சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 8 ஏப்ரல், 2025

” சுத்தமான நீரோடும் நதியாக நொய்யல் விரைவில் விளங்கும் “ சுத்தமான நீரோடும் நதியாக நொய்யல் விளங்க வேண்டும் என்பதுதான் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் விருப்பம்.அந்த விருப்பம் இன்னும் மூன்று ஆண்டுகளில் நிறைவேறும். நீண்ட நாள் கனவு நிறைவேறும் .அதற்கான திட்டங்களில் ஏற்றுமதியாளர் சங்கத்தினர்.nirtma உள்ளோம். நாங்கள் வெற்றி பெறுவோம் 160 கிலோமீட்டர் ஓடும் நொய்யல் ஆற்றில் பல கழிவுகள் கலக்கின்றன அதை சீர்திருத்தும் முயற்சியில் பலமுறை ஈடுபட்டோம். அதை மீண்டும் ஜீவநதியாக விளங்கும் .சாக்கடைகள் கழிந்து சுற்றுச்சூழல் சார்ந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓடும் நதியாக நொய்யல் இன்னும் மூன்று ஆண்டுகளில் மாறும். ஒரத்துப் பாளையம் அணை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தேக்கி வைக்கும் அணையாக மாறி உள்ளது.. பல சமயங்களில் அந்த பகுதி விவசாயிகள் தண்ணீர் தேக்குவதை பற்றியும் தண்ணீர் விடுவதை பற்றியும் பல வழக்குகளை தொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி சுத்திகரிக்கப்பட்ட சாயக் கழிவுகள் இல்லாத இடமாக, சுத்தீகரிக்கப்பட்ட நீரைத் தேக்கி வைக்கும் அணையாக ஒரத்துப் பாளையம் விளங்கி வருகிறது கரூர் தொகுதி மக்கள் தான் நொய்யல் நதியின் பாசனத்தால் அதிகமாக பயன்படுகிற மக்கள் மூன்றாவது குடிநீர் திட்டம் திருப்பூர் ஏற்றுமதியா சங்கத்தின் பெரும்பங்களிப்பில் கொண்டுவரப்பட்டது .அதில் அரசாங்கத்தின் நிதி உதவி இருந்தாலும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் மூலமாக வெற்றி பெற்றது நாலாவது குடிநீர்த் திட்டதற்கான செயல்பாடுகள் தொடங்கி இருக்கின்றன. காவிரி ஆறு வற்றி போனாலும் பவானி ஆறு வற்றி போனாலும் திருப்பூர் மக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராதபடி நாலாவது குடிநீர் திட்டம் அமையும் கோவையில் இருந்து திருப்பூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் அதற்கும் ஏற்றுமதியாளர்களுடைய நிதி பங்களிப்பு இருக்கும் அதிக மின் உற்பத்தி பகுதியாக நம்முடைய கொங்கு பகுதி இருக்கிறது என்பது இன்னும் ஒரு பெருமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்புடன் இங்கு வாழும் தொழிலாளர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கான எல்லா வகை முயற்சிகளையும் ஏற்றுமதி எடுக்கும். படைப்புகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளை கொண்டு வரும் படைப்பாளிகள் பாராட்டுக்குரியவர்கள் “ என்று அகில் ரத்தினசாமி ( தலைவர் நிட்மா மற்றும் ஜீவநதி நொய்யல் தலைவர் )சுப்ரபாதிமணியனின் ” வேர்களை இழக்கும் பூமி “ என்ற சுற்றுச்சூழல் கட்டுரை நூலைக வெளியிட்டுப் பேசினார் . அதை சென்னை நியூ செஞ்சுரி புக் வெளியிட்டிருக்கிறது 110 ரூபாய் இந்த நூலின் முதல் பிரதியை ஜி. சிவானந்தன் ( தலைவர் மக்கள் பசுமை இயக்கம் ) மற்றும் ஆடிட்டர் பாலு ( குமரன் மகளிர் அரசு கலைக்கல்லூரி செயலாளர் ) ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். சிவானந்தன் அவர்கள் கால நிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்கமாக எடுத்துரைத்தார் 0 நியாயவணிகம், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு போன்ற அறம் சார்ந்த கொள்கைகள் உலகம் முழுவதும் பேசப்படுகிற போதும், கடைப்பிடிக்கிற போதும் நம் கொங்கு பகுதி இதை முழுமையாக கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. நமக்கு தேவை 50 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியசெலவாணியா அல்லது சுற்றுச்சூழலை காக்க வேண்டுமா என்பதை என்னுடைய ” சாயத்திரை “ நாவல் 28 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த போது கேள்வியை முன் வைத்தது அது தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு மற்றும் ஆங்கிலம் இந்தி மலையாளம் கன்னடம் வங்காள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட போது சுற்றுச்சூழல் சார்ந்த கேள்விகள் முன்நிறுத்தப்பட்டன முன்பு லண்டன் தேம்ஸ் கழிவு நீர் ஓடக்கூடிய நதியாக இருந்தது ஆனால் அங்கு இருக்கிற வியாபாரிகள் எடுத்துக் கொண்ட முயற்சியால் அது படகுகள் ஓடக்கூடிய நதியாக மாறிவிட்டது அதுபோல் நொய்யலை மாற்றுவோம் என்ற கனவை திருப்பூரின் பல ஏற்றுமதியாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதற்கான நடவடிக்கைகளும் அவர்கள் எடுத்து வருகிறார்கள். ஆனால் ஓரடி முன்னே ஈரடி பின்னே என்று லெனின் சொல்வதைப் போல அவர்களுடைய நடவடிக்கைகளும் அதை சீர்குலைக்கிற சில முயற்சிகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. உலகம் முழுக்க இன்றைக்கு காலநிலை மாற்றம் சார்ந்த சிக்கலால் சுற்றுச்சூழலை பற்றி அதிகமாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் அறிஞர்கள் பேசுகிறார்கள். அவர்கள் பேசுகிற அறம் சார்ந்த நியாய வணிகம் எல்லா நிலையிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதைத்தான் எங்களைப் போன்றோர் சுற்றுச்சூழலும் சார்ந்த படைப்புகளை எழுதுகிறோம். குறிப்பிடுகிறோம் நாங்கள் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. நீடித்த வளர்ச்சி என்பது 50 ஆயிரம் கோடி அந்நிய செலவாணி மற்றும் நொய்யலைக் காக்கும் முயற்சியில் இணைந்தது என்பதை குறிப்பிட்டு அத்தகைய படைப்புகளை உருவாக்கி வருகிறோம் சமீப காலங்களில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியினர் அதற்கான முயற்சிகளில் இறங்கி இருப்பதும் அந்த முயற்சிகள் 30 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் செயலாக்கம் பெற்றிருப்பதும் மகிழ்ச்சிகரமான விஷயம் என்று சுப்ரபாதிமணியனின் “ வேர்களை இழக்கும் பூமி “ என்ற புதிய சுற்றுச்சூழல் கட்டுரைகள் தொகுப்பை வெளியிட்டு விழாவில் பேசினார் அதை சென்னை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டு இருக்கிறது ரூபாய் 110 0 இந்த விழாவில் பெண் எழுத்தாளர்களுக்காக வழங்கப்படும் நாயகி விருது திருவாளர்கள் ஜெயந்தி சீனிவாசன், மனோரஞ்சித மலர், மீனா முரளி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருதை ஸ்டார் அசோசியேட்ஸ் குமார் அவர்கள் வழங்கி பேசுகையில் சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கையில் திருப்பூரில் ஏற்றுமதியாளர்களை தவிர பிற தொழில் செய்வோரும் பங்கேற்று சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆக எல்லோரும் இணைந்து இன்னும் தீவிரமா ஆக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்கள், மாண்விகள் பரிசுகளையும் புத்தகங்களையும் பெற்றார்கள். தாய் தமிழ் இலக்கியப் பேரவையின் நிர்வாகி பாண்டியராஜன் தலைமை வகித்தார்.பசிதாபானு நன்றியுரை வழங்கினார். பரிசு பெற்ற படைப்பாளிகள் தங்கள் எழுத்து அனுபவத்தை பற்றிப் பேசினர் கவிதை வாசிப்பில் மதுராந்தகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தகவல்: :: பாண்டிய ராஜன் தாய் தமிழ் இலக்கியப் பேரவை. , பாண்டியன் நகர் சார்பாக ( 9543625422/ 7868062287 )