சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 11 நவம்பர், 2025

பள்ளிக்கூடம் போகலாமா? என்னும் திரை நாவல் பேரா. கருநல் . பன்னீர்செல்வம்* ஈரோடு ( அரசு கலைக்கல்லூரி , ஈரோடு ) 0 கதாவிருது பெற்ற படைப்பாளர், சுப்ரபாரதிமணியன் அவர்களின் "பள்ளிக்கூடம் போகலாமா? என்னும் திரை நாவல் (புதினம்) வெளியீடு ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. ஸ்டாலின் குணசேகரன் முன்னிலை வகித்தார்.என் சி பி எச் பதிப்பகத்தின் பொன் விழா சாதனைகளைப் பட்டியலிட்டார் *அவ்விழாவில் 50 நூல்கள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று தான் "பள்ளிக்கூடம் போகலாமா?"* சுப்ரபாரதிமணியன் திரை நாவல் என்ற வடிவம் பற்றியும் திரைத்துறையும் ஆட்சி அதிகாரம் பற்றியும் பேசினார். "பள்ளிக்கூடம் போகலாமா? *60 பக்க குறும் புதினம். அழுத்தமான, வலி நிறைந்த வாழ்வியலைப் பேசுகிறது.* *நம்மில் பெரும்பாலோனோர் நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கிறோம்.* *அது குறித்து மனதில் பட்ட சொற்கற்களை எடுத்து உடனே வீசியும் விடுகிறோம். அதனால் பலர் மனம் புண்ணவதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.* *ஆனால், ஒரு படைப்பாளி அப்படிக் கடந்து போகிறவன் அல்ல. நாணயத்தின் மறுபக்கத்தைத் தடவிப்பார்த்து அதிலுள்ள மேடு பள்ளங்களை உணர்ந்து, அதை உரக்கச் சொல்பவனே படைப்பாளி ஆவான்!* *தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் வடமாநிலத் தொழிலாளர் வாழ்வியல் மிகவும் சிக்கல் நிறைந்தது என்பதை எத்தனை பேர் உணர்ந்துள்ளோம் என்பது தெரியவில்லை.* *நம்மவர்களின் சோம்பேறித்தனத்தாலும், வறட்டுப் பெருமையாலும் விட்ட இடத்தை, அவர்கள் இட்டு நிரப்பிக்கொண்டு உள்ளார்கள் என்பதுதான் உண்மை!* *வறுமைக்குப் பயந்து வந்த கடுமையான உழைப்பாளிகள் என்ற உண்மை ஒரு புறம் இருப்பினும், வடக்கே உள்ள சாதிக்கொடுமைகளுக்குப் பயந்து வந்தவர்கள் என்னும் உண்மைக்கு ஒளிக்கீற்றுப் பாய்ச்சி வெளிக்காட்டுகிறது இப்புதினம்.* *இந்த உண்மை புரியாத சில ஆசியர்களால் தமிழ்நாட்டில் கல்வி பெறுவதில் வடவர் குழந்தைகளுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் அவர்களது வாழ்க்கைப் போராட்டங்களையும் புதினம் வெளிப்படுத்தத் தவறவில்லை!* வட மாநிலத் தொழிலாளர்கள் குழந்தைகளின் படிப்பு சார்ந்தும் அவர்களுக்கு கல்வி தரப்படாமல் இருக்கும் தமிழக கல்விச்சூழல் பற்றிய விமர்சனமாகவும் இந்த புதினத்தை எடுத்துக் கொள்ளலாம்.அவர்களுக்கு கல்வி சென்றடையாத மொழி, கலாச்சார சிக்கல்கள் பற்றிப் பேசுகிறார். இதில் இடம் பெறும் வடமாநில பெண்களின் துயரங்களும் கல்வியில் அக்கறை கொண்ட இளைஞன் ஒருவனின் சில முயற்சிகளும் சொல்லப்பட்டுள்ளன *வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை, வடவர்களே வாய்ச்சான்றாகக் கூறும்படியாகயும் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் படைத்திருக்கும் இப்புதினத்தைப் படிக்க வேண்டும் அனைவரும்!* *-பேரா. கருநல் . பன்னீர்செல்வம்* ஈரோடு ( அரசு கலைக்கல்லூரி , ஈரோடு ) ( விலை ரூ 70 என் சி பி எச் பதிப்பகம் , சென்னை) *08-08-2025*