சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
சனி, 30 ஆகஸ்ட், 2025
சமூக மேம்பாட்டில் பெண்கள் : சுப்ரபாரதிமணியன்
மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் பொது நலத்திற்கு உகந்தபடி ஊக்கமும் ஆர்வமும் ஆக்கமும் கொண்டு மனிதர்கள் செயல்பட வேண்டும்
மக்களின் தனித்தன்மையானவை தகர்ந்து விடாமல் தேவையான கட்டுப்பாட்டுடன் அவர்களுக்கு தேவையான சமூக வாழ்க்கையை தருவது நல்லிணக்கமாக இருக்கும். இத்தகைய வாழ்க்கை அறத்தின் பாடுபட்டது இவ் வாழ்க்கையில் தலையாய அறம் என்பதை அதன் செயல்பாடுகள் மூலமாக பல பெரியவர்கள் நிருபித்திருக்கிறார்கள்
அப்படித்தான் பல பெண்மணிகள் சமூகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். அவர்கள் இருவரைப்பற்றியது இக்கட்டுரை.
இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு…இவ்வாண்டில் நூற்றாண்டு விழா கொண்டாடும் இரண்டு பெண்மணிகளை பற்றி இதில் காணலாம்
ஒன்று கிருஷ்ணம்மாள் ஜெகநாதன என்ற சமூகப் போராளி இன்னொன்று ராஜம் கிருஷ்ணன் என்ற எழுத்தாளர்
1. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் உழைப்பவனுக்கு தான் சொந்த நிலம் அவசியம் வேண்டும் என்று பாடுபட்ட காந்தியை வாதி. அதிகாரங்களை எதிர்த்து போராடி விளிம்பு நிலை மக்களுக்கு இதெல்லாம் வாங்கித் தந்தார். தமிழகத்தில் பூமிதான இயக்கம் என்பதை பரவலாக்கி வினோபாவின் அறிவுரைப்ப்ப் போராடி பலருக்கு நிலங்களைப் பெற்றுத் தந்தார். கீழ்வெண்மணி மக்களுக்கு நிலங்களை சொந்தமாக்கி அவர்களுடைய மறுவாழ்வுக்கு உதவினார். இப்படித்தான் அவரை நாம் அறிமுகம் செய்யலாம்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்கள் லாப்டி என்று அமைப்பின் மூலம் சொந்த நிலம் ஏழை விவசாயிகளுக்கு என்பதைக் கொள்கையாகக் கொண்டு பாடுபட்டார். நிலங்களைப் பெற்று பல ஏழை விவசாயிகளுக்கு கொடுத்தார்.
தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர் என்பதால் தாழ்த்தப்பட்ட பெண்களுடைய கல்விக்காக பாடுபட்டார். பெண் குழந்தைகள் நிறைந்த கிராமத்தில் படிக்க முடியாத சமூகத்திலிருந்து வந்து பட்டப் படிப்பு படித்தவர்., பலரை அதே போல் பட்டங்கள் வாங்க உதவி செய்தார்.அவரின் கிராமத்திலிருந்து முதலில் கல்லூரிக்கு சென்ற பெண்மணியான அவர் பலரை கல்லூரி வாசலைத் தொட வைத்தார். காந்தி வழியில் செயல்பட்டு அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் தொழில் என்பதை கைக்கொண்டார். வினோபாஜி பத்து வயதிலேயே சன்னியாசம் சென்றவர். காந்தியுடன் செயல்பட்டவர். அவருடம் சேர்ந்து பூமிதான இயக்கத்தை வலிமையாக்கினார். அவர் படிக்கும்போது பட்டுத் துணியை கையில் தொடக்கூடாது, நகைகளை தொடக்கூடாது என்று முடிவெடுத்தவர் வாழ்க்கை முழுவதும் அப்படித்தான் எளிய காந்திய வாழ்க்கையை மேற்கொண்டார்
மக்களுக்காக பதினாறு வயது முதல் சிறை சென்ற அவருடைய கணவர் ஜெகந்நாதன் சுதந்திர நாட்டில்தான் திருமணம் செய்து வேன் என்று சொல்லி சுதந்திரம் பெற்ற பின்னால்தான் கிருஷ்ணம்மாளைத் திருமணத்தை செய்து கொண்டார். கூலி மக்களிடையே உள்ள பிரச்சனைகளை கண்டு நில உரிமைக்காரர்களை எதிர்த்து பல இயக்கங்களை நடத்தினார். அதில் முக்கியமானது பூமிதான இயக்கம்.
கீழ் வெண்மனியில் விவசாயிகளுக்கு எதிராகப் படுகொலை நடந்த போது அங்கு சென்று அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கி நிலம் பெற வற்புறுத்திச் சொன்னார். நிலமற்றப் பெண்களுக்கு தினத்தை சொந்தமாக்குவது வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு அதை செய்தும் காட்டினார்.
எல்லோருக்கும் குடியிருக்க இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பகுதியில் வெற்றியடைந்திருக்கிறார் வீடுகளைபல்வேறு வகைகளில் இழந்தவர்களுக்கு குடிசை வீடுகளை கட்டி தர பல்வேறு திட்டங்களை எடுத்துக் கொண்டு நிறைவேற்றினார்.
இறால் பண்ணையால் கடற்கரை பகுதிகள் சீர்கெட்ட போது பல வழக்குகளை தொடர்ந்தார். போராட்டங்களை நடத்தினா.ர் அந்த போராட்டங்களின் விளைவாக கடற்கரையை ஒட்டி 500 மீட்டர் அளவில் எந்த இறால் பண்ணையும் அமைக்க்க் கூடாது என்று போராடியதால் அரசாங்கம் பல சட்டங்கள் போட்டு இறால் பண்ணையைக் கட்டுப்படுத்தின.
100 வயதை எட்டிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்கள் தொடர்ந்து தன்னுடைய சமூகப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள் இன்றும்
2. ராஜம் கிருஷ்ணன் அவர்கள்
.
1. 1925இல் முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள்
முறையான பள்ளிக் கல்வி பெறாதவர் 15 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டவர். தானாகவே ஆங்கிலம், தமிழ், ஹிந்தி கற்றுக் கொண்டவர். இந்த சமூகத்திற்கு தன் எழுத்து பயன்படும் என்று இடதுசாரி பார்வையோடு பெண்ணியப்பார்வையும் கலந்து இலக்கிய படைப்புகளை தமிழில் தந்தவர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள். வெவ்வேறு களங்களுக்கு சென்று கள ஆய்வுகளை செய்து தன்னுடைய படைப்புகளை சமூகத்திற்கு தந்து நல்ல சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டவர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் வளர்ந்தவர் என்றாலும் அவருடைய எண்ணங்கள் சாதாரண புராதான கட்டுப்பாடுகளுக்குள் இருக்கவில்லை.
சுதந்திர ஜோதி என்ற நாவல் மூலம் அறிமுகமானார் அதன் பின்னால் தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து கரிப்பு மணிகள் நாவலும் நீலகிரி இன சமூக வாழ்க்கையை குறிப்பிடும் குறிஞ்சித்தேன் நாவலும் பள்ளத்தாக்கு கொள்ளையரைப் பற்றிய நாவலும் என்று புதிய பார்வைகளை எழுதினார். சமூக விடுதலையைப் பற்றிய அக்கறை அவருடைய படைப்புகளில் இருந்தன. பெண்ணியச் சிந்தனைகளுக்கும் வடிகாலாக அவரின் படைப்புகளையெல்லாம் கொண்டு வந்தார்.
90 வயதில் உடல் நலக் குறைவால் இறந்தார். உடலை மருத்துவமனைக்கு கொடுத்தார். அவருடைய சொத்துக்களை எல்லாம் சமூக வாழ்க்கைக்குச் செலவு செய்தார். அரசியல் சமூக அவலங்களை கொண்டு அவர் எழுதிய சிறுகதைகளும் நாவல்களும் தமிழ் இலக்கிய படைப்புகளில் தமிழ் சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்ற கூறிய பார்வையை தந்தவை
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் பல பரிசுகளைப் பெற்றன. 'வேருக்கு நீர்' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். அகாதமி விருதைப் பெற்ற முதல் தமிழ்பெண் படைப்பாளர் இவர்தான். வளைக்கரம் சோவியத்லாந்து விருது பெற்றது
நூற்றாண்டு கொண்டாடும் இந்த இரண்டு பெண்மணிகளின் வாழ்க்கை சமூக மேம்பாட்டிற்காக பெண்களின் அக்கறையை குறிப்பிட்ட செயல்களாக இருந்தன..
இவர்களை பின்பற்றி தமிழ் இலக்கிய உலகம் தன் பார்வையை சமூகவயமான படைப்புகள் மீது கொண்டு செல்ல வேண்டும்.
சமூக மேம்பாட்டில் பெண்கள் பங்கின் உதாரணமாக விளங்கியவர்கள் இவர்கள் . இவர்களின் காலடிகள் தொடரப்பட வேண்டும்
----------------------
0
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
சுற்றுச்சூழல் பிரார்த்தனை
0
போப் பிரான்சிஸ்: ( தமிழில்: சுப்ரபாரதி மணியன் )
0
இந்த பூமி நமது பொதுவான வீடு
நம்மை அணைத்துக் கொள்ளும் தாய்
எமது சகோதரியும் தாயுமான பூமி
எம்மை காக்கிறது
அதன் மலர்களும் கனிகளும் வாழ்விக்கின்றன
இறைவா உம்மைப் புகழ்கின்றோம் “ என்கிறார்
அசிசியின் புனித பிரான்சிஸ்
0
இன்று என் தாய் கதறுகிறாள்.
அலட்சியத்தால் பேராசையால்
கடவுளின் வரங்களை அழைத்தோம்.
நாங்களே எஜமானது என்ற எண்ணத்தில் சுரண்டினோம்.
அவள் உடல் நோயடைந்தது
காற்றும், நீரும் மண்ணும் உயிரினம் அனைத்தும்
புண்பட்டு பூமி சுமையாகிப் போனது..
சிரமத்தில் முணுமுணுக்கிறாள்.
நாமே மண்ணின் புழுதி தான்.
நாம் சுவாசிப்பது அவளது சுவாசமே
அவளது நீரே நமக்கு உயிர் தருகிறது
பேராசை கொண்ட இயற்கை நுகர்வால்
மானுடம் தன்னை அழித்துச் சாகிறது
அதீக நுகர்வு அறிவியல் தொழில் நுட்ப பொருளாதாரம் சமூக உணர்வும் அற உணர்வும் அற்றுப்போனால் அழிவே வரும்.
இயற்கை காப்பதே மனிதரை காப்பது
மனித வாழ்வை அழியாது காப்பது மனிதர் கடமை
ஒவ்வொரு உயிரின் பெருமையையும் உணர்போம். ஒவ்வொன்றும் இணைந்த இணைப்பே இவ்வுலகம்.
0
இயற்கை நேயம் அனைத்திலும்
கடவுளைக் காணும் ஒவ்வொரு உயிரிலும்
அளவற்ற அன்பு கொள்.
மரமும் பட்டாம்பூச்சியும் உன் சகோதரர் ஆகும்
.இயற்கை ஓர் நல்ல புத்தகம் என்பார்
அசிசி இறைவனின் பேச்சை நீ அதில் கேட்கலாம்
காட்டை அழிக்காதே .போற்றி வழிபடு.
பெயரிடாத மருந்துகள் அதிலே உள்ளன.
நம் ஒரே வீடான பூமியை எப்படிக் காப்பது
0
பூமியில் பெரியதுமில்லை சிறியதுமில்லை
பருவநிலை மாற்றம் நம் பாவத்தின் சம்பளம்
பூமியை போர்த்திய காடுகளை அழித்தோம். வளமான நிலங்களை வீணாக்கினோம் காற்றை, நீரை, சிறு உயிரினங்களைக் கொன்றோம் இதற்கெல்லாம் மன்னிப்பு ஏது
இயற்கை அழிப்பு,, இறைவனுக்கெதிரான பாவம் கண்மூடித்தனமான வளர்ச்சி. மனிதர் திறனில், அறிவியலில் இன்னும் அளவற்ற நம்பிக்கை அறிவியல் மட்டும் தீர்வாகாது. உணர்வும் தேவை அணுவுலைக் கழிவுகள் ஆபத்தானவை நெகிழி கழிவில் பூமி மூச்சு திணறுது மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரிப்பது மிகவும் நல்லது
பசுங்குடி வாயுவால் பூமி வெப்பமாகிறது காட்டை அழித்து நாடு செய்தது போதும் நாடு அழியும் முன் மீண்டும் காட்டை வளர் பருவ மழை மாற்றம் உலகையே அழித்துவிடும் வாழ்விடமிழந்து அலைபவர் கோடி நோவாவின் கப்பல் காப்பாற்ற மீண்டும் வராது
0
நீரில்லாமல் தொழில் மற்றும் விவசாயம் நடக்குமா டாலரை, , யென்னைக் குடிக்க முடியுமா ஜீவ நதிகளை கழிவுகளாலே அழித்தோம் நிலத்தடி நீரை உறிஞ்சு எடுத்தோம் குடிநீர் கூட விலையாகிறது ஆறுகள் கூட விலையாகிறது நீரின்றி அமையாது உலகு நல்லோர் வாக்கு குடிநீர் உரிமை, அடிப்படை உரிமை ஒவ்வொரு சொட்டும் உயிர் தரும் சொத்து தண்ணீர் தனியார் சொத்தாகி விட்டது தண்ணீருக்கான உலகப் போர் நிச்சயம். பூமி பல்லுயிர் காக்கும் பெட்டகம் கடவுள் படைத்ததை மனிதன் அழிப்பதா ‘ஆல்கே’ கூட மானுட மூத்தோர் உயிரின சங்கிலி அழித்தால் இன்னும் அழிவே.
0
மலர்களும் பறவைகளும் அழிந்து போனால் உலகம் வர்ண மையம் இல்லாமல் மாறுமே. நாற்கர சாலையில் தேயிலை தோட்டம் பணம் தரலாம் , காற்று தருமா ’ ‘ டோடோ ‘ அழிவில் கல்வாரியா மரம் காணாமல் போனதே மண்புழு அளித்தோம் மண் மலடானதே அமேசான் அழித்து சோயா வளர்ப்பதா ராட்சத ” ட்ராலர்கள் ‘ திமிங்கலம் தின்றன விதைக்காது விளையும் அட்சய பாத்திரம் கடல் எண்ணெய் கசிவில் மாகடல் அழிப்பதா கொதிக்கும் அணுவுலைக் கழிவில் உயிர் முட்டை வேகுது நிறவெறி இடத்தை பணவெறி பிடித்தது அறிவியல் நுட்பம் ஆட்களுக்கு வேலை இல்லை போதை காசில் அரசு ஓடுது ” டச் கிரீன் வைப்பில் “ உறவுகள் விரிந்தன
0
காதலி கூட கைப்பேசி தயவில்
ஞானிகள் அமர்ந்த மரத்தடியில்லை
குடும்ப உறவை டாலர் பிரிக்கிறது
கல்லறை நிகழும் காணொளி காட்சியில்
வளங்களை அழித்து வளம் பெற துடிக்கிறோம்
கோடுகள் எல்லாம் மனிதர் போட்டது
கோடிகள் எல்லாம் கொள்ளையில் சேர்வது
0
என்றாலும் மீதம் இருக்கிறது நம்பிக்கை
இயற்கையை விரும்பும் மனிதர்களின் வளர்ச்சி
ஊழலை தடுக்க உயிர் தரும் சிலர்
சிக்கன வாழ்வுக்கு திரும்பும் நல்லவர்
இயற்கை விவசாயம் போற்றும் சிலர்
மகிழ்வுந்து ஒதுக்கி மிதிவண்டியில் செல்வோர்
தேம்சில் “மசீர் “ மீன்கள் மீண்டும்
இயற்கையின் வடிவில் இறைவனைக்காண்போர்
நுகர்வு வெறியைக் குறைக்கும் நல்லோர்.
உலகின் உப்பாய் வாழ்வோர் இவர்
பிரச்சினைகளைப் படிக்கல்லாக்குவோம்
விலங்கு மாட்டும் சந்தையை உடைப்போம்
சிந்தனையை விதைக்கும் கல்வி பயில்வோம்
மனிதனை மாற்றினால் உலகம் மாறும்
ஒழுகும் குழாயை நிறுத்த நதிகள் பாயும்.
0
விளக்கை,குளிர்சாதனத்தை நிறுத்து.
கரிமிலா காற்றை குறை
நெகிழியை ஒதுக்கு. புற்றுநோய் ஒழியும்.
மரம் நடு பூமி குளிரும்
நம்பிக்கை கொள் நம்மால் முடியும்
தன்னை இழப்பவன் உலகை வெல்வான்
உலகை நேசிக்கும் ஆன்மீகம் தேவை
ஏழைத் தச்சனின் மகனே நமக்கு அரசன்
குறைந்த உடமை நிறைந்த வாழ்வு
குறைந்த பொருட்கள் நிறைந்த வாழ்வு
பொருட்களின் குவிப்பில் அருமை புதையுறும்.
விதைத்தவர் அறுத்தவர் உழைத்தவர் யாரோ.
0
உறவைத் தொடுகையில் நன்றிகள் சொல்வோம்
சமத்துவம் நோக்கியா நீண்ட பயணம்
பசித்தவர்களுக்கெல்லாம் அப்பமும் ரசமும்
லாசரஸ் எழுப்பிடும் அன்பு வைத்தியம்
புதிய ஜெருசலம் தொலைவில் தெரியது
உயிரினம் அனைத்திற்கும் ஒரே வீடு நம் பூமி
( போப் பிரான்சிஸ் தேவாலயங்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தின் சுருக்கம் ) \\ தமிழில்: சுப்ரபாதி மணியன்
சுப்ரபாரதிமணியன்
27 நாவல்கள் உட்பட 125 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன்.
சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது, மொழிபெயர்ப்பாளர் விருது இரண்டு லட்சம் தொகையுடன் உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.
சமீபத்தில் இவர் பெற்ற முக்கிய விருதுகள்:
2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை / 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது. /சிலுவை நாவல் 2023 எஸ் ஆரெம் தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் பெற்றுள்ளது.
இவரின் 10 சிறுகதைகள் குறும்படங்களாகியுள்ளன ( அயலான் இயக்குனர் ரவிக்குமார், பேரெழில் குமரன் உட்பட பலரின் இயக்கத்தில் அந்தக்குறும்படங்கள் வந்துள்ளன ).இவரின் இயக்கத்தில் வந்த குறும்படம் “ நாணல் ”.
5 திரைப்பட நூல்கள் வெளியிட்டுள்ளார், இதைத் தவிர 10 திரைக்கதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார்.கனவு இலக்கிய இதழை 39 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.கனவு திரைப்பட சங்கத்தையும் நடத்தி வருகிறார்.திரைப்பட சங்க கூட்டமைப்பின் ரீஜினல் கவுன்சில் உறுப்பினர். பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்கு பெறுகிறார்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் நாவல், நாடகம் ஒவ்வொன்றும் சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை .
இவரின் கட்டுரைத் தொகுப்புகளில் சுற்றுச்சூழல், திரைப்படக் கட்டுரைகள், இலக்கியக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என் 35 நூல்கள் அடங்கும். இவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நூல்கள் அதிகம் விற்பனையான நூல்கள்.
கவிதை நூல் ஒன்றும், நாடக நூல் ஒன்றும் இவரின் 125 நூல்களில் அடங்கும்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் , நாடகம் ஒன்றும் நாவல், சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை நாவல்கள் .. வெப்பம், கொரானா தடுப்பூசி
சிறுகதைகள் : அன்பே உலகம், சிந்திக்க வைக்கும் சிறுவர்கதைகள் : நாடகம் : பசுமைப்பூங்கா..
SUBRABHARATHIMANIAN சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
--------------------------------------------------------------------------------------------------------------------------------FB kanavu subrabharathimanian tirupur/ Subrabharathimanian palaniasamy
------------------------------------------------------------------------------------------------------------------------------ subrabharathi@gmail.com/ rpsubrabharathimanian@gmail.com
அஞ்சலி: சுப்ரபாரதிமணியன்
சுற்றுச்சூழல் காவலர்கள்
1. புலி மனிதர்:
அந்த புலி மனிதரை திருச்சூர் திரைப்பட விழா படமொன்றின் மூலம் அறிந்தேன். புலிகளின் தேசம் என்ற படமே அவரை அறிமுகப்படுத்தியது.
அந்தப்படம் புலிகளின் களம், புனித நீர், தெரியாதக் கடல், பாலைவன் ராஜ்யம்,கடவுள்களின் மலைகள், பருவ மழைக்காடுகள் ஆகிய பகுதிகளைக்கொண்டிருந்தது,
இந்தியாவின் இயற்கை சரித்திரங்களின் ஒரு பகுதியானார் அவர். இமாலயம் முதல் இந்தியாவைன் காடுகளில் அலைந்தவர்.முதல் பாகப் படத்தில் குஜராத்தில் வங்காளப்புலி ஒன்று குட்டிகளுடன் வாழ்வதையும் அதன் வேட்டை லாவகங்களையும் பற்றிச் சொல்கிறார். வேட்டையிலும் தோல்விகள் இருக்கும் என்பதைச் சொன்னவர் தன் வாழ்க்கைத் தோல்விகளையும் பற்றிச் சொல்கிறார்.கங்கை பிரம்மபுத்திரா பகுதி காட்டுவாழ்க்கையை நுணுக்கமாகச் சொன்னார் இதில்.
புலிகளுடன் வாழ்தல்
(Living with Tigers), புலிகளின் அந்தரங்க வாழ்வு (The Secret Life of Tigers), புலி கனல்: இந்தியாவில் புலிகளின் ஐந்நூறு ஆண்டு வரலாறு (Tiger Fire: 500 Years of the Tiger in India) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
அறிவியல் தகவல்களை கதை வடிவில் உணர்வு பூர்வமாக தரும் ஆற்றல் மிக்க எழுத்து வல்லமை கொண்டவர்.
இவர் இயற்கைப் பாதுகாப்பு குறித்து 30 புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார்.
தாப்பர், 1959ஆம் ஆண்டில் செமினார் எனும் அரசியல் இதழை நிறுவிய ராஜ் தாப்பர், புகழ்பெற்ற பத்திரிகையாளரும் அரசியல் வர்ணனையாளருமான ரோமேசு தாப்பர் ஆகிய இணையரின் மகனாக மகாராட்டிர தலைநகர் மும்பையில் பிறந்தார். புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் இவரது அத்தை ஆவார்.
வால்மிக் தாப்பர் இந்தியாவின் புலிகளின் குறித்து தனது ஆய்வினைப் பல தசாப்தங்களாக தொடர்ந்தார். இவர் பதேக்சிங் இரத்தோரால் ஈர்க்கப்பட்டார்
ராஜஸ்தானின் ரந்தம்போர் தேசிய பூங்காவில் உள்ள புலிகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தாபரின் பெரும்பாலான களப்பணிகள் ராஜஸ்தானை மையமாகக் கொண்டிருந்தன, அத்துடன், மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்
இரணதம்பூர் அறக்கட்டளை இவரது பணியினை அங்கீகரித்து தலைமைப் பொறுப்பை வழங்கியது. இவர் 2005-ஆம் ஆண்டு புலிகள் பணிக்குழுவில் உறுப்பினராக இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். புலிகள்-மனிதர்களின் சகவாழ்வின் வாய்ப்புகளில் அதிக கவனம் செலுத்துவதாக தனது கருத்து வேறுபாடு குறிப்பில் பெரும்பான்மை பணிக்குழுவின் பார்வையை இவர் விமர்சித்தார், இது இவரது பார்வையில் குழுவின் நோக்கத்துடன் ஒத்துப்போகவில்லை.
1973-ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம்தோல்வியடைந்ததாக இவரது பகுப்பாய்வுகள் தெரிவித்தன.[8] பெரும்பாலும் அறிவியல் ரீதியாகப் பயிற்சி பெறாத வன அதிகாரிகளின் தவறான மேலாண்மை குறித்து கவனத்தை ஈர்த்த இவர், புலிகள் திட்டத்தினை விமர்சித்தார். இவரது கடைசி புத்தகமான தி லாஸ்ட் டைகர் (ஆக்சுபோர்டு யுனிவர்சிட்டி பிரசு) இந்த கூற்றினை வலுவாக கூறுகிறது.
இந்தியாவின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் மீது தாப்பர் தொடர்ந்து விமர்சித்ததில் ஒன்று ஆயுதமேந்திய ரோந்துப் பணிகளின் மூலம் வேட்டையாடுவதைத் தடுக்க இது விரும்பவில்லை என்பதும், அறிவார்ந்த அறிவியல் ஆய்வுகளுக்கு காடுகளில் அனுமதி இல்லை என்பதும் மையக் கருத்தாகும்.
'மச்ச்லி' என்ற புலியுடனான புகழ்பெற்ற உறவு இவரது சில வரலாறுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தாப்பரின் மிகவும் நேசத்துக்குரிய புலிகள் பிபிசி ஆவணப்படமான மை டைகர் ஃபேமிலியில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
0
2. பசுமை மனிதன்
மண்ணுக்குள் விதையானார் பாலன் :
0
25 ஆண்டுகளில், இருபது லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடவு செய்து, பராமரித்து வளர்த்துள்ளார் பாலன் அவர்கள் என்பதே பாலக்காட்டுச் சாதனையாகும். பாலன் அவர்களின் சாதனையாகும்
எப்போதும், பச்சை நிற சட்டையும், வேட்டியும் அணிந்து, எப்போதும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடுவதையே மேற்கொண்டார்.
பாலன் அவர்கள் அவரைப் பற்றிய ஆவணப்படத்தில் காடுகளில் மலைகளின் அலைந்து திரிகிறார். எங்கெங்கு காலியிடங்கள் உள்ளதோ அங்கெல்லாம் மரங்களை நடுகிறார். நாவல் பழங்களை உலுக்கி எடுத்துச் சாப்பிடுகிறார். மற்றவர்களுக்கும் தருகிறார் .பனங் எடுத்து பலருக்குத் தருகிறார், பனரங்கொட்டைகளை பல இடங்களில் நடுகிறார் இந்த செயல்பாடுகளுக்கு எல்லாம் துணையாக இளைஞர்களையும் பெண்களையும் வைத்துக்கொண்டு செயல்படுகிறார் என்பது முக்கியமாக இருக்கிறது. போகும் இடங்களில் எல்லாம் சுற்றுச்சூழல் கேடுபற்றியும் நெகிழியின் தீமைகளை பற்றியும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். உலகமயமாக்கல் செய்திருக்கும் தீய விளைவுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை குறைந்து போய் இருப்பதும் நுகர்வு அதிகமாக போயிருப்பதையும் பற்றி பேசுகிறார். இந்த உரைகளும் மற்றவர்களுடன் உரையாடுவதும் பலருக்கும் மகிழ்ச்சி வருகிறது. இந்த உரையாடல் தான் தன்னுடைய மரம் நடும் பணிகளைத் தாண்டி மிக முக்கியமான ஒன்று என்று அவர் கருதுகிறார். அதை அவர் பற்றிய ஆவணப்படம் சொல்கிறது.
அவரின் அயராது மரம் நடும் பணியை பலரும் ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார்கள். இயக்கம் வி கே சுபாஷ்
பாலக்காடு பாலன் என்று பிறரால் சொல்லப்பட்டாலும்
அவர் கல்லூர் பாலன். கல்லூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் அவர்.
, பாலக்காடு மாவட்டம், கல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலன், . சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் இருதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,பிரபவரி 2025ல் எழுபத்தைந்தாம் வயதில் இறந்தார். .
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், இயற்கையை பாதுகாப்பதை முக்கிய பணியாக கொண்டு செயல்பட்டார்.
இவர், தரிசாக கிடந்த நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை, நீண்ட கால முயற்சியால் மரக்காடாக மாற்றி, வனத்தில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியை அமைத்தும், பழங்களை உணவாக வழங்கியும் முன்மாதிரியான செயல்பட்டு மக்கள் மனதை ஈர்த்தவர்.
பாலக்காட்டின் வறண்ட பகுதிகளை பசுமையாக்கிய மனிதர். பாலக்காட்டின் படுமைப் பகுதிகளைப் பார்க்கிற போது நினைவு வருகிறவர் பாலன் அவர்கள்.
நெசவுச் சிறுகதைகள் / சுப்ரபாரதிமணியன்
தொகுப்பாசிரியர் : பொன் குமார்
0
பொன் குமார் தொகுப்பு நூல்களின் சிகரம்.இந்த நூல் சிகரத்தில் ஒரு முத்து.
இதில் 18 முத்தான கதைகள் நெசவாளர் வாழ்வியலைச்சொல்லும் கதைகள். ஆர். சண்முகசுந்தரம் முதல், சுப்ரபாரதிமணியன், பல்லவி குமார் வரைக்கும்.
ஆர். சண்முகசுந்தரம் கதை:
பரிகாரம் ஜீவனம் : ஆர். சண்முகசுந்தரம் கொங்கு மண்ணின் மனிதர்களைப் பற்றி நிறைய எழுதியவர். அவர் சார்ந்த முதலியார் சமூகத்தை பற்றி நிறைய எழுதி இருக்கிறார். இதுலயும் சென்னியப்ப முதலியார் என்ற நெசவாளர் பற்றிய கதை எழுதி இருக்கிறார். அவர் வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் தினசரி நெசவு வேலைகள் பற்றி எழுதி இருக்கிறார் மனிதருடைய வாழ்க்கையில் தூக்கம் பாதிவாழ்க்கையை வீணாக்கி விடுகிறது என்பார்கள் ஆனால் தூக்கம் இல்லாத இருந்தால் என்னவாக இருக்கும் என்று அந்த கதை முடிகிறது. சிறந்த கதை
வாழ்வுக்கே ஒரு நாள் என்ற ஒரு கதை தொமுசி ரகுநாதன் அவர்கள் எழுதியது. இவர் எழுதிய பஞ்சும் பசியும் தமிழின் முதல் சோசலிச யதார்த்த வகை நாவல் என்பதாக உள்ளது இதில் உள்ள சுப்பையா முதலியார் என்ற ஒரு நெசவாளியை பற்றி கதையைச் சொல்கிறார். இவர் சேலையை விற்பவராக இருக்கிறார் ஆனால் அந்த சேலை தீபாவளி சமயத்தில் கூட சரியாக விற்பதில்லை ஆனாலும் அவர் மனைவியிடம் காட்டும் சிறு அன்பு என்பது எப்போதைக்குமானதாக இருக்கிறது.
சுப்ரபாரதி மணியனின் துண்டு துணி என்ற கதையில் சேலையில் நெய்கிற போது மிச்சமாகிற துண்டுத் துணியை பெண்கள் ஜாக்கெட்டாக பயன்படுத்துவார்கள் அல்லது அதை விற்று சினிமா பார்க்க பயன்படுத்துவார்கள். இந்த அனுபவம், ஒரு குடும்பத்தில் நிகழும் சின்ன சின்ன சந்தோஷங்களை பற்றி இந்த கதை சொல்கிறது
பார்வைகள் என்ற சுப்ரபாரதி மணியனின் கதையில் ரங்கசாமி என்ற நெசவாளர் பற்றி சொல்லப்படுகிறது. தங்களுடைய கூலி சார்ந்த போராட்டம் பெரிதாக ஆகும் என்று பயந்து அவர்கள் மனது நடுங்குவது பற்றிய சித்திரங்கள் இந்த கதையில் உள்ளன சுப்ரபாரதி மணியின் கீறல் கதையில் ஒரு கோயிலில் இருக்கும் வேலையில் வைக்கப்படும் பூஜைப் பொருட்களும் அதனால் சமூகத்தில் ஏற்படும் எதிர் வினைகளும் பற்றி பேசுகிறது.
மிச்சமிருக்கும் . ஒருவன் என்ற லட்சுமி சரவணகுமாரின் கதை சிப்ட் முறையில் நெசவு ரிசர்வ் செய்யும் தொழிலாளரைப் பற்றி, இருக்கிறது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான நெசவு தொழில் முறைகள் இருக்கின்றன .லட்சுமி சரவணகுமார் அவர் பகுதி நெசவாளர்கள் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். அதில் வருகிற கூலி நெசவு செய்யும் ஒருவன் ஏழை. கூலி நெசவு செய்யும் ஒருவன் மீது மையம் கொள்ளும் ஒரு பெண்ணும் வருகிறார்கள். ஆனால் அவன் ஊருக்கு விடுமுறையில் சென்றவன் திருமணமாகி வருவதும் அவனுக்கு அந்த நெசவுக்கொட்டகையில் உள்ளவர்கள் கொஞ்சம் பணம் போட்டு அன்பளிப்பு தருவதும் என்று நெகிழ்ச்சியை தருகிற கதையாக இருக்கிறது.
வீதி சமைப்போர் என்ற வெண்ணிலாவின் கதையின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது. நெசவாளர்கள் பாவு போடுவதற்காக நிறைய நேரம் ஒதுக்குவார்கள் பலர் சேர்ந்து அதை செய்வார்கள் அப்படி பாவு போடுகிற நாளில் நடக்கிற விஷயங்களை அழகாகச் சொல்லி இருக்கிறார்
ஊடு பாபு என்ற கதையில் பாரவி அவர்கள் தஞ்சாவூர் பகுதி நெசவாளர்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்லுகிறார் அதில் கஷ்ட ஜீவனம் நெசவாளர்களோடு இணைந்து வருகிறது. தேநீர் கடைக்காரர்கள் வாழ்க்கையும் . தேர் பார்க்க போக முடியாமல் இருக்கிற அவஸ்தையும் பற்றி சிறப்பாக சொல்லியிருக்கிறார்.
கஞ்சி தொட்டி கதையில் சேலம் வின்செண்ட் அவர்கள் சேலம் பகுதி மக்களுடைய வாழ்க்கையை சொல்லுகிறார். ஒரு பகுதி நெசவாளர்கள் கன்னடம் பேசுபவர்கள். இந்த கதையில் பல உரையாடல்கள் கன்னடத்திலேயே வருவது சிறப்பாக இருக்கிறது நெசவாளர் சமூகத்தின் கஷ்டங்கள் பற்றி நிறைய பேசுகிறார் கன்னட உரையாடல்களும் கன்னட பாடல்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. இந்த பிரச்சனையிலிருந்து மீள்வதற்காக போராடவும் வேண்டி இருக்கிறது என்பதை இந்த கதையிலே வின்சென்ட் அவர்கள் சொல்கிறார்
பல்லவி குமார் கதை : உதிரும் கனவுகள்;
கேரளாவுக்கு வேலைக்காக கணவன் போகிறான். நெசவு தொழில் நசிந்து போய் இருக்கிற நேரம்.
வெளியூர் போன கணவனை காணவில்லை அவனை தேடிப்போன மனைவியின் அனுபவங்கள் சொல்லப்படுகின்றன கணவனை நம்பிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை என்று குழந்தைகளைக் காப்பாற்ற மனைவி ஒரு முடிவு எடுக்கிறாள். இருக்கிறதை வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை மனதில் வருகிறது
நெசவாளர் குடியிருப்பு என்ற கதையில் சொந்த வீடு வேண்டும் என்று ஆசைப்பட்டு குடியிருப்புகள் கட்ட இடங்கள் வாங்குகிறார்கள் அதனால் அவர்கள் படும் அவஸ்தைகளை சொல்லி இருக்கிறார் பா ராஜா.
ஜனநேசனின் கதையில் சிறுநீரகத்தை விற்று ஏமாந்து போகும் நெசவாளர்கள் சிலரின் அவலம்.
பாரதிநாதன் கதையில் நெசவாளியின் சினிமா கதாநாயகன் பற்றிய பிம்பம் உடைபடுவது பற்றியது. நல்ல கட்டுடைத்தல்.
பட்டுச்சேலை என்ற கதையில் காதலிக்காக பட்டு சேலையை நெய்கிறான் அவன். கல்யாண பட்டு சேலை ஆனால் காதல் நிறைவேறவில்லை நண்பன் ஒருவன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். இந்த சோகம் சொல்லப்பட்டிருக்கிறது
குலப்பெருமை என்ற கதை சீனிவாசன் எழுதியது கொரோனா காலகட்டத்தில் நெசவுத்தொழில் நசிந்து போய்விடுகிறது பலர் பல தொழிலுக்குப் போகிறார்கள் முடி வெட்டும் தொழிலை செய்யலாம் என்று ஒருவன் ஒருவன் நினைப்பது அவருடைய மன அவஸ்தையைச் சொல்லுகிற கதையாக இருக்கிறது.
அசோக் குமார், பல்லவி குமர் போன்றவருடைய நீண்ட கதைகளும் உள்ளன.
மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு என்று இதை சொல்லலாம்.
நெசவாளர்களுடைய வாழ்க்கை தமிழகத்தின் பல்வேறு பகுதி சார்ந்த அவர்களுடைய வாழ்க்கை, நடை முறையில் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடுவது பற்றியும் அவர்களுடைய பிரச்சனைகளை பற்றியும் சிறப்பானக் கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்த தொகுப்பு.
இந்த தொகுப்பு போல் பல தொகுப்புகளை பொன்குமார் வெளியிட்டு வருகிறார். பணச் செலவு, உழைப்பு இதெல்லாம் பெரிய அளவில் தென்படுகிறது. அவர் தொடர்ந்து இது போன்ற முயற்சிகளில் இடவேண்டும் இந்த முயற்சிகளில் அவர் ஈடுபடுவதற்காகவே அவரை நாம் பாராட்ட வேண்டும்
( தொகுப்பாசிரியர் பொன் குமார்
வெளியீடு நிவேதா பதிப்பகம் ரூபாய் 240
என் பார்வையில் இரு சிறந்த நாவல்களைப் பற்றி
1 அலர்
நாராயணி கண்ணகி நாவல்
விளிம்பு மக்களை பற்றிய ஒரு நாவல்.
இந்த விளிம்பு நிலை மக்கள் வெகு சாதாரணமானவர்கள் .அவர்களின் விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் ஒரு பெண்ணைப் பற்றிய நாவல் இது அவள் குடும்பமாக இருக்க ஆசைப்படுகிறாள் ,குழந்தை, குடும்பம் உறவுகள் என்று இருக்க ஆசைப்படுகிறாள்
ஆனால் சமூகம் அவளை ஒரு விலைமகளாகத் தள்ளிவிட்டது வேறு வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள் அங்கிருந்து வெளியேற ஆசைப்படுகிறாள். உடம்பு வேண்டாம் கூலி வேலை செய்தாவது பிழைக்க முடியும் என்று நம்புகிறாள் ஆனால் உலகத்தின் பார்வையில் இருந்து அவள் தன்னை விடுவித்துக் கொள்ள முடிவதில்லை. உலகத்தின் பார்வையில் ஒரு முகமூடி இருக்கிறது அந்த முகமூடி பார்க்கிற பார்வையில் அவளை அப்படி மட்டும் பார்க்கிறார்கள்
இந்த சூழலில் அவளுக்கு விதிக்கப்படுகிற வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இந்த நாவல் சொல்கிறது
இந்த நாவலின் கதாநாயகியும் அவனை சுற்றியுள்ள மனிதர்களில் வாழ்க்கையையும் சொல்கிறபோது எந்த பக்கம் சாயாமல் நாவலாசிரியர் வாழ்க்கை இழப்புகளை சொல்லிக்கொண்டு போகிறார். ஆசை, நம்பிக்கையை விட வாழ்க்கை கொடுக்கும் படிப்பினை மிக முக்கியமானது என்பதை அவளும் தெரிந்து கொண்டிருக்கிறாள் அவர்களோடு சேர்ந்து வாழ்கிற பல பெண்களும் மற்றும் கமலா பாட்டி லதா லட்சுமி பாலகிருஷ்ணன் கண்ணப்பன் காவல்துறையினர் போன்றவர்கள் கூட இதை உணர்த்துகிறார்கள்
நெஞ்சை கவ்வுகிற மொழியில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை நேர்கோட்டுத் தன்மையில் சொல்லுகிற ஒரு முக்கியமான நாவலாக இருக்கிறது
2. ஞாலம் .. தமிழ் மகன் எழுதிய நாவல்
இந்த நாவல் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாள் தமிழகத்தின் ஒரு பகுதியில் நடந்த நிலம் சார்ந்த உரிமைக்கான போராட்டங்களை பற்றிப் பேசுகிறது. விவசாயிகள் போராடுகிறார்கள் அப்போதைய நிலப்பரப்பு அமைப்பு சாதி ஆதிக்கம் மிகுந்தது .போராடும் விவசாயிகளை பற்றியும் இந்த நாவல் சொல்கிறது
உண்மையான சமூகத்தை, , உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தங்களின்நிலப்பரப்புகளால் பிரிக்கப்பட்டு நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கையையும் ராமலிங்கர் -வள்ளலார் போன்றவர்களின் வாழ்க்கையையும் கூடவே சொல்கிறது.ஒரு
காலத்தின் கதை. ஒரு நிலத்தின் கதை
மக்களின் போராட்ட கதையாக இந்த நாவல் மலர்ந்திருக்கிறது.
அன்புடன்
சுப்ரபாரதிமணியன்
ஆட்டம் ATOM ஆவணப்பட விழா கோவையில்....
ஆட்டம் காண்கிறதா திருப்பூர் தொழில் உலகம்
சுமன் இயக்கிய திருப்பூரை பற்றிய ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதி மற்றும் பின்னலாடை சார்ந்த அதிபர்கள் புலம்பினார்கள். அழுது தீர்த்தார்கள் திருப்பூரில் இன்றைய நிலைமை பயம் தருகிறது. தொடர்ந்து தாறுமாக தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் பருத்தி, நூல் விலை, அதன் காரணமாக செயற்கை இலை ஆடை உற்பத்திகளுக்கு ஏற்பட்டிருக்கிற மவுசு. அவை மலிவாக இருப்பதால் நுகர்வோர் அவற்றை அதிகம் வாங்குவது
மத்திய அரசின் தொழில் கொள்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் பனியன் தொழில் வளர்ச்சி தொழிலாளர்கள் சிக்கல் என்று பலவற்றை இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்
உள்நாட்டு வணிகம் என்பது அதன் தலைப்பு. இரண்டு உற்பத்தியாளர்கள் பணி தொழில் சிக்கல் பற்றி பேசுகிறார்கள் ஒருவர் செகண்ட் ஃபீஸ் சார்ந்த தொழில் நடத்துபவர் முதலாளியாக இருந்து பல லட்சம் சொத்துக்களை இந்த தொழிலில் சமீப காலத்திய போக்குகளால் இழந்தவர் ஒரு சிறு மளிகை கடை நடத்தி தன் குடும்பத்தை காப்பாற்றுவதாக சொல்கிறார். தன் மகன்களுக்கு பள்ளிக்கு பணம் கட்ட கூட பணமில்லாமல் தவிப்பதாகவும் நன்றாக இருந்த காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து இருப்பதையும் திருப்பூரில் நிலைமை மிக மோசமாக இருப்பதையும் சொல்லி அழுகிறார் அவர் அழுவதை பார்த்து அவருடைய குழந்தைகளும் கண்ணீர் விடுகின்றன. திருப்பூர் நிலைமை எப்போது மாறும் என்ற கனவு அவருடைய கண்ணீரில் கரைந்து இருப்பதை இந்த படம் காட்டுகிறது
திருப்பூரின் இந்த வியாபாரம் போக்கு அவ்வப்போது நிகழும் ஏறிம் இறங்கும். ஆனால் இறங்கி கொண்டிருக்கும் திருப்பூரில் தொழில்முகத்தை இவர்கள் அதிர்ச்சி சார்ந்த விஷயங்களால் நிரப்பி இருந்தார்கள் .இந்த ஆவணப்படத்தில் பல்வேறு தரவுகள் பல்வேறு நேர்காணல்கள் மூலமாக திருப்பூர் நிலையை சொல்லியிருந்தார்கள்
திருப்பூர் செயற்கைஇழை உற்பத்தி மூலம் புது சந்தை உருவாக்கி இருக்கிறது ஆனால் பருத்தி துணிகளின் புறக்கணிப்பு என்பது எல்லோர் மத்தியிலும்.. பீதியான செய்திகளை கிளப்பி இருப்பதை இந்த ஆவணப்படம் குறிப்பிடுகிறது
இந்த திரைப்பட விழாவை தமிழக அமைச்சர் சாமிநாதன் அவர்கள் தூக்கி வைத்தார் நிறைவு விழாவில் ஆவணப்பட இயக்குனரும் ஜெமினி கணேசன் பேரனுமான அருண்வாடி மற்றும் பாண்டிச்சேரி ஆரோவில் இயற்கை காப்பாளர் சரவணன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், பாரு கழகு இயக்கம் பாரதிதாசன், ஈரோடு சக்தி வேல் போன்றோர் கலந்து கொண்டார்கள் கோவை ரத்தனம் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆவணப்பட விழாவில் உலக தரத்தில் பல முக்கியமான படங்கள் திரையிடப்பட்டன அவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் ..சுப்ரபாரதி மணியன்
சுற்றுச்சூழல் திரைக்கதைகள்
சுப்ரபாரதிமணியன்
1. இயற்கை எனும் இளையக்கன்னி.
கேரளா அட்டப்பாடி பள்ளத்தாக்கின் அருகிலான சைலண்ட் வேலி பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா செல்லும் தமிழக கல்லூரி பெண் ஒருத்தி அதன் அழகில் தன் மனதைப் பறி கொடுத்து விடுகிறாள்.அங்கு வாழ ஆசை ஏற்படுகிறது .
அங்குள்ள எளிமையானக் குடும்பத்தைச் சார்ந்தவனைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள்.
பின்னால்..
அந்தப்பகுதியின் நிலங்கள் பழையபடி அதன் மூதாதையரான பழங்குடிகளுக்குத் தரப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அவர்களை கலங்கடிக்கிறது.
அங்கிருந்து காலி செய்ய வேண்டியிருக்கிறது அங்கு தாங்கள் வளர்த்த மரங்களை எதற்காக அப்படியே விட்டுச் செல்வது என்று வெட்டி காசாக்கி விட்டு அங்கிருந்து காலி செய்ய எண்ணி மக்கள் மரங்களை வெட்ட மரங்களற்ற அந்தப்பகுதி சூடான பகுதியாகிறது.
பிரசவத்திற்கு சென்ற மனைவி அங்கு குழந்தையுடன் மீண்டும் வர மறுக்கிறாள். காடுகள் மரங்கள் அழிக்கப்பட்ட வெப்ப பூமியை தான் விரும்பவில்லை.. தான் விரும்பியது இயற்கை சூழல் உள்ள பகுதி என்று தன் முடிவை கணவனிடம் சொல்கிறாள்..பிரிந்து போகத் தயாராகிறாள். அப்போது என்ன நடந்தது அங்கு ..
சாயத்திரை
(சுப்ரபாதிமணியின் சாயத்திரை நாவல் சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசு பெற்றது. இந்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளது. இது கஸார்கள் பிரதி * )
கதைச்சுருக்கம்:
வெளிநாட்டிலிருந்து பின்னலாடை துறை ஆய்வு சார்ந்த வரும் ஒரு வழிகாட்டு பெண்ணின் பார்வையில் ஆரம்பமாகிறது. அவளுக்கு வழிகாட்டும் பக்தவச்சலம் என்பவனின் பனியன் கம்பெனி மற்றும் வேலையில்லாத வாழ்க்கை என ஓடுகிறது
ஆனால் இடம்பெயர்ந்து வந்து அங்கிருக்கும் ஜோதிமணி என்ற பெண்ணுடன் அவன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான். அந்தப் பெண்மணி கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறாள். ஒரு லட்சம் கோடி அன்னிய செலவாணி வருமானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் சாயக்கழிவுகள், நதிநீர் மாசு என்பதை பற்றிய பார்வைகள் திருப்பூர் விளிம்பு நிலை மனிதர்களின் நோக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. சுற்றுசூழல் பாதிப்பும் மக்களின் அவல் நிலையும் தொழில் தாறுமாறாக சூதாட்டமாக போய்க் கொண்டிருப்பதும் அதில் பகடைக்காய்களாக சாதாரண தொழிலாளர்கள் இருப்பதும் இந்த கதையில் மையமாக இருக்கிறது.
(* கஸார்கள் : பெரும் வல்லரசுகள் அல்லது பெரும் மதங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்ட நிச்சயமற்ற எதிர்காலத்துடன் கூடிய சிறுபான்மை மக்களின் குறியீடு. சுற்றுச்சூழலில் நச்சாக்கப்பட்ட ஒரு கால கட்டத்தில் வாழும் நாம் எல்லோருமே கஸார்களே- செர்பிய எழுத்தாளர் மிலோராட் பாவிச் எழுதிய புகழ் பெற்ற நாவல் “ கஸார்களின் அகராதி “ )
0
நொய்யல் ஆற்றங்கரை ஓரத்திலே...
நதி மகிழ்ச்சியை தருகிற இடமாக இருக்கிறது. ஆனால் இன்று கழிவுகள் ஓடக்கூடிய இடமாக மாறிவிட்டது. அந்த நதியில் ரத்த ஆறுகளும் கல்ந்து ஓடுகின்றன.
இரண்டு வெவ்வேறு சாதிகளை சார்ந்தவர்கள் நண்பராக இருந்து பனியன் வியாபாரத்தில் பெரிய பணக்காரர்கள் ஆக இருக்கிறார்கள். சிறிய பிரச்சனைகள் காரணமாக பிரிந்து போகிறார்கள்.ஆனால் அவர்களின் ரத்த உறவுகள் ஆண்களும் பெண்களும் சிறுவயது முதல் நட்போடு இருக்கிறார்கள் .காதல் புரிகிறார்கள்.
காதலுக்கு சாதி தடைதானே .சாதி பிரச்சனை காதலர்கள் காரணமாக பல வழக்குகளை உண்டு பண்ணுகிறது.
அந்த ரத்த உறவுகள், காதல் என்ன ஆகிறது. காதலர்களை இரு சாதிகளைச் சார்ந்த பணக்காரர்கள் அனுமதித்தார்களா. ரத்தம் ஓட விட்டார்களா. காதலர்கள் என்ன ஆகிறார்கள். நதி இது எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா?
-0
( பூமிக்கு மனிதன் தலைவனா )
கிராமத்துப் பள்ளிக்கூடம். அருகில் நீர்நிலைகள்.இயற்கையை காக்க வேண்டும் என்று ஆசிரியர் பாடம் எடுக்கிறார். முன்பு இந்த இடத்தில் கடல் நீர் வந்து சூழ்ந்து கொண்டது. ஆகவே அங்கிருந்து பள்ளிக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்றுகிறார்கள்.படகில் போய் படித்த குழந்தைகள் வேறு இடத்திற்கு போக வேண்டி இருக்கிறது படகோட்டிகள் கூட செத்துப் போகிறார்கள்.
இந்த நிலையில் அந்தப் பள்ளியில் படித்த ஒருவன் வளர்ந்து ஆசிரியராக வருகிறான்.
இப்போது உலகம் வெப்பமய சூழலில் எல்லாம் தலைகீழாக மாறி கொண்டிருக்கிறது. தீவில் உள்ள பள்ளிக்கூடம் மூடப்போகிறது. உலகம் முழுக்க வெப்பமய சூழலில் பல தீவுகள் மற்றும் அவற்றில் உள்ள பள்ளிகள் காணாமல் போகின்றன.. அனைவருக்கும் பள்ளிக் கல்வி என்பதும் கேள்விக்குறியாகிறது. ... மக்களின் பரிதவிப்பு காலநிலை மாற்றத்தால் என்ன ஆனது..
0
நாடோடி காற்று"
காட்டுப்பகுதி. மக்கள் ஆடு, மாடு மேய்த்தும் சிறு அளவில் விவசாயம் செய்தும் வருகிறார்கள். கால்நடைகள் மாமிசத்திற்காக கடத்தப்படுவது, கொல்லப்படுவது அவர்களுக்கு அதிர்ச்சி.
பாறுக்கழுகுகள் உள்ள பகுதி அது. . அவை இறந்த கால்நடைகளை தின்னும். கால்நடைகளுக்கு வைத்தியமுறையில் தர்ப்படும் மருந்துகள் ரசயானக்கலப்பாகி அவை இறக்கும் போதும் பாறுக்கழுகுகள் உண்கின்றன. ஆனால் ரசாயனக்கலப்பால் அவை சாகின்றன. குறைந்து வருகின்றன. இதை அறிந்து விசப்படும் மக்கள் ரசாயனம் உபயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பு தெரிவிக்கிறவர்கள் அங்கே நீடிக்க முடிந்ததா. காலம் அவர்களைக் காட்டுக்குள் விட்டு வைத்ததா
ஆக., 9ம் தேதி, 'தேசிய புத்தக நேசிப்பாளர்கள் தினம்'
நம் சுவாசத்துடன் கலந்திருக்கும் வாசிப்புப்பயிற்சி, மனிதனை, சமுதாயத்தின் தனித்துவ அடையாளமாக காட்டுகிறது. வாசிப்பு மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக தான், ஆண்டுதோறும், ஆக., 9ம் தேதி, 'தேசிய புத்தக நேசிப்பாளர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது. புத்தக வாசிப்பை நேசிக்கும் சிலரது கருத்துகளை இங்கே பகிர்கிறோம்.
வாசிப்பும் தியானமே! சுப்ரபாரதி மணியன், எழுத்தாளர்: வீட்டில் கதவு, ஜன்னல்களை திறந்து வைக்கும் போது, காற்றும், வெளிச்சமும் உள்ளே வரும் உணர்வு தான், புத்தகங்களை வாசிக்கும் போதும் கிடைக்கும். பக்கத்து வீடு, வீதி, தெருவில் வசிப்பவர்களுடன் கூட பழக முடியாத நகர சூழலில், புத்தகம் வசிக்கும் போது, பல்வேறு நாட்டு மக்களின் வாழ்வியல் சூழல், கலாசாரம், பாரம்பரியத்தை அறிந்து, அவர்களுடன் மனதளவில் பழக முடியும். தனிமைப்படுத்தப்பட்ட மனிதன், சமூகத்தில் இருந்து துண்டிக்கப்படாமல் இருக்க புத்தகங்கள் உதவுகின்றன.
'டிவி' உள்ளிட்ட காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் மட்டும் தான் மனம் லயிக்கும். ஆனால், புத்தகம் வாசிக்கும் போது, அந்த கதையையொட்டிய யதார்த்தம் மற்றும் கற்பனை உலகில் மிதக்க முடியும்; கவனச்சிதறல் ஏற்படாது; சிந்தனை மேம்படும்; வாசிப்பு என்பதும், ஒருவகை தியானம் தான்.
தனித்துவம்கிடைக்கும் பாசிதாபானு, பேச்சாளர், பாண்டியன் நகர்: யாரும் கைவிட்ட நிலையிலும், நம்மை புத்தகங்கள் அரவணைத்துக் கொள்ளும். மனம் சோர்வடையும் போது, புத்தகம் படித்தால், மனம் இலகுவாகும்; தைரியம் பிறக்கும். பட்டிமன்ற பேச்சாளர், ஆசிரியை என்ற முறையில் என் தனித்திறமையை வளர்த்து, படிப்படியாக உயர புத்தகங்கள் தான் உதவின.
பாடப்புத்தகங்களை கடந்து, பிற புத்தகங்களை படிக்கும் போது தான், உலகளாவிய அறிவாற்றல் கிடைக்கும். புத்தகம், ஒரு மனிதனை பண்புள்ள, பக்குவமுள்ள வர்களாக மாற்றுகிறது. வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள், தனித்துவம் நிறைந்தவர்களாக இருப்பர்.
மனம் இலகுவாகும் நித்தீஷ்வரன், மாணவர், சிக்கண்ணா அரசு கல்லுாரி: புத்தக வாசிப்பு மனதை இலகு வாக்குகிறது; தன்னம்பிக்கை தருகிறது. தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்களின் மனதை கூட மாற்றி, அவர்களின் வாழ்க்கையை திசை மாற்றும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு. நான் தமிழ் இலக்கியம் படித்து வருகிறேன்.
பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகம் படிக்கும் போது, அதில் வரும் சிறுகதை, இலக்கியம் சார்ந்த விஷயங்கள் என் பாடம் சார்ந்தும் உதவியாக இருக்கிறது. வாசிப்பு பழக்கம் கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்கிறது.
வாசிப்பு, கண் போன்றது ஜெயபால், மூத்த குடிமகன்: எனக்கு, 87 வயதாகிறது; சிறு வயது முதல், புத்தகம் வாசிக்கிறேன். புத்தக வாசிப்பு என்பது பொழுதுபோக்கு அல்ல; மாறாக, அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் ஒரு விஷயமாகவே கருதுகிறேன். பக்குவப்பட்ட மனிதனாக வளர்ந்திருக்கிறேன்.
குறிப்பிட்ட விஷயத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள புத்தகங்கள் தான் உதவுகின்றன. ஒரு மனிதனுக்கு கண் எவ்வளவு முக்கியமோ, அந்தளவு கல்வி முக்கியம். படிக்க படிக்க அறிவாற்றல் பெருகும்; அதற்கு புத்தக வாசிப்பு மிக அவசியம்.
தன்னம்பிக்கை வளரும் ஜெயக்குமார், கார்மென்ட்ஸ் நிறுவன உரிமையாளர், திருமுருகன்பூண்டி: பள்ளி, கல்லுாரி காலத்தில் இருந்தே புத்தகம் படிக்கிறேன். சிறுகதைகளில் இருந்து, புத்தகம் படிக்க துவங்கினேன். பின், தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்களை அதிகம் படிக்க துவங்கினேன். இதனால், எதிர்கொள்ளும் பிரச்னைகளைஎளிதாக கையாளும் பக்குவம் கிடைத்தது.
எந்தவொரு விஷயத்தையும் அடுத்தவரிடம் கேட்டுத் தெளிவுப்படுத்தி கொள்வதை விட, புத்தகங்களை படித்து தெளிவுப்படுத்திக் கொள்வது சிறந்தது. அச்சு வடிவில் வெளியாகும் புத்தகங்களில், உண்மைக்கு மாறான தகவல்கள் பெரும்பாலும் இருக்காது.
படைப்பாற்றல் வளரும் பூங்கொடி, கதை சொல்லி, மடத்துக்குளம்: சிறு வயது முதலே புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு. இதனால், பாடப்புத்தகங்களை படிப்பது எளிதாகிறது. மனப்பாட சக்தி அதிகரிப்பதை உணர முடிகிறது. வாழ்வியலில் சந்திக்கும் பிரச்னைகளைஎதிர்கொள்ளும் மன உறுதி கிடைக்கும். ஒரே இடத்தில் அமர்ந்து உலக விஷயங்களை விரிவாக, விளக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது.
கதை கேட்கும், குழந்தைகள் வாசிக்க துவங்குகின்றனர்; பின், தங்களின் படைப்பாற்றல், கற்பனையாற்றால் கலந்து எழுத துவங்குகின்றனர்; எழுத்தாளர்களாக மாறுகின்றனர். வாசிக்கும் பழக்கத்தால் நம்மிடம் பழகுபவர்களின் எண்ண ஓட்டத்தை எடை போட முடியும்.
dinamalare
0
ஈரோடு புத்தக கண்காட்சி
முக்கியமாய் 50 நூல்கள் மெகா வெளியீட்டு விழா பற்றியது. என் சி பி என் பதிப்பகம் நூல் வெளியீட்டு விழா அது..
அந்த விழாவில் என் “ பள்ளிக்கூடம் போகலாமா “ என்ற திரை நாவல் வெளியிடப்பட்டது.
திரை நாவல் என்ற வடிவம் பற்றியும் திரைத்துறையும் ஆட்சி அதிகாரமும் பற்றியும் நான் பேசினேன்.
0
ஈரோடு புத்தக கண்காட்சி
தோழர் சந்தானம் நிர்வாக மேலாளர் என் சி பி எச் நிறுவனம் இறுதி நாளில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார் அவருடைய உரையாடலின் சில குறிப்புகள்
1. என் சி பி எச் பதிப்பகம் வெளியிட்ட அம்பேத்கர் பத்து நூல்கள் நல்ல வரவேற்பு பெற்றன. 10 நூல்கள் ஆயிரம் ரூபாய் மட்டும் .ஒரு புத்தகம் 100 ரூபாய் ஆனால் அதை தயாரிப்பு செலவு 180 ரூபாய் .தமிழ் வளர்ச்சித் துறை போன்ற நிறுவனங்கள் உதவி செய்ததால் சலுகை விலைக்கு கிடைத்தது இப்போது இன்னும் 17 நூல்கள் வெளியாக உள்ளன அவையும் குறைந்த விலையில் சிறப்பாக வெளியிடப்படும்
2. நான்காண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசாங்கம் நூலக ஆணையை வழங்கி இருக்கிறது. சில நூல்களுக்கு பிரதிநிதிகள் குறைவாக கேட்டிருக்கிறார்கள் சுப்ரபாரதி மணியின் நூல்கள் கணிசமாக நூலக ஆணை பெற்றிருக்கிறது. அவரின் ஆயிரம் பக்க நாவல் சிலுவை கூட நூலக று ஆணை பெற்றிருக்கிறது
3. ஈரோடு புத்தக கண்காட்சியில் ஆக்கர் புத்தக நிலையம் இரண்டு அரங்குகளை அமைத்திருக்கிறார்கள். அவர்களின் டெல்லியில் உள்ள இடதுசாரி பதிப்பகம் சென்னையில் கூட புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனைக்கு போட்டதில்லை ஆனால் ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடைய முயற்சியில் இங்கே இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டன விற்பனை குறைவு தான், வாடகை, விற்பனையாளர்கள் சம்பளம் கணக்கெடுக்கும் போது பெரிய பாரம் இதனால் ஏறிவிட்டது எங்களுக்கு. என் சி பி எச் பதிப்பகம் இதன் பொறுப்பை ஏற்று இருந்தது எங்களுக்கு பெரிய சுமையாக போய்விட்டது
4. கோவையில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் சுப்ரபாரதிமணியன் பற்றிய ஒரு கருத்தரங்கை நடத்தியது மகிழ்ச்சி
5. திருப்பூர் எழுத்தாளர்கள் ncb பதிப்பகத்திற்கு தரும் தொல்லைகள் புதிய ரகமாக இருக்கிறது
6. ஈரோட்டில் இருக்கும் என்சிபிச் பதிப்பகத்தின் கடை பெரிய இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் .கோவையில் ஸ்சேடியத்தில் இருந்த கடை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது இப்போது மாற்ற வேண்டி உள்ளது
7. ஈரோட்டில் பாரதிபுத்தகாலயம் விற்பனை தமிழ்நாட்டில் மற்ற கிளைகளை விட அதிகமாக இருக்கிறது.
8. திருப்பூர் என் சி பி எச் ஸ்டால் விற்பனையை பெருக்க திருப்பூர் எம்.பி,, மற்றும் கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்கள் முயற்சிகள் எடுப்பார்கள்.( தோழர் சந்தானம் உரையாடலில் இருந்த மற்ற செய்திகள் பகிர தேவையில்லாதவை )
9. அடுத்து என் அனுபவங்கள் சில ..
10.
11. ஈரோடு புத்தக கண்காட்சி
12. உங்கள் பாரதி போன்ற எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் கோவை கண்காட்சியோடு ஒப்பிட்டு ஈரோடு புத்தக கண்காட்சி விற்பனை சிறப்பாக இருந்தது தாகச் சொன்னார்கள். பெண் விற்பனையாளர்களுக்கு அறை மற்றும் தங்குமிடம் கழிப்பறை சரியாக இல்லை என்ற குறையை சொல்லியிருந்தார். அது போன்ற குறைகளை நான் ஈரோடு புத்தக கண்காட்சி அமைப்பாளருக்கு ஆலோசனை பெட்டியில் போட்டிருந்தேன். அவர்கள் அடுத்த ஆண்டில் கவனித்தால் ந்ல்லது
13. கோரல் பதிப்பகம் புதிதாக என்னுடைய மூன்று நூல்களை வெளியிட்டு இருந்தார்கள் ஞாயிறு களில் நல்ல விற்பனை இருந்தது. மற்ற நாட்களில் சுமார் என்று சொல்லிக் கொண்டார்கள
14. திண்டுக்கலை சார்ந்த கவிஞர் பூர்ணா என் சி பி எச் பதிப்பகத்தின் ஈரோடு மேலாளராக பதவி ஏற்றியுள்ளார் இனிமேல் கொங்கு இலக்கிய படைப்புகள் என்சிபி பதிப்பகம் மூலமாக வரும் என்று எதிர்பார்க்கலாம். அவர் இந்த உங்கள் நூலகம் இதழில் புதுவை ரஜினியின் புத்தகத்திற்கு போட்ட தலைப்பை தலைப்பு சரியானது அல்ல அது புதுக்கோட்டை வரலாறு சார்ந்த நூலல்ல புதுச்சேரி சேர்ந்த நூல் என்று அவர்களிடம் விளக்கமாக சொன்னேன்
15. ஈரோடு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நாட்கள் சென்று இருந்தேன் அடிக்கடி காணப்பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள் கோவைக்கு வரவில்லை என்பதை குறையாக சொன்னார்கள். கோவை புத்தக கண்காட்சியின் போது ஒரு திரைப்பட விழாவும் வெளியூர் பயணங்களும் அமைந்து கோவைக்கு செல்ல விடவில்லை ஆனால் ஈரோடு எப்போதும் உழைப்பாளர்கள் மண். ஸ்டாலின் குணசேகரின் உழைப்பும் பெரிய அளவில் கவர்ச்சிகரமாக இருக்கும்
16. எல்லா நாட்களும் காட்டிலகா சார்பாக இலவச முறையில் செடிகள் வழங்கினார்கள் ஆதார் கார்டு விவரங்களை பெற்று வழங்கினார்கள் ஆயிரக்கணக்கான செடிகளை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
17. சில பதிப்பாளர்களை மட்டும் பார்க்க முடிந்தது தமிழினி வசந்தகுமார் அதில் ஒருவர் அவரின் விசாரிப்பு என்னை எப்போதும் நெநிகழவைக்கும் .அழுத்தமான தாடியில் இருந்தார். அவருக்கு ஓய்வு தர அவர் குடும்பத்தினர் யோசிக்க வேண்டும்
18. ஈரோடு புத்தக கண்காட்சியில் இரவு பிரபலங்கள் பேசுவதற்காக ஒரு அரங்கம் , புத்தக வெளியீட்டுக்காக ஒரு அரங்கம், கதை சொல்லி நிகழ்ச்சிக்காக ஒரு அரங்கம் உலக படைப்பாளிகளின் புத்தகங்களை வெளிக்காட்டிய உலக படைப்பு அரங்கம் என்பவை முக்கியமான அம்சங்களாக இருந்தன
19. ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு வெள்ளைச் சட்டையும் கேடயங்களும் மிகவும் பிடிக்கும். வெள்ளை சட்டையில் இருந்து மாறவே மாட்டார். நான் அவருக்கு வர்ண சட்டைகளை வாங்கி தரட்டுமா என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் தரவில்லை எல்லாருக்கும் சுலபமாக கேடயத்தை கொடுக்கிறார். 3 படைப்பாளிகளுக்கு 3 கேடயங்கள். நாடகத்தில் நடிப்பவர்கள் 30 பேரானாலும் கேடயம் படைப்பாளிகளுக்கு பாராட்டு என்று கேடயம். 122 அரங்கம் அமைத்தவர்களுக்கு ஆளுக்க்கொன்றாய் கேடயம். கேடயம் அவர் கையில் இருந்து நழுவி கொண்டே இருக்கிறது. கேடயம் அண்ணன் என்ற புது பெயரையும் அவர் பெற்றுக் கொண்டார்
20. இந்த முறை மக்கள் சிந்தனை பேரின் வெள்ளி விழா மலர் சிறப்பம்சம் அதை வெளியிட்ட சிறப்பாக நடத்தினார் இந்த முறை அவரின் நூல்களும் வெளியிடப்பட்டன முக்கியமானது ஸ்டாலின் குணசேகரன் வழக்கமான அவருடைய பேவரெட்ட சப்ஜெக்ட். சுதந்திரச் சுடர்கள் நன்கு விற்பனையானது
21. என் மூன்று நூல்களை கோரல் பதிப்பகம் வெளியிட்டிருந்தது அந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ந. கந்தசாமி, ஸ்டாலின் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் திரைநாவலின் ஆங்கில வடிவம் அதில் ஒன்று அது இவ்வளவு விரைவாக வரும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. கோரல் பதிப்பகம் புத்தக வெளியீடுகளை நடத்தியது தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் வெண்பா வெளியிடப்பட்டது அவர் கவிதையில் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் மூன்று நூல்களை வெளியிட்டிருக்கிக்கிறார். அந்த விழாவில் நவகவி ஆண்டின் பெனி உட்பட பலரை சந்திக்க முடிகிறது ஆண்டன் பெனி சேலத்தில் பணிபுரிகிறார் என்பது புது தகவலாக இருந்தது. என் நூல்கள் வெளியிட்டில் சேலம் மோகன் குமார் எடுத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்து இருந்தார்.
22. பிரபல பேச்சாளர்கள் நிறைய கலந்து கொண்டார்கள் யாரையும் சந்தித்து பேச முடியவில்லை இறையன்பு அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தேன். அவ்வளவுதான்
23. 3எழுத்தாளர்களுக்கு பாராட்டு என்று சுப்ர பாரதி மணியன் வாமு கோமு உமையவன் ஆகியோருக்கு பாராட்டு நடந்தது மேடை விட்டு கீழ் இறங்கும்போது என் கண்ணாடியை விட்டு விட்டு வந்து விட்டேன். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று முக்கியமான கொங்கு படைப்பாளிகள் பெரியசாமி தூரன், புலவர் குழந்தை ஆர் சண்முகசுந்தரம் படங்களும் திறந்துவைக்கப்பட்டன அந்த படங்களை வேடிக்கை பார்த்து படி வந்த நான் என் மூக்கு கண்ணாடியை தவற விட்டு விட்டேன். நாடகம் ஆரம்பித்துவிட்டது. கோமல் சுவாமிநாதன் அவர்களின் மகள் இயக்கியிருந்த நாடகம் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி ஜானகிராமன் போன்றவர்களின் சிறுகதைகளை மையமாகக் கொண்ட நாடகம். மூக்கு கண்ணாடிக்காக அங்கேயும் அலைந்தேன். மேடையில் இருந்து பொருட்களை அகற்றினவர்கள் உட்பட பலரை விசாரித்தேன். சோர் வாகி விட்டது. நாடகம் பார்க்கிற ஆவலை இல்லாமல் போய்விட்டது. நண்பர்கள் கண்ணாடியை பிறகு பார்க்கலாம் முதலில் நாடகம் பார்க்க வேண்டும் என்றார்கள் ஆனால் கண்ணாடி இல்லாத நான்ள் தவித்துக் கொண்டிருந்தேன் கொஞ்சம் விலை உயர்ந்த கண்ணாடி 7000 ரூபாய். ஆகவே திரும்ப பெற வேண்டும் புதிய கண்ணாடிக்கு கிடைக்கப் போனால் பரிசோதனை காத்திருப்பு என்று பத்து நாள்ஆகிவிடும். ஆகவே கண்ணாடியை தேடி தேடி அலைந்து கொண்டே இருந்தேன் கடைசியில் வாய்ப்பில்லை என்று நாடகங்கள் முடிந்து கிளம்பும்போது மைக்கில் ஒரு விண்ணப்பம் வைத்தேன் என் மூக்கு கண்ணாடி தொலைந்து விட்டது.. மூக்கு கண்ணாடி தொலைந்து விட்டது யாராவது கண்டால் கொண்டு வந்து தாருங்கள் என்று . ஸ்டாலின் குணசேகரன் உதவியாளர் ஓடோடி வந்து கண்ணாடியைக் கொடுத்தார் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தவறுதலாக அவருடைய சட்டை பையில் அதை வைத்து விட்டதாக சொன்னார் எப்படியோ இரண்டு மணி நேரம் இருந்த டென்ஷன் குறைந்தது. கண்ணாடி கிடைத்தது கண்ணாடி பாதுகாப்பாக இருந்தது
24. பல ஓவியர்கள் தென்பட்டார்கள் தூரிகை சின்னராஜ் அவர்கள் என்னுடைய மூன்று நூல்களை பற்றியும் விரைவாக ஒரு உரை நிகழ்த்தினார் மூன்று முக்கிய படைப்பாளிகள் உட்பட பலரின் ஓவியங்களை சிறப்பாக காணமுடித்தது
25. கதைக்களம் அரங்கியில் ஸ்டாலின் குணசேகரன் மகள் வடிவமைத்திருந்த ஓவியங்களும் சிறுவர் சித்திரங்களும் பிரமாதமாக அமைந்திருந்தன. ஒரு நாள் மட்டும் கதைக்களம் நிகழ்ச்சியில் கொஞ்ச நேரம் பார்த்தேன். சரிதா ஜோ அவர்களின் பேச்சும் நடையும் பல குரல் இசையும் பிரமாதமாக அமைந்திருந்தது மற்ற 10 பெண்மணிகளும் உரையாளர்களும் அதே வகையில் தான் இருந்திருக்கும் என்று நினைத்தேன்
26. சுற்றுச்சூழல் சார்ந்த நூல்களை தேடினேன் சரிவர கிடைக்கவில்லை பால் பாஸ்கரின் தண்ணீர் யாருக்குச் சொந்தம் நூல் பிரதி பரிசில் பதிப்பகத்துக்காரர் காட்டினார் ஆனால் அந்த பிரதியை நான் முன்பு வைத்திருந்தேன் அது மறுபதிப்பு என்பது தான் வந்தது மற்றும் எதிர்பதிப்பகத்தில் சில சுற்றுச்சூழல் நூல்களில் முன்பு வாங்கியது பிரதிகள் இருந்தன
27. என் சி பி எச் v ஊழியர்கள் பலர் தங்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேறி வேறு அரங்கங்களில் விற்பனையாளராக இருந்தார்கள்
28. 24 என் பத்து திரைக்கதை நூல்கள் வெளியாகி உள்ளன அவற்றை டிஸ்கவரி புக் பேலஸ் ,பியூர் சினிமா, நிவேதா பதிப்பகங்களுகு நான் விற்பனைக்கு அனுப்புவது வழக்கம் நிவேதா பகுதியில் மட்டும் சில பிரதிகள் விற்பனைக்கு இருந்தன. மற்றதயில் காணோம்
29. உயிர்மை பதிப்பகம் என்னும் என் 15 நூல்களை வெளியிட்டு இருக்கிறார்கள் இந்த ஆண்டுதான்என் நூல் எதுவும் வெளியிடவில்லை பழைய நூல்களின் பிரதிகளைத் தேடி கிரி அவர்களிடம் அலைந்தான்.. கிடைக்கவில்லை பெற்று தகவல் சொல்வதாக சொன்னார் எதுவும் வரவில்லை
30. ஜீரோடிகிரி பதிப்பகத்தில் திரை போன்ற நாவல்கள் வாங்கினேன். அவர்களிடம் என்னுடைய 10 98,,பறக்க மறுத்த பறவைகள்,, மூன்று நதிகள் திரை போன்ற புத்தகங்களின் பிரதிகள் அதிகம் தேவை என்று தொடர்பு எண் தொடர்பு முகவரி எல்லாம் கொடுத்தேன் அவர்களும் கண்டு கொள்ளவில்லை
31. கல்லூரி பேராசிரியர்கள் சிலபஸில் இருக்கும் புத்தகங்களை தேடி அலைந்தார்கள். படைப்பிலக்கியப் புத்தகங்களில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை இப்போது எல்லாம் கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்வி தவிர வெவ்வேறு வேலைகள் தரப்படுகின்றன அதுவும் தனியார் கல்லூரியில் எந்த வேலை என்று சொல்ல வேண்டியது இல்லை. படிப்பவர்கள் படிக்கிறார்கள் படிக்க சோம்பல் படுகிற கல்லூரி பேராசிரியர்கள் ரொம்ப தூரம் போய்விட்டார்கள் அவர்களை இழுத்துக் கொண்டு வருவது சிரமம் தான்
32. இந்த முறை பென்குயின் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட ஆங்கில பதிப்பாளர்கள் கடைகள் இருந்தன
33.
குழந்தைகள் காலை நேரங்களில் பள்ளியில் இருந்து பேருந்துகளில் வந்து கூட்டம் சேர்த்தனர் கையில் இருக்கிற காசுக்கு திருக்குறள் பாரதியார் கவிதை என்று வாங்கினார்கள் பெரும்பாலும் சிறுவர் நூல்களில் ஆங்கில நூல்கள் தான் வாங்கினார்கள் தமிழ் வழி நூல்கள் அவ்வளவ்ய் வாங்கவில்லை
இருக்கிற கடவுள்களும்,
இனி வரப் போகும் கடவுள்களும்
கை விட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள்
---------------------------------------------------------------------------- தங்கர்பச்சான் கதைகள் தொகுப்பு
----------------------------------------------------------------------------
சுப்ரபாரதிமணியன்
----------------------------------------------------------------------------
தங்கர் பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு " வெள்ளை மாடு " வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை அவ்வளவு நகாசு தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருபதாக ஒரு விமர்சனம வந்தது, பின் நவீனத்துவ எழுத்து தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின்நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே.காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ நகாசோ எதிர்பார்பது ஒரு நாகரீக சமூகமாகாது. அந்தக் குறறச்சாட்டு போல் அக்கதைகள் இல்லை.பசியின் கோரம் அடுப்புக்குத் தெரியாது தீவிரப் பிரச்சினைக்கு நகாசு தெரியாது.
தங்கர்பச்சானின் கதாபாத்திரங்கள் பின்நவீனத்துவம் கொண்டாடும் விளிம்பு நிலை மனிதர்களே. விவசாயக்கூலிகள், சம்சாரிகள், கரும்புத்தோட்டத் தொழிலாளர்கள், வேதனையிலேயே உழன்று கொண்டிருக்கும் பெண்கள் எனலாம். கொம்புக்கயிறு இல்லாத மாடு அவலட்சணமாக இருப்பது போல் அவலட்சனமான விளிம்பு நிலை மக்கள் இவருடையது.
குடிமுந்திரி கதையில் முந்திரி மரத்தின் மீது ஏறி நின்று நெய்வேலி சுரங்கக கட்டிடங்களை, புகைபோக்கிகளைப் பார்க்கும் சிறுவர்கள் போல தங்கர்பச்சான் தோளில் ஏறி நின்று வாசகர்கள் கடலூர் மக்களின் வாழ்வியலைப் பார்க்க முடிகிறது.இதில் இவர் கையாளும் மொழி உணர்ச்சிப்பிழமான கதை சொல்லல் மொழியாகும்.அந்த பாதிப்பே அவரின் திரைப்பட மொழியில் பல சமயஙக்ளில் உணர்ச்சி மயமான காட்சி அமைப்புகளால்பாதிப்பு ஏற்படுத்தி பலவீனமாக்குகிறது.. திரை தொழில் நுட்பம் தீவிர இலக்கியத்திலிருந்து பிறந்தது எனப்தையொட்டிய அவரின் காமிராமொழியும், சொல்லும் தன்மையும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன.
முந்திய மூன்று சிறுகதைத்தொகுப்புகள் , ஒரு குறு நாவல் தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த “ தங்கர்பச்சான் கதைகள்” தொகுப்பு..இக்கதைகளில் பெரும்பான்மயானவை இலக்கியப் பத்திரிக்கைகளில் வந்தவை. இலக்கியப் பத்திரிக்கைகளில் எழுதுகிற குற்ற உணர்வு பலருக்கு உண்டு, ஆனால் அதைப் பெருமிதத்தோடு இவர் சொல்கிறார். திரைப்படக்கலைஞனாக வாழ்க்கை வீணாகி விட்டது என்று இவர் தரும் வாக்குமூலம் இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதுகிறவனுக்கு ஆறுதல் தருகிறது.
இலக்கியப்பிரதிகளை திரைப்படங்களாக்குகிற இவரின் முயற்சி இல்க்கியத்தளத்தில் இவருக்கு இருக்கும் அக்க்றையைக் காட்டுவதாகும்.கல்வெட்டு என்ற சிறுகதையின் தன்லட்சுமி " அழகி " ஆனாள். தலைகீழ் விகிதங்கள் முதல் ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி வரை நாவல்கள் படங்களாகியிருக்கின்றன.
மரபு ஒரு சுமையாக இல்லாமல் ஒரு வரமாகவோ, மகிழ்ச்சிக்குறிய விசயமாக பழக்க வழக்கங்களில் சடங்குகளில் மிச்சமிருப்பதை இவ்ரின் கதைகளின் போக்கில் தெரிந்து கொள்ள முடிகிறது.முந்திரிக்காடு காலகாலமான சடங்குகளை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கிறது. சடங்குகளும் விதியும் இவரின் கதை முடிவுகளை சில கதைகளில் சாதாரணமாக்கி விடுகின்றன. இவரின் பெண் கதாபாத்திரங்கள் இந்தச் சடங்குகளுக்குள் அமிழ்ந்து போனவர்கள். மீட்சி இல்லாதவர்கள். கடவுள்களால் கைவிடப்பட்டவர்கள். அம்மாக்களின் முந்தானைக்குள் ஒளிந்து அறிமுகமாகும் இவரின் குழந்தைகளின் விளையாட்டு உலகம் அதிசயமானது. இயறகையின் மீதான நேசத்தில் உலவும் இவரின் கதாபாத்திரங்கள், கால்நடைகள் உயிர்ப்போடு இக்கதைகளில் உலாவுகின்றன. சாதியின் உக்கிரங்களையும் இவர் காட்டத் தயங்குவதில்லை. நுகத்டியில் அமிழ்ந்து போகும் கடும் உழைப்பாளிப் பெண்கள் போலில்லாமல் சாதியால் அழுத்தப்பட்ட பிற்பட்ட சாதி சார்ந்தவர்கள் பல வகைகளில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். கிணற்றுக்குள் சிறுநீர் கழிப்பது போன்ற சிறு சிறு எதிர்ப்புச் செயல்கள் மூலம் இது வெளிப்படுகிறது. பல கதைகளில் சாவைச் சந்திக்கிறோம். தற்கொலைகளில் நிறையப் பேர் இறந்து போகிறார்கள். எதிர்மறை கதாநாயகர்கள் பணத்துக்காக கொலைகளையும் செய்கிறார்கள். சாவு பற்றி இக்கதைகளில் அதிகம் பேசப்பட்டாலும் சாவு தீர்வல்ல என்பதையும் சொல்கிறார்.கிராமம் பற்றிய ஏக்கத்தையும் நகரம் பற்றிய பயத்தையும் இவரின் கதைகள் எழுப்புகின்றன..
இத்தொகுப்பில் பல இடங்களில் முன்னுரையிலும் ஆங்கிலக்கல்வியின் வன்முறை, தாய்த்தமிழ்கல்வி பற்றி பேசுகிறார். மாற்று வைத்தியத்திற்கான தேவை குறித்துச்ச் சொல்கிறார்.கலாச்சாரம் சார்ந்த உடை, உணவு சார்ந்த நிறைய குறிப்புகளைக் காண முடிகிறது. இவையெல்லாம் மாற்றுப் பண்பாடு குறித்த இவரின் அக்கறையைக் காட்டுகின்றன.மண் சார்ந்த கதைகளை நுட்பமான பிரச்சினைகள் ஊடே படைத்திருக்கிறார். மாற்றுப்பண்பாடு குறித்த கேள்விகளுக்குப் பின் இருக்கும் இவரின் அரசியல் குரலையும் இதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
1993ல் இவரின் முதல் சிறுகதை வெளிவந்தது. 10 ஆண்டுகளுக்குப்பின் இவரின் முதல் தொகுப்பு வெளிவந்தது. 20 ஆண்டுகளுக்குப்பின் இந்த மொத்தத் தொகுப்பு வந்திருக்கிறது 20 கதைகளுடன். திரைப்படத் துறைப்பணிகளூடே இலக்கியப்பணியும் தொடர்கிறது, நனவோடை உத்தியும், கதைசொல்லியின் பார்வையும், காட்சி ரூப அம்சங்களும் கொண்ட இக்கதைகள் முந்திரிக்காட்டு மனிதர்களின் மனச்சாட்சியின் குரலாக அமைந்துள்ளன.
( உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியீடு
விலை ரூ 210 )
சுப்ரபாரதிமணியனின் திரில்லர் திரைப்படங்கள்
- தூரிகை சின்னராஜ்
சுப்ரபாரதி மணியனின் பல கதைகள் தமிழ்த்திரைப்படங்களில் தழுவப்பட்டு வெளிவந்துள்ளன, பல கதைகள் திருடப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
“ வட போச்சே “ என்று அலறிக் கொண்டிருப்பதை விட வடையை சுட்டு எப்படி தழுவுபவர்களுக்கு, திருடுபவர்களுக்கு நேரடியாகத் தரும் விஷயத்தை சமீப காலமாக சுப்ரபாதிமணியன் அவர்கள் செய்திருக்கிறார்,
அப்படித்தான் இதுவரை அவரின் பத்து திரைக்கதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன, அவற்றில் சுமார் 100 திரைக்கதைகள் உள்ளன ,
இந்த திரில்லர் திரைக்கதை நூல் வரிசையில் 5 திரில்லர் திரைக்கதைகள் உள்ளன இவை பல திரைக்கதைகள் திரைப்படங்களாகும் முழு தகுதி பெற்றவை. எளிமையான வடிவங்களில் குறைந்த காட்சிகளை வைத்து எழுதப்பட்டுள்ளன.. இவற்றை இன்னும் விரிவுபடுத்தி முழு திரைக்கதைகளை உருவாக்கிக் கொள்ளலாம்
சுப்ரபாரதி மணியன் அவர்களுடைய படைப்பிலக்கிய உழைப்பின் இன்னொரு பகுதியாக இந்த திரைக்கதைகளைச் சொல்லலாம். சிறுகதை நாவல் போன்ற படைப்பிலக்கிய வடிவங்களில் இருந்து மாறுபட்டு வேறு வடிவ முயற்சியில் இந்த திரைக்கதைகள் அமைப்பு உள்ளன என்று அவர் கூறி வருகிறார்
ஒவ்வொரு படைப்பாளிக்கும் இதுபோல் சில தேக்கங்கள் ஏற்படுகிற போது வேறு வடிவத்திற்கு சென்று எழுதுவது என்பது இயற்கை. தான். அப்படித்தான் சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் இப்போது திரைக்கதை என்ற ஒரு புதிய வடிவத்திலும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்
இந்த திரில்லர் திரைக்கதை நூலில் 5 திரைக்கதைகள் உள்ளன. .இவற்றை எடுத்துக் கொண்டுள்ள முக்கியமான மையங்கள். இன்றைய திரைப்பட உலகங்களுக்கு தேவையான விஷயங்க.ள் இதில் உள்ளன. ஜாதி பிரச்சனை, காதல் பிரச்சனை முதற்கொண்டு வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றை இதில் திரைக்கதைகள் ஆக்கியிருக்கிறார். படைப்பில் வித்யாசத்தன்மை காட்டும் அவரின் வித்தியாசத்தன்மை உள்ள திரைக்கதைகளில் உள்ளன இந்த நூலில் திரில்லர் வகை திரைகதைகளைத் தந்துள்ளார்.
முதல் திரைக்கதை அவரின் ஒரு நாவலை ( 14/40 கொண்டை ஊசி வளைவு ) எடுத்துக் கொண்டு அதை திரில்லர் கதையாக்கியிருக்கிறார் .
மற்றவை அவரின் புதிய களன்களைக் கொண்டவை.
இளைஞர்களின் வேலையின்மை மற்றும் அலைக்கழிதல் அவர்களை பிரச்சினைகளுக்குள் மாட்டி அலைக்கழிப்பதை இன்னொரு திரைக்கதை சொல்கிறது.
முரண்களை மையமாகக் கொண்டு நல்ல திரைக்கதை திருப்பங்களை இவை கொண்டிருக்கின்றன. மருத்துவ ஊழல் சார்ந்த ஒரு திரைக்கதையும் முக்கியமானது
இயக்குனர் தங்கம் சமீபத்தில் ஒரு கருத்தை சொல்லியிருந்தார் : “ சுப்ரபாரதி மணியனின் இப்படி திரைக்கதைகளை நூலாக வெளியிட்டு இருக்கிறார். இதில் எத்தனை திரைப்படங்கள் ஆகுமோ. எத்தனை திரைக்கதைகளத் தழுவி படம் எடுப்பார்களோ எத்தனை திரைக்கதைகளை அப்பட்டமாக காப்பியடித்து திரைப்படம் எடுப்பார்களோ. சுப்ரபாraதிமணியின் எத்தனை வழக்குகள் போடுவாரோ” என்று ஒரு உரையில் குறிப்பிட்டு இருந்தார்.
இன்னொரு கருத்து இயக்குனர் ஞானராஜசேகரன் IAS இப்படி குறிப்பிடுகிறார் :
“ திரைக்கதைக்கு அடிப்படை முரண் அல்லது CONFLICT என்பதை தெளிவாக புரிந்துகொண்டு திரைக்கதைகளை எழுதியிருக்கிறீர்கள்..
ஆனால் தமிழ் சினிமாவில் திரைப்படத்தைக்
குறித்து புரிதல் ஒன்றுமின்றி தாறுமாறாக வடிவமைத்து வைத்திருக்கிறார்கள்.
உங்களைப்போன்ற
GENUINE கதையாசிரியர்களை
அவர்கள் எப்படி அணுகுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் திருடுவதற்கு
நிச்சயம் முனைவார்கள்
என்பதில் சந்தேகமில்லை.”
அது உண்மைதான் இந்த திரைக்கதைகள் நல்ல தமிழ் திரைப்படங்களாக ஆகும் தகுதி கொண்டவை. இந்த திரைக்கதைகளை படிக்கிற போது தமிழ் திரை உலகம் எப்படி இருக்கிறது என்பதும், கதை பஞ்சத்தில் இருக்கிற தமிழ் திரை உலகம் எப்படி வெவ்வேறு வகையான கோணங்களில் இவ்வகைமையங்களை எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்கு அத்தாட்சியாக இந்த திரைக்கதை நூல் அமைந்திருக்கிறது.---- தூரிகை சின்னராஜ்
( தூரிகை சின்னராஜ் – ஓவியர்/ ஆசிரியர்/ குழந்தைகள் நூல் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். அவரின் பல ஓவியக்கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன )
( ரூ 220 கோரல் ப்ப்ளிசர்ஸ், சென்னை
பிரதிகளுக்கு : 90430 50666)
Poetry in films
Proposal to make ancient modern Tamil poems as metaphoric films
Tamil poetry has been time immemorial that Tamils have been composing verses with dash and incomparable enthusiasm blended with aesthetics unmatched brought on forth through their life and spirit. Ancient Tamil poetry has been space and time bound and are known as thinai and thurai. They are thematic as well on these landscapes. This is the uniqueness of Tamil poetry. However we cannot compare modern Tamil verse as that of a kind of thinai thurai as it depends on the modern landscape and mostly such poems are subtler for their modern thought brought on forth by the industrialization and alienation of the modern life and the subtlety has something to do with the sub conscious levels of the composer of the poems. Mostly influenced by poems of Europe and haiku in Japan modern verse in Tamil has been fantastic in form and content.
It has given birth to …starting with Bharathi himself as s composer of modern verse in the name of free verse , prosaic poetry we have many smarts like sivaramu, vaanambadi poetry and pichamoorthy as well as many others like brammarajan or athmaanaam etc.
Tami film, of late has been innovative and creative, charged with much energy it revolves on the modern themes ,subaltern levels and impure aesthetics yet brilliant portrayals has come a long way and still needs to tread on a track miles to go ahead.
Blending both the art.
Blending and conglomerating both these fine forms can produce celluloid poetics that can be new and enlightening. A celluloid poem is strongly visual, photographed on subtler landscape and delivered with a BG score both of the human voice and instrumental composition.NGO S that are much avowed are nowadays doing a fine job of such production blending poetry with film making.
These in turn can be time bound, say bringing up more than 30 poems together in a 90 minutes version of a film finely integrated with melodiously composed music. That would make poetry reading interesting. This can be called visual poetry .poetry nowadays has been a dying art due to the over exposure of visual media. Visual media is costlier as well as make the minds sick about watching along with visual impairment. When imbibed with poems this may change the behavioral pattern of the mind and hence can be a welcome model in due course.
Poems of choice
What kinds of poems can be chosen? Tamil is full of millions of wonderfully composed poems and making a choice is not an easy task; but here we can make choice showing at least one sample standing out for one trend can be made and therefore a 90 minutes film can be made with 25 good verses or 30-35 poems can be made into a 120 minutes film.
The DVD can be fixed with a prize and royalty can be delivered to each and every poet with a copy write. Film makers and producer will enjoy the particular percentile share of the royalty through its share.
Poets
Poems as ;puranaanooru and kalithogai- kurunthogai kuravanchi and kural are of good choice but would be in limited number. Modern poets under the choice are sirpi,sivaramu,kalapriya,subrabharathimanian,brammarajan,theepaselvan,cheran,manushya buthiran ,naanjil nadan ,malathi maithri,RBalakrishnan are some selections…need to be scrutinized.
Panel of film makers
Executive producer /SAVE and A Aloysius.
Screenplay –subrabharathimanian, sheik dean and R Balakrishnan.
Art -V JEEVANANTHAN-camera –MS.JEEVA
DIRECTOR –SHEIK DEAN.
Cost of production -to be revised
Payments – rs 50000/
Camera/instruments rent –20000/
Salary for technicians –30000/
Royalty excluded.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)