சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 3 டிசம்பர், 2025
Mannudam November issue
இறப்பிற்குப் பின் மனிதன்
( சூழலைப் பாதுகாக்க......)சுப்ரபாரதிமணியன்
என்னுடைய சிறுகதைகளில் ஒன்று தியானம் என்பதாகும். அது தாமரை இதழில் வந்தது.
தனிமையில் முதுமையில் கஷ்டப்படும் ஒருவரை பற்றி.. தன்னுடைய சாவும் தான் அடக்கம் செய்யப்படுவதும் கௌரவமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பார். பலருக்கும் சொல்வார். கல்யாண முதல் சாவு வரை காரியங்களை கவனித்துக் கொள்ளும் ஒரு நிறுவனத்திற்கு கடிதம் எழுதுவார் .என் சாவுக்கு பின்னால் த்ன்னுடைய உடல் எப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை பற்றி அதில் எழுதுவார். தன்னுடைய சாவுக்கு பின்னால் தன்னுடைய உடல் கேவலப்பட்டு போய்விடக்கூடாது முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அதற்காக பணம் சேர்த்து வைத்து தகவல் சொல்லுவார்.. இப்படி பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது
இப்போதெல்லாம் எல்லா ஊர்களிலும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் சில நிறுவனங்கள் வந்திருக்கின்றன. தாராள மனப்பான்மையுடன் அவர்கள் செயல்படுகின்றன.. மத வேறுபாடு இல்லாமல் ஜாதி வேறுபாடு இல்லாமல் இறந்த மனிதர்களின் பிணங்களை சரியாக அடக்கம் செய்ய அவை உதவுகின்றன இதை பெரிய சேவை என்று தான் சொல்லலாம்.
ஏனென்றால் யாரும் கவனிக்கப்படாமல் கிடக்கும் பிணங்கள். அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள். பரவும் அபாயம் இதிலிருந்து உடல்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை செய்யும் நிறுவனங்களைப் பாராட்ட வேண்டும்.
இப்போதெல்லாம் புதை குழிகளில் புதைக்க சரியான ஆள் கிடைப்பதில்லை. பழைய அரசாங்க கல்லறைகள் மூடப்படுகின்றன அல்லது அவை மின் மயான்ங்களாக மாற்றப்படுகின்றன.. கல்லறைகளில் புதைக்க ஆள் கிடைப்பதில்லை அல்லது நிறைய பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.. அதை மீறி மென்மையான தீர்ப்பு கொண்டு மின் மயானத்திற்கு கொண்டு சென்று உடலை சாம்பல் ஆக்கி விடக்கூடாது புதைக்கத்தான் வேண்டும் என்று விரும்புகிற பழைய தலைமுறை இப்போதும் இருக்கிறார்கள்.
என்னுடைய சகோதரர் ஒருவர் அப்படித்தான் தன் இறுதி ஆசையாக தான் மின் மயானத்தில் எரிக்கப்படக்கூடாது புதைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் அவரின் ஆசையை நிறைவேற்ற நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது. நகரின் மத்தியில் இருந்த அரசாங்க்க் கல்லறைக்கு போய் ஆட்களை பிடிப்பது சிரமமாக இருந்தது, பிறகு அதன்பின் வந்த சடங்களுக்கும் அங்கு செல்வது அங்கு இருக்கிற ஆட்களை பயன்படுத்துவது என்பதில் பல சிரமங்கள் இருந்தன, அது எல்லாம் ஒரு சிறுகதையாக்க் கூட எழுதலாம்,
திருப்பூரில் நான்கு மின் மயானங்கள் வந்துவிட்டன முதலில் வந்த ஒரு அரிமா சங்கத்தின் மின்மயானத் துவக்க விழாவில் வைரமுத்து வந்து மரணம் பற்றி ஒரு கவிதை பாடினார். அது பற்றிப் பேசினார் அது கல்வெட்டில் இடம்பெறு வகையில் முக்கியமான நிகழ்ச்சியாக மாறிவிட்ட.து. அந்த காணொளி பல லட்சம் மக்களை கவர்ந்திருக்கிறது. மரணம் பற்றிய வைரமுத்துவின் கவிதையும்..
.. இப்போது திருப்பூரில் நான்கு மின்மயானங்கள் வந்துவிட்டன. ஒரு இலக்கிய கூட்டத்தில் பேசிய ஒரு முக்கியமானவர் அவர் அதைச் சார்ந்திருக்கிறார். மின்மயானம் நான்கு உலைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றில் இரண்டிற்கு பிணங்கள் வருவதில்லை அதை கவனிக்க முடியுமா கேட்டுக் கொண்டார். முன் வரிசையில் இருந்த நான் வாய் விட்டு சிரித்து விட்டேன்.. அது அவருக்கு எரிச்சல் ஊட்டியது பல லட்சம் பணம் முதலீடு செய்து மின்மயானங்களை போட்டு இருக்கிறோம் ஆனால் அவை பயன்பாட்டுக்கு இல்லாமல் சும்மா கிடக்கின்றன அதனால் தான் என்னுடைய வேண்டுகோளை வைத்தேன். சிரிக்கிறீர்கள் இது சிரிப்பதற்கான விஷயங்களை என்று சொன்னார்... அவருடைய கவலை அவருக்கு
. கொரோனா காலத்தில் இந்த மின்மயானங்கள் எப்படி பயன்பட்டது என்பது நமக்கு தெரியும் அப்போது அந்த பிணங்களின் மதிப்பு என்ன என்பதும் நமக்குத் தெரியும். பிணங்கள் என்றால் அருவருப்பு தான் .ஆனால் கொரோனா காலத்து பிணங்கள் இன்னும் அருவருப்பையும் பக்கத்தில் நெருங்க முடியாத படி செய்துவிட்டன.
மின் மயானம் சென்று. திரும்புகிறவர்கள் அவசியம் சாம்பலைக் கேட்கிறார்கள் வீட்டு சடங்குகளுக்கும் பின்னால் அதை நதிகளில் கரைக்கவும் தேவையாக இருக்கின்றது. பல நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக அந்த சாம்பல் இருக்கிறது .ஆனால் அப்படி பிணங்களின் சாம்பலை நதிகளை கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு பற்றியும் பல விஷயங்கள் உள்ளன. எப்படி இருந்தாலும் பிணங்களை அடக்கம் செய்வதற்கான கல்லறைத் தோட்டங்கள் குறைந்து விட்டன பல பழைய கல்லறை தோட்டங்களை இடித்து விட்டு அங்கேயே மீண்டும் மீண்டும் படங்களை புதைக்கிறார்கள். இதெல்லாம் தேவையா என்று பெரும்பான்மையோர் மின் மயானத்திற்கு சென்று விடுகிறார்கள் ஆனால் பிணங்களை எரிப்பதில் மற்றும் புதைப்பதில் உள்ள சுற்றுச்சூழல் சிக்கல்கள் நம்மை சிரமப்படுத்தி கொண்டே இருக்கின்றன.
. இப்போது இங்கிலாந்து போன்ற நாடுகளில் பிணங்களை அடக்கம் செய்யும் முறை பற்றி கேட்டு கீற்று இணையதளத்தில் வந்த செய்தி ஆச்சரியப்படுத்தியது. இந்தியாவிலும் இதுபோன்று பிணங்களை அடக்கம் செய்யும் முறைகள் வந்தால் ஆறுதலாக இருக்கும். வெட்டியான்களைத் தேடி போக வேண்டாம். ஒரு கைப்பிடி சாம்பல் வேண்டும் என்று சில ஊழியரிடம் கெஞ்ச வேண்டாம். சாவுச் சடங்குகள் இன்னும் கொஞ்சம் சுலபமாகி விடும் பிணங்களை மண்ணிலிருந்து போக்குவதற்கு.
இறந்தவர் உடலை நீர் வழி எரியூட்டும் முறை உலகம் முழுவதும் இப்போது பிரபலமாகி வருகிறது. இறந்த பின் தன் உடல் எரிக்கப்படுவதை அல்லது பூச்சிகளால் அரிக்கப்படும் கல்லறைக்குள் புதைக்கப்படுவதை விரும்பாதவர்களுக்கு இந்த நீர் வழி சவ அடக்கமுறை ஒரு மாற்று வழியாக அமையும் என்று நம்பப்படுகிறது.
ஒரு காரக்கரைசல் மூலம் வேதியியல் முறையில் மாற்றப்பட்ட, 160 டிகிரி வெப்பநிலையில் சூடாக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி இறந்த உடலை ஒரு பையில் வைத்து கரைக்கும் செயல்முறை இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இப்போது நடைமுறையில் உள்ளது. இது பைக்குள் எரியூட்டுதல் முறை என்று அழைக்கப்படுகிறது. சடலங்களை அகற்றுவதற்கான திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்கள், கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த முறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. 2022ல் காலமான தென்னாப்பிரிக்காவின் ஆர்ச் பிஷப் டெஸ்மன் டூட்டூ அவர்கள் தான் இறந்த பிறகு தன் உடல், சூழலிற்கு நட்புடைய விதத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கேற்ப, அவரது இறுதிச்சடங்கின்போது இந்த முறை உலகில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.
என்றாலும் சடங்கின் முடிவில் உருவாகும் நீர்க்கரைசல் கழிவுநீருடன் கலக்க பாதுகாப்பானதா என்பதை அறிவதற்காக பரிசோதனைகள் நடத்தப்படும் சில இடங்களில் மட்டுமே இந்த முறை இப்போது நடைமுறையில் உள்ளது. இம்முறையில் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் இறுதிச் சடங்குகள் மூலம் கார்பன் உமிழ்வினால் ஏற்படும் கார்பன் கால்தடத்தை விட 50% குறைவு. முடிவில் இறந்தவரின் எலும்புகள் மட்டுமே மிஞ்சுகின்றன.
சாதாரண முறையில் எரிக்கப்படும்போது கிடைக்கும் சாம்பலைப் போல இதிலும் அடக்கம் முடிந்தபின் மிச்சமிருக்கும் எலும்புகள் பொடியாக்கப்பட்டு கிடைக்கும் சாம்பல் இறந்தவருடைய குடும்பத்தாரிடம் கொடுக்கப்படுகிறது. இது இறந்த உடலிற்கும், சூழலிற்கும் உகந்தது என்று சூழலியலாளர்களால் வர்ணிக்கப்படுகிறது. வட கிழக்கு இங்கிலாந்தில் ஜூலியன் அட்கின்சன் என்ற முன்னாள் காஃபின் தயாரிப்பாளரால் இதற்கு உரிய உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் இம்முறையை இறுதிச் சடங்குகளுக்கான கோ-ஆப் என்ற நிறுவனம் செயல்படுத்துகிறது. அப்பகுதியில் இருக்கும் நார்த்தம்ப்ரியன் நீர் மேலாண்மை அமைப்பு இந்த முறையின் முடிவில் உருவாகும் நீரை கழிவுநீருடன் கலக்க அனுமதி அளித்துள்ளது. அங்கு தொழிற்சாலைகளில் வணிகரீதியில் உருவாகும் கழிவுநீரை அகற்றுவதற்காக கொடுக்கப்படுவது போன்ற அனுமதியே இதற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் உருவாகும் கழிவுநீர் சாதாரண கழிவுநீரின் சுத்திகரிப்பை பாதிக்கவில்லை.. பலர் மரணத்திற்குப் பிறகும் கார்பன் உமிழ்வைக் குறைக்க விரும்புகின்றனர். இப்போது நடைமுறையில் பின்பற்றப்படும் எரியூட்டல் முறையில் ஒருவரின் உடல் எரிக்கப்படும்போது 245 கிலோகிராம் கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது. இதன் வருடாந்திர அளவு இங்கிலாந்தில் ஆண்டிற்கு 115,150 டன். இது 65,000 வீடுகளுக்கு வழங்கத் தேவையான மின்னாற்றலிற்கு சமமான அளவு என்று சி டி எஸ் என்ற எரியூட்டல் தொடர்பான நிறுவனம் கூறுகிறது. சாதாரண முறையில் நடைபெறுவது போலவே இந்த முறையிலும் தொடக்கத்தில் சடங்குகள் சவப்பெட்டியில் வைத்து நடத்தப்படுகின்றன.
ஆனால் நீர் வழி அடக்கத்தில் சடலம் ஒரு கம்பளிப் போர்வையால் மூடப்பட்டு சோள ஸ்டார்ச்சில் இருந்து தயாரிக்கப்பட்ட மக்கக்கூடிய ஒரு பையில் வைக்கப்படுகிறது. இது பிறகு 95% நீர் மற்றும் 5% பொட்டாசியம் ஹைட்ராக்சைடு நிரம்பிய அறையில் வைக்கப்பட்டு 160 டிகிரிக்கு சூடுபடுத்தப்படுகிறது. நான்கு மணி நேரம் கழித்து எலும்புகள் தவிர மற்ற பாகங்கள் இருந்த இடம் தெரியாமல் கரைந்திருக்கும். எல்லாம் முடிந்து கடைசியில் கிடைக்கும் கரைசலின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
"சடலங்களை ஆரோக்கியம், நடைமுறை சாத்தியம், மனிதாபிமான முறையில் அகற்ற உதவும் முறைகளைக் கண்டறிய பல உலக நாடுகள் முயன்று வருகின்றன. இதில் இந்த முறை குறிப்பிடத்தக்கது” என்று டரம் பல்கலைக்கழக இறையியல் மற்றும் மதம் தொடர்பான துறைகளின் பேராசிரியர் டக்லஸ் டேவிஸ் கூறுகிறார்.
1960களில் உடலை அடக்கம் செய்யும் முறை பிரபலமாக இருந்தது. இது இருபதாம் நூற்றாண்டில் மாறியது. எரியூட்டல் முறை பலராலும் விரும்பப்பட்டது. நீர் வழி அடக்கம் நடைபெறும் இடத்தின் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டிய ரஸல் டி டேவிஸின் “ஆண்டுகள் கணக்கில்” என்ற 2019 பி பி சி குறுந்தொடருக்குப் பின் இந்த முறை மேலும் புகழ் பெறத் தொடங்கியது. மரணமடைந்த பிறகு இந்த முறையில் இறந்தவரின் உடலுக்கு சம்பவிக்கும் நிகழ்வுகளை இறுதிவரைக் காண முடியும். உடல் தசைகளும் மற்ற பகுதிகளும் ஒன்றும் இல்லாமல் கரைவதை பையில் நடக்கும் இந்த உடல் அடக்கம் காட்டுகிறது.
வாழ்ந்து முடிந்த பின்னரும் மனிதன் சூழலைப் பாதுகாக்க எவ்வாறு உதவலாம் என்பதை இந்த முறை உணர்த்துகிறது.
0

