சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
சுப்ர பாரதி மணியன்
சுப்பிரமணிய பாரதியின் குட்டிக் கதைகள்
நான் சேவல் சண்டை பற்றி பல கதைகளை எழுதி இருக்கிறேன் அப்பா தொகுப்பிலும் வேறு கதை தொப்புகளிலும் அந்தக் கதைகள் உள்ளன. ஆடுகளம் படத்தில் சேவல் சண்டைகள் இலக்கியத்தில் வருகிற இடங்களைக் குறிப்பிட்டு பாரதியாரின் சின்ன சங்கரன் கதை என்பதையும் போடுகிறார்கள் என்று சொன்னார்கள். என்னுடைய சேவல் சண்டை கதைகளை பற்றி அதில் குறிப்பிருக்கிறதா என்று தெரியவில்லை.
பாரதி வேடிக்கை கதைகள் என்று பலவற்றை எழுதியிருக்கிறார் குட்டிக் கதைகள் எழுதி இருக்கிறார் அவற்றிலெல்லாம் நகைச்சுவை மிளிரும்.
பாரதியாரின் சின்ன சங்கரன் கதை 33 பக்க நீண்ட கதை அப்படித்தான் அவர் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஐரோப்பிய சாயல் சிறுகதைகளில் வரும் வடிவத்தை பின்பற்றியவர் அல்ல. அதே சமயம் சிறுகதைகள் மற்றும் படைப்புகளில் ஏதாவது செய்தி சொல்ல வேண்டும். சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கருதியவர். அவர் எழுதிய படைப்புகளில் உடன்கட்டை ஏறுவது குறித்த எதிர்ப்பும் பொட்டுக்கட்டு வழக்கத்தை எதிர்த்தும் ருது ஆவதற்கு முன்பே திருமணம் செய்யும் பழக்கத்தை எதிர்த்தும் பலவற்றை எழுதியிருக்கிறார். கலப்பு மணம் பற்றி ஆதரித்து எழுதியிருக்கிறார். மதவழக்கம், பழமையான சட்டங்களை பற்றி கண்டித்து இருக்கிறார். ஆறில் ஒரு பங்கு சிறுகதையில் கூட தீண்டாமை சார்ந்த எதிர்ப்பு குரல் இருக்கும் இவை எல்லாம் பாரதியை நவீன சிறுகதை சார்ந்த ஒரு எழுத்தாளராக காட்டும்
இதனுடைய தொடர்ச்சி சக்ரவர்த்தினியில் ‘துளஸீபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற புனைவை எழுதியிருந்தார் . 11 பக்கம் கொண்டது. அது தமிழில் முதல் சிறுகதை என்று சிலர் சொல்கிறார்கள் . ஷெல்லிதாசன் என்ற புனைப் பெயரில் எழுதியிருந்தார், “ ஆறில் ஒரு பங்கு “ கதையும் அப்படி சிறப்புகள் கொண்டது ஆறில் ஒன்று ஒரு பங்கு 1910 இல் பாண்டிச்சேரியில் இருந்து பாரதியார் அவர்களால் வெளியிடப்பட்டது
கதாபாத்திரம் கதை சொல்லும் யுத்தியும் கதை மையத்திலிருந்து கதையை வெளியேற்றும் புத்தியும் இன்றைக்கு பல எழுத்தாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் அதை கடைபிடித்தவர் ஆரம்பத்திலேயே பாரதியார் அவர்கள். அவர்களுடைய வேடிக்கை கதைகள் அல்லது குட்டி கதைகள் எனக்குப் பிடிக்கும். இவற்றில் எனக்கு அந்த பழக்கடைக்காரனை ரொம்பவும் ஞாபகம் இருக்கிறது
அவன் கால் யானைக்கால் போல இருக்கும் .அந்த வியாதி உள்ளது. அந்தப் பக்கம் வரும் பள்ளி மாணவர்கள் அவனுடைய கடையில் இருந்து பழங்களை திருட முயற்சித்தால் என் காலால் அடிபடுவீர்கள் என்று விரட்டுவான். ஒரு பையன் அப்படித்தான் ஒரு பழத்தை எடுத்து விட்டான் காலால் உதைக்கிறான். யானைக்கால் என்பதால் மெது மெது என்று இருப்பதாக அந்தப் பையன் மற்ற பையன்களிடம் சொல்லிச் சிரிக்கிறான் . திரும்பத் திரும்பச்சொல்லி சிரிக்கிறான். இது எலும்பில்லாத கால் அடியே படாது, வலிக்காது என்று அவன் சொல்கிறான் இந்த கதை சின்ன வயதிலிருந்து எனக்கு ஞாபகம் வந்தது.. காரணம் இதேபோல யானைக்கால் வியாதி கொண்ட ஒரு பெண்மணி நான் படித்த திருப்பூர் மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளியில் முன்பு தேன் மிட்டாய்கள். நெல்லிக்காய் வைத்தபடி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் .அவள் தன் காலை காட்டித்தான் மற்றவர்களையும் மிரட்டி கடையை நடத்திக் கொண்டிருந்தாள்.
சேவல் கட்டு பற்றிய குறிப்பு வருகிற சின்ன சங்கரன் கதைக்கு மறுபடியும் செல்லலாம். அதில் ராமசாமி கவுண்டர் நபர் மிக முக்கியமான வருகிறார். அவர் பொழுதுபோக்குகளில் ஒன்று சேவல் சண்டை வேடிக்கை பார்ப்பது. அவர் சார்ந்த அரண்மனை கோழிகள் அந்த சண்டையில் தோற்று தான் போகும். புதிதாக அரண்மனை கோழி என்று எதையாவது கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் .பிறகு அவையெல்லாம் சேவல் சண்டையில் பிரயோஜனம் இல்லாமல் போகும். ராமசாமி கவுண்டரின் உணவு பழக்க வழக்கங்களை பற்றி எல்லாம் அந்த கதையில் நிறைய சொல்லப்படும். 32 கவளம் சாப்பிட வேண்டும் என்று குறிப்பு அதில் இருக்கும். அவ்வளவு சாதம் அவ்வளவு சாப்பிட முடியுமா என்று தெரியவில்லை அவ்வளவு சாப்பிட வேண்டும் என்று அந்த கதையில் வலியுறுத்தி இருப்பார். .அதேபோல ராமசாமி கவுண்டர் சேவல் சண்டையில் தோற்றுப் போன கோச்சைக்கறியைச் சாப்பிட்டாரா என்ற குறிப்பு காணவில்லை பாரதியாருடைய கதையில் இடம்பெறும் இந்த சேவல் சண்டை என்னுடைய சில கதைகளின் சேவல் சண்டை மையத்திற்கு அருகில் வந்திருப்பதால் அந்த கதை எனக்கு ரொம்பவும் பிடித்ததாக இருக்கிறது. பாரதியார் எழுதிய வேடிக்கை கதைகள், குட்டி கதைகள் இவற்றை சுலபமாக யாரும் படித்து தங்களுக்கான கதைகளாக எடுத்துக் கொள்ளலாம்
ReplyForward
Add reaction
The tamil hindu jan 2025-02-20
வெப்பம்:
சுப்ரபாரதிமணியனின் சிறார் நாவல்
புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் இந்த நாவல் சொல்கிறது.
ஒரு தீவு போன்ற பகுதியில் புவி வெப்பமாதலால் கடல் மட்டம் உயர்வதும் அதனால் பள்ளிகள் மூடப்பட்டு இடம்பெயர்வதும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறுவர்கள் பெரியவர்கள் ஆன சூழலில் அதன் பாதிப்பு தொடர்வதையும் பல அனுபவங்கள் மூலம் சொல்கிறார் நாவலாசிரியர். அவர்களுக்கு ஏற்படும் அன்பை, காதலை இயற்கை சூழலுடன் கூறியிருக்கிறார்.
குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசூவரூபம் எடுப்பதை சிறுவர் அனுபவங்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது இதில்
( ரூ55 நியூ சென்சுரி புஸ் வெளியீடு சென்னை )
• மதுராந்தகன்
தறிநாடா : குறும்படம்
இயக்கம் : ஜோசன் விக்டர்
திரைமொழிக்கதை: சுப்ரபாரதிமணியன்
கைபேசியில் எடுத்த படம்
தயாரிப்பு : கனவு On production
0
தறிநாடா : குறும்படம்
0
தறிநாடா அங்கும் இங்குமோடும் காட்சி
நாடா இந்தப்புறம், அந்தப்புறம் என்று ஓடுவது
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
0
சேலையை நெய்து முடித்தல்
0
முதலாளியிடம் போதல் .
நெசவாளி : கூலி குறைவாக இருக்குதே
முதலாளி : அவ்வளவுதான் வரும் .. போ
0
வீடு திரும்பும் நெசவாளி சோகத்துடன்
0
தறிநாடா அங்கும் இங்குமோடும் காட்சி
நாடா இந்தப்புறம், அந்தப்புறம் என்று ஓடுவது
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
0
நெசவை திடீரென நிறுத்துதல்
தறி நாடாவை கையில் எடுத்து வீதிக்குச் செல்லுவது . கூர்மையாக்குவது
0
முதலாளி வீடு வரல். குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
சாயப்பட்டறை செல்லல்
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
ரேசன் கடையிலில் இலவச சேலை, வேட்டியை வாங்கி வரும் பெண்
“ நான் என்ன பண்ணட்டும். இலவச சேலை, வேட்டின்னு சொல்லி பவர்லூம்லே நெய்சதெ தந்தாங்க. கைத்தறியிலெ நெய்சது இல்லே இது .
அலறல் : நான் காரணமில்லை
0
மளிகைக்கடைக்குச் செல்லுவது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
ஜரிகைக் கடைக்குச் செல்வது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
நூல் கடைக்குச் செல்வது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
நாங்க காரணம் இல்லை யார் காரணம் தேடு
0
அவன் விழித்தபடி
கையில் இருக்கும் நாடாவை உயர்த்துவது.
நட்புரை
வாழ்க்கை பிரம்மாண்டமானது. வாழ்க்கை அனுபவங்களை சில வார்த்தைகளில், சில வரிகளில் சுருக்கிக் கவிதையாக அதிலும் குறிப்பாக ஹைக்கூவாகத் தரும் வல்லமை அமரன் அவர்களுக்கு எப்போதும் உண்டு. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் பிற மொழிகளில் கொண்டு செல்வதிலும் ஆர்வம் கொள்பவர்.
ஆயிரக்கணக்கான பக்கங்களை ஹைக்கூ கவிதைகளால் நிரப்பி இருப்பவர் .
எவ்வளவு அனுபவங்கள்
எவ்வளவு கைகுலுக்கல்கள்
எவ்வளவு பரிமாற்றங்கள்
அதெல்லாம் ஆச்சரியமாக இருந்திருக்கிறது. அந்த துறை சார்ந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் என்பதால் அவருக்கு ஹைக்கூ சுலபமாக வந்து விடுகிறது. ஆனால் ஒரு வகையில் பழமைத் தன்மையும் வேறு வகையான இறுக்கமும் இருப்பதை நான் அந்நியமாக கண்டு சில சமயம் ஒதுங்கி இருக்கிறேன் ஆனால் அனுபவ அளவில் அவையெல்லாம் விரிந்த கடல் போன்றது.
அதிலிருந்து சிலவற்றை எடுத்து சொல்ல சொல்ல நாமும் அந்த கடலுக்குள் போய் பயணம் செய்கிற அனுபவத்தை பெறுகிறோம். அதற்குள் நீச்சல் அடிக்கிறோம். சில சமயம் கடல் நீர் வாய்க்குள் புகுந்து கொள்வது உண்டு. அப்படித்தான் நான் முன்னால் குறிப்பிட்ட பழமைத்தன்மையும் கூட.
ஆனால் அதையெல்லாம் மீறி அவர் தொடர்ந்து கவிதை உலகில் இருப்பதும் ஆயிரக்கணக்கான கவிதைகளை அக்கறையுடன் எழுதி இருப்பதும் பெரிய சாதனையாகப்படுகிறது.
அதில் ஒரு நூலை கனவு பதிப்பகத்தின் மூலம் அவர் வெளியிட இசிவு தந்தது என்னை பெரு மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அந்த மகிழ்ச்சியை ஹைக்கூ வாசகங்கள் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். .அமரன் அவர்களின் ஹைக்கூ உலகத்திற்குள் நாம் செல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை கனவு வெளியீட்டின் மூலமாக அவர் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி
அவரின் ஹைக்கூ உலகில் அவரோடு இணைந்து அவருடன் கைக்குலுக்கிக் கொள்வோம்.. வாருங்கள்
0
சுப்ரபாரதி மணியன் 9486101003 ( கனவு பதிப்பகம், திருப்பூர் )
எழுத்தாளர் தேவி பாரதி:
ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை... அமரர் நண்பர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள் நண்பர்கள் உடன் இணைந்து ஆரம்பித்த மருத்துவமனை. அங்கு தான் எழுத்தாளர் தேவி பாரதி சிகிச்சை பெற்று வந்தார். வருகிறார். அவரை மருத்துவமனையின் தலைமை நிர்வாகிகளான சிவானந்தம் போன்றவர்களும் பத்திரிக்கையாளர் ஜீவா தங்கவேல் போன்றவர்களும் அக்கறை எடுத்துக்கொண்டு அங்கே அனுமதித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
நண்பர் ஓவியர் சுந்தரம் அவர்களுடன் சென்றபோது அவர் அடையாளம் கண்டு பேசும் நிலையில் இருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் இரண்டாவது மாடியில் இருந்த அவர் அறையில் அவரை பார்த்தவுடன் தூக்கத்தில் இருந்தவர் சட்டென விழித்து புன்னகைத்தார். தலை கருப்பு கேசம் அடர்ந்திருந்தது.முகத்தில் நாலைந்து நாள் தாடிதான். மூக்கில் குழாய்கள்.
அவர் வாயிலிருந்து வெளியேறிய கோழை படுக்கையை நனைத்து அசுத்துதக்கியிருப்பதைக் காட்டி அதை துடைக்க முடியாமல் இருப்பதை சொன்னார். பக்க வாதத்தால் கைகால்கள் செயலிழந்திருப்பதாகச் சொன்னார். அவரின் தலை அருகில் இருந்த்த் துண்டை எடுத்து ஓவியர் சுந்தர் அவர்கள் அதைத் துடைத்து அவருக்கு ஆறுதல். தந்தார் நன்றாக இருப்பதாக சொன்னார் நாங்கள் வேறு எதுவும் கேட்காத போது அவர் சரளமாக பேச ஆரம்பித்தார்
9 வயதில் பள்ளியில் படிக்கிற போது எழுத ஆரம்பித்தேன் அப்போதே நான் எழுத்தாளர் ஆகிவிட்டேன் என்று நினைத்தேன் ஜெயகாந்தன் அவர்கள் அப்போது பிரபலமான எழுத்தாளர் என்பதால் அவருக்கு கடிதம் எழுதினேன். நான் எழுத்தாளன் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக படிப்பதற்காக சில புத்தகங்களை எனக்கு சிபாரிசு செய்யுங்கள் என்று கடிதம் எழுதினேன். அவர் பதில் அனுப்பவில்லை
பின்னால் ஈரோட்டுக்கு ஒரு கூட்டத்திற்கு வந்திருந்த அவரை சந்தித்தேன்.மதுவும் மாமிசம் ஆகவும் இருந்தார். எனக்கு அது சிரமப்படுத்தியது. குப்பையாக இருக்கிறார் என்று நினைத்தேன் ஆனால் அவர் எழுத்துக்கள் அப்படி இல்லை அவரும் அப்படி இல்லை என்று பின்னால் நான் உணர்ந்து கொண்டேன்.
அவர் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வந்தேன் அவர் மருத்துவமனையில் இருந்த கடைசி காலகட்டத்தில் காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் சென்று சந்தித்தேன் அடுத்த முறை மைதிலி உடன் சென்று சந்தித்தேன். நான் சந்தித்த சில நிமிடங்களில் அவர் மறைந்து விட்டார் அவருக்கு அஞ்சலி செலுத்திய முதல் நபராக இருந்தேன் என்று நினைக்கிறேன்
சுந்தர ராமசாமியின் படைப்புகளில் எனக்கு பிடித்தது புளிய மரத்தின் கதை தான்.. ஜே ஜே சில குறிப்புகள் நாவல் விளையாட்டுதான் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இன்னொரு சிறந்த நாவல். அவர் படைப்பை எவ்வளவு நுணுக்கமாக எழுத வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். அவருக்கு பெரிய விருதுகள், அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை என்பது என்னைப் போன்று உள்ளவர்களுக்கு வருத்தம் ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொண்டதில்லை
என்னுடைய படைப்புகளுக்கு ஆதாரமாக, அட்சாரமாக ஈரோட்டைச் சார்ந்த நண்பர் மதுசூதரன் இருந்தார். தீபம் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்தார். அவர்தான் என்னை ஊக்குவித்து எழுத சொன்னார்.
நான் மார்க்சிய தத்துவம் சார்ந்த இயக்கங்களில் இருந்தேன் ஆனால் அங்கிருந்தவர்களில் பலபேர் இலக்கிய வாசிப்பு என்பதை தேவையில்லாததாகக் கொண்டிருந்தார்கள் ஆனால் தத்துவார்த்த விஷயங்களை வரமாக கொண்டிருந்தார்கள் அதெல்லாம் எனக்கு உரமாக இருந்தது
நான் எழுதிய நாவல்களில் நொய்யல் எனக்கு பிடித்த நாவல் என் வாழ்க்கை அனுபவங்கள் பலதும் அதில் வந்திருக்கின்றன. நீர் வழிபடூம் நாவல் அதிகம் பேசப்பட்டாலும் அதைவிட நொய்யல்தான் அதிகமாக பேசப்பட வேண்டும் என நினைத்தேன்
நான் இப்போது எழுதி வரும் ஆதியாகமம் என்ற நாவல் கூட முக்கியமான நாவல். வண்ணநிலவனின் கதைகளில் ஆதியாகமமஎன்ற வார்த்தை அதிகம் தென்படும். அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும் .அந்த தலைப்பிலேயே புதிய நாவலை எழுத ஆரம்பித்தேன்.
எழுத்தாளனுக்கு மரணம் இல்லை அவர் எழுத்துக்கள் வாழ்ந்து கொண்டே இருக்கும்
The hidnu tamil feb 2025
முஸ்லிம்கள் எப்படி சிறந்த சமூகமாக இருக்க முடியும்
கற்பனையும் கருத்துரையும்: பிஜிலி நூல்
உண்மையைச் சரணடைதல் என்ற எளிய நம்பிக்கை தான். இஸ்லாமியத்தின் அடிப்படை அது பணிந்து நடக்க வற்புறுத்துகிறது என்கிறார் பிஜிலி
இஸ்லாம் ஒரு தத்துவமாகும். வாழ்க்கை முறையாகவும் பரவி அந்தந்த நாடுகளின் கலாச்சாரமும் பாதித்திருக்கிறது உள்ளூர் கலாச்சாரம் இஸ்லாமின் அடிப்படை கொள்கைகளை பாதிக்காத முறையில் பின்பற்றப்படுகிறது. வேறுபாடு இருக்குமானால் அது விலகிதாக உணரப்படும் சூழல்களை இந்த நூலில் சிறப்பாக சொல்கிறார். பிஜிலி.
சுற்றுச்சூழல் பொறியாளராக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்து திருவனந்தபுரம் நகரில் வாழ்ந்து வருபவர். ஐந்து மொழிகளில் எழுதும் ஆர்வம் கொண்டவர். அவரின் சமீபத்தியக் கட்டுரைத்தொகுப்பு நூல் இது.
இஸ்லாமைக் கொள்ளாதவர்களும் புரிந்து கொண்டிருப்பது போன்று அது வெறும் மதம் மட்டும் அல்ல படைத்தவர்களிடமிருந்து படைக்கப்பட்டது திருக்குர்ஆன். இந்த வாக்கியத்தை மெய்ப்பிக்கும் உண்மையின் குரலை சொல்வதற்காக இந்த நூலை பிஜிலி அவர்கள் எழுதியிருக்கிறார்.
இந்தியா என்பது ஒரே கலாச்சாரத்தை கொண்டது என்ற கருத்து கற்பனையானது. இந்த கருத்தை கொண்டவர்கள் அதிகாரம் வைத்திருக்கிறார்கள் அவர்கள் இதை உறுதி செய்ய வேண்டும் என்று மனதில்கொண்டிருக்கிறார்கள் என்பதை பல தரவுகள் மூலம் சொல்கிறார்.
பேராசை தாகம் உருவாக்கியிருக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று மோட்சம் அடைவதற்காக வழியாக இஸ்லாம் இருப்பதை பல உதாரணங்கள் மூலம் விளக்குகிறார். அந்த உண்மையை அறிந்து அடைய இந்த கட்டுரைகள் வழி காட்டுவதாக அமைத்திருக்கிறார். இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறாக எடுத்துரைக்கப்பட்டு தவறாக கணிக்கப்பட்டு இன்று இஸ்லாம் உட்படாத எல்லோராலும் எதிர்க்கப்பட்டு வருகிறது என்பதை சமீபத்திய சம்பவங்கள் மூலம் விளக்குகிறார். நாம் ஒன்று சேர்ந்து மனிதாபிமானத்தை புரிந்து கொள்ள முயல்வது சமூக வாழ்க்கைக்கும் ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை சொல்கிறார்
இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லிம்கள் சரிவாகவேக் கிடக்கிறார்கள். பலரைக் கவரக்கூடிய உயர் சாதிக் கலாச்சாரம் பூர்வீக ஆதிக்கம் அவர்களை பாதித்திருக்கிறது என்பதை சொல்கிறார் ஆன்மீகம் லவுகீகமும் இஸ்லாமில் இணைபிரியாதவை இஸ்லாம் தான் மிகவும் பழமையான மதம் அதே நேரத்தில் இஸ்லாம் தான் மனிதனுக்கு ஏற்றதான நவீனமான மதம் என்றும் பல சர்ச்சைகளை இந்த நூல் எழுப்பி இருக்கிறது. முஸ்லிம்கள் எப்படி சிறந்த சமூகமாக இருக்க முடியும் என்பதற்கான நெறிமுறைகளையும் விளக்குகிறது இந்நூல்.அதை பிற மதத்தினரும் கைக்கொள்ளலாம் என்பதையும் இது சொல்கிறது
பிஜிலி அவர்கள் தமிழ், மலையாளம், உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் எழுதவும் வாசிக்கவும் அறிந்தவர். தமிழில் அவ்வப்போது எழுதி வருகிறார் அவரின் ஐந்து தமிழ் நூல்களில் சமீபத்திய நூல் இது.
ரூபாய் 300/ 388 பக்கங்கள் சித்தார்த் பதிப்பகம் மதுரை 6 2 5020 8220550688
சுப்ரபாரதிமணியன்
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
--------------------------------------------------------------------------------------------------------------------------------FB
. தமிழகம் முதல்வருக்கு கோரிக்கை: சுப்ரபாரதிமணியன்
1. நகரங்களில் மற்றும் பிற ஊர்களில் நடைபெறும் நூலக விழாக்களில் உள்ளூர் எழுத்தாளர்களுக்கு பங்களிப்பும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்
2. நூலாக வாசகர் வட்ட குழுக்களில் அம்பது சதவீதம் எழுத்தாளர்கள் இடம் பெற வேண்டும்
சமீபத்தில் நூலக வார விழா நடந்து முடிந்தது அதில் இடம்பெற்றவர்களின் பட்டியலை பார்த்தால் அதிர்ச்சிகரமாக இருக்கும்.அதில்எழுத்தாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எழுத்தாளர்களை நூல்கள் நூலகங்ளில் இருக்கும். பிறர் எடுத்து படிப்பார்கள் விமர்சிப்பார்கள். ஆனால் அங்கு நடைபெறும் கூட்டங்களில் எழுத்தாளர்கள் இடம்பெற மாட்டார்கள்
சாதாரண தேனீர் செலவுக்கு பணம் கொடுக்கும் தொழில் பிரமுகர்கள் இலக்கிய வள்ளல்களாக அந்த கூட்டங்களில் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் எழுதும் பொன்மொழிகள் கவிதைகள் என சொல்லப்படும் தத்துவ கொட்டேசன் மூலம் அவர்கள் நூல் சிறந்த எழுத்தாளர்களாக முன்னிறுத்தப்படுவார்கள்.
நூலகர்கள் அந்தப் பகுதியில் எழுத்தாளர்களை அழைப்பதில்லை. அவர்களின் நூல்களைப் படிப்பதில்லை சரியாக அறிந்து கொள்வதே இல்லை இந்த நிலையில் நடக்கும் நூலக விழாக்கள் திருப்திகரமாக இல்லை
மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் புத்தக கண்காட்சிகளில் எழுத்தாளர்களின் பங்களிப்பு, உள்ளூர் படைப்பாளியின் பங்களிப்பையும் வலியுறுத்தும் தமிழக அரசு இந்த விஷயத்திலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் இதை நூலகப் பொதுத்துறை கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
சுப்ரபாரதிமணியன்
27 நாவல்கள் உட்பட 116 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன்.
சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது, மொழிபெயர்ப்பாளர் விருது இரண்டு லட்சம் தொகையுடன் உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.
இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்:
2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது.
இவரின் 1000 பக்க நாவல் “ சிலுவை “ சமீபத்தில் வெளிவந்துள்ளது NCBH .
சிலுவை நாவல் இவ்வாண்டின் எஸ் ஆரெம் தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் பெற்றுள்ளது.
இவரின் 10 சிறுகதைகள் குறும்படங்களாகியுள்ளன ( அயலான் இயக்குனர் ரவிக்குமார், பேரெழில் குமரன் உட்பட பலரின் இயக்கத்தில் அந்தக்குறும்படங்கள் வந்துள்ளன ).இவரின் இயக்கத்தில் வந்த குறும்படம் “ நாணல் ”.
5 திரைப்பட நூல்கள் வெளியிட்டுள்ளார், இதைத் தவிர 8 திரைக்கதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார்.கனவு இலக்கிய இதழை 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.கனவு திரைப்பட சங்கத்தையும் நடத்தி வருகிறார்.திரைப்பட சங்க கூட்டமைப்பின் ரீஜினல் கவுன்சில் உறுப்பினர். பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்கு பெறுகிறார்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் நாவல், நாடகம் ஒவ்வொன்றும் சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை .
இவரின் கட்டுரைத் தொகுப்புகளில் சுற்றுச்சூழல், திரைப்படக் கட்டுரைகள், இலக்கியக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என் 35 நூல்கள் அடங்கும். இவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நூல்கள் அதிகம் விற்பனையான நூல்கள்.
கவிதை நூல் ஒன்றும், நாடக நூல் ஒன்றும் இவரின் 110 நூல்களில் அடங்கும்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் , நாடகம் ஒன்றும் நாவல், சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை
நாவல்கள் .. வெப்பம், கொரானா தடுப்பூசி
சிறுகதைகள் : அன்பே உலகம், சிந்திக்க வைக்கும் சிறுவர்கதைகள்
நாடகம் : பசுமைப்பூங்கா..
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
--------------------------------------------------------------------------------------------------------------------------------FB
சுப்ரபாரதிமணியன்
NCBH புதிய நூல்கள் 1 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது
1 வேர்களை இழக்கும் பூமி.. சுற்றுச்சூழல் கட்டுரைகள்
புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் சுப்ரபாரதிமணியனின் சமீபக் கட்டுரைகள் சொல்கின்றன.
குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசூவரூபம் எடுப்பதையும் இக்கட்டுரைகள் சொல்கின்றன. மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சூழல்கள் பற்றிய பார்வையையும் இவை தருகின்றன.
சுற்றுச்சூழல் சார்ந்த நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் இவரின் படைப்புகளில் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன
27 நாவல்கள் உட்பட 115 நூல்கள் எழுதியிருக்கும் சுப்ரபாரதிமணியனின் படைப்புகளில் -- சுற்றுச் சூழல் நூல்களின் வரிசையில் ஒரு கட்டுரை நூல் இது..
சுப்ரபாரதிமணியன் NCBH புதிய நூல்கள் 2
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது
0 முகப்பறவையே எங்கு சென்றாய்.. திரைநாவல்
27 நாவல்கள் உட்பட 116 நூல்கள் எழுதியிருக்கும் சுப்ரபாரதிமணியனின் திரை நாவல் வரிசையில் ஒரு நாவல் இது.
நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரைக்கதைகள் உருவாகும்.. . அதே சமயம் திரைக்கதைகளிலிருந்து உருவாகும் திரைநாவல்கள் இன்னொரு வகை. அந்த வகையில் ஒரு நாவல் இது.
பெண்ணின் முக அழகும், உள்ளார்ந்த அக அழகும் வெளிப்படுமொரு இளம் பெண்ணின் கதையாகும் .
கிளமெண்ட் விக்டரின் திரைக்கதைகள்
திரையரங்குகளில் வேலை என்ற அளவில் சுமார் 40 ஆண்டுகள் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்திருப்பவர் கிளமெண்ட் விக்டர் அவர்கள் .ஆயிரக்கணக்கான படங்களை பார்த்திருப்பவர். தொழில் ரீதியாக அந்த படங்கள் அவரோடு ஓடிக் கொண்டிருந்தாலும் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தமிழ் திரைப்பட உலகின் அகல ஆழங்களை நன்கு அறிந்தவர் நீண்டகால தமிழ் திரைப்பட வரலாற்றை தன் மனதில் கொண்டிருப்பவர். திரைப்பட ஆக்கங்கள் குறித்த ஆர்வத்தில் இருப்பவ.ர் திரைக்கதை ஆக்கங்கள் சார்ந்த பல ஆலோசனைகளில் அவருடைய திறமையை கண்டு வியந்திருக்கிறேன் அது சார்ந்த உழைப்பும் அக்கறையும் ஆச்சரியப்படுத்தும்.
அவர் இயக்கிய குறும்படங்களை பார்க்கிற போது அதில் திரைக்கதைகளில் நேர்த்தியும் தொழில்நுட்ப நேர்த்தியும் அவரின் கைவண்ணத்தை காட்டும். அவரும் திரைக்கதை நூல்களை எழுதி இருக்கிறார். திரைப்பட பாடல்கள் உட்பட பல்வேறு வடிவங்களிலும் முயற்சி செய்திருக்கிறார். இயக்குனர் முத்திரை அவருடைய குறும்படங்களில் பளிச்சென்று தெரிகின்றன
முழுநீளத்திரைப் படம் எடுக்கிற அவருடைய முயற்சிகள் வெற்றி பெறும். அதன் முதல் படியாக இந்த திரைக்கதைப் புத்தகம் கொண்டு வருகிறார்
இன்றைய திரைப்பட ஆக்கங்களில் திரைக்கதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன அந்த வகைக் கதைகளை சொல்ல அவர் கேட்டு இருப்பது ஆச்சரியம் எனக்குள். திகைப்பும் புத்திசாலித்தனம் கொண்ட கதாபாத்திரங்களும் திரைக்கதை ஆக்கமும் வசனமும் ஆச்சரியப்படுத்தும் அப்படி ஆச்சரியப்படுத்திய ஒரு திரைக்கதை தான் இது. இதுபோல் அவருடைய மனதில் நிறைய திரைக்கதைகள் உள்ளன. பல பதிவுகள் உள்ளன அவையெல்லாம் திரைப்பட ஆக்கங்களாக வெளிவர வேண்டும் அதற்கு காலம் கை கொடுக்க வேண்டும். அதன் முதல் படியாக இந்த திரைக்கதை நூலை எடுத்துக் கொள்ளலாம் நானும் அவருடைய முயற்சிகளில் பங்கு பெறவே விரும்புகிறேன்.
காலம் ஒத்துழைக்க வேண்டும் என்று நம்புகிறேன்
. சுப்ரபாரதி மணியன் எழுத்தாளர் திருப்பூர
ReplyForward
Add reaction
கொரானா தடுப்பூசி
சிறுவர்களுக்குப் பிடித்தமான தடுப்பூசியிது...சுப்ரபாரதிமணியனின் சிறுவர் நாவல் பற்றி
- மு.முருகேஷ்
குழந்தைகளின் மனவுலகம் கதைகளால் ஆனது. கற்பனை வளமும் சிந்தனைத் திறனும் குழந்தைகளின்
கதையுலகைக் கட்டமைக்கின்றன. முதலில் கேள்விகளிலிருந்தே எதையும் கேட்கத் தொடங்குகிறார்கள் குழந்தைகள்.
தன்னருகே இருக்கும் சக உயிரிடம் (அது மனிதராக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை) பேசுவதென்றால்
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அருகில் மனிதர்கள் இல்லாவிட்டாலென்ன... கையில் வைத்திருக்கும் பர்பி
பொம்மையொன்று போதும், குழந்தைகள் பேசுவதற்கு. யாருமில்லா சூழலிலும் பேசிக்கொண்டிருக்க குழந்தைகளால்
முடியும். பல நேரங்களில் அவர்களுக்குப் பதில்கள்கூட தேவையில்லை. அவர்கள் பேசுவதை யாராவது கேட்டுக்
கொண்டிருந்தால்கூடப் போதும். எதுவும் பேசாமல் வெறுமனே ‘சும்மா’ உட்கார்ந்திருக்க குழந்தைகள் ஒன்றும்
பொம்மைகள் அல்லவே!
குழந்தைகள் பேசுகிறார்கள் என்றால் சிந்திக்கிறார்கள் என்று அர்த்தம். கேள்விகள் கேட்கிறார்கள் என்றால்
கற்றுக் கொள்கிறார்கள் என்று பொருள். எந்தக் குழந்தைக்கும் யாரும் தாய்மொழியைப் பேசுவதற்கு கற்றுத் தருவதேயில்லை.
நாம் பேசுவதைக் கவனிக்கும் குழந்தை, அதுவாகவே பேசக் கற்றுக்கொள்கிறது. தட்டுத் தடுமாறி குழந்தைகள் பேசப் பேச,
ஒவ்வொரு நாளும் புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். எப்போதும் கற்றுக்கொள்வதில் குழந்தைகள்
பெரியவர்களை விடவும் வேகமானவர்கள், ஆர்வமானவர்கள். நாம் தான் வளர வளர கற்றுக்கொள்வதிலிருந்து மெல்ல
விலகி விடுகின்றோம். ‘நாம் வளர்ந்தவர்கள், நமக்கு எல்லாம் தெரியும்’ என்கிற மனநிலை கற்றுக்கொள்வதற்குப் பெரும்
தடையாக இருந்து விடுகிறது.
குழந்தைகள் இருக்குமிடத்தில் குதூகலத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆடுவதும், ஓடுவதும், குதிப்பதும், பேசுவதும், கேட்பதும்
குழந்தைகளுக்கே உரித்தான இயல்பான செயல்பாடுகள். ஒரே இடத்தில் உட்கார்ந்தேயிருக்கும் குழந்தைகள் ‘சவலைப்பிள்ளை’களாகி
விடுவார்கள். கால் இடறிப் பள்ளத்தில் விழுந்தெழும் குழந்தைகளே, அடுத்த முறை அந்தப் பள்ளத்தில் விழாதிருக்க கற்றுக் கொள்கிறார்கள்.
‘இடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்
விழுந்து எழட்டும்...
குழந்தைகள்’ - என்றெழுதிய கவிஞனை நிச்சயம் குழந்தைகள் கொண்டாடவே செய்வார்கள்.
“ஏம்பா, இந்தக் குருவிகளெல்லாம் எங்கேயிருந்து வந்துச்சு..?”
“ஏம்மா, நெருப்பைத் தொட்டா சுடுது..?”
“தூங்கும்போது மட்டும் ஏன் காது கேட்க மாட்டேங்கிது..?” என்று குழந்தைகள் கேட்கும் பல கோடி கேள்விகளுக்கு
நமக்குப் பதிலே தெரியாது. ஆனாலும் சாமர்த்தியமாய், “சும்மா தொண தொணன்னு பேசாம, அமைதியா கவனி..!” என்று
குழந்தைகளின் வாயை அடக்கி விடுகின்றோம்.
குழந்தைகளைக் கல்வி கற்பதற்காக நாம் அனுப்பும் பள்ளிக்கூடங்களும்கூட இதையே தான் சொல்கின்றன.
“கையைக் கட்டு; வாயைப் பொத்து..!”
தன்போக்கில் இயல்பாய், வெகு சுதந்திரமாய்ப் பேசிக் கொண்டிருந்த குழந்தை, பள்ளியில் சேர்த்த சில தினங்களிலேயே
வாய் மூடி மெளனியாவதை எந்த எதிர்விளைவுமின்றிச் சகித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தை என்ன செய்வது..?
குழந்தைகளோடு உரையாடவும், குழந்தைகள் நம்மிடம் நெருங்கி வரவும் நமக்கு கதைகள் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள்
சொல்வதைக் குறுக்கீடின்றிக் கேட்பதற்கு பெரிய காதுகளும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தை மனம் வேண்டும்.
குழந்தைகளோடு பேசவும், பழகவும், குழந்தைகளுக்கென்று எழுதவும் குழந்தை மனம் வாய்க்க வேண்டும். அவ்வாறான
மனம் படைத்த மனிதர்களாலேயே குழந்தை இலக்கியங்களைப் படைக்க முடியும்.
நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே, 1847-ஆம் ஆண்டு வங்க எழுத்தாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
எழுதிய ‘வேதாள பஞ்சவிம்ஷதி’ எனும் நூலே குழந்தைகளுக்கான முதல் இந்திய படைப்பென அறியப்பட்டுள்ளது. இவர்
குழந்தைகளுக்கென பல கதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தும் தந்துள்ளார்.
உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலரும் குழந்தைகளுக்கென்று எழுதியிருக்கிறார்கள். ‘போரும் அமைதியும்’ எனும் உலகப்
புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், குழந்தைகளுக்காகவும் பல கதைகளை எழுதியுள்ளார். நம்
நாட்டின் தேசிய கீதத்தை எழுதிய இரவீந்திர நாத் தாகூர், மகாகவி பாரதியார் என பலரும் குழந்தைகளுக்காகவும் எழுதி இருக்கின்றனர்.
’குழந்தைக் கவிஞர்’ என அழைக்கப்பட்ட அழ.வள்ளியப்பாவால் 1950-இல் தொடங்கப்பட்ட ‘குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்’, குழந்தை
இலக்கியப் படைப்புகள் மிகுதியாக வெளிவர வழி வகுத்தது. ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தி, சிறந்த சிறுவர் பாடல்கள்,
கதைகள், நாவல்கள், நாடகங்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெளரவித்தது. கையெழுத்துப் படிகளைப் பெற்று, நூல்களாக்கி
வெளியிட்டது.
ஆர்.வி என்றழைக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன் சிறார்களுக்காகப் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அழ.வள்ளியப்பா,
பெ.தூரன், வாண்டுமாமா, ரேவதி, தமிழ்வாணன், பூவண்ணன், கொ.மா.கோதண்டம், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம். ஆயிஷா இரா.நடராஜன் எனப்
பலரும் சிறுவர்களுக்கான காத்திரமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு தமிழில் சிறுவர் இலக்கியம் என்பது போதிய அளவில் எழுதப்படவில்லை என்பதே சமூக எதார்த்தமாக உள்ளது.
சிறுவர்களுக்கென்றே வெளியான இதழ்கள் பலவும் நின்றுவிட்ட காலமிது. சிறுவர்களுக்கு எழுதுவதென்பது, தன்னைக் குறைத்து
மதிப்பிடச் செய்துவிடும் என்கிற எண்ணமும் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் பல தமிழ் எழுத்தாளர்களின் மனதில்
உறைந்துபோய் கிடக்கிறது. இந்தச் சூழலிலிருந்து மீண்டு, சிறுவர் இலக்கியங்களைப் படைத்துவரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் படைப்பிலக்கியத் தளத்தில் தனது காத்திரமான பங்களிப்பினைத் தொடர்ந்து ஆற்றி வருபவர்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைப்படம் என பல விரிந்த தளத்தில் எழுதிவரும் இவர், சிறுவர் இலக்கியப் படைப்புகளையும் ஆர்வத்தோடு
எழுதி வருகிறார். இவர் எழுதிய ‘சாயத்திரை’ நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசினை வென்றதோடு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த கதைகளுக்கு வழங்கப்படும் ‘கதா விருதினை’யும் பெற்றுள்ளார்.
எழுதுவதோடு நின்றுவிடாமல் களத்திலும் செயல்படும் ஆர்வமிக்க சமூகச் செயல்பாட்டாளராகவும் விளங்கி வருகிறார். திருப்பூரிலுள்ள குழந்தைத்
தொழிலாளர்கள் ஒழிப்புப் பணியிலும், பெண்களைச் சுரண்டும் சுமங்கலித் திட்டத்தை ஒழிப்பதிலும், நொய்யல் ஆற்றைப் பாதுகாக்கும் பணியிலும்
ஈடுபட்டு வருகிறார்.
எழுபதுக்கும் மேற்பட்ட பல்துறை நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், ‘கனவு’ எனும் இலக்கிய இதழையும் 38 ஆண்டுகளாக
நடத்தி வருகிறார். எய்டு-இந்தியா குழந்தைகளுக்காக வெளியிட்ட சிறு நூல்களில் சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘பள்ளி மறுதிறப்பு’ எனும் கதை நூல்
எனக்கு மிகவும் பிடித்தமானது. சாகித்திய அகாதெமிக்காக நான் தொகுத்த ‘சிறுவர் நாடகக் களஞ்சியம்’ தொகுப்பில், இந்தக் கதையின்
நாடக வடிவத்தைத்தான் நான் பயன்படுத்திக் கொண்டேன். சமூக அக்கறையும், சமூக அநீதிகளுக்கு எதிரான கோபமும் சேர்ந்த கலவையே
சுப்ரபாரதிமணியனின் எழுத்துகள்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லோரும் ஊரடங்கினால் வீடுகளுக்குள் அடைப்பட்டுக் கிடந்தோம்.
கோவிட் - 19 வைரஸ் தொற்றின் கோரத் தாண்டவம் பல்லாயிரம் உயிர்களைச் சூறையாடிச் சென்றுள்ளது. ஊரடங்கிலிருந்து ஒவ்வொன்றாக
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காலச்சூழலை அப்படியே நம் மனதில் நிறுத்தும் வண்ணமாக ;கொரோனா தடுப்பூசி’ எனும் சிறார்களுக்கான
நாவலாகத் தந்துள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
இந்த நாவலை கையிலெடுத்தால் போதும்; கடகடவென எழுத்தோட்டம் நம்மைத் தள்ளிக்கொண்டு போகிறது... தெளிந்த நீரோடையாக. சிறுவர்களுக்கே
பிடித்த முழுக்க முழுக்க உரையாடல் போக்கிலான இந்த நாவலில் எல்லாவற்றையும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்...
இல்லையில்லை... இந்த நாவலில் வரும் குழந்தைகள். பேசிக்கொண்டேயிருப்பதால் இந்த உயிர்ப்பான குழந்தைகள் நமக்கும் பிடித்துப் போகிறார்கள்.
“மாடியிலே போய் கைத்தட்டுறாங்க. மாடி இல்லாதவங்க என்ன செய்வாங்க..?” என்கிற அர்த்தம் செறிந்த கேள்விகளோடு தொடங்கும் நாவலில் வரும் புகழ்,
செல்வி, மீரான், பால், ஆர்த்தி, நிர்மலா என எல்லாக் குழந்தைகளும் நம் வீட்டுக் குழந்தைகளைப் போல நம் மனசுக்கு மிக நெருக்கமானவர்களாக
இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே நிஜமான கதாபாத்திரமான திருப்பூர் பாண்டியன் நகரில் மாடித்தோட்டம் அமைத்திருக்கும் கிரிஜா அக்காவும்
வருகிறார். குழந்தைகளின் கற்றலுக்குத் தடைகள் இல்லாத போது, அவர்கள் தங்களை எந்தச் சூழலிலும் வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்பதை நாவலின்
எல்லா இடங்களிலும் நடைபெறுகிற உரையாடல்கள் வழி உணர்த்தியுள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
முகக்கவசம் போடணும், ஏ.சி.யினால் வைரஸ் தொற்று சீக்கிரமாகப் பரவும், கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவணும்,
ஊரடங்கினால் இயற்கைச் சீரழிவு குறைந்துபோனது, மாடித் தோட்டத்தின் பயன்கள், பாம்பு சட்டையுரித்தல், மத நல்லிணக்கம் என ஒன்றையும்
விட்டு வைக்கவில்லை. இடையிடையே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சாட்டைச் சொடுக்குகளும் சரியான இடத்தில் கையாளப்பட்டுள்ளன.
.
எங்கெங்கெல்லாமோ சுற்றித் திரியும் உரையாடல், ‘அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேண்டும்’ என்கிற நல்லெண்ணத்துடன் முடிகிறது. இந்த நேரத்தில், கரோனா
போன்ற பெருந்தொற்று காலத்திலும் வீட்டில் இல்லாமல், குழந்தைகளுக்கான கல்விப் பணியை வீடு தேடிச்சென்று செய்த பல நூறு ஆசிரியர்களின் அக்கறையான
கல்விப் பணியை நெகிழ்ச்சியோடு நினைவுகூற வைக்கிறது.
’கொரானா தடுப்பூசி’ சிறுவர் நாவல், சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான தடுப்பூசி. சிறுவர்களுக்கு மட்டுமல்ல; மூட நம்பிக்கைகள் சமூகத் தொற்றாகப்
பரவாமலிருக்க நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையறிந்த தடுப்பூசி. வாருங்கள்... நாம் அனைவருமே வாசிக்கலாம்.
சிறப்பானதொரு சிறுவர் நாவலைத் தந்திருக்கும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு என் அன்பின் தோழமை கனிந்த வாழ்த்துகள்.
இன்னும் இன்னுமாய் சிறுவர் இலக்கியங்களைப் படையுங்கள். தமிழ்ச் சமூக மேம்பாட்டிற்கு உங்கள் எழுத்துகளும் படிக்கட்டுகளாக
அமையட்டும்.
( கொரானா தடுப்பூசி. விலை ரூ100 நிவேதா பதிப்பகம், சென்னை வெளியீடு..
அழவள்ளியப்பா நூற்றாண்டை ஒட்டி நிவேதா பதிப்பகம் வெளியிட்ட 30 சிறார் நூல்களில் ஒரே சிறார் நாவல் இது )_
திருப்பூர் இலக்கிய விருதுகள் நிகழ்வு உரை :
ஹைக்கூ கவிதைகள் ;: கவின்
வெற்று நிறங்கள் வேண்டாம்/ பூக்கள் போட்ட குடை கொடுங்கள் மழைக்கு காட்டுவேன் என்று எழுதியபடி ஒரு புயலைத் தாண்டி வந்திருக்கிறேன்.
ஹைக்கூ என்பது ஒரு காட்சியை விவரிப்பது மூலம் தான் உணர்ந்த ஒரு அனுபவத்தை பதிவு செய்வது.. காட்சிப்பூர்வமானது என்றும் அவசிய தேவையான வார்த்தைகளை கொண்டிருக்க வேண்டும் என்றும் மிக முக்கியமாக அது எளிமையானதொரு பகிர்வு என்ற கவனமும் தேவை... எளிமையான பகிர் என்பதால் தன் நிலை மற்றும் காலத்தில் ” பொதுநிலையில் சுட்டுவது “ அதிகம் இருத்தல் வேண்டும். அவை மீறப்படும் இடங்களின் சிறப்புத் தேவைகளை உணருதல் வேண்டும். இயன்றவரை வரை உணர்வை விளக்கும் சொல்லை பயன்படுத்தாது விடுதல்
ஹைகூ வரலாறு, முன்னோடிகள் வந்து சேர்ந்திருக்கிற இடம் எல்லாவற்றையும் தாண்டி இனி இப்போது ஹைக்கூவில் செய்ய வேண்டியவை இவை என்று சொல்லலாம்
1ஹைக்கூ பார்த்தல் - நேரடி அனுபவம் மட்டுமே எழுதுக கவிதை 2. கவிதை ஹைக்கூ சென்ரியூக்கான வேறுபாடுகளை உணர்தல் வேண்டும்
3. ஹைக்கூவின்பல்வேறு நிலைகளை உணர்தல் வேண்டும். அரசியல், அழகியல், தனித்துவம், உள்ளார்தல்
4. இதுவரை வந்த நல்ல ஹைக்கூக்களை அடையாளப்படுத்த வேண்டும்
5. ஹைகூ நூல்களை சிறிய பொருட் செலவில் அதிகம் சென்றடைய வைத்தல்
6. ஒருங்கிணைப்புகள், ஹைக்கு வாசிப்பு, பகிர்வரங்கங்கள் நிகழ்த்தலாம்
7..பயனாக ஹைகூவின் தன்மையை வாழ்வில் எடுத்துக் கொள்ளுதல் ( சான்றாக: It is a learning process from the nature and intuitive happenings which are spontaneous and unplanned )
8. தேடி செல்வதொன்றில்லாமல் மேற்கொள்ளப்படும் ஹைக்கூ பயணங்கள் ( சான்றாக ஜப்பானிய ஹைக்கு முன்னோடி பாஷோ இப்படி பயணித்திருக்கிறார் )
9. வழமையான ஹைக்கூ முன்மாதிரிகளில் இருந்து விடுபடல் ( coiming out from cliché haiku )
10. ஹைக்கூ எழுதுவதை எங்கே நிறுத்த வேண்டும் என்ற தீர்மானம் ( where to stop writing haiku also an art, it will evolve , it will happen
(குழு செயல்பாடுகள் போன்ற நடைமுறை சிக்கலில் இருந்து எவ்வாறு தனித்துவத்தோடு இருப்பது போன்றவை தனி )
1 அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது
கதிர் பாரதி கவிதைகள்
கதிர் பாரதியின் புதிய கவிதை நூல்
அம்மா என்பவள் குடும்பத்தில் ஒருத்தி... முக்கியமானவள் மற்றும் நாட்டை அம்மா என்று அழைக்கிற வழக்கமும் நம்மிடம் உண்டு. பாரதமாதா அப்படித்தான்.
ஆனால் பிரபஞ்சத் தாயாகி அம்மா எல்லோரையும் அணைக்கும் அனுபவங்களால் இந்த தொகுப்பை நிறைத்திருக்கிறார் கதிர் பாரதி அவர்கள்
இன்றைய நவீன கவிதை உலகம் இறுக்கமும் படிமக்குவியல்களும் தெளிவின்மையும் பல மாய ரூபங்களும் கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிகிற போது தெளிவான அனுபவங்களால் அமைக்கப்பட்ட இக் கவிதை வரிகளை பார்க்கிறபோது ஆறுதலாகவே இருக்கிறது.
. அவையெல்லாம் நல்ல கவிதைகள் அடையாளமாக இருக்கின்றன.
காட்சிகளை விவரிப்பது, உணர்ந்த ஒரு அனுபவத்தை பதிவு செய்வது, , தேவையான வார்த்தைகள் . அது எளிமையானதொரு பகிர்வாய். இருத்தல் வேண்டும் என்ற அணுகுமுறையில் இவை உச்சம் பெறுகின்றன.
இப்படி அம்மாக்களை வாய்த்தவர்கள் அதிஷ்டசாலிகள். இப்படி அம்மாக்கள் அமையாது போனவர்களை எண்ணி கண்ணீர் விட ஒரு சந்தர்ப்பம் கூட இது .
நிகழ்கால சம்பவங்கள் ஊடே ஒரு பேண்டஸித் தன்மையும் பல பகுதிகளில் வந்து விடுவது இன்னொரு பரிமாணமாக இருக்கிறது அம்மா மாடு முதல் குழந்தைகள் வரைக்கும் பலருக்கு ஆறுதல். உயிர் தண்ணீர் என்று இருப்பது போல் இருக்கிறவள் ஏர்வாடியில் கொஞ்சம் இருக்கிற அனுபவங்களும் வந்து எதார்த்தத்தைத் தொட்டுப் போகிறது. கொஞ்சம் பைபிளும் உலவும் குருவிகளும் கற்றாழைச் செடிகளும் இந்த கவிதைகளுக்கு ஒரு அரணாக அமைந்து விடுகின்றன. மாந்திரீகமாய் முளைப்பாரிக்கு தலை துவட்டும் சந்தர்ப்பங்களும் பல அமைகின்றன பொன் மூக்குத்திகளுக்கு மத்தியில் வேப்பம்பூக்கள் பளபளக்கும் தருணங்களை கவிதைகளில் பார்க்க முடிகிறது. மேகம் கூட அனாதையாய் விடக்கூடாது என்று துயரம் படும் அம்மா யாரையும் அனாதையாக விட்டதில்லை. ஆனால் அவள் கதி என்னவென்று பல சமயம் யோசிக்க வைக்கிறது
அம்மாவின் குருதியில் இருந்து கிளம்பிய வார்த்தைகளால் இக்கவிதைகள் அமைந்துள்ளன. விளைந்த கதிர் அசைவது போல வலம் வரும் அவளது உடலை கூறாக்கி பசியாற்ற முடிகிறது . சமூகத்தில் அவள் தன்னை மனதால் நிலைநிறுத்திக் கொண்ட அனுபவங்களால் இந்த கவிதைகள் நிரம்பி இருக்கிறது உலகத்தையே அணைத்துக்கொள்ளும் இது போன்ற அம்மாவின் உள்ளங்களால் கவிதை வாசகர்களை அணைத்துக் கொள்ள முடிகிறது கதிர் பாரதியால்.
( ரூ 100 நாதன் பதிப்பகம், சென்னை )
-சுப்ரபாரதிமணியன்
கனவுகளின் வரைபடம் நாவல் : பெர்லின் வாழ் கருணாகரமூர்த்தி
பலஆண்டுகள் வாசிப்பில் பழக்கம். அப்புறம் 1993 ல் பெர்லின் சென்ற போது சில நாட்கள் அவருடன் இருக்க முடிந்த வாய்ப்பு . எப்போதும் நினைவில் இருக்கும் ஞாபகங்கள்
கருணாகரமூர்த்தி அவர்களின் எழுத்தில் இலங்கை மொழி வளமையும் கிண்டலும் எனக்குப் பிடித்தவை.
ரசித்துப் படிக்க வைக்கும்.
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்களுக்கு இது சாதாரணம்
இவர்கள் இலங்கை வாழ்கை, இலங்கையின் பால்ய பருவம், விடுதலை இயக்கச் செயல்பாடுகள், புலம் பெயர்தல், அங்கு சிரமதிசைகள், காதல் காம வாழ்க்கை.. பிறகு எப்பவாவது இலங்கை திரும்புதல் , அடைக்கலமாவது அல்லது மீண்டும் புகலிட நாட்டில் அடைக்கலம் என்பதாய் அவர்கள் எழுதும் நாவல்கள் அமையப் பெறுவது, சாதாரணம்
இந்த சாதாரணத்தை அசாதரணமாக இந்த நாவலில் கையாண்டிருக்கிறார் நண்பர்.
பலஆண்டுகள் வாசிப்பில் பழக்கம். அப்புறம் 1993 ல் பெர்லின் சென்ற போது சில நாட்கள் அவருடன் இருக்க முடிந்த வாய்ப்பு . எப்போதும் நினைவில் இருக்கும் ஞாபகங்கள்.
ஞாபகங்கள் சாசுவதமானவை. இந்த நாவலைப் பற்றிய ஞாபகங்கள் கூட அப்படித்தான் இனி இருக்கும் .
இலங்கையின் யோகபுரம். இது சொந்த ஊரா. இயல்பான பெயரா.. அங்கு இருக்கும் அத்தி மரம் முதல் சாதாரண மனிதர் கள் வரை பலரின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. அத்திமரம் புயலால் அலைவுறுவதைச் சொல்வதன் வழியே அந்த ஊர் மனிதர்களின் சிரமங்களும் சந்தோசமான கணங்களும் தெரிய வருகின்றன
நாவலின் கதாநாயகன் பரம்குருவின் குடும்பக்கடமைகள், காந்திய இயக்க செயல்பாடுகள் ஆரம்பத்தில் கவனத்திற்குரியவை. பையன் இளம்பருதி . சுபாஷினி பிஸ்டல் பெண்ணாக அறிமுகம் .சந்தியார் உரை சிறப்பானவை. சோத்துக்கு வழியில்லாதவர்கள் கோசலிசம் பற்றிய விவாதம் எல்லாம் சுவாரஸ்யம்.
போராளிகள் வாழ்க்க்கை விரிவாகச் சொல்லப்படுகிறது. போராளி விசுவானந்தர் காணாமல் போகிறார் .. சிங்களவர் மத்தியில் பகைமையுடன் வாழ்க்கை.பாலியாற்று மாந்தர்களும் வந்து போகிறார்கள். சுபாஷிணி நாவல் தந்தாள் .கூடவே இரவு கூடலும் தந்தாள் குருவுக்கு. பாரிஜாதம் இளம் விதவையும் சபலப்படுத்துகிறாள்.
துப்பாக்கி ரவைகளுக்கு அரசியல் தெரியாது என்ற பாடங்களும் தரப்படுகின்றன.ரகுந்நன், அம்பேத்கார் போன்றவர்களும் வருகிறார்கள் இந்திய மண்ணில் ராணுவப் பயிற்சி பிறகு திரும்புதல். ஏதேதோ காரணங்களால் கடவுச்சீட்டும் தஞ்சமடைதலும் நடைபெறுகிறது.. கனடா நாட்டு லாட்டர் பரிசு விழுந்து அதன் அனுபங்களும் இளம்பரிதிக்குக் கிடைக்கின்றன. காதல் திருமணம், வீட்டுத்திருமணம் விசேசங்களாகிறது.
கனடா நாட்டு சூழல் விவரிப்புகள் உயிருள்ளவை. வர்ஷிதாவோடு திருமணம் . அவள் குறித்து மொட்டைக்கடிதங்கள் வருகின்றன். கணவன் மனைவி மன சிரமங்கள் . அதிரன், அருவி என்று குழந்தைகள்
இளம்பரிதிக்கு இலங்கைக்கு மீள ஆசை. வர்ஷிதாவும் வருகிறாள்.
பிறகொரு நாட்டின் தயவில் வாழும் குற்றவுணர்ச்சி, வாழ்விடத்தை விட்டு விரட்டப்பட்ட ஞாப்கங்கள், பெற்ரோர் சந்திப்பு என்று இலங்கையில் அனுபவங்கள். இலங்கையில் விவசாயப் பண்ணையோடு வாழ வர்ஷிதாவுக்கு ஆசை. பேரின்பம் தென்றலாக வந்து போகிறது. நீர்ப்பாசனம் , மரவகைகள் முதற்கொண்டு இயற்கை குறித்த புரிதல்கள் விரிவானக் களத்தைத் தருகின்றன.
சந்யாசிக்கு சம்சாரம் தெகஞ்ச மாதிரி பல அனுபங்களும் இருவருக்கும் வாய்க்கின்றன.
சித்தாந்தம், செல்னெறி , தேடல்கள்கடுனான கனவு வாழ்க்கை தொடர்வதை நாவல் முழுமையாகச் சொல்கிறது .
சுவாரஸ்யமான வாசிப்புக்கு இட்டுச்செல்லும் பேரின்பம் கிடைக்கிறது.
இந்த பேரின்பத்தை கருணாகர மூர்த்தி அவர்கள் தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டேயிருக்கிறார் தமிழ் படைப்புகள் மூலம் என்பதும் வரம்தான்.
-சுப்ரபாரதிமணியன்
எழுத்தில் 48 ஆண்டுகள்: சுப்ரபாரதிமணியன்
கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி (கணிதம்) படித்துக் கொண்டிருந்த போது எனது முதல் சிறுகதை "சுதந்திர வீதிகள்" திருப்பூரிலிருந்து வந்து கொண்டிருந்த "விழிப்பு" என்ற இடதுசாரி இலக்கிய இதழில் வெளியானது. எமர்ஜென்சி காலத்தில் போலீசாரின் அடக்குமுறைக்கு ஆளான ஒரு விளையாட்டு வீரனைப் பற்றின கதை அது. "பயிர்களை மேயும் வேலிகள்" என்று தலைப்பிட்டு அனுப்பியிருந்தேன். அவர்கள் தலைப்பை மாற்றியிருந்தார்கள். 1977ல் வெளிவந்தது. ஓர் உண்மை சம்பவம் என்பதும், எமர்ஜென்சி கால கட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருந்ததும் அக்கதை வெளிவந்த போது முதல் படைப்பின் பெருமையாக இருந்தது.
கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரியின் "புது வெள்ளம்" என்ற மாணவர் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். மாணவர்களின் படைப்புகளைப் படிப்பது, தேர்வு செய்வது செந்தமிழ் அச்சகத்திற்கு அலைவது என்று முதுகலை கணிதம் படிப்பின் "டென்சனுக்கிடையில் சுகமான அனுபவமாகவே இருந்தது. சொந்த ஊரான திருப்பூரில் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து 'குறிஞ்சி' என்ற கையெழுத்திதழை நடத்தி வந்ததில் பல படைப்புகளை (கவிதைகள், கதைகள்) எழுதி இருந்தாலும் "சுதந்திர வீதிகள்" தான் எனது முதல் அச்சில் வரும் படைப்பாக இருந்தது. திருப்பூர் கிருஷ்ணன் நடத்தி வந்த தீபம் வாசகர் வட்டக் கூட்டங்களில் படைப்புகள் வாசிப்பதும் இலக்கியம் சார்ந்த விபரங்களும் படித்து முடித்தபின் வேலையில்லாதப் பருவத்தில் ஆறுதலாக இருந்தது. அதே சமயம் கணிதம் மனசிலிருந்து கை நழுவிக் கொண்டிருந்தது. இலக்கியம் வெகு நெருக்கமாகியிருந்தது. தீபம், தாமரை, கணையாழி போன்ற பத்திரிகைகளில் கவிதைகள், சிறுகதைகள் வெளிவரத் துவங்கியிருந்தன. நெசவாளர் குடும்பத்திலிருந்து வந்தவனுக்கு சற்றே ஆறுதல் என்றிருந்தது.
தொலைபேசித் தொடர்பு உத்யோகம் காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றேன். புது மொழி, சற்றே வித்யாசமான புது கலாச்சார சூழல். அந்நியமாகவே உணர்ந்தேன். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வரும் இலக்கிய இதழ்கள், வெகுஜன இதழ்களுடன் பரிச்சயம் இருந்தது. சிறுகதைகள் நிறைய எழுதினேன்.
எனது முதல் நாவல் "மற்றும் சிலர்" -ஹைதராபாத்தில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தைப் பற்றின நாவலாக அமைந்து நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருந்தது. அதற்கு முன் "அப்பா" என்ற 15 சிறுகதைகள் அடங்கிய எனது தொகுப்பை நர்மதாவே வெளியிட்டிருந்தது. அப்பா தொகுப்பில் சுஜாதா எழுதியிருந்த நீண்ட முன்னுரை கவனத்திற்குரியதானது. "மற்றும் சிலர்" நாவலில் 1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது வேலை வாய்ப்பை இழந்த ஒரு இந்தி ஆசிரியன் ஹைதராபாத்திற்கு துணி விற்கும் வேலைக்குப் போய் தெலுங்குப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்நியனாகவே உணரும் 15 வருட வாழ்க்கை பற்றினது. ஹைதராபாத்தில் தொடர்ந்து தமிழகப் பதிப்பாளர்கள் பங்கு பெற்ற புத்தகக் கண்காட்சியை நடத்தினோம். சபா நாடகங்கள், சமய சொற்பொழிவுகளுக்குள் இருந்த ஹைதராபாத் செகந்திராபாத் இரட்டை நகரத் தமிழர்கள் நவீன இலக்கியத்தின் பக்கம் அறிமுகமாக 'கனவு' இலக்கிய வட்டத்தின் சிறு அளவிலானக் கூட்டங்களும், புத்தகக் கண்காட்சிகளும் பயன்பட்டன.
வேறு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென்று அங்கங்கே தமிழ் இதழ்கள் இருந்தன. பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் "ஏடு", கேரளத் தமிழ்ச் சங்கத்தின் "கேரளத் தமிழ்", பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் "ஊற்று" என. இரட்டை நகர தமிழர்களின் இலக்கிய வெளிப்பாட்டிற்காக "கனவு" என்ற இலக்கிய இதழை ஆரம்பித்து இரட்டை நகர இளைஞர்கள் அதில் பங்கு பெற வைத்தேன். க.நா.சு., நடுவனின் பல படைப்புகள், சுந்தர ராமசாமி கவிதைகள், வானம்பாடிக் கவிஞர்களின் படைப்புகள், எஸ். ராமகிருஷ்ணன், விட்டல் ராவ், ஜெயமோகன், பாவண்ணன், கோபி கிருஷ்ணன் என்று விரிவான தளத்தில் பலர் பங்கு பெற்றனர்.
எட்டாண்டு கால ஹைதராபாத் வாழ்க்கை "மற்றும் சிலர்", "சுடுமணல்" நகரம் 90 போன்ற நாவல்களையும், ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும் வெளிக் கொணர வைத்தது.
தமிழகத்திற்கு மாற்றலாகி வந்தேன். எனது கடைசி ஆண்டு ஆந்திர மாநில அனுபவங்களும், மதக் கலவரங்களும் "நகரம்-90" என்ற குறு நாவலை எழுத வைத்து, குமுதம்-ஏர் இந்தியா நடத்தியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு 45 நாட்கள் சுற்றுப்பயணம் சென்று வரும் வாய்ப்பைத் தந்தது (அந்த பயண அனுபவங்கள் "மண் புதிது" என்றத் தலைப்பில் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது)
சொந்த ஊரான திருப்பூருக்கு வந்த போது நகரின் முகமே மாறியிருந்தது. சிறு நகரம் ஆசியாவின் பெரிய வியாபார நகரமாகியிருந்தது. 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணியை ஈட்டும் நகரமாக அது மாறியிருந்தாலும், ( இப்போது 50,000 கோடி ) நொய்யல் என்ற நதி காணாமல் போனதும் 40,000 குழந்தைத் தொழிலாளர் அவலம் என்ற விபரீதங்கள் என்னை "சாயத்திரை" நாவலை எழுத வைத்தது. தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றது. ('சாயத்திரை' 'காவ்யா' வெளியீடு; ஆங்கிலத்தில் இந்தியிலும் வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னட, வங்காள மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. சாயத்திரையை ஆங்கிலத்ஹ்டில் மொழிபெயர்த்து என்னைப் பெருமைபடுத்தியவர் பாண்டிச்சேரி ராஜ்ஜா அவர்கள் ).
படிப்பு என்பதை புறந்தள்ளிவிட்டு குழந்தைகள் தொழிலாளர்களாய் மாறும் அவலத்திற்கு பனியன் உற்பத்தி வேலை வாய்ப்புகளை அமைத்திருந்ததை மையமாகக் கொண்டு "பிணங்களின் முகங்கள்" நாவலை எழுதினேன். குழந்தைப்பருவம், உலகக் குழந்தைகள் பற்றினக் கதைகள் என்று அந்த நாவல் ஊடாடி நின்றது. அது கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவல் ரூ 15,000 பரிசு பெற்றது. (இது ஆங்கிலத்தில் ஆர். பாலகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. The facer of Dead)
உலகமயமாக்கல் நிகழ்த்தி வரும் மாயங்கள் பெண்களையும் பெருமளவில் பாதித்து வருகிறது. பெண்மயமாகும் தொழிற்சாலைகளின் நிலையில் பெண்களின் அவலம் குறித்த எனது நாவல் "சமையலறைக் கலயங்கள்" ('காவ்யா பதிப்பகம்' சென்னை வெளியிட்டுள்ளது).
50,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் திருப்பூர் பின்னலாடை நகரம் தமிழக தெற்கு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இடம் பெறச் செய்திருக்கிறது. உலகமயமாக்கலின் காரணமாக விவசாயம், புராதனத் தொழில்களை இழந்து வேலைவாய்ப்புகளைத் தேடி வரும் நகரமாகி விட்டது திருப்பூர். இவ்வாறு இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் கேம்ப் கூலிகளாகவும், சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கொத்தடிமைகளாகவும் ஆகிக் கொண்டிருக்கிற அவலம் என்னை வெகுவாக பாதித்தது. இதன் விளைவாக "தேநீர் இடைவேளை" என்ற நாவல் (காவ்யா) எழுதினேன். (இது ஆங்கிலத்தில் பிரேமா நந்தகுமார் அவர்களால் The unwritten letters என்ற பெயரில் வெளிவந்துள்ளது). தொழிற்சங்க இயக்கங்களுக்கு பெயர் போன கோவை மாவட்டம் இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் பிரச்னைகள் காரணமாகவும், சுற்றுச்சூழல் பிரச்னைகள் காரணமாகவும் திணறிக் கொண்டிருப்பதை என்னுடைய படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். இவ்வகை அனுபவங்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மொழிபெயர்ப்பு "The lost symphony" என்ற பெயரில் (மொழிபெயர்ப்பு: ஆர். பாலகிருஷ்ணன்) வெளிவந்துள்ளது.
350 பக்க அளவிலான "ஓடும் நதி" நாவல் (அமிருதா பதிப்பகம் சென்னை) ஒரு பெண்ணை மையமாகக் கொண்டது. பல்வேறு கலாச்சார சூழல்களும், மாறிவரும் நெருக்கடிகளும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து இடம் பெயர்வு சூழ்நிலைப் பார்வையாளனாக இருந்து பார்க்க வைக்கிற அனுபவங்களை அந்த நீண்ட நாவலில் பதிவு செய்திருக்கிறேன்.
"கனவு" இதழ் தொடர்ந்து வெளிவருகிறது. (இப்போது ரொம்பவும்தான் இளைத்து விட்டது). 38 ஆண்டுகளாய் 'கனவு' வெளிவருகிறது. தமிழில் பல படைப்பாளிகளுக்குத் தளமாக இன்றும் அமைந்துள்ளது. கனவு இதழ்களில் லண்டன் யமுனா ராஜேந்திரனின் தயாரிப்பிலான "உலக சினிமா நூற்றாண்டு"ஓட்டிய ஐந்து இதழ்களும், நோபல் பரிசு பெற்றவர்களின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு இதழும், ஜெயமோகனின் தயாரிப்பிலான "தற்கால மலையாளக் கவிதைகள்" சிறப்பிதழ், பாவண்ணனின் தயாரிப்பிலான "கன்னடக் கவிதைகள் சிறப்பிதழ்", "தந்தர ராமசாமி சிறப்பு மலர்", "அசோகமித்திரன் சிறப்பு மலர்", எனது வெளிநாட்டு பயணங்களுக்கு பின்னதான "இலங்கை சிறப்பிதழ்", "சிங்கப்பூர் சிறப்பிதழ்", இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளைத் தாங்கிய இதழ்களை (இதுவரை 56 இதழ்கள் வந்துள்ளன) குறிப்பிட்டதாகச் சொல்லலாம்.
திருப்பூருக்கு வந்தபின்பு பல்வேறு சமூக இயக்கங்களுடான பணிகள் திருப்தி தந்துள்ளன. அவற்றுள் சுற்றுச்சூழல் இயக்கங்கள், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு இயக்கங்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்தவை மற்றும் தொழில் நிறுவனங்களின் கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (Corporate Social Repounililily) இயக்கங்களைச் சொல்லலாம். இன்றைய தொழிலாளர்களின் நலனை மையமாகக் கொண்டு கார்பரேட் சமூக பொறுப்புணர்வை விரிவாக்கும் தளத்தில் நெதர்லாந்து Partners in change அமைப்பின் ஆராய்ச்சி நூலை "பின்னலினால்..." என்றத் தலைப்பில் நான் மொழிபெயர்த்து (200 பக்கங்கள்) வெளிவந்திருக்கிறது. இது என் மொழிபெயர்ப்புப் பணியின் ஆரம்பம். பதினோரு நூல்கள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்து விட்டேன்..
கனவு திரைப்பட இயக்கம், 21 ஆண்டுகளாக சிறந்த குறும்படங்களுக்கான அரிமா விருது, சிறந்த பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது, திரைப்பட விருது ஆகியவற்றை தந்து வருகிறது. கனவு பல் குறும்பட பட்டறைகளை நடத்தியது. மாதந்தோறும் குறும்படங்கள், உலகத் திரைப்படங்கள் திரையிடல், இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருகிறது. (திருவிழா, சோத்துப் பொட்டலம் என்ற உருவப்படங்கள் எனது படைப்பில் வெளிவந்துள்ளன. நாவே இயக்கிய குறும்படம் நாணல். ஆனந்த விகடனில் வந்த பாதுகாப்பு என்ற சிறுகதையை மையமாகக் கொண்டது.) திரைப்பட நூல்கள் 6, திரைக்கதை நூல்கள் 9, திரைநாவல்கள் என்று திரை முயற்சிகள் தொடர்கின்றன.
கடந்த பல ஆண்டுகளாக கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாகவும், புதுப்பிக்கவுமென எழுத்தாளர்களைக் கொண்டு "கதை சொல்லி..." நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்துகிறது. சிறுவர்களுக்கான கதை சொல்லி..." விருதுகளையும் வழங்கி வருகிறது.
இதைத் தவிர கனவின் சக்தி விருது, திருப்பூர் இலக்கிய விருது, குறும்பட விருது என் 210 ஆண்டுகளாய் தொடர்கிறது.
27 நாவல்கள் வந்து விட்டன. 25ம் நாவல் சிலுவை 1000 பக்கம் ரூ 1200. இது தொடரும். ( இதில் இரு சிறுவர் நாவல்கள் உள்ளன )
சிலுவை 1000 பக்க நாவல் .300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது.
சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது.
அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்..
“ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது :
0
திருப்பூர் போன்ற வணிக நகரத்தில் கலை இலக்கிய கலாச்சார நடவடிக்கைகள் மூலம் வணிக நகரம் தரும் பாதிப்புகளை வெளிப்படுத்தும் முயற்சிகளாக நண்பர்களுடன் தொடர்ந்து இயங்கி வருவது ஆறுதல் தருகிறது. வெறும் வியாபார வளர்ச்சி உடம்பின் ஏதோ ஒரு பாகத்தின் வீக்கம்தான். பூரண வளர்ச்சி என்பது பொருளாத நிலையோடு கலாச்சார வளர்ச்சியோடும் இணைந்தது என்பதை தொழில் மய சமூகத்தில் வெளிப்படுத்த வேண்டியிருப்பதன் அக்கறையை மனதில் கொண்டு Fair Trade- நியாய வணிக தார்மீகத்தில் இந்தச் செயல்பாடுகளை தொடர்ந்து வருகிறேன்.
சமூக, பொருளாதார நெருக்கடிகள் தரும் அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்வது எனது அக்கறையாக இருக்கிறது. இதன் மூலம் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களுடன் உறவாடவும், அவர்களை நெருங்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. சக மனிதனோடு உறவாட எழுத்தைத் தவிர வேறு ஊடகம் எனக்குத் தெரியவில்லை. அலுவலகப் பணி தரும் நெருக்கடிகள், மற்றும் குடும்ப வாழ்க்கையின் சிரமங்கள், என்னைச் சுற்றியுள்ள சமூகம் கட்டமைக்கும் விடயங்களை எழுத்தில் பதிவு செய்வதுதான் மன இறுக்கத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள ஏதுவாகிறது. எழுத்தைத் தவிர, வாசிப்பதைத் தவிர, அதன் மூலம் சக மனிதர்களுடன் உறவாடும் வாய்ப்பைத் தவிர வேறு என்ன ஆசுவாசம் இருக்கிறது இந்த வாழ்க்கையில்?
நெல்லியம்பதி
இருவாட்சிப்பறவையைக் கண்டதும் கனகராஜ் மகிழ்ச்சி அடைந்தார். நான் மூன்று முறை வந்திருக்கிறேன். இருவாட்சிப் பறவை தட்டுப்பட்டதில்லை. இம்முறை தட்டுப்பட்டது என்று மகிழ்ச்சி அடைந்தார்,
தேடியதில் மலபார் அணில் கண்ணில்பட்டது. அணில் என்றால் நம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் குட்டி அணில் என நினைக்க வேண்டாம். நம்மை மிரட்டும் அளவிலிருக்கின்றன மலபார் அணில்கள்
கண்ட நெல்லியம்பதி :
நெல்லியம்பதி எனும் மலைத்தலம் கேரளத்தில் பாலக்காடு அருகில் நெம்மாரா எனும் ஊரிலிருந்து 30 கிமீ மலைப்பாதையில் பயணம் செய்து இவ்விடத்தை அடைய வேண்டும்.
குறுகிய வளைவுப்பாதைகள் நிறைய உள்ளன. சில காட்சி முனைகள், ஆரஞ்சு பண்ணை, அணைக்கட்டு முதலிய சுற்றுலா இடங்கள்உள்ளன .
Green Fields resort என்ற ஓர் அழகிய தங்குவதற்கு ஏற்ற இடம் உள்ளது . இங்குள்ள பசும்புல்வெளி, நீரோடை, அரிய வகை ஆடுகள், பறவைகள் மனம் கவர்கின்றன. வன விலங்குகளையும் அங்கு இரவில் காணலாம். வழி நெடுக அடர்ந்த காடுகள் காபி தேயிலைத் தோட்டங்கள், இதமான குளிர்ந்த காற்று பயணத்தை இனிதாக்குகிறன.
இந்தச் சுற்றுலாவின் முத்தாய்ப்பே கரடு முரடுமாய் மற்றும் மேடுபள்ளமுமாயுள்ள பாறைப்பாதையில், அடர்ந்த காட்டினூடே ஜீப்பில் பயணிக்கும் off road trekking தான். இதற்கென பிரத்யேகமான மகேந்திரா ஜீப்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன.வாடகை ஜீப்புக்கு 1800 முதல் 2000 வரை வாங்குவார்கள். ஐந்து அல்லது ஆறு நபருக்கு ஒரு ஜீப் என அமர்த்தி கொள்ளலாம். பாறைகள் மீது தத்தித் தத்திச் செல்லும். வண்டியின் அபரிதமான குலுக்கலில் இடுப்பும் தலையும் அடிபட வாய்ப்புகள் அதிகம். சில இடங்களில் நான்கு சக்கர சுழற்சியில்(Four wheel drive) மட்டுமே வண்டி ஏறுகிறது. ஓட்டுநர்கள் அசாத்திய திறமைசாலிகளாயுள்ளனர். மூத்தோர் இதனைத் தவிர்த்தல் நலம். பயணத்தில் இரண்டு காட்சிமுனைகளில் இயற்கை அழகை ரசிக்கலாம். இறுதிக் காட்சி முனையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகு கண்கொள்ளாக் காட்சி. திரும்பும் வழியில் ஆரஞ்சுப் பழங்கள் மலிவான விலைக்கு கிடைக்கும் . மாலையில் வாகனங்கள் மலைஏற அனுமதி இல்லை.
நெல்லியம்பதியிலிருந்து திரும்பி வரும் போது இயற்கை அழகு மிக்க போத்துண்டி டேமில் சிறிது நேரம் செலவிடலாம்.சென்று செலவிட்டோம்.
• ஆரஞ்சு தோட்டம் ஞாயிறு விடுமுறை டிசம்பர் சீசன். பூக்காதவை கண்ணில் பட்டன.
• ஆரஞ்சு பழங்களும் கிடைக்கவில்லை சுவைக்க. காபி, தேயிலைத் தோட்டங்கள்.. நல்ல சுவையான தேனீர் கிடைத்தது.
• அதிக இரைச்சல் இல்லாத அமைதியான மலைப்பாதை. வளைந்து வளைந்து மலையேறும் சாலையில், எப்போதாவது வாகனங்கள் கடந்து செல்லும். மலை உச்சியில் இருந்து பாலக்காட்டின் அழகை பார்த்து இரசிக்க காட்சி முனைகளும் உண்டு. அங்கு சற்று நேரம் இளைப்பாறி விட்டு, புகைப்படங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடரலாம். சாலைகளில் ஆங்காங்கே யானை சாணங்கள் கிடப்பதை பார்க்கலாம். வால்பாறையின் சாயலை, நெல்லியம்பதி ஒத்திருக்கும். தேயிலை, காப்பித் தோட்டங்கள் அப்பகுதி மக்களின் வாழ்வாதாராம். அதிகளவிலான கடைகள் இருக்காது. மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படும்.
சீதார்குண்டு காட்சி முனை முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சூஸைட் பாயிண்டும் உள்ளது. இங்கிருந்து கேரளாவின் பள்ளத்தாக்கு காட்சிகளை கண்டு மகிழலாம். மலை உச்சியை ஒட்டிச் செல்லும் ஒற்றையடி பாதை நடப்பது திரில்லாக இருக்கும். சற்று தூரம் நடந்தால் 100 மீட்டர் உயரமுள்ள சீதார் குண்டு நீர்வீழ்ச்சியை கண்டு இரசிக்கலாம். கூகுளில் நெல்லியம்பதி எனத் தேடினால், முதலில் வரும் கூஸ்பெர்ரி மரங்கள் நெல்லியம்பதியின் அடையாளம். அம்மரத்தை இங்கு காண முடியும். இப்பகுதி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது.
அங்கிருந்து தேயிலைத் தோட்டங்கள் வழியாக சென்றால் காரப்பாரா தொங்குப்பாலத்தை அடையலாம்.. விடுமுறை நாட்கள் தவிர்த்த நாட்களில் அதிக கூட்டம் இருக்காது. இயற்கைச் சூழலில் அழகான புகைப்படங்கள் எடுக்க அருமையான இடம். இதற்கு அருகே காரப்பாரா அருவியும் இருக்கும். மழைக் காலங்களில் மனதை கவர்ந்திழுக்கும் ஓரிடம். இதேபோல பலக் காட்சி முனைகளும், அருவிகளும், இரம்மியமான சூழலும் இயற்கையின் கொடையாக விரிந்து கிடக்கின்றன.
ஜீப் டிரெக்கிங். அது சாகசங்கள் நிரம்பிய ஆப் ரோடு பயணம். அது நாம் நினைப்பது போன்ற குண்டும் குழியுமான சாலை அல்ல. குண்டும், குழியும் தான், சாலையே. வளைந்து நெளிந்து ஏறும். நெத்தலும் குத்தலுமாக இறங்கும். ஆப் ரோடுகளில் சீறிப்பாயும் ஜீப்களே இந்தப் பாதையில், திக்கித் திணறி தான் செல்லும் என்றால் எப்படி இருக்கும் என நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளையும் அவ்வப்போது காண முடியும். ஒரு முறை சென்று வந்தால், என்றும் மறக்க முடியாத திரில் அனுபவமாக அமையும்.
இருள் போர்த்திய நெல்லியம்பதி காடுகள் ஒளிரும். அதற்கு அங்கு கூடும் மின்மினி பூச்சிகளே காரணம். ஒன்றிரண்டு அல்ல. நூறு, ஆயிரமும் அல்ல. ஒரே இடத்தில் இலட்சக்கணக்ககான மின்மினி பூச்சிகளால் காடு, திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ஆயிரக்கணக்கில் சுற்றி நிற்கும் மரக்கிளைகள் முழுவதும் சிறிய அளவிலான சீரியல் ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்தது போல காட்சியளிக்கும் . இரவில் திரும்புகையில் இதை அனுபவித்தோம்
நெல்லியம்பதி பற்றிநினைக்கிற போதெல்லாம் சூரிய நெல்லி
நெல்லியம்பதி பற்றிநினைக்கிற போதெல்லாம் சூரிய நெல்லியும் ஞாபகம் வரும். காரணம் சூரிய நெல்லி பாலியல் வழக்கு சம்பந்தமாக வந்த ஒரு மலையாளம் படம் என்னை முன்பு உலுக்கியிருக்கிறது. மீண்டும் தேடி அதிப் பார்க்கவேண்டும்.
. சூரியநெல்லி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாநிலங்களவை துணை சபாநாயகர் பி.ஜே. குரியனுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஆனது.
கேரளாவில் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பெண் கடந்த 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல்வேறு இடங்களுக்கு அந்தப் பெண்ணை கடத்திச் சென்று சுமார் 40 பேர் வரை பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கேரள உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. பின்னர் கேரள அரசின் மேல்முறையீட்டையடுத்து, உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை மறு விசாரணை செய்யவும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தொடுபுழா செசன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது இந்த குற்றத்தில் பி.ஜே.குரியனுக்கும் தொடர்பு உள்ளது என்றும், அவரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கோரி பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்ததால் இவ்வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. மேலும் அந்த பெண்ணை தாம் குரியனிடம் அழைத்துச் சென்றதாக முக்கிய குற்றவாளியான தர்மராஜன் தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே குரியனை தாம் சந்திக்கவே இல்லை என்றும், குடிபோதையில் தாம் அவ்வாறு பேட்டியளித்ததாகவும் கடந்த மே 28 ஆம் தேதியன்று தர்மராஜன் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குரியன் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் புதிதாக எந்த உண்மைகளும் இல்லை என்று கூறி, குரியனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவு கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளபோதிலும், குரியனுக்கு மிகப்பெரிய நிம்மதியாக அமைந்துள்ளது. ( இணையதளக் குறிப்பு )
வறட்சி என்பது மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் ஏற்படும் . ஆனால் இன்றைக்கு காலநிலை மாற்றத்தால் அது வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. சில நாட்டில் மழை பெய்தல் என்பது 2 மில்லி மீட்டருக்கு குறைவாக இருக்கும் போது வறட்சி .அமெரிக்க நாட்டில் இரண்டு தினங்களுக்கு 2.5 மில்லியன் குறைவானால் வறட்சி. இலங்கையின் அந்தந்த காலத்திற்கு தகுந்த மாதிரி இது மாறுகிறது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சி காணப்படுகிறது. வறட்சி மண்ணில் உள்ள நீர் குறைந்து பயிர் பெற முடியாத அளவுக்கு ஏற்படுகிறது. நீரில் வறட்சி என்பது குளம் குட்டைகள் எல்லாம் மறைந்து போவதால் ஏற்படுகிறது. இதனால் பயிர்கள் வாடுவதும் கால்நடைகள் இறப்பதும் சாதாரண ஆகிறது .குழந்தைகளை வெகுவாக பாதிக்கிற பிரச்சனைகளில் இந்த வறட்சி ஒன்றாக இருக்கிறது. இன்னும் 15 ஆண்டுகளில் நாலில் ஒரு குழந்தை கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும். ஆப்பிரிக்காவில் எப்போது குறைந்த மழை அளவே இருக்கும். சோமாலியாவில் பேரழிவுகளை தருகின்றது இந்த வறட்சி .பல நாடுகளில் கால்நடை பண்ணை வியாபாரம் கைவிடுகிறார்கள். சிறிய அளவிலான தோட்டங்கள் மட்டும் பராமரிக்க முடிகிறது இந்தியாவில் கூட வறட்சி என்பது நிலங்களை மக்கள் கைவிட்டு வேறு இடங்களுக்கு போக வைக்கிறது
இந்திய அரசாங்கம் குடிநீர் பாதுகாப்பு சட்டம் என்பதை நடைமுறையில் கொண்டு வரும் போது பல சிக்கல்கள் உள்ளன இது முதன்மையான கூட்டாட்சி சட்டமாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இந்த சட்டத்தின் பிரகாரம் வலியுறுத்தப்படுகிறது தனியார் கிணறுகள் மற்றும் பொது கிணறுகள் போன்றவற்றின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் மாசு பாடும் முக்கியமானது. அசத்துமான நிலைமை ஏற்படுகிற போது அவற்றின் நிலைமை குறித்து ஆராயப்படுகின்றன, நுண்ணுயிர்கள், கிருமி நாசினிகள் கனிம ரசாயனங்கள் போன்றவை இந்த மாசுபாட்டை உருவாக்குகின்றன. ஆனால் மனிதர்கள் ஏற்படுத்தும் சுகாதார கு மாசுபாடு தண்ணீரை மூலகமாக இருக்கிறது
சுற்றுலா என்று உலகம் முழுக்க பெரும் வருமானம் தரக்கூடிய துறையாக இருக்கிறது அமெரிக்காவில் பல ஆண்டுகளாக சுற்றுலா விருந்தாகப் பேசப்படுகிறது. அந்த நாட்டின் பொருளாதாரநிலைமையை பல வகைகளில் குலைக்கிறது. தமிழருடைய பயண வரலாற்றின் இலங்கைக்கு தெற்காசியாவிற்கும் ஆரம்பத்தில் வணிகத்திற்காக சென்றார்கள் அவர்கள் சேர்ந்து சுற்றுலாவும் சென்றார்கள். வணிக விருந்தோம்பல் என்பது சுற்றுலாவில் மிக முக்கியமாக இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா என்பது பெரும் வருவாய் தருகிற விஷயமாக இருக்கிறது. மேற்கு நாட்டினர் பண மதிப்பை மனதில் கொண்டு மூன்றாம் உலக நாடுகளுக்கு சுலபமாக வருகிறார்கள். இலங்கை பர்மா போன்ற நாடுகள் சுற்றுலாவுக்கு என்று தனித்துறைகளை நிறைய செலவு செய்து நிர்வகிக்கிறன. தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மரபு ரீதியான விஷயங்களைக் கொண்டிருக்கிறது. இயற்கை சுற்றுலா என்றால் அது இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது இப்போது இயற்கை சுற்றுலா கூட எக்கோ டூரிசம் என்ற பெயரில் சுற்றுச்சூழல் சார்ந்தும் இருக்கிறது.
0
ஹைகூ நக்கீரன்
சுப்ரபாரதி மணியன், திருப்பூர்
இயற்கையுடன் இயைந்த வாழ்வு, உலகின் பருவ நிலைகள், சமூக சிந்தனைகள், அவலம், மனிதநேயம், அரசியல், என தமிழ் ஹைக்கூ கவிதைகள் சிக்ரங்களைத் தொட்டு வருகின்றன.
திருப்பூர் வாழ் ஹைகூ கவிஞர் கரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஹைகூ கவிதைகள் மட்டுமே எழுதுகிறார்.
எனவே ஹைகூ கவிஞர் என்ற சிறப்புப்பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
அவரின் இரண்டாம் ஹைகூ கவிதைகள் தொகுப்பு இது,
அவரின் வயதில் மூத்தவர் ( 65 ஐ எட்டுகிறார் ), பனியன் கம்பனியின் 12 மணி நேர வேலையைத் தாண்டி அவர் கவிதை உலகில் இருந்து கொண்டேயிருக்கிறார் என்பது சாதனையாகும்.
ஜப்பானிய விதிப்படி 5,7,5 கொண்டது என்றாலும் தமிழில் வார்த்தைச் சுருக்கமுடன் வியப்பையும் அதிர்வையும் வெளிப்படுத்தும் ஹைக்கூ கவிதைகளே பலராலும் எழுதப்படுகின்றன. ஜப்பானிய இலக்கண வரம்புகளை உடைத்தெறிந்து எழுதப்பட்ட பல தமிழ் ஹைக்கூ கவிதைகள் காலத்தை வெல்லும் ஹைக்கூ கவிதைகளாக விளங்குகின்றன
எனவே ஹைக்கூ கவிதைகள் தனியே வலம் வருகின்றன. வரம்பும், இலக்கணமும் கொண்டு. அதை சரியாகக் கணக்கிடுவதில் வல்லவர்.
பொதுவாக, சிறப்பாக இருக்கிறதென்று நான் பாராட்டும் சில ஹைக்கூ கவிதைகளை எடுத்துக் கொண்டு அவற்றில் இருக்கும் வடிவ , கட்டமைப்பு தவறுகள் பற்றிச் சுட்டிக்காடும்போது நானும் அசந்து வியந்து பார்த்திருக்கிறேன்.
அவர் எழுதிய ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்கும். அவற்றின் உதாரணம் இவை. நக்கீரப்பார்வைக்கு தப்பாதவை. உங்கள் பார்வையிலிருந்தும் தப்பக்கூடாதவை.
என்றும் கவிதையாய் சிந்தனையில் வாழ்பவர், வாழ்த்துக்கள்
கண்மணியும், அவரின் காதல் நிலமும்
சுப்ரபாரதி மணியன்
நல்ல பெயர் எடுக்க வேண்டும் தான்.. ஆனால் யாரிடம் நல்ல பெயர் எடுப்பது. அந்த நல்ல பெயர் முத்திரையைத் தருகிற மனிதனுடைய நியாயங்கள் எப்படி இருக்கின்றன என்று நியாயத்தின் பக்கம் எப்போதும் என்று பேசுகிறவர் கண்மணி. பணம் , அந்தஸ்து சார்ந்து அக்கறையாய் கேள்விகள் எழுப்புகிறவர்.
அவருடைய பெரும்பான்மையான படைப்புகளில் இந்த நியாயத்தின் அக்கறையும் அறம் சார்ந்த கருத்துகளும் இருந்திருக்கின்றன..
இந்த சிறுகதைகளில் கூட அந்த அம்சம் இருக்கிறது. அதற்காக அவர் உடன் பயணப்படுகிற கலை, இலக்கிய சக மனிதர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் இதன் மையங்கள் சார்ந்து..
வெளியே நீர் பரப்பாக விரிந்திருக்கும் கடல் உள்ளுக்குள் ஆயிரம் கதைகளை மறைத்து வைத்திருக்கும் என்று அவர் சொல்வது போல் கண்மணி அவர்கள் தன் திரைப்பட பணியினுடைய இப்படி ஆயிரம் கதைகளை சுமந்து கொண்டு திரிகிறார்.. அவையெல்லாம் இப்படி சிறுகதைகளாக, தொகுப்புகளாக, திரைப்படங்களாக வந்தால் நன்றாக இருக்கும் ஆனால் அவையெல்லாம் அவர் மனதில் புதைந்து கிடக்கின்றன. இதற்கு காலமும் மனிதர்களும் சரியான ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்த கதைகளில் உள்ள மனிதர்கள் சார்ந்த சித்தரிப்புகளும் அதன் மீதான தரிசனமும், நிலம் சார்ந்த விவரிப்புகளும் இறுதியில் அது கொண்டு செல்லும் நியாயமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை அவரின் நிலம் சார்ந்தக் கதைகளில் இறுதியில் ஒரு மாற்றம் திருப்பம் இருந்து கொண்டிருக்கிறது இது மரப ரீதியான சிறுகதைகளின் திருப்பமாக இருக்கிறது. வடிவ ரீதியாகச் சிறுகதையை புரிந்து கொள்ளும் இளம் வாசகன் இந்த திருப்பத்தை சரியாகவே புரிந்து கொள்வான். பாவைக்கூத்க்காரர்களிடம் தென்படும் அன்பும் நியாயமும் அந்த பெண்கள் சார்ந்த கோபமும் சரியாக வெளிப்பட்டிருக்கிறது. பஸ் பயண நேரத்து மனிதர்களாகட்டும். தொழுகை நேரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகட்டும், வெளிநாட்டில் இருந்து ஊர் திருப்பி அவன் பயணப்படுகிற நேரத்தில் அவன் எதிர்கொள்ளும் மனித உறவுகள் ஆகட்டும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து இந்த கதைகளை உருவாக்கி இருக்கிறார் களத்தில் காணப்படும் மையங்களும் அதை சொல்கிற நேர்த்தியும் எளிமையும் சிறப்பாக இருக்கின்றன.
. மகிழ்ச்சியாக இருக்கிற ஒரு தருணத்தை அவர் ஒரு கவித்துவமாக சொல்கிறார் : தான் இன்றுதான் பூப்பெய்தியதாக உணர்ந்தாள் என்று. இப்படி கவித்துவமான வார்த்தைகளை ஒவ்வொரு சிறுகதைகளிலும் தேடி எடுத்துக் கொள்ளலாம் .
சாவுகள் நிறைய வருகின்றன. அந்த சாவுகள் தரும் வெளிச்சப் புள்ளிகள் வித்தியாசமானவை. ஓர் ஊரின் நடப்பு விசயங்கள் சார்ந்து எழுதும் கடிதம் ஆனால் அந்த கடிதம் பயனில்லாதபடி வந்து சேரும் தந்தி .அது திரும்பத் தரும் ஒரு திருப்பம்…. இதுபோல் மனிதர்கள் கடிதம் எழுதுவது போல பேசிக் கொண்டே இருக்கிறார்கள் தங்களின் ஜீவனான மொழியில், பல சிற்பங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள், அந்தச் சிற்பங்களின் சிறப்புகள் பற்றி கண்மணி அவர்கள் தன் கதைகளை சொல்லிக் கொண்டே இருக்கிறார். இந்த திருப்பங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிக்க வைக்கும் திருப்பங்களாகவும் அமைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியானது
சுப்ரபாரதி மணியன், திருப்பூர்
கேரளா கலாகவ்முதி இதழ் : ஜனவரி 2025
எழுத்தும் வாழ்க்கையும் :சுப்ரபாரதிமணியன்:
எழுத்துலகம் 50 ஆண்டுகள்...
நவீன தமிழ் இலக்கியவாதிகளில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் சுப்ரபாரதிமணியன். நாவல்கள் சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகள் , திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் என நூற்றுக்கும் மேலான நூல்களை சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ளார். சமகால இலக்கியவாதிகளில் இவர் மிகவும் எளிமையானவராய் சாதாரண மக்களில் ஒருவனாய் வாழ்கின்றார். புதிய நல்ல பல எழுத்தாளர்களை இனம் கண்டு அவர்களை முன்னேறச் செய்து காணும் சிறப்புகள் கொண்டவர் சுப்ரபாரதி மணியன். இவரின்எழுத்துலக வாழ்க்கைக்கு இப்போது 50 ஆண்டுகள்
தமிழகத்திலிருந்து பரவலாக எழுதுகின்ற எழுத்தாளராக திகழும் இவர் திருப்பூரின் டெக்ஸ்டைல் தொழிலாளிகளின் துயரம் நிறைந்த வாழ்வினை மற்றும் இன்னல்களைக் குறித்து வாசகர்களுகளையும் விமரிசர்களையும் தமது எழுத்தால் அவர்களது கவனத்தை ஈர்த்தவரே சுப்ரபாரதிமணியன்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களும் கண்ணீரும், ஆசைகளும், நிராசைகளும், கனவுகளும் இவர் படைப்பில் நிறைந்து காணப்படும்.
திருப்பூரில் தொழிலாளிகளின் வாழ்க்கையை விவரிக்கும் "சாயத்திரை"எனும் நாவல் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத அபூர்வ சிருஷ்டி. சாயத்திரை நாவலுக்கு மிகச்சிறந்த நாவலுக்கான விருதை தமிழக அரசு வழங்கி கெளரவித்துள்ளது. சாயத்திரை ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல பல்கலைகழகங்களில் இவர் நூல்கள் பாட நூல்களாகவும் திகழ்கின்றது. இந்திய குடியரசுத் தலைவரின்
சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருதான "கதா புரஷ்காரம்" சுப்ரபாரதிமணியனுக்கு வழங்கப்பட்டுள்ளது 2020ம் ஆண்டில் "அன்னியர்" எனும் நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 2021ல் ஷார்ஜா புத்தகமேளயில் இவர்க்கு "புக்கிஷ்" விருதும் வழங்கினார்கள். இவருடைய நேர்முக உரையாடல்களை தொகுத்து சுப்ரபாரதிமணியன்ஒரு நூலாக காவ்யா பதிப்பகம் அன்மையில் வெளியிட்டுள்ளது.
சுப்ரபாரதிமணியன் கனவு எனும் மும்மாத இதழை 1987 முதல் நடத்தி வருகின்றார். கனவு ஃபிலிம் சொசைட்டியின் தலைவவராகவும் இருந்து வருகிறார். இவர் இங்கிலாந்து ஜெர்மனி, பிரான்சு, சிங்கப்பூர், மலேசியா,இந்தோனேசியா, பங்களாதேஷ், சிலோன், துபாய், ஷார்ஜா, அபுதாபி, இஸ்ரேல் வியட்னாம் ஆகிய இடங்களுக்கு தமிழார்வலராகவும், ஆளுமையாகவும் சென்றுள்ளார்.
சுப்ரபாரதிமணியன் " ஒன்பது திரைக்கதைகள் “ எனும் நூல் 2024 - ம் ஆண்டு, ஏப்ரல்மாதத்தில் வெளிவந்துள்ளது.
ஆர்.முத்து மணி இந்நூலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். திருப்பூரில் கனவு பிரசுரமாக இந்நூல் வெளியிட்டுள்ளது. மே மாதம் 2024 ல் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் பூஜைப் புரைத் தமிழ்ச் சங்கம் தலைமையில் இந்நூல் வெளியீடு நடந்தேறியது.
கவியும் எழுத்தாளருமான பி.ரவிகுமார் நூலை வெளியிட ,சரித்திர ஆய்வாளரும் எழுத்தாளருமான முனைவர். மோதிலால் நேரு அதை ஏற்று வாங்கினார். கவியும் நாவல் எழுத்தாளருமான க.வானமாமலை தலைமை வகித்தார்.
இந்நூலானது ஒரே மூச்சில் வாசிக்க கூடிய ஒன்றாகும். இதில் மதிமுகம், கோமணம், விமோசனம், சாயத் திரை ஆகியவரை நமது இரவையும், பகலையும் வேட்டையாடி ஆளுமை செய்யும். ஆழத்தில் வாழ்க்கை எதார்த்தங்களை இப்படைப்புகளில் இதயத்தை தொடுகின்ற எழுத்துகளால் சுப்ரபாரதி மணியன் வேறுபட்டதும் மிகச்சிறந்த கருத்துகளால் நிறைவு செய்துள்ளார்.
இந்நூலை வாசிக்கும் போது நெஞ்சை பிழிந்து ஆவலைத் தூண்டும் உணர்வுகள் மேலிடும். இந்த நூலில் ஆபாசம் சிறிய அளவில் கூட காண முடியாது. இக்காலத்திரைப்படங்கள் கூறுவது எதார்த்த வாழ்க்கையுமாக எந்த தொடர்புமில்லாதவை.
சுப்ரபாரதிமணியனின் கதைகள் திரைப்படங்களாக வரவேண்டும். வாழ்க்கையில் பொது நன்மைக்கான ஆழ்ந்த பார்வைகளே இவர் படைப்புகள் நம்மை தூய்மைப்படுத்தும் உயர்த்தவும் செய்யும்.
இவரது தமிழ்த் தொண்டானது மென்மேலும் சிறக்க வேண்டும்.
மொழியாக்கம் : கல்பனா ஜெயராம்
Dinamalar Tiruppur
0
வளைகுடா, அரபு எமிரேட் நாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் கேரள மக்கள், சினிமாக்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்'' என்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்.சமீபத்தில், கேரளா, திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று திரும்பிய சுப்ரபாரதி மணியன், நம்முடன் பகிர்ந்தவை:
கேரளா, ஒரு கலாசார நகரம் என்பது, அனைவரும் அறிந்தது. ஆண்டுமுழுக்க அங்கு ஏதாவது ஒரு கலாசார நிகழ்வு நடந்துக் கொண்டே இருக்கும். சின்ன மாநிலமாக இருந்தாலும், கலை, கலாசாரம், சினிமா சார்ந்த விஷயங்களுக்கு கூடுதல் பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், உலகம் முழுக்க இருந்தும், சிறந்த, 150 சினிமாக்கள் திரையிடப்பட்டன. இதில், மலையாள சினிமாக்கள், 10 இடம் பெற்றிருந்தன. தமிழ் மொழியில், 'அங்கம்மாள்' என்ற ஒரே ஒரு சினிமா மட்டுமே இடம் பெற்றிருந்தது. அந்த சினிமாவின் இயக்குனர், கேமரா மேன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மலையாளிகள்; நடிகர்கள் மட்டுமே தமிழர்கள்.
கேரளாவை பொறுத்தவரை, திரைப்பட விழாக்களை, 10 நாள் நடத்துகின்றனர். ஒரு பாரம்பரிய விழாவாக, கொண்டாட்ட மனநிலையில் நடத்துகின்றனர். கோவாவில் மத்திய அரசின் சார்பில் நடந்த திரைப்பட விழாவில், உலகம் முழுக்க இருந்து, 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திருவனந்தபுரம் திரைப்பட விழாவில், 13 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்றனர்; பெரும்பாலும் இளைஞர்களை அதிகளவில் பார்க்க முடிந்தது.
திரைப்பட விழாவில் கலாசார நடனம், சினிமா தொடர்புடைய கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. கேரளாவை சேர்ந்த பலர் வளைகுடா மற்றும் அரபு நாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் சின்ன மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு 'பைனான்ஸ்' செய்கின்றனர். கேரளாவில், ஓ.டி.டி., தளத்தில் வெளியிடுவதற்காகவே, சின்ன பட்ஜெட் படங்கள் அதிகளவில் தயாரிக்கின்றனர். ஆனால், தமிழில், 95 சினிமாக்கள், தியேட்டரில் திரையிடப்பட்ட பிறகே, ஓ.டி.டி.,க்கு வருகிறது.தமிழக சினிமா துறையிலும், சமீபகாலமாக, மாறுபட்ட கதையம்சம் கொண்ட சினிமாக்கள் வருகின்றன. இலக்கிய திருவிழா, கரிசல் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்துவது, வரவேற்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார்.
கைபேசி மூலம் திரைப்படங்கள் எடுக்க ஒரு நாள் முகாம் “
” கைபேசி என்பது என்று மனிதனுக்குத் தேவையான முக்கியமான கருவி என்று ஆகிவிட்டது. படிக்கவும் பார்க்கவும் என்று இருப்பதை படைப்புகள் உருவாக்கவும் பயன்படுத்தலாம். அந்த வகையில் கைபேசி மூலம் இப்போது குறும்படங்களும் திரைப்படங்களும் கூட உருவாகின்றன... கைபேசியில் சிறு குறும்படங்களையும் ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்றவற்றையும் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். உருவாக்குகிறார்கள் அவற்றின் உருவாக்கலின் மூலமாக சாதாரண மக்களும் இன்றைக்கு நம்மை வந்தடைந்திருக்கும் தொழில்நுட்பு வசதி வைத்துக் கொண்டு பெரிய சாதனைகளை படைப்பு ரீதியாக செய்ய முடியும். இதற்கு உதாரணம் கைபேசி மூலம் குறும்படங்களும் திரைப்படங்களும் தயாரிப்பது ஆகும். முழுமையான படைப்பு அனுபவத்திற்கு உகந்ததாக கைபேசி இன்றைக்கு இருக்கிறது “
என்று இயக்குனர் திரைப்பட இயக்குனர் அமுதன் அவர்கள் திருப்பூரில்திங்கள் அன்று நடைபெற்ற கைபேசி மூலம் திரைப்படங்கள் எடுக்கும் முகாமைத் துவக்கி வைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
திருப்பூர், கரூர், திருச்சி, கொடைக்கானல் பகுதியைச் சார்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
சேவ் இயக்குனர் அஅலோசியஸ், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் உட்பட பலர் முன்னிலை வகித்தார்கள்.
திருப்பூர் கனவு இலக்கிய அமைப்பு, மதுரை மறுபக்கம் திரைப்பட இயக்கம், சேவ் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.
பங்கேற்றவர்கள் சிறுசிறு நிகழ்ச்சிகளைக் குறும்படங்களாக எடுத்து எடிட் செய்து முழுமையாக்கி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தகவல் : சுப்ரபாரதிமணியன் திருப்பூர் கனவு இலக்கிய அமைப்பு
The Mystic River (Mayaru)/ Subrabharathimanian
0
The Irualas are a tribal community living in Coimbatore district and some parts of Kerala. They are found
in the Mudumalai forests in Coimbatore district. These poems are about them. Mayaru is a small stream
passing through their settlements.
The Mystic River (Mayaru)/ Subrabharathimanian - Tamil
The songs of a tribe
1.
Mayaru overflows
Whenever Mayaru overflows
There is joy
The joy of seeing floods.
2.
The kiluvai fence can be moved by anyone
Crushed by anyone
So gentle
The line of my determination
Can never be moved by any hero
Does chastity depend on a mere line.
**
Kiluvai – a wild bushy tree used for fencing
3.
To prevent fire from spreading
In the forest
There is the fire line.
We have drawn our own lines
Around us
To protect our dignity.
4.
For eight children I am the mother
I am Bommakka
In number eight I am at the head
In number eight inside the tail is my husband
However lustfully your eyes feed on me
Stand far away you supervisor
5.
Among the wild animals
Grazing in our forest is the mouse deer
But what kind of deer you are?
Your are only commodities
Goods to be traded
Liquor
Greed are you.
6.
I am sitting with a few gooseberries
Guavas spread on an old tray in front of me
That youth runs off teasing me
Touching my head
The king cobra will rise three feet to the thigh
Any snake will sting the foot.
I rise like a cobra and thrash my hands.
You have escaped
A snake does not take revenge
Will not forget so easily
7.
The Game Hut
Princes and Englishmen
Used to stay after hunting
Stands majestically still.
Nobody goes near it
Nobody goes as it is feared ghosts haunt it
Did they hunt only deer tiger other animals
How many tribal women
Like Bommakka
Numerous
We were born from the ancient tree of the tribe
You boast
You were all born
From the body, from the shoulder, head and foot
Then we should have been only from the tree
It is our pride.
8.
Water from Mayaru is for everything
To bathe to wash clothes to drink
Infected we suffer from cold fever cough
Crocodile of Mayaru, come
Grap our leg and drag us somewhere
Elephants, come hurl us with your trunk
Or kick us
Enough is this life
Fever never leaves us
Disease never leaves us
9.
Sadayandi Eezhu Kannimaru deities of our clan
After worshipping our gods if we stand with folded hands
Even the elephant will retreat
Nobody knows the age of this vengi tree
Whatever be the ailment
Vengi leaf is our medicine
The vengi tree is axed
Our grandfather, great grandfather and his father are in rage
To appease them
To boil rice give us a piece of land, sami.
*vengai tree – Indian kino tree. It has medicinal properties
Sami- a term of respect used by the so called ‘low-caste’ people
Cooking rice specially for an occasion in a designated place is a kind of ritual.
- Subrabarathimanian
Translated by Prof Vincent
திருப்பூர் புத்தகக் கண்காட்சி -2
சுப்ரபாரதிமணியன்
திருப்பூர் தமிழ்ச் சங்க இலக்கிய விருதுகள் நிகழ்வு இவ்வாண்டு திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் நடைபெறுகிறது. சென்றாண்டு ஒரு லட்சம் விருதுத் தொகையைப் பகிர்ந்து கொண்ட ஆறேழு எழுத்தாளர்கள் செலவு தவிர 2 லட்சம் வாடகைத் திருமண மண்டபத்தில் இரவு விருந்துடனும்.. படைப்பிலக்கியவாதி மா அரங்கநாதனின் மகன் நீதிபதி அர. மகாதேவனின் சிறப்புரையும் சிறப்பம்சங்களாக அமைந்தன.
திருப்பூர் தமிழ் சங்க இலக்கிய விருதுகளுக்கான புத்தகங்கள் குறிப்பிடத்தக்கதாக சமீப ஆண்டுகளில் இல்லை என்று நான் சில மாதங்களுக்கு முன்னால் புலனத்தில் ( வாட்ஸ் அப் ) குறிப்பிட்ட ஒரு குறிப்புக்கு அவர்கள் பக்கம் இருந்து வந்த எதிர்வினை கசப்பாக இருந்தது.
திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விழாக்களில் எழுத்தாளர்களின் கலந்துரையாடல்களில் நான் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறேன்.. பெரும்பான்மையாக திருப்பூர் எழுத்தாளர்கள் புறக்கணிக்கும் நிகழ்வாக அது இருந்திருக்கிறது.. ஆனால் நான் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறேன். சமீபத்தில் அவர்களின் கசப்பான எதிர்வினை காரணமாக இந்த ஆண்டு திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது விழாவில் இருந்து என்னை நான் தவிர்க்கும் விதமாக விலகி இருக்க விருப்பப்படுகிறேன்..
திருப்பூர் தமிழ் சங்கம் உலக அளவில் சிறந்த தமிழ் சேவைகள் செய்யும் சங்கம் என்று சென்றாண்டு 5 லட்சம் ரூபாய் தொகை உடன் தமிழக அரசு விருது கொடுத்தது. அப்போது என் இலக்கியப் பணிக்காக இரண்டு லட்சம் ரூபாய் தொகையுடன் விருது கொடுத்தார்கள்.
திருப்பூர் தமிழ்ச்சங்கம் தன் விருதின் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் இந்த விருதை கடந்த ஆண்டுகளில் பெற்றிருக்கிற டெல்லி தமிழ்ச்சங்கம், பம்பாய் தமிழ் சங்கம் திருவனந்தபுரம் தமிழ் சங்கம், கரந்தை தமிழ் சங்கம் போன்ற அமைப்பின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு திருப்பூர் தமிழ் சங்கம் தன்னுடைய இலக்கிய முயற்சிகளை மேல் எடுத்துச் செல்ல வேண்டும்.அது தமிழக அரசின் விருதை பெருமைப்படுத்தும்.
திருப்பூர் புத்தக கண்காட்சியில் இந்த வாரம் ஞாயிறு பொதுமக்கள் நிறைய வந்து போயினர். புத்தகங்கள் வாங்கினர் பொதுவான புத்தகங்கள், குழந்தைகள் புத்தகங்கள் அதிகம் விற்றன. இந்த வாரத்தில் இரண்டு மூன்று தினங்கள் இப்படி கூட்டம் வந்து போனால் போதும் பதிப்பாளர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
திருப்பூர் பொதுமக்களே இப்படித் திரளாக வந்து கலந்து கொண்டு புத்தங்கள் வாங்கி பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆதரவு தாருங்கள். திருப்பூர் புத்தக கண்காட்சியில் தள்ளுமுள்ளு என்ற வகையில் செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் பரபரப்பாக பேசியதால் இந்த கூட்டம் வந்தது என்று சில பேர் சொன்னார்கள் அப்படி தள்ளுமுள்ளு என்று பத்திரிகைகள் மறுபடியும் பேசி , எழுதி மறுபடியும் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது திருப்பூர் பொதுமக்கள் தங்களுடைய நடவடிக்கைகளை புத்தக கண்காட்சியில் சார்ந்தும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படுகிற நொய்யல் விழா, பொங்கல் சமயத்தில் நடத்தப்படுகிறது. புத்தக கண்காட்சியும் அரசின் உதவி பெற்று நடத்தப்படுகிறது. ஆனால் இவற்றில் எல்லாம் படைப்பிலக்கியவாதிகளுக்கு என்ன பங்கு இருக்கிறது என்ற பெரிய கேள்வி இருக்கிறது. படிப்பு என்பது இவர்கள் பேசும் பேச்சில் இருக்கிறது .படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் சார்ந்த அக்கறை செயல்களில் இல்லை என்று தான் தோன்றுமளவு இதன் முக்கியஸ்தர்களுக்கு மனத்தடை இருப்பதை அவர்கள் விலக்கிக் கொள்வது. ஆரோக்யமானதாக இருக்கும். இப்படி மக்களின் வரிப்பணம், அரசின் நிதி உதவியில் நடத்தப்படும் விழாக்களில் படைப்பிலக்கிய வாதிகளுக்கும் பங்கு இருப்பதை பிற ஊர் விழாக்கள் சொல்கின்றன.
.
திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டில் ஒருமுறை இலக்கிய விருதுகளோடு நிறுத்திக் கொள்கிறது. முன்பெல்லாம் புதிய வணிகத் திரைப்படத்திற்கு டிக்கெட் கொடுத்து உறுப்பினர்களை சந்திக்கும் வேலையைக் கைவிட்டது ஆறுதலான விஷயம்.. திருப்பூர் தமிழ்ச்சங்கம் எப்பவாவது பவா செல்லத்துரை போன்ற பிரபல பேச்சாளர்களுக்கு மேடை அமைத்து தருவதோடு தன்னுடைய இலக்கியப் பணி முடிந்து விட்டதாக நினைக்கிறது
திருப்பூர் நூலகங்களில் நடத்தப்படும் விழாக்களில் இவ்வகை படைப்பிலக்கியவாதிகளுக்கு புறக்கணிப்பு இருக்கிறது அங்கே பொன்மொழிகள் தொகுத்து கவிதைள் என்று போடுபவர்களுக்கும் கொஞ்சம் பணம் தந்து அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தேநீர் செலவு ஏற்றுக் கொள்பவர்களுக்கும் இலக்கியவாதி என்ற பட்டம் தரப்படுகிறது. அந்த நூலக வாசகர் வட்டத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தகுதிகளாக ஆசிரியராக இருக்க வேண்டும், பணக்காரராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இன்னும் முன்னணியில்..
திருப்பூரில் திருக்குறள் மற்றும் பழைய இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருகிறது இவற்றில் தேநீர் செலவு செய்யும் பணக்காரர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள் அவர்களுக்கு இலக்கியவாதிகள் என்ற கீரிடம் தொடர்ந்து தரப்படுகிறது.
இதனால் நூலக இயக்கங்களும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும ஆறுதல் பெற்றுக் கொள்கிறார்கள். இதே போதும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
பல வசதியானப் புரவலர்கள் நிதி உதவியால் நடத்தும் இலக்கிய கூட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் குறைவாக சன்மானம் வாங்காத பெரியவர்கள் இலக்கியம் பேசி நிறைய சன்மானம் பெறுகிறார்கள். இவர்கள் இலக்கிய இதழ்களுக்கு சந்தா கட்ட கூட மனம் இல்லாதவர்கள். பெரிய இலக்கியம் கூட்டம் வெளிச்சம் இவை ஊரோடு ஒத்துப் போகும் விஷயங்கள் என்று இந்த வள்ளல்கள் நினைக்கிறார்கள். சிந்து வெளி சார்ந்த அரங்குகள் இந்த ஆண்டு புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கின்றன. மகிழ்ச்சி .
அதே சமயம் சிறுபத்திரிக்கை சார்ந்த கலாச்சாரத்திற்கும் சமாதிகள் கட்டப்படுகின்றன. திருப்பூரில் சிறு பத்திரிகை விற்கிற இலக்கியப் பத்திரிக்கைகள் விற்கிற கடை என்பதே இல்லை. மகேஸ்வரி புத்தக நிலையம் இலக்கிய இதழுக்காக ஒரு சின்ன இடத்தை முன்பெல்லாம் தந்திருந்தது. இப்போது இலக்கிய இதழ்கள் பெரிய அளவில் விற்பனையாவது இல்லை என்று காரணத்தைக் காட்டி தயவு தாட்சணியம் இல்லாமல் அந்த இடத்தையும் பிரபல பேச்சாளர்களின் நூல்களுக்காக ஒதுக்கி விட்டது.. மகேஸ்வரி புத்தக நிலையம் ஒரு காலத்தில் மூன்று கடைகள் இருந்தன இப்போது ஒரு கடையாகச் சுருங்கி விட்டது நேஷனல் புக்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடைக்காரர்கள் நடத்தி வந்த புத்தகக் கடை மூடப்பட்டுவிட்டது. இலக்கிய பத்திரிக்கைகள் விற்று வந்த பெட்டிக்கடைகள் இப்போது கஞ்சா சாக்லேட் விக்கிற கடைகளாக மாறிவிட்டன இந்த சமயத்தில் தீவிர இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் எழுத்தாளர்கள் புறக்கணிப்பிற்கும், இலக்கிய சாதி, அரசியல் சாதி சார்ந்த தீண்டாமைக்கும் உள்ளார்கள்.
கட்சி சார்ந்த இலக்கிய வட்டங்களில் இருக்கும், தென்படும் எல்லை கோடுகளில் நெருப்பு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது தூரம் இருந்துதான் அந்த நெருப்பை பார்க்க முடியும். டாப் லைட் நூலகம், வாசகர் சிந்தனை பேரவை போன்றவை நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வதில் என்னை போன்றவர்கள் ஆறுதல் அடைகிறார்கள். டாப்லைட் நூலகம் 250 பேரை அழைத்துக்கொண்டு இந்தாண்டு கங்கை கொண்ட சோழபுரத்திற்கும், சென்றாண்டு கீழடிக்கும் நிறைய செலவு செய்து பலரை சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். ஆனால் அங்கும் வெகுஜன எழுத்தாளர்கள் நடவடிக்கைகளுக்குத்தான் முன்னுரிமை.
திருப்பூர் இலக்கிய விருது, திருப்பூர் குறும்பட விருது, திருப்பூர் சக்தி விருது போன்றவற்றில் என்னைப் போன்றவர்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கிறது.
இந்த வாரம் ஆரம்பித்திருக்கும் தாய் தமிழ் இலக்கிய பேரவை, பாரதி தமிழ் சங்கங்கள் போன்றவை ஆறுதல் தருகின்றன தமிழாசிரியர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் தமிழ் மொழி சார்ந்தோ, இலக்கிய அக்கறை சார்ந்தோ அவர்கள் செயல்படுவதில்லை என்ற வசவு, சாபம் அவர்கள் மேல் இருந்து கொண்டே இருக்கிறது. அதை இப்போது ஆரம்பிக்கும் பாரதி தமிழ்ச்சங்கம் போன்ற தமிழாசிரியர்கள் உள்ள அமைப்புகள் இந்த வசவைத் தீர்க்க வேண்டும்.
. இந்த தமிழாசிரியர்களின் இலக்கிய பணி என்பது பட்டிமன்றம் சார்ந்த வேலைகளில் முடங்கி போய் விடுகிறது. “ கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இலக்கிய நடவடிக்கை என்றால் பட்டிமன்றம் தான்” என்று ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை சொன்னதை அவர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் ஆசிரியர்களும் தொடர்ந்து சரியாகக் கடைபிடிக்கிறார்கள்.
தீவிர இலக்கியம் சார்ந்த இளைஞர்களை ஓரம் கட்டும் நடவடிக்கைகள் பெரிய அளவில் நடக்கின்றன அவர்களை அடையாளம் காட்ட மறுக்கிறார்கள் தங்களின் சிம்மாசனங்களை காப்பாற்றிக் கொள்ள பல எத்தனைகளைச் செய்கிறார்கள். தலை யூட்யூப்பர்களும், மாப்பிள்ளையாக இருந்தாலும் பிணமாக இருந்தாலும் தாங்கள் தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற சிவன்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகள் சேகரிப்பின் ஒரு கட்டம் இது. அதில் அவர்கள் வெற்றி பெறட்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இலக்கிய அண்ணன்களுக்கு லட்சக்கணக்கான ரூபாயை நிதியாகவும் உதவியாகவும் வழங்கிய கதைகள் உள்ளூரில் நடந்தன சமீப ஆண்டுகளாய்… மக்கள் பணம் அவை. தீவிர இலக்கியம் சார்ந்த படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் நடவடிக்கைகளுக்கு அந்த வகை நிதி உதவி எல்லாம் தடை செய்யப்பட்டது போல நடந்து கொள்கிறார்கள் .
ஐம்பதாயிரம் கோடி ரூபாய் செலவாணி தரும் நகரம் தன்னுடைய இலக்கிய நடவடிக்கைகளால் இன்னும் பெருமைப்பட வேண்டும். .மேடைகளும் பெரு வெளிச்சமும் தேவைதான் அதைத் தாண்டி தீவிரமாக இலக்கிய நடவடிக்கைகள் நகரத்தின் சரியான அடையாளமாக கொள்ளப்பட சரியான இலக்கிய செயல்பாடுகள் தொடர வேண்டும். இதெல்லாம் எங்களுக்கு தொடர்பில்லாத சமாச்சாரங்கள் என்று ஒரு பக்கம் பலவகை வள்ளல்கள் நடந்து கொண்டுதான் இருப்பார்கள் ஆனாலும் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. இந்த பதிவு சார்ந்த எதிர்வினைகள் மோசமாகத்தான் இருக்கும் அவை ஒரு வகையில் மிரட்டல்கள் கூட இருக்கலாம் அவற்றையும் தொடர்ந்து நண்பர்கள் பதிவு செய்யலாம். நானும் பதிவு செய்வேன்.
திருப்பூர் புத்தக கண்காட்சி இந்த முறை நம்பிக்கை அளிக்கும் என்ற ஒளிச்சேர்க்கை ஞாயிற்றுக்கிழமை கண்காட்சிக்கு வந்த பொதுமக்களின் கூட்டத்தால் தெரிகிறது இந்த வெளிச்சம் தீவிர படைப்பிலக்கியவாதிகள் சார்ந்த நடைமுறைக்கு கூட பலரால் கண்காணிக்கப் பட்டால் அது பெரிய ஆறுதல் தான்.
0
திருப்பூர் புத்தகக் கண்காட்சி நாள் 1;; RPS
0
அமைச்சர்கள் அரசாங்க அலுவலர்கள் புடைசூழ சிறப்பாக ஆரம்பித்தது. கூட்டம் குறைவாக இருந்தது விற்பனையும் குறைவு
முதல் அரங்கம் பின்னல் டிரஸ்ட் அரங்கம் திருப்பூர் புத்தக கண்காட்சியின் முக்கிய பங்குதாரர். அதில் அதன் நிர்வாகி சௌந்தரபாண்டியன் அவர்கள் காணப்படவில்லை அவர் உடல் நல குறைவு பற்றிய செய்திகள் கிடைத்தன. அவர் மீண்டு வர வேண்டும். சென்றாண்டைப் போலவே பின்னல் டிரஸ்ட் அரங்கத்தை இந்த ஆண்டும் தோழர் ஈரோடு இளங்கோ நிர்வகிக்கிறார். விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அவருக்கு நெருக்கமானது..
திருப்பூர் படைப்பாளிகள் நூல்கள் கவி உழவன் அரங்கில் இருப்பது ஆறுதல் தந்தது டாப்லெட் நூலக இந்துமதி உட்பட திருப்பூர் படைப்பாளிகள் அங்குகுவிந்திருந்தனர். மகா ஆறுதல். திருப்பூர் படைப்பாளிகளின் நூல்களை வைக்க ஓர் அரங்கம் என்பது ஆறுதல்
உயிர்மை அரங்கில் புத்தகங்கள் குறைவாக இருந்தன புத்தகங்கள் பண்டல்கள் வேறு இடத்திற்கு திசை மாறிப் போய்விட்டன வந்துவிடும் என்றார்கள்
எழுத்தாளர் பாரதிநாதன் நூல்கள் பொன்னுலகம் பதிப்பகம் அரங்கில் கிடைக்கும். இந்த முறை திருப்பூர் குணா அரங்கம் அமைக்கவில்லை. பாரதிநாதன் இந்த முறை காதல் மற்றும் சேர்ந்து வாழ்தல் சார்ந்த அனுபவங்களை இரண்டு நாவல்களாக கொண்டு வந்திருக்கிறார். நல்ல முயற்சி. புரட்சி பாரதி பதிப்பகம் அந்த நூல்களை வெளியிட்டு இருக்கிறது.இரண்டும் வாங்கினேன் ரூ 300
இன்னொரு போராளி நடிகர் நாவலாசிரியர் சந்திரகுமாரின் ” முடக்க காலகதைகள் “ நாவல் நீண்ட கால தவணையிலிருந்து விடுபட்டு முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது அதற்கு நான் முன்னுரை எழுதி இருக்கிறேன் 550 ரூபாய்
நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் என்னுடைய நாவல் ” முகப்பறவையே எங்கே சென்றாய் “ .வந்திருந்த பிறகு பிரதிகள் உடனே தீர்ந்து விட்டன பிரதிகள் கேட்டிருக்கிறேன் வெப்பம் என்ற என் சிறிய சிறுவர் நாவல் குறைந்த விலையில் இருப்பதால் கணிசமான பிரதிகள் நேற்று விற்றன.
கமலஹாசனின் தக்லைப் படத்தின் கலை இயக்குனர் குழு ஓவியர் ராம மூர்த்தி அவர்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட என் சிலுவை நாவலின் அட்டையை பார்த்து ரெம்பரெண்ட் ஓவியம் என்றார். எனக்குத் தெரியவில்லை புத்தகத்தில் உள்ளேயும் அது பற்றிய குறிப்பு இல்லை. மீண்டும் ராமமூர்த்தி கூகுளில் தேடி அந்த படம் ரெம்பரெண்ட் ஓவியம் தான் என்பதை உறுதி செய்தார்.
என்சிபிஎச் பதிப்பகம் சிலுவை நாவலின் மூன்றாவது பதிப்பை போடுகிற போது அந்த ஓவியம் ரெம்பரெண்ட் என்பதை குறிப்பிட வேண்டும்
.அவருடைய சகோதரி மைதிலி ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டு இருக்கிறார் அவர் அப்பா நிதர்சன கோவிந்தராஜன் ஒரு கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது
விஷ்ணுபுரம் விருது பெற்ற திருப்பூர் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் வான்கோ புத்தக நிலையத்தில் இருக்கிறார். வான்கோ புத்தக நிலையத்தை ஆரம்பித்து இருப்பதாகவும் புத்த வெளியீடுகளில் அக்கறை கொண்டிருப்பதாகவும் சொன்னார் சமீபத்தில் அவர் திருமணம் முடித்து இருந்தார். அவருக்கு திருமண வாழ்த்துக்கள்
வழக்கம்போல் என்சி பிஎச் மேலாளர்கள் ரங்கராஜ், குணசேகரன் ஆகியோர் ஆர்வத்துடன் காணப்பட்டார்கள் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற கிராமத்து நதி கவிதைத் தொகுப்பு என் சி பி எச் பதிப்பகம் ஒரு பதிப்பை கொண்டு வந்திருக்கிறது அழகாக. முன்பே பல பதிப்புகளை கவிதா பதிப்பகமும் பொள்ளாச்சி கோலம் பதிப்பகம் கொண்டு வந்திருக்கின்றன. இப்போது புதிய கோலத்தில் என்சிபிச் பதிப்பகம் சிற்பி அவர்களின் கவிதைகளை கொண்டு வந்திருக்கிறது. முதல் பார்வையில் மாத்தளை சோமு அவர்களின் சிறுகதைகள் முதல் பாகம் பெரிய அளவில் கண்ணில் தென்பட்டது அழகான பதிப்பாக அமைந்திருந்தது..
திராவிடக் கழகத்தின் தனி அரங்கை அமைச்சர் பெருமக்கள் அக்கறையுடன் கவனித்து புத்தகங்களை பெற்றுக் கொண்டார்கள் பாரதி புத்தகாலயம் நாகராஜன் சென்னையிலிருந்து வந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பார்த்திருந்தேன். சென்ற ஆண்டு 27 புத்தகங்கள் மொழிபெயர்ப்புக்காக கையெழுத்தானது . எதுவும் வெளிவரவில்லை என்றார். இவ்வாண்டு அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
திருப்பூர் மகேஷ்வரி புத்தக நிலையம் மகாதேவன் சென்னை புத்தகக் கண்காட்சி விற்பனை பற்றி எப்போதும் உற்சாகமாக செய்திகளைப் பகிர்ந்து கொள்வார்.இம்முறை சரியில்லை என்றார். பலரும் அப்படித்தான் சொன்னார்கள்.
காலச்சுவடு அய்யாசாமி சென்ற ஆண்டைப்போலவே நல்ல விற்பனை என்றார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தை ஒட்டி பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் புத்தக கண்காட்சிக்கு நண்பர்கள் எல்லாம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீழடி சார்ந்து ஒரு அரங்கை கலைஇலக்கியப் பெருமன்றம் செயலாளர் ஆனந்த் அவர்கள் நிர்மாணம் செய்து கொண்டிருந்தார் இன்னும் வேலை முடியவில்லை அது இந்த ஆண்டின் புத்தகக்கண்காட்சியின் சிறப்பம்சமாக இருக்கும். அதை மோகன் கார்த்திக் அவர்களின் கிட்ஸ் கிளலப் பள்ளி அமைக்கிறது என்பது முக்கியமான செய்தி. அவர் தான் திருப்பூர் தமிழ்ச்சங்க செயலாளர் கூட . பருமனானவர். பெரிதாய் ஏதாவது செய்வார் என்ற எதிர்பார்ப்பு திருப்பூர் எழுத்தாளர்களிடம் உள்ளது.
சிக்ஸ் சென்ஸ் பதிப்பகம் என் அசாம் பயணக் கதை நூல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. தீயும் மலரும் அதன் பிரதிகளை அங்கு போய் கேட்டபோது அப்படி ஒரு நூல் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு தேடி கொடுத்தார்கள் அந்த நூலின் தலைப்பு சட்டென எனக்கு மறந்துவிட்டது வயது சார்ந்த இந்த மறதி எல்லாவற்றிலும் தொற்றிக் கொள்கிறது.தீயும் மலரும் ரூ 220
கண்காட்சி ஒன்பதரை மணி வரைக்கும் நடக்கும் நேற்று கண்காட்சிக்கு வந்திருந்த ஒரு சமூகப் பணியாளர் தன்னிடம் இருந்த 3500 ரூபாயை இன்று ஒரு நாளில் குடித்து தீர்த்து விட்டதாகவும் மிச்சம் இருப்பது 160 ரூ என்று தெரிந்து கொண்டு அதில் நூற்று ஐம்பது ரூபாய்க்கு என்னுடைய ஒரு கை உணவில் நாவல் மற்றும் வெப்பம் சிறார் நாவல் ஆகியவற்றை வாங்கி சென்றார்.
அவருக்கு ஒயின் ரொம்ப பிடிக்குமாம் நேற்றும் அதைத்தான் விரும்பி எடுத்துக் கொண்டதாக சொன்னார்.
மதுவின் வாசம் கூட அந்த நேரத்தில் ரொம்ப பிடித்திருந்தது
எழுத்தாளன், முதலாளி இருவரும் ஒரே நேரத்தில் வந்து விடுகிறார்கள். வரவேற்பாளர்கள் எழுத்தாளனுக்கு ஒரு கை ஆட்டி அசைத்து ஒரு வகை வணக்கம். முதலாளிக்கு இரு கை கூப்பி வணக்கம்.
நிதர்சன உலகம். இப்படி ஏக மரியாதைதான் எழுத்தாளனுக்கு.
தொடரட்டும் கைகூப்பல்கள். ஜெயந்தனின் ஒரு கதையில் பணி நிறைவு பெற்று செல்லும் அதிகாரி, புதுப்பணியில் சேர வரும் அதிகாரி ஒரே நேரத்தில் .. யாருக்கு மரியாதை தருவது என்பதில் குழப்பம்.
சுவாரஸ்யமான கதை ஞாபகம் வந்தது.
எழுத்தாளன், முதலாளி இருவரும் ஒரே நேரத்தில் வந்து விட்டால் மரியாதை முதலாளிக்குத்தான். ஸ்பான்சர்கள் வேறு குறைவாகவே வந்திருப்பதாக பி எஸ் என் எல் சுப்ரமணியன் சொன்னார்.
முதலாளிகள் சரியாக கவுரவம் செய்யப்பட வேண்டியவர்களே..
திருப்பூர் புத்தக கண்காட்சி 2025
சுப்ரபாரதிமணியன்
வழக்கமாய் திருப்பூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை, , பொன்னுலகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகிய அரங்கங்களில் உட்கார்ந்து நண்பர்களைச் சந்திப்பது பேசுவது என்று புத்தக கண்காட்சி காலத்தில், மாலை நேரத்தில் என் பொழுது போகும்.
இந்த முறை பொன்னுலகம் பதிப்பகம் அரங்கம் போடவில்லை உயிர்மை பதிப்பகம் ஆண்டுதோறும் என்னுடைய புத்தகங்களை கொண்டு வந்து விடும். இந்த முறை கொண்டு வரவில்லை சுற்றுசூழல் திரைக்கதைகள் என்ற நூல் உயிர்மை பதிப்பகத்திற்கு அனுப்பி வைவித்தேன். அவருக்கு மின்னஞ்சல் செய்தேன் கூப்பிட்டேன். பதில் இல்லை தமிழ் பதிப்பாளர்கள் எழுத்தாளர்களை மதிக்கும் விதம்தான் இது.
இந்த முறை திருப்பூர் புத்தக கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அரங்கத்தில் இருந்து கொண்டு நண்பர்களைச் சந்திப்பதும் பேசுவதும் என்று என்னுடைய புத்தக கண்காட்சி தினங்கள் மாலையில் கழிந்தன.
இந்த முறை புத்தக வெளியீடுகள் அரங்குகுகளில் அதிகம் காணப்படவில்லை..
அப்போது அதிகம் விற்பனையாகும் நூல்கள் பற்றியும் சில கணிப்புகள் வந்தன.. நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் போட்டி தேர்வுகள் என்று பல புத்தகங்கள் அவர்கள் பதிப்பது நிறைய விற்பனையாகிறது. அவற்றை வாங்குவதற்காக கல்லூரி மாணவர்களும் போட்டியாளர்களும் நிறைய வந்து போகிறார்கள் அடுத்து இறையன்பு அவர்களின் நூல்கள் அதிகம் விற்பனையானது. அப்துல்கலாம் நூல்கள் விற்பனையாவது குறைவாக இருக்கிறது இறையன்பு நூல்கள் அதிகம் விற்பனைக்கு ஒரு காரணம் பல தலைப்புகளில் பல நூல்கள் வந்திருப்பதால் என்ன நினைக்கிறேன். அவை சுவாரஸ்யமாக இருப்பதாக வெகுஜன வாசர்கள் படிக்கிறார்கள். வெகு
ஜன வாசகனுக்கு ஏதாவது நாவல் தேவைப்படுகிற போது அவன் தெரியாத பெயராக இருந்தால் கூட அதனை தேர்வு செய்து கொள்கிறான் அப்படித்தான் என்சிபிஎச் புத்தக நிலையம் வெளியிட்டிருக்கிற பல நாவல்களை பலர் தேர்வு செய்து இருந்தார்கள் என்பது தெரிந்தது. பெண் எழுத்தாளருடைய படைப்புகளை பலர் விரும்பி வாசிக்கிறார்கள் பாமா போன்ற தீவிர எழுத்தாளருடைய படைப்புகளுக்கும் ஒரு இடமிருந்த்தைக் கண்டு கொண்டேன்
என்னுடைய படைப்புகளில் சிலுவை நாவலை நான் தனிப்பட்ட முறையில் 147 பிரதிகள் முன்பு விற்று இருக்கிறேன். இந்த புத்தக கண்காட்சியில் சிலுவை நாவலின் பத்துக்கு மேற்பட்ட பிரதிகளை விற்கப்பட்டது என்பது ஆறுதல்.
சிலர் என்னிடம் கூடுதலாக சலுகை விலையில் கிடைக்கும் என்று சொல்லி என்னிடம் தனிப்பட்ட முறையிலும் வாங்கினர் என்னுடைய சுற்றுச்சூழல் நூல்கள் நிறைய என்சிபிஎச் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது இந்த முறையும் வெப்பம் என்ற சிறுவர் நாவல் சுற்று சூழ்நிலை மையமாகக் கொண்டும் வேர்களை இழக்கும் பூமி என்ற சுற்றுச்சூழல் கட்டுரைகள் கொண்ட தொகுப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றும் வேட்டையாடிகள் சிவப்பு பட்டியல்., சூழல் அறம் போன்ற நூல்கள் நிறைய விற்பனையாகின. என்னுடைய சாயத்திரை மறுபதிப்பு கணிசமாக விற்றது. வாங்குகிற வாசகர்கள் பலர் புதியவர்களாக இருந்தார்கள்
உள்ளூர் எழுத்தாளர்கள் புத்தகங்களை வாங்குவதில் சுணக்கம் காட்டினார்கள் வாசிப்பதிலும் சுணக்கம் காட்டுகிற பழக்கம் உள்ளவர்கள் அவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.. அவர்கள் படைப்புப் பயிற்சிகளுக்கு, முயற்சிகளுக்கு மேலாக புத்தகங்கள் வாங்குவதும் புத்தகங்களை படிப்பது முக்கியமானது என்பதை நான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தேன்
பக்கத்தில் இருந்த பெரியார் சுயமரியாதை இயக்க அரங்கத்தில் பெண் ஏன் அடிமையானாள் 50 பிரதிகள் விற்றதை அவர்கள் சாதனையாக சொன்னார்கள். ஆனால் சில நாட்களில் அந்த பிரதிகள் தீர்ந்து விட்டன அச்சில் இல்லை பிரதிகள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள. இன்னும் பக்கத்திலிருந்து தினமலர் அரங்கத்தில் திருப்பூர் கிருஷ்ணன், வரலொட்டி ரங்கசாமி போன்றோரின் புத்தகங்கள் அதிகம் விற்று இருப்பதாக சொன்னார்கள். அவர்கள் இரவு 9.30 மணி வரை காத்திராமல் சீக்கிரம் கடையை மூடினார்கள்.
திருப்பூர் போன்ற நகரங்களில் மக்கள் தினசரி அதிக நேரத்தை வேலைகளில் ஒதுக்குபவர்கள் என்பதால் படிக்க நேரம் இருக்காது ஆனால் ஆண்டு தோறும் இப்படி நடக்கிற கண்காட்சிகளை புத்தகங்களை வாங்குவது என்பது பலருக்கு பழக்கமாக இருக்கிறது.நல்லது
திரைப்படத்துறையினர் சிபாரிசு செய்யும் நூல்கள் கவனம் பெற்றன. அரவிந்த சாமி சிபாரிசு செய்த பணம் சார் உளவியல் உதாரணம்
என்சிபிஎச் பதிப்பகம் வெளியிட்ட நூல்களில் சிறுவர் நூல்கள் அதிகம் இருந்தன. அதிலும் குறிப்பாக ஆங்கிலத்தில் சிறுவர் நூல்கள் அவை சிறு வெளியிடானாலும் உலக இலக்கியம் என்று சுருக்கு பட்ட பிரதிகள் 99 ரூபாய்க்கு கிடைத்தாலும் அவை அதிகமாக விற்பனையாகின. அதேபோல பாரதி புத்தகாலயம் வெளியிட்ட சிறுவர் நூல்கள் நிறைய தமிழில் தென்பட்டன அவை அதிகம் விற்பனையாகின்றன. அங்குநிறைய சிறுவர் இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் தங்கள் படைப்புகளை பிரசிக்கிக்கிறார்கள் என்பதை கண்டு கொண்டேன் பெரிய வரவாக அவை இருந்தன
திருப்பூர் தமிழ்ச்சங்கம் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது அவர்கள் எது சொன்னாலும் விரோதமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாது.
திருப்பூர் தமிழ் சங்க இலக்கிய விருதுகள் மிக முக்கியமான தமிழின் நவீன இலக்கிய படைப்பாளிகளுக்கு முன்பு வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சமீப ஆண்டுகளில் அவர்கள் விருது தருகிற நூல்கள் குறிப்பிடத்தக்கதா இல்லை என்பதை இந்த ஆண்டும் கண்டு வருத்தமாக இருந்தது. வழக்கமாக மூன்று பேர் கொண்ட நடுவர் குழு இருக்கும் இந்த ஆண்டு அந்த நடுவர் குழு பற்றிய, நடுவர் குழு பற்றிய அறிவிப்பு அழைப்பிதழில் இல்லை. நடுவர் குழு என்று யாரும் அறிமுகப்படுத்தவில்லை சிறந்த நவீன இலக்கியவாதிகளுக்கு அறிமுகம் , அவர்களின் , நடுவர் குழு.,, விருதுகள் என்று வழங்கிய தமிழ் சங்கத்தின் விருது பட்டியல் சமீபமாய் குறிப்பிடத்தக்கதாக இல்லை என்னுடைய முந்திய விமர்சனத்தையே மீண்டும் வருத்தத்துடன் வைக்கிறேன். தமிழ் சங்கத்தினர் விரோதமான எடுத்துக் கொள்ளாமல் என்னுடைய சிறு கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதை தமிழ்ச்சங்கத்தினுடைய தலைவர் செயலாளர் போன்றவர்கள் கவனிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மோசமாக எதிர்வினை தருவது, விரோதமாக பார்ப்பது என்ற போக்கைத் தமிழ்ச்சங்க நண்பர்கள் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
வேறு பதிப்பக விற்பனை பற்றி அதிகம் எழுதவில்லை இங்கு.
உள்ளூர் படைப்பாளிகள் நூல்களுக்காக தனியிடம் இல்லை. ஆனால் கவியுழவன் அரங்கத்தில் பலர் வைத்திருந்தார்கள்.
அதுவும் கவனம் பெறவில்லை என்பது வருத்தமே
புத்தக கண்காட்சியில் சனி ஞாயிறுகளில் தென்பட்ட கூட்டமும் புத்தகங்கள் வாங்கியதும் ஆறுதலாக இருந்தது.. இந்த ஆண்டு கொஞ்சம் பயம் இருந்து கொண்டிருக்கிறது காரணம் சென்னை புத்தகக் கண்காட்சி விற்பனை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பது தான் ஆனால் திருப்பூர் ஏமாற்றவில்லை
சிந்து வெளி அரங்கம், தமிழக அரசின் பல துறை அரங்கங்களால் பல பிரிவினரும் பங்கு பெற்றார்கள்.
மேடைப்பேச்சின் அரசியல் சார்ந்து தள்ளுமுள்ளு, சர்ச்சைகள் இருந்தன.
கண்காட்சி பற்ரி நான் எழுதிய சில கருத்ஹ்டுக்களை பலர் பகிர்ந்து கொண்டார்கள். சிலர் எரிச்சல்பட்டார்கள்.
பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் ஓரளவு ஆறுதல். பெற்றார்கள் என்று சொல்ல வேண்டும். தொடர்ந்த உழைப்பு தொடங்க செயல்பாடுகள் சார்ந்து திருப்பூர் புத்தக கண்காட்சி வெற்றிக்கு உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்
நேர்காணல் - எழுத்தாளர் – சுப்ரபாரதிமணியன்
( கண்டவர் செ. சுரேஷ் , சென்னை 8778970794 )
1. ேீங்கள் எழுத்துத் துறைக்கு வந்தது எப்படி?அதற்கான அகச்சூழல்
புைச்சூழல் எப்படி அறமந்தது?
ோன் அடிப்பறையில் ஒரு நேசவாளக் குடும்பத்றத நசர்ந்தவன். ோன்
எழுத்துத் துறைக்கு வந்தது ஒரு தற்நசயலான ஒன்றுதான். முதலில் பள்ளிப்
பருவங்களில் ராணி, குமுதம் நபான்ை வார இதழ்கறள வாசிக்கத்
நதாைங்கிநனன். ோன் நகாறவ பிஎஸ்ஜி கறலக் கல்லூாியில் கணிதவியல்
படித்து நகாண்டிருந்த காலத்தில், மாணவர்களுக்காக கல்லூாி தமிழ்த்துறை புது
நவள்ளம் என்ை ஒரு பத்திாிறகறய ேைத்தி வந்தது. இப்பத்திாிறகயில்
இருந்துதான் எனக்கு எழுத்திற்கான அைிமுகம் கிறைத்தது. எங்கள் கல்லூாியில்
திருக்குைள் அத்தியாயம் என்ை ஒரு அறமப்பு ேிறுவப்பட்ைது. அவற்ைில்
ஒவ்நவாரு மாணவரும் திருக்குைளில் ஒவ்நவாரு அத்தியாயம் பற்ைிய தங்களது
கருத்துக்கறள கூை நவண்டும். இந்த அறமப்பில் ஆண்டுநதாறும் பாிசு
தருவார்கள். எனக்கும் ஒரு ஆண்டு பாிசு கிறைத்தது. பின்னர் நஜயகாந்தனின்
எழுத்துக்கள் என்றன மிகவும் கவர்ந்தன. தினமும் ோம் சந்திக்கும் மனிதர்களின்
வாழ்வியறலயும் விளிம்பு ேிறல மக்கறளயும் பைம்பிடித்து காட்டும் அவரது
பறைப்புகள் என்றன நமலும் வாசிக்கத் தூண்டியது. நஜயகாந்தன் அவர்கள்
திருப்பூர் வரும் சமயங்களில் அவரது கூட்ைங்களில் பங்நகற்க எனக்கு வாய்ப்பு
கிறைத்தது. அவரது கர்ஜறனயான நபச்சாற்ைல் எனக்குள் ஒரு மிகப்நபாிய
தாக்கத்றத ஏற்படுத்தின. ோன் முதுேிறலக் கணிதவியல் படிக்கும் நபாது என்
பள்ளி கால ேண்பர்கறள மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிறைத்தது.
அவர்கநளல்லாம் உயர்ேிறலப் பள்ளியுைன் படிப்றப ேிறுத்திக் நகாண்டு
பனியன் கம்நபனிக்கு பணிக்கு நசல்லத் நதாைங்கிவிட்ைார்கள். அப்நபாழுது
அவர்கள் குைிஞ்சி என்ை ஒரு றகநயழுத்துப் பத்திாிறக ேைத்தி வந்தனர்.
அப்பத்திாிறகயில் கவிறத எழுத எனக்கு வாய்ப்பு கிறைத்தது. ோன் எழுத்துத்
துறைக்கு வந்ததற்கான ஆரம்பமாகவும் அறமந்தது.
2. புத்துமண் ோவல் உருவான பின்னணி என்ன?
ோன் திருப்பூறரச் நசர்ந்தவன் என்பதால் திருப்பூாில் ேைக்கும்
சுற்றுச்சூழல் அவலங்கறள கவனிக்க நதாைங்கிநனன். ேதி மாசுபாடு, ேிலத்தடி
ேீர் மாசுபாடு, மண் மாசுபாடு நபான்ைறவகள் திருப்பூாில் ேிகழ்ந்த வண்ணம்
இருந்தன. அங்கு ேிறைய தன்னார்வ குழுக்கள் இச்சுற்றுச்சூழல் சீர்நகடு குைித்து
பலவிதமான விமர்சனங்கறள முன் றவத்தார்கள். இருப்பினும் நபரு
ேிறுவனங்களின் கார்ப்பநரட் முதலாளிகளிைம் அவர்களுறைய விமர்சனங்கள்
எடுபைவில்றல. பின்னர் ோனும் சில தன்னார்வ நதாண்டு அறமப்புகளுைன்
நசர்ந்து பயணிக்க நதாைங்கிநனன். நபரணி, கருத்தரங்குகள் ேைத்துவது, சில
எழுத்தாளர்கறள அறழத்து கூட்ைங்கள் ேிகழ்த்துவது நபான்ை பணிகறள
நசய்து வந்நதன். பின்னர் ஒரு எட்டு ஆண்டுகள் இறைநவளி எடுத்து
றைதராபாத்தில் உள்ள நதாறலத் நதாைர்பு அலுவலகத்தில் பணி நசய்து
வந்நதன். பின்னர் திருப்பூருக்கு மாறுதல் ஆகி வந்த பிைகு திருப்பூாில் நபரும்
மாற்ைங்கறள ோன் கண்நைன். என் ேண்பர்கள் சிலர் பின்னலாறை ேிறுவன
ஏற்றுமதியில் நகாடி கட்டி பைந்தார்கள். திருப்பூறர நபாறுத்தவறர அந்ேிய
நசலவாணி அன்று 25 ஆயிரம் நகாடி வறர இருந்தது. இன்று அது 50,000 நகாடி
எட்டி உள்ளது. இருப்பினும் 50,000 நகாடிக்கு பின்னால் நபருவாாியான
சுற்றுச்சூழல் சார்ந்த நபரழிவுகறள எதிர் நகாள்ள நவண்டி இருந்தது.
அவற்ைின் சாயக்கழிவுகள் மாசுபாடு, வீட்டு கழிவுகள் மாசுபாடு ஆகியறவ
நோய்யல் ேதியிநல கலந்து ேதி மாசறைந்து விட்ைது. இது தவிர குழந்றத
நதாழிலாளர்களும் அதிகளவில் பல ேிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ைனர்.
இவற்றைநயல்லாம் நசர்த்து எழுதத் தூண்டியதுதான் சாயத்திறர ோவல்.
முதன்முதலாக என்னுறைய சாயத்திறர ோவல் எழுதி நவளிவரும்நபாது
பின்னலாறை ேிறுவன முதலாளிகளிைமிருந்து மிகப்நபாிய எதிர்ப்பு எனக்கு
எழுந்தது. இவ்வாைாக சூழலியல் ஆர்வலர்கள் எதிர்நகாள்ளும் சிக்கல்கறள ஒரு
ோவலாக பறைக்க நவண்டும் என்ை எண்ணம் நதான்ைியது. அவ்வறகயில்
உருவானநத இந்த புத்துமண் ோவல்.
3. பறைப்பிலக்கியம் வழியாக சுற்றுச்சூழல் குைித்து உறரயாடுதலின்
அவசியம் என்ன?
கரூாில் சுப்பிரமணியம் என்ை ஒரு சூழலியல் ஆர்வலர் இருந்தார். அவர்
சுற்றுச்சூழலுக்கு எதிராக நசயல்படுவர்கறள பற்ைி தனது பத்திாிறககளில் எழுதி
வந்தார். அவர் அதனால் பல சிக்கல்கறள எதிர்நகாள்ள நவண்டி இருந்தது.
அவருறைய இைப்பிற்கு பின்னர், அவறரப் பற்ைிய குைிப்புகறள நசர்த்து
எழுதப்பட்ைது தான் இந்த புத்து மண் ோவல். இது முழுக்க முழுக்க ஒரு உண்றம
சம்பவம். ஒரு சுற்றுச்சூழறலக் காப்பாற்ை ேிறனக்கும் சூழலியல் ஆர்வலர், அவர்
சந்திக்கும் இன்னல்கள் நபான்ைவற்றை இப்புதினத்தில் நதாகுத்து
எடுத்துறரக்கப்பட்டுள்ளது. திருப்பூாில் சூழலியல் சார்ந்த பாதிப்புகள்
ஆங்காங்நக ேிகழ்ந்த வண்ணம் இருந்தது. என்னுறைய கனவு பத்திாிறகயில்
இது நதாைர்பான பல்நவறு கட்டுறரகறள ோன் எழுதியுள்நளன். கட்டுறர
வடிவில் எழுதப்படும் பறைப்புகள் இலக்கிய மாணவர்கள் மற்றும் இலக்கிய
வாசகர்கள் மட்டுநம படிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் இதுநபால்
சுற்றுச்சூழல் நதாைர்பான சிக்கல்கறள ஒரு புதினமாக பறைத்தால் அறனவரும்
படிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பநத என்னுறைய கருத்து. அதனாநலநய
என்னுறைய பறைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்த பறைப்புகளாக சாயத்திறர,
புத்துமண், நவப்பம் நபான்ைறவ புதினங்களாக நவளிவந்தன. றேஜீாியாவில்
நகன் சநரா விவா என்ை ஒருவர் விவசாய ேிலங்களில் வாயுப் பழுப்புகள்
புறதப்பதற்கு எதிராக நபரும் நபாராட்ைங்கறள எதிர்நகாண்ை சுற்றுச்சூழல்
நபாராளி. இவற்ைிற்நகதிரான நபாராட்ைத்தில் அவர் நகால்லப்பட்ைார்.
இதுநபான்று பல சுற்றுச்சூழல் நபாராளிகள் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான
நபாராட்ைங்களில் தன் இன்னுயிர்கறள ேீக்கின்ைனர். இதுநபான்ை
சுற்றுச்சூழல் நபாராளிகறள யாரும் சாிவர கண்டுநகாள்வதில்றல. ஆறகயால்
என்னுறைய ோவல்கள் இதுநபான்ை கதாபாத்திரங்கறள றமயமாக றவத்து
பறைக்கும் நபாது, அவற்றை படிக்கும் வாசகர்களுக்கு இந்த உண்றம
சம்பவங்கள் குைித்த நசய்திகறள அைிய வாய்ப்புள்ளது என்று ோன்
ேிறனக்கிநைன். ஒரு எழுத்தாளர் என்ை முறையில் இது நபான்ை நபாராளிகறள
கறதமாந்தர்களாக சித்தாித்து என் பறைப்புகளில் நகாண்டு நசல்வறத ோன்
நபருறமயாக கருதுகிநைன்.
4. புத்துமண் ோவலில் ‘மண்’ பாதுகாப்பு குைித்து அதிகம் நபசுகிைீர்கள்
ஏன்?
கரூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஆற்றுமணல் அதிகளவில்
அள்ளப்படுகிைது. ஆறுகநள ேீறரப் பாதுகாத்து விவசாயம் நபான்ை
நதறவகளுக்கு பயன்படுத்தப்படுகிைது. ஆற்றுமணல் அள்ளப்படுவதால்
ஆறுகள் ேீறர உைிஞ்சி நதக்கும் தன்றமறய இழக்கிைது. புத்துமண் ோவலில்
வீரண்ணன் எனும் கதாபாத்திரம் மணல் திருட்டுக்கு எதிராக நபாராடி, மணல்
நகாள்றளக்காரர்களால் நகால்லப்படுவான். இந்த சம்பவமும், கதாபாத்திரமும்
கரூாில் ேைந்த ஒரு உண்றம சம்பவம். இதுநபான்ை நபாராளிகள் மட்டுமல்லாது
மணல் நகாள்றளறய தடுக்கும் பல நேர்றமயான அரசு அதிகாாிகளும்
நகால்லப்படுகிைார்கள். ஆதலால் இவற்றை றமயமாக றவத்நத இப்புதினம்
எழுதப்பட்ைது.
5. புத்துமண் ோவலில் உங்களுக்கு கிறைத்த மைக்கமுடியாத
பின்னூட்ைம் என்ன?
புத்துமண் ோவல் நவளிவந்த பின்னர் ேிறைய வாசகர்கள் என்றன
நதாைர்பு நகாண்டு தங்கள் கருத்துக்கறள நதாிவித்தனர். அவற்ைில் குைிப்பாக
சாகித்ய அகாைமியின் முன்னாள் தறலவர் ைாக்ைர்.ராஜமுத்து அவர்கள்
இந்ோவல் குைித்து தன் கட்டுறரயில் குைிப்பிட்டு எழுதியுள்ளார். அது
மட்டுமல்லாது பல கல்லூாிகள், பல்கறலக்கழகங்களில் இந்த புத்துமண் ோவல்
பாைமாக றவத்திருப்பதநத இதன் சிைப்பு. அதுமட்டுமன்ைி ேிறையப் பிரதிகள்
விற்பறனயானது. இறவ அறனத்றதயும் சிைந்த பின்னூட்ைமாகநவ ோன்
கருதுகிநைன்.
6. பறைப்பிற்கும் ேறைமுறைக்கும் இறையில் உள்ள நவறுபாடுகள்
பற்ைிய உங்களது கருத்து என்ன?
எந்த ஒரு பறைப்பும் உண்றம சம்பவங்கள் இல்லாமல் நவறும்
புறனவுகறள றவத்து உருவாக்க முடியாது. அவற்ைில் எத்தறன சதவீதம்
உண்றம இருக்கிைது? எத்தறன சதவீதம் புறனவு இருக்கிைது? என்பறத
மட்டுநம பார்க்க நவண்டும். எதார்த்தம் மட்டுநம ஒரு மிகப்நபாிய கறல
வடிவமாகாது. என்னுறைய ோவல்கள் அறனத்துநம 99 சதவீதம் உண்றமக்
கறதறயத் தழுவி எழுதப்பட்ைது. இவ்வாறு பறைப்பிற்கும் ேறைமுறைக்கும்
உள்ள இறைநவளி குறையும்நபாது அந்த பறைப்பினுறைய வலிறம அதிகமாக
இருக்கும்.
Subrabharathimanian, Tiruppur
0 சுப்ர பாரதி மணியன் : 25/10/1955 . / 69
வெளியாகி உள்ள நூல்கள் :
115 நூல்கள்
/ 27 நாவல்கள் / 19 சிறுகதை தொகுப்புகள் / 3 குறுநாவல்கள் தொகுப்புகள் / 25 கட்டுரைத் தொகுப்புகள்/, வெளிநாட்டு பயண அனுபவம் நூல்கள் மற்றும் திரைப்பட நூல்கள்.( 100வது நூல் : சிலுவை நாவல் 1000 பக்கங்கள். ரூ1200 )
பரிசுகள் :
0 சிறந்த சிறுகதைக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா பரிசு
0 ”சாயத்திரை “ நாவலுக்காக தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு 1998
0 தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது 2016
0 தமிழக அரசின் மொழி பெயர்ப்பாளர் விருது 2022
0 குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு பெற்று இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம்
0 எழுத்து அறக்கட்டளையின் சிறந்த நாவல் விருது ஒரு லட்சம் ரூபாய் 2021
0 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது 2021
0 கோவை கஸ்தூரி சீனிவாச அறக்கட்டளையின் சிறந்த நாவலுக்கான பரிசு ” பிணங்களின் முகங்கள்” நாவலுக்காக
0 ஜெயந்தன் நினைவு பரிசு சிறந்த நாவலுக்காக நீர் துளிகள் 0 சின்னப்ப பாரதி இலக்கிய விருது
0 திசையட்டும் நல்லி மொழிபெயர்ப்பு விருது
எஸ் ஆர் வி திருச்சி மற்றும் பாவை ராசிபுரம் நிறுவனங்களின் இலக்கிய விருதுகள் 2022., 2023
0 தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது ரூபாய் 2 லட்சம் தொகையுடன்
1 0 சென்னை தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது சிலுவை நாவலுக்காக ரூபாய் 1 லட்சம் தொகையுடன்
0 பொறுப்பு:
0 சாகித்ய அகடமி ஆலோசனைக் குழு உறுப்பினர் 2008 - 12
0 தென்னிந்திய திரைப்படசங்கங்களின் கூட்டமைப்ப்பு பிராந்திய குழு உறுப்பினர்
மொழிபெயர்ப்பு:
0 ” சாயத்திரை “ நாவல் ஆங்கிலத்திலும், ஹிந்தியில் மலையாளம் கன்னடம் வங்காளத்திலும் மொழி பெயர்ப்பு உள்ளது
0 ஹிந்தியில் ஐந்து நாவல்களும்
மலையாளத்தில் ஐந்து நாவல்களும் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன
ஆங்கிலத்தில் 20 நூல்கள் வெளியாகி இருக்கின்றன மொழிபெயர்ப்பில் பல இந்திய மொழிகளிலும்.
0 படைப்புகள் பல பல்கலைக்கிடங்களில் பாடநூல் உள்ளன 0 மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் மற்றும் இந்திய மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
சுற்றுச்சூழல் நூல்கள் :
நாவல்கள் :
0 சாயத் திரை, நீர்த்ர்த்துளி, புத்துமண்
0 கட்டுரைத் தொகுப்புகள் :
தண்ணீர் யுத்தம், சூழல் அறம், நீர்ப்பாலை, மேக வெடிப்பு, சிவப்புப்பட்டியல், மறைந்து வரும் மரங்கள் , மூன்றாம் உலகப்போர் , பூமிக்கு மனிதன் தலைவனா, பூமிக்குத் தீ வைத்தோம், பசுமை அரசியல் உட்பட 12 கட்டுரைத் தொகுப்புகள்
இதழியல் :
0 கனவு இலக்கியக் காலாண்டு இதழை 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
0 கனவு திரைப்பட இயக்கம்,,
0 தாய் தமிழ் பள்ளி பாண்டியன் நகர் திருப்பூர் உடன் இணைந்து செயல்பாடு 30 ஆண்டுகளாய்.
திரைநாவல்கள் :
0 திரைக்கதை நூல்கள் 9 வெளியிட்டுள்ளார் . அவற்றில் 70 திரைக்கதைகள் உள்ளன.
திரைநாவல் என்ற புதிய நாவல் முயற்சிகளில் 10 நாவல்களை எழுதியுள்ளார்.
குறும்படங்கள்:
0
சுப்ரபாரதி மணியன் இயக்கிய குறும்படம் ” நாணல் “( அவரின் பாதுகாப்பு என்ற ஆனந்தவிகடன் சிறுகதை )
இவரின் கதைகள் திருவிழா , சோத்துப்பொட்டலம், சுமங்கலி மாற்றம் உட்பட 10 குறும்படங்களாக வெளியாகி இருக்கிறன.. ” இன்று நேற்று நாளை “, அயலான் “ இயக்குனர் ஆர். இரவிக்குமர்ர் இயக்கிய சுமங்கலி உட்பட பல இயக்குனர்களின் இயக்கத்தில் குறும்படங்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு பயணங்கள்:
0 : இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இலங்கை, துபாய் சார்ஜா , இஸ்ரேல் பாலஸ்தீனம், ஜோர்டான், வியட்நாம், இலங்கை, ,எகிப்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)