மீது மையம் கொள்ளும் ஒரு பெண்ணும் வருகிறார்கள். ஆனால் அவன் ஊருக்கு விடுமுறையில் சென்றவன் திருமணமாகி வருவதும் அவனுக்கு அந்த நெசவுக்கொட்டகையில் உள்ளவர்கள் கொஞ்சம் பணம் போட்டு அன்பளிப்பு தருவதும் என்று நெகிழ்ச்சியை தருகிற கதையாக இருக்கிறது. வீதி சமைப்போர் என்ற வெண்ணிலாவின் கதையின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது. நெசவாளர்கள் பாவு போடுவதற்காக நிறைய நேரம் ஒதுக்குவார்கள் பலர் சேர்ந்து அதை செய்வார்கள் அப்படி பாவு போடுகிற நாளில் நடக்கிற விஷயங்களை அழகாகச் சொல்லி இருக்கிறார் ஊடு பாபு என்ற கதையில் பாரவி அவர்கள் தஞ்சாவூர் பகுதி நெசவாளர்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்லுகிறார் அதில் கஷ்ட ஜீவனம் நெசவாளர்களோடு இணைந்து வருகிறது. தேநீர் கடைக்காரர்கள் வாழ்க்கையும் . தேர் பார்க்க போக முடியாமல் இருக்கிற அவஸ்தையும் பற்றி சிறப்பாக சொல்லியிருக்கிறார். கஞ்சி தொட்டி கதையில் சேலம் வின்செண்ட் அவர்கள் சேலம் பகுதி மக்களுடைய வாழ்க்கையை சொல்லுகிறார். ஒரு பகுதி நெசவாளர்கள் கன்னடம் பேசுபவர்கள். இந்த கதையில் பல உரையாடல்கள் கன்னடத்திலேயே வருவது சிறப்பாக இருக்கிறது நெசவாளர் சமூகத்தின் கஷ்டங்கள் பற்றி நிறைய பேசுகிறார் கன்னட உரையாடல்களும் கன்னட பாடல்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. இந்த பிரச்சனையிலிருந்து மீள்வதற்காக போராடவும் வேண்டி இருக்கிறது என்பதை இந்த கதையிலே வின்சென்ட் அவர்கள் சொல்கிறார் பல்லவி குமார் கதை : உதிரும் கனவுகள்; கேரளாவுக்கு வேலைக்காக கணவன் போகிறான். நெசவு தொழில் நசிந்து போய் இருக்கிற நேரம். வெளியூர் போன கணவனை காணவில்லை அவனை தேடிப்போன மனைவியின் அனுபவங்கள் சொல்லப்படுகின்றன கணவனை நம்பிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை என்று குழந்தைகளைக் காப்பாற்ற மனைவி ஒரு முடிவு எடுக்கிறாள். இருக்கிறதை வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை மனதில் வருகிறது நெசவாளர் குடியிருப்பு என்ற கதையில் சொந்த வீடு வேண்டும் என்று ஆசைப்பட்டு குடியிருப்புகள் கட்ட இடங்கள் வாங்குகிறார்கள் அதனால் அவர்கள் படும் அவஸ்தைகளை சொல்லி இருக்கிறார் பா ராஜா. ஜனநேசனின் கதையில் சிறுநீரகத்தை விற்று ஏமாந்து போகும் நெசவாளர்கள் சிலரின் அவலம். பாரதிநாதன் கதையில் நெசவாளியின் சினிமா கதாநாயகன் பற்றிய பிம்பம் உடைபடுவது பற்றியது. நல்ல கட்டுடைத்தல். பட்டுச்சேலை என்ற கதையில் காதலிக்காக பட்டு சேலையை நெய்கிறான் அவன். கல்யாண பட்டு சேலை ஆனால் காதல் நிறைவேறவில்லை நண்பன் ஒருவன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். இந்த சோகம் சொல்லப்பட்டிருக்கிறது குலப்பெருமை என்ற கதை சீனிவாசன் எழுதியது கொரோனா காலகட்டத்தில் நெசவுத்தொழில் நசிந்து போய்விடுகிறது பலர் பல தொழிலுக்குப் போகிறார்கள் முடி வெட்டும் தொழிலை செய்யலாம் என்று ஒருவன் ஒருவன் நினைப்பது அவருடைய மன அவஸ்தையைச் சொல்லுகிற கதையாக இருக்கிறது. அசோக் குமார், பல்லவி குமர் போன்றவருடைய நீண்ட கதைகளும் உள்ளன. மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு என்று இதை சொல்லலாம். நெசவாளர்களுடைய வாழ்க்கை தமிழகத்தின் பல்வேறு பகுதி சார்ந்த அவர்களுடைய வாழ்க்கை, நடை முறையில் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடுவது பற்றியும் அவர்களுடைய பிரச்சனைகளை பற்றியும் சிறப்பானக் கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்த தொகுப்பு. இந்த தொகுப்பு போல் பல தொகுப்புகளை பொன்குமார் வெளியிட்டு வருகிறார். பணச் செலவு, உழைப்பு இதெல்லாம் பெரிய அளவில் தென்படுகிறது. அவர் தொடர்ந்து இது போன்ற முயற்சிகளில் இடவேண்டும் இந்த முயற்சிகளில் அவர் ஈடுபடுவதற்காகவே அவரை நாம் பாராட்ட வேண்டும் ( தொகுப்பாசிரியர் பொன் குமார் வெளியீடு நிவேதா பதிப்பகம் ரூபாய் 240