சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 8 ஏப்ரல், 2025

சிற்றிதழ் விருது : கனவு என்ற சிற்றிதழ் 39 சுப்ரபாரதிமணியன் இரா மோகன் அவர்கள் நினைவில் வழங்கப்படுகிற இந்த விருது கனவு என்ற சிற்றிதழ் 38 ஆண்டுகளாக வெளிவருவதை அங்கீகரித்து தரப்படுகிறது. இந்த ஆண்டில் இதே போல் இந்த விருது நால்வர் இதழ் மூலமாக பெறப்பட்டது. கி ராஜநாராயணன் அவர்களின் கரிசல் விருது போன்ற விருதுகள் கனவு இதழுக்குக் கிடைத்திருப்பது அதன் செயல்பாட்டை அங்கீகரிப்பது போல என்று நினைக்கிறேன். அந்த வழியில் மதுரை அமரன் மோகன் அவர்களுடைய துணைவியார் நிர்மலாமோகன் அவர்கள் தொடர்ந்து அமரர் மோகன் பெயரில் விருதுகள் தருவது எழுத்தாளர்களுக்கு கௌரவம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது சிறு பத்திரிகைகள் என்றால் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்படுவது என்று பொது புத்தியில் ஒரு கருத்து இருக்கிறது இன்றைக்கு நிலைமை அப்படித்தான் . ஆனால் எப்போதும் அந்த நிலைமை இருந்ததில்லை என்று சிலர் வாதிடுகிறார்கள் . சுதேசமித்திரன் 1800 பிரதிகள் தினசரி விற்ற காலத்தில் பாரதியாரின் இந்தியா 2000 பிரதிகள் பிரதிகளுக்கு மேல் விற்றதாக தெரிகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியா பத்திரிகையின் பிரதிகளை ஒரு முறை கைப்பற்றிய போது 2000 பிரதிகள் கைப்பற்றியதாக தகவல் சொல்கின்றனர் ஆகவே சிர்றிதழ் என்பது அச்சிடப்படும் பிரதிகளின் எண்ணிக்கையிலானது என்று சொல்ல முடியாதபடி கைப்பற்றப்பட்ட இந்தியா இதழ் பத்திரிக்கையில் எண்ணிக்கை இருந்திருக்கிறது என்பது எண்ணிக்கையில் அல்லாமல் வேறு காரணங்களும் உள்ளன . அந்தந்த காலகட்டத்தின் பிரதிபலிப்பாக, தேவையாக சிறு பத்திரிகைகள் இருந்து வருகின்றன .சிறிய பொந்தியில் வைக்கப்படும் தீப்பொறி பெரிய தீயாக மாறுவதைப் போல எண்ணிகையில் குறைவாக அச்சிடப்பட்டாலும் அது தரும் பண்பாட்டு உரிமை, தாக்கம் பெரிதாக தான் இருக்கிறது. தமிழில் மணிக்கொடி எழுத்து கசட்தபற, தாமரை, சாந்தி போன்ற இதழ்கள் மாதிரிகளாக நமக்கு உடனே தென்படுகின்றன. இந்த சிற்றிதழல்கள் சிறுபத்திரிக்கைகள் என்ற வார்த்தை பிரயோகம் பிரெஞ்ச் தாக்கத்தின் மூலமாக வந்தது .புதிய இலக்கியம் நாடகம் ஆகியவற்றின் முன்னோடியாக பிரெஞ்சு மொழி இருந்தது அப்படித்தான் லிட்டில் தியேட்டர்ஸ் இன்று வழங்கப்பட்ட முகம் லிட்டில் மேகசின்ஸ் வெளிவர காரணமாக இருக்கின்றது என்கிறார்கள். 1912இல் சிக்காகோவில் பொய்ட்ரி என்ற பத்திரிகையை ஒரு பெண்மணி ஆரம்பித்தார். அந்த பத்திரிகை இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, ஒரு மருந்து கம்பெனி பெண் தன் சொத்தில் ஒரு லட்சம் டாலரை அந்த பத்திரிக்கைக்கு எழுதி வைத்திருக்கிறார் அந்த உயில் நடைமுறைக்கு வரும் போது இரண்டு லட்சம் டாலர்கள் என்று ஆகிவிடுகிறது. அந்த பெரிய பணம் அந்த பத்திரிகையின் முதலீடாக மாறி இன்றும் அந்த பத்திரிகையை தொடர்ந்து வர உதவுகிறது. அந்த தொகை வழங்கிய அந்த பெண்மணி கவிஞராக இருந்திருக்கிறார் அவர் எழுதிய கவிதைகளைப் பிரசுரிக்க மறுத்து இருக்கிறது. இருக்கிறது ஆனால் அந்த பெண் அந்த பத்திரிகையின் தீவிர நடவடிக்கைக்காக உதவி செய்திருக்கிறார். எக்ஸ்ட்ரா பவுண்ட் போன்ற கவிஞர்கள் அந்த பத்திரிகைகளுக்கு படைப்புகளை வாங்கி பரிந்துரை செய்து பலருக்கு கவிதைகள் பல வெளிவர உதவி செய்திருக்கிறார்கள் டிஎஸ் எலியட், தாகூர் போன்றவரின் கவிதைகளையும் வாங்கி அந்த பத்திரிகைகளுக்கு எக்ஸ்ட்ரா பவுண்ட் சிபாரிசு செய்து அனுப்பி இருக்கிறார். தாகூரின் கவிதை அந்த இதழில் வெளிவந்த ஆண்டுக்கு பின்னால் தாகூர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் என்பது ஒரு சிறு செய்தி பேரா சிவகுமார் இதை ஒரு பேச்சில் தெரிவித்தார். நான் ஹைதராபாத்தில் என் வேலை நிமித்தமாக வசிக்க தொடங்கிய போது பம்பாய், திருவனந்தபுரம், டெல்லி போன்ற நகரங்களில் தமிழர்களின் குரலாய் சில பத்திரிகைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன், அப்போதான் ஆந்திரா தமிழர்களின் குரலாக ஒரு பத்திரிகையை நடத்தப்பட வேண்டும் என்று என்னைப் போன்ற இளைஞர்கள் நினைத்தோம் பாரதியாரின் பூர்த்தி ஆகாத சுயசரிதை கனவு என்ற பெயரில் அந்த பத்திரிகையை அப்போது ஆரம்பித்தோம் .முதல் இரண்டு இதழ்கள் உள்ளூர் படைப்பாளிகளின் படைப்புகளை தாங்கி வந்தன. ஆனால் அதற்கு பெரிய வரவேற்பு இல்லை. அந்த காலத்தில் ஹைதராபாத் செகந்திராபாத் நகரங்களில் இருந்த மத்திய தர வாசகர்கள் ஆனந்த விகடன் கொண்டு பல வெகுஜனை இதழ்களில் அக்கறை கொண்டிருந்தார்கள் .அங்கிருந்த மத்திய மற்றும் உயர் குடி பிராமண பெருமக்கள் அந்த வகை பத்திரிக்கைகளை அதிகமாக விரும்பி வாங்கினார்கள். அங்கு நடக்கும் தமிழ் சார்ந்த இலக்கிய கலாச்சார நடவடிக்கைகளில் அவர்களின் பண்பாட்டு சார்ந்த அரசியல், பண்டிகை சார்ந்த விஷயங்கள் முன்னணி பெற்றன. இந்த சூழலில் அங்கு பெரும்பகுதியான மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பிராமணர்கள் அல்லாத எழுத்து என மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படைப்புகளை அபூர்வமாக எழுதினார்கள். அவர்களுக்குக் களமாக கனவு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் அதற்கான வரவேற்பு இல்லாததால். மூன்றாம் இதிலிருந்து அந்த இதழை தமிழ்நாட்டு படைப்பாளிகளும் எழுத மாற்றினேன் அதுவரை ஒத்துழைப்புச் செயல் தந்து கொண்டிருந்த தமிழ் நண்பர்கள் விலகிக் கொண்டார்கள்.. எண்ணிக்கையில் குறைந்த பிரதிகளாய் இருந்தது கனவு. 800 பிரதிகள் என்பது குறைவானது அல்ல என்பது நண்பர்கள் சிலரின் வாதம். அதற்கு பின்னாலும் நான் தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி வந்த பின்னும் கனவு இதழின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது “ வாசன் மகனுக்கு என்றால்தான் அச்சு பொறி அடிக்குமோ காசு இருந்தால் எங்கேயும் கொண்டு போய் நிறுத்தலாம் “என்ற ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று கசடதபரறமுதல் இதழில் வெளிவந்த ஞாபகம். அப்படித்தான் செகந்திராபாத் தமிழர்களின் குரலை வெளிப்படுத்துவதாக ஆரம்பித்த கனவு இதழ் 38 ஆண்டுகளாக மாற்றுக் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களை முன்னணியாகக் கொண்டு இயங்கி வருகிறது .பத்திரிகையில் மட்டுமில்லாமல் கனவு திரைப்பட இயக்கம், தமிழ்மொழி சார்ந்த கலாச்சார நடவடிக்கைகளை உள்ளடக்கி தன் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது. இப்போதும் 700 பிரதிகள் அடிக்கிறேன்.700 பிரதிகள் காலியாகி விட்ட்து இலவசப்பிரதிகள் தந்து என்று உணரும் போது அடுத்த இதழுக்குப் போகிறேன். எண்ணிக்கையிலான இதழ் என்ற கட்டம் தாண்டி கை வசம் இருக்கும் பிரதிகளின் எண்ணிக்கை தீர்ந்து போவதால் அடுத்த இதழ் வரும் என்ற புதிய போக்கு விசித்திரமாகவே இருக்கிறது. அந்த வகையில் அமரர் மோகன் அவர்களின் நினைவுகளாக வழங்கப்படும் இந்த இலக்கிய விருது கனவுக்கு வழங்கப்படுவது ஒரு சிறு அங்கீகாரமாகவே நினைக்கிறேன், இந்த பண்பை பாராட்டும் கௌரவப்படுத்தும் நடவடிக்கையை தொடர்ந்து அமர்ர் மோகன் நினைவு குழு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் கால நிலை மாற்ற நிலை தரும் நோய்கள் என் சகோதரர் ஒருவர் கொரோனா காலத்திற்குப் பின் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் பழக்கம் உடையவராகி விட்டார் ஆரம்பத்தில் அவர் கொரோனா காலத்தில் போடப்பட்ட தடுப்பூசியினால் அவரின் உடல்நலம் கெட்டு விட்டது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அதனால் வருகிற சாவுகளை பற்றியும் அதிகம் சொல்ல ஆரம்பித்தார். சமீப காலங்களில் மருத்துவமனைக்கு அவர் போகும் பழக்கம் அதிகாரித்து காலநிலை மாற்றம்தான் தம்முடைய உடல்நிலை கேட்டுக்கு காரணம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். கால்களை மாற்றம் பற்றிய பிரச்சார மனிதர் மாதிரி அதைப்பற்றி பலரிடம் பேசிக் கொண்டே இருப்பது அவரின் வழக்கமாக இருக்கிறது காலரை மாற்றங்கள் பல தொற்று நோய்களை உருவாக்குகின்றன. டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்கன் குனியா போன்றவை அவற்றால் வருகின்றன. பாச நோய்களும் இதய நோய்களும் நீரழிவு நோய்களும் இந்த கால மாற்ற போக்குகளால் அதிகம் ஏற்படுகின்றன மற்றும் காற்றுத்துகள்களின் மாசு அதிகரிப்பதும் காரணம இந்த நோய் தன்மையை அதிகரித்து இருக்கிறது. கல நிலை மாற்றம் இன்றைக்கு மனிதன் எதிர் கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது . தொற்று நோய் ஆகியவற்றை கொண்டு வந்து விடுகிறது. ஆரோக்கியத்தில் ஏற்படும் மாறுதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, வெப்ப அலைகள், பக்கவாதம் போன்ற இதய நோய்களை கொண்டு வருகின்றன.மூச்சு திணறல், தீக்காய்களுக்கு வழி இருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் கொண்டு வந்து விடுகிறது இடம் பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் வயதான மக்கள் அடிப்படை சுகாதார நிலையங்களை கொண்டவர்கள் சாதாரணமாக பாதிக்கப்படுகிறார்கள். காலநிலை கணிப்புகள் தவறிக் கொண்டே இருக்கின்றன. கலநிலை மாற்றத்தைக் கண்டு இயற்கையைப் பாதுகாப்பதும் சுத்தமான காற்று மற்றும் நீர் வழங்குவதைக் கடைபிடிப்பதை உறுதி செய்வதும் ஆரோக்கியமான தலையான விடயங்களாகும். உணவு விநியோகத்தை முறையாக ஊக்குவித்தாலும் அரசின் கடமையாக உள்ளது. புது வெப்பநிலையில் மனிதர் என்பது காலநிலை மாற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது இந்த வெப்பநிலை உயர்வு பூமியின் பல்வேறு கூறுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனித இடப்பெயர்வு மற்றும் குடியேற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன காலங்களை. காற்று புயல் வெப்ப அலைகள் கனமழை வெள்ளம் போன்றவை அடிக்கடி நிகழும் வாய்ப்புகள் உள்ளன. மனித குடியேற்ற நிகழ்வுகள் ஏற்படும் மாற்றம் சில பகுதிகளில் அதிக மக்களை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. பொருளாதார இடையூறுகள், உணவு பாதுகாப்பு என்பது சாதாரணமாகிவிட்டது. உணவு சங்கிலிகளில் பல இடங்களில் உணவின் பாதுகாப்பை சமரசம் செய்யும் பல்வேறு ஆபத்துக்கள் வந்து விட்டன. உற்பத்தி சங்கிலியில், உணவின் பாதுகாப்பில் காலநிலை காரணிகளின் தாக்கம் நுண்ணியர்களின் வளர்ச்சியை அவற்றின் தொற்று நோய் போன்றவற்றால் சாதாரண ஆக்கப்பட்டுள்ளது. தாவரம் தொடர்புடைய உணவு மூலம் பரவும் வியாதிகள் அதிகமாக இருக்கிறது. இதில் விலங்குகள் மூலமாகவும் பரவுகிறது. கொரானா வவ்வால்களால் பரவிய கதைகள் நம்குத் தெரியும். உணவு பொருட்களை கெட்டுப் போக வைக்கிறோம். பல பூஞ்சைகள் தொடர்ந்து உற்பத்தியாகி மனிதனுக்கு பலத்த பயங்கர சிரமங்களை கொண்டு வருகின்றன சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் உணவு வழி பாதுகாப்பை சரிப்படுத்த உணவு மூலமாக பரவும் வியாதிகளை கட்டுப்படுத்துவதும் இன்றைக்கு பெரிய சவாலாக இருக்கிறது