சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 25 ஏப்ரல், 2025
திருப்பூர் இலக்கிய விருது 2024 உரை 2 : இராமன் முள்ளிப்பள்ளம் Kanavu issue 120
இலக்கியத்தின் மூன்று கூறுகள் இயல் இசை நாடகம் எப்போதுமே ஏற்கனவே இருக்கும் சமூகத்தை எல்லா வகைகளிலும் பாதுகாக்கிறது.கலை இலக்கியம் மக்களுக்கானது, மக்களை மேம்படுத்தக் கூடியது,
மக்கள் வாழ்வை மாற்றக் கூடியது. ஏனெனில் மாற்றம் நம்மை. ஒரு கட்டத்தில் மேலே மேன்மையுற செய்வது அல்லது நம்மை கீழே தள்ளக்கூடியது. நமக்கு முன்னேறுவதற்கான இலக்கியம் வேண்டும். எந்த ஒரு முற்போக்கு இலக்கியமும் சம கால அநீதிகளை, அவலங்களை அநியாயங்களை இலக்கிய நயத்துடன் எடுத்துக் காட்டக் கூடியது.
எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய இலக்கியம் இருக்கின்றது
திருவள்ளுவரை பார்ப்போம், அவருடைய இரண்டு குறள்கள்
ஆகாறு அளவு இட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக்கடை
மற்றொரு குறள்
நச்சப்படாதவன் செல்வம் நடுவூரில் நச்சு மரம் பழுத்தற்று
இந்த இரு குறள்களும் சம கால பொருளாதாரத்தை மட்டுமல்ல
எக்காலத்திற்குமான பொருளாதார சூழ் நிலையை காட்டுகிறது
முதல் குறள் கூறுவது வருமானம் குறைவாக இருந்தாலும் செலவு அந்த
வருமானத்துக்கு உள்ளே இருக்க வேண்டும். இரண்டாம் குறள். கொடை
அளிக்காதவனிடம் உள்ள செல்வம் நச்சு.
ஆகவே ஒரு இலக்கியம் சம காலத்தை காட்ட வேண்டும் முடிந்தால் எதிர்
காலத்தை காட்ட வேண்டும் ஆனால் உளுத்துப் போன பழைய
பண்பாட்டுகளை தூக்கி பிடித்து பாராட்டக் கூடாது.
பத்தாம் நூற்றாண்டு மன்னர் ஆட்சியை அந்த மன்னரின் புகழைப் பாடுவது ஒரு
இலக்கியவாதியின் பணி அல்ல., பழம் பெருமைகளை ஆதரிப்பது
இலக்கியவாதியின் பணி அல்ல. நாம் முன்னேறி செல்ல வேண்டும்.
ஒரு புரட்சிகர எழுத்தாளர் இரண்டாம் உலகப் போர் முடிவில் தமிழ் நாட்டு சமூகம் எப்படி இருந்தது என ஒரு சிறு கதையில் காட்டுகிறார். அவருடைய சிறுகதையில் இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் ஒரு சராசரி மேல் குடிப் பெண் காஷ நோய் பீடிக்கப்பட்டு பயணச்சிட்டு வாங்கப் பணம் இல்லாமல் டிக்கட் இல்லாமல் இரயிலில் பயணம் செய்கிறார். ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் உல்லாசமாக கும்மாளம் போட்டுக்கொண்டு இரட்டை மாட்டு வண்டியில் படு வேகமாக செல்கின்றனர், தெருவோரம் நிற்பவர்கள் ஓடி பதுங்குகின்றனர்
இப்படித்தான் இரட்டை மாட்டு வண்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள்
செல்வதாக ஜெயகாந்தன் தன் சிறுகதை ‘’பகல் நேரத்து பாசஞ்சர்
வண்டியில் சித்தரிக்கிறார். இவர் இலக்கிய உலகின் ரஜ்னிகாந்தாக கமலஹாசனாக வலம் வந்தார். அடுத்து சுஜாதா, இவர் எழுதிய செக்ஸ் சொற்களுக்ககவே ஒரு பெரும் வாசகர் சந்தையை வைத்திருந்தார். நாம் இப்போது வெகுவாக மாறி வருகிறோம்.
திருவள்ளுவர் தம் காலத்து பொருளாதாரத்தை கூறி விட்டார். சேமிக்கும்
பணம் சம்பாதிக்கும் பணத்திற்கு ஈடாகிறது நான் சொன்ன குறளில்.
வீடுவீடாக சென்று நன்கொடை கேட்கும் வழக்கம் திருவள்ளுவர்
காலத்தில் இருந்தது. அப்படி செல்லுகையில் ஒரு செல்வந்தன்
நன்கொடை தர மறுத்தால் அவன் செல்வம் ஒரு நச்சு, நடுவூரில் நச்சு
மரம் பழுத்தற்று. இன்றும் நன்கொடை இல்லை அது கெட்ட கொடை
எலெக்டோரல் பாண்டு தேர்தல் நிதி பத்திரம், பயணாளி பெயர் இருக்காது.
நாம் நமது கதைகளில் ஜிஎஸ்டி குறித்து எழுதுகிறோமா. எல்லா
எழுத்தாளர்களும் ஜிஎஸ்டி குறித்து எழுத வேண்டும், நான் ஒரு கதையில் எழுதினேன்
’’ஜிஎஸ்டி வசூலிக்காத கடையில் உப்புமா சாப்பிட்டான் என எழுதினேன்.’’
ஜிஎஸ்டி மட்டுமல்ல டிஜிட்டல் பண மாற்றம் குறித்தும் எழுத வேண்டும்,
இட்லி வடை காப்பிக்கு மட்டுமே போன்பே டிஜிட்டல் பணம் செலுத்துதல்
உள்ளது, ஒருவர் வீடு அல்லது நிலம் வாங்கும் போது டிஜிட்டல் இல்லை
கருப்பு பணமே அதிகம் கை மாறுகிறது ஏனெனில் தற்போதைய
பொருளாதாரம் கருப்பு பணத்தை பயிர் செய்கிறது
டாஸ்மாக் வரும் கதைகள் கவிதைகள் நிறைய படித்துள்ளேன், ஆனால் இன்னும் அதிகம் வேண்டும், பத்தாயிரம் சிறுகதைகள், இருபதாயிரம்
கவிதைகள் டாஸ்மாக் ஏற்படுத்தும் கொடுமைகளை சித்தரிக்க வேண்டும் அது ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகி எல்லா மதுக் கடைகளையும் மூடவைக்க வேண்டும். ஆம் இலக்கியத்திற்கு அப்படி ஒரு பங்கு உண்டு.
சுதந்திர போராட்டத்தை பாருங்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசி பத்து பேரை சுதந்திர போராட்டத்திற்கு ஈர்த்தால் முண்டாசுக் கவிஞன் இனிய தமிழில் கவிதகள் பாடி ஆயிரம் பேரை ஈர்த்தான், அதாவது காங்கிரஸ் பத்து பேரை சேர்த்தால் பாரதி ஆயிரம் பேரை சேர்த்தான்.
புதுமை படைப்போம் பழமை ஒழிப்போம். அடுத்து சினிமா இதுவும் ஒரு இலக்கியம். எழுத்து இலக்கியத்தின் குழந்தைதான் சினிமா. யாரும் இன்று ஊமைப் படம் எடுக்க முடியாது. நம் மக்களுக்கு சினிமா குறித்து சரியான விழிப்புணர்வு தர வேண்டும். ரஜனிகாந், கமலஹாசன் விஜய் அஜித்
இத்தனை பேரையும் ஒரு சேர பத்து வயது சிறுவன் அடித்து வீழ்த்திவிட முடியும். அதாவது நான் கூறுவது ஒரு நட்புக்கான சண்டையில் . நீங்கள் ஒரு மைதானத்திற்கு இந்த நான்கு சூபர் ஸ்டார்களையும் வரச் சொல்லுங்கள் ஒரு பத்து வயது சிறுவன் இவர்களுடன் சண்டையிட்டு நான்கு பேரையும் ஒரே அடியில் அடித்து வீழ்த்தி விடுவான். இந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்து தங்கள் நடிப்பை தொடர விரும்புகிறார்கள்.
மக்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டும் நாம் எழுதும் கதைகளில் கட்டுரைகளில், கவிதைகளில் நடிகர்ளை கேலிப் பொருளாக்கி அமபலப்படுத்த வேண்டும்.
O