சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 3 டிசம்பர், 2025

1 கனவு, டாப் லைட் நூலகம் ஏற்பாடு செய்திருந்த கவிதை முகாம் :30/11/25 இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. 1.சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்பு செய்த “ சுற்றுச்சூழல் பிரார்த்தன” போப் ஆண்டவர் எழுதிய கால நிலை மாற்றம் பற்றிய ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு அது. 2. தூரிகை சின்னராஜ் எழுதிய “ இயற்கைக்கு செயற்கையாக சிரிக்கத் தெரியாது “ பிரபல ஓவியர்கள் பற்றியக் கட்டுரை இரண்டும் திருப்பூர் கனவு பதிப்பகம் வெளியீடு பல்லடம் எஸ் எல் முருகேசு இயக்கிய “ தண்ணி டம்ளர் “ குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது இது குடிக்கு எதிரானக் குரலை முன்வைத்தது.இவர் முன்பே முப்பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியவர். சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளை மையமாகக் கொண்ட பள்ளி மறு திறப்பு , இரக்கம் உள்ளிட்டவை அவை. 0 கவிதை வாசிப்பு.. கல்லூரி மாணவி சிந்து நதி கவிக்கோ ஆவணப் படம் திரையிடல். பல்லடம் புத்தகக் கண்காட்சி முத்திரை வெளியீடு இவற்றுடன் கவிதை முகாம் தொடங்கியது ஐந்து குறும்படங்களால் களை கட்டியது கவிதை முகாம் குறும்பட முகாம் ஆகிப் போனது 0 அமளி துமளி 2009ல் வெளிவந்த தாண்டவகோன் குறும்படம் திரையிடப்பட்டது. அவரின் குடும்ப உறுப்பினர்கள் நடிகர்கள் துள்ளல் மிகுந்த ஆரவாரமான படம் எங்கோ சென்றிருக்க வேண்டியவர் கொஞ்சம் பிசகி விட்டது இனி மான் வேகம் தான் 0 முகாமின் துவக்கமாக கவிக்கோ அப்துல்ரகுமான் பற்றிய ஒரு மணி நேர ஆவணப்படம் திரையிடப்பட்டது. Oபொதுவாக ஆவணப்படம் என்பது உண்மைத்தன்மையின் அடிப்படையில் எடுக்கப்படுவதால் அதில் சுவாரசியத்தை எதிர்பார்க்க முடியாது, சுருங்கச் சொன்னால் பார்வையாளர்களை அமைதியாக ஒரு மணி நேரம் உட்காரவைப்பது கடினம். ஆனால் விதிவிலக்காக கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய ஆவணப்படம் 51 நிமிடம் ஒடியதே தெரியாத அளவிற்கு நிறைய தகவல்களுடன் சுவராசியமாக சென்றது. எண்பதுகளில் பலரும் எழுத்தாளர்கள் சுஜாதா,சாண்டியல்யன் ஆகியோரது கதைகளில் கிறங்கிக் கிடந்த காலகட்டத்தில், கவிதை மூலமாக பலரையும் தன்வசப்படுத்தியவர் கவிக்கோ. அவரது எழுத்துக்களை வாசித்து அதன் மூலம் அவரை நேசித்தவர்கள் பலர் அவரைப்பற்றிய முழுமையாக அறிந்து கொள்ளும் நோக்கில் அரங்கில் குழுமியிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை ஆவணப்பட இயக்குனர் பிருந்தா சாரதி பூர்த்தி செய்திருந்தார்,கொஞ்சம் புகைப்படங்களும் அதை விடக் கொஞ்சமான வீடியோக்களையும் மட்டுமே வைத்து மிக நேர்த்தியாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.கீட்டத்தட்ட 35 பேரை பேட்டி எடுத்து அதனை அழகாக எடிட் செய்யப்பட்டுள்ளது, ஒரு சில வினாடிகளே கடந்து செல்லும் காட்சிகளாக இருந்தாலும் அதிலும் அலட்சியம் காட்டாமல் மிக நுணுக்கமாக அந்த காட்சிகளை பதிவு செய்யப்பட்டுள்ளன, ஒளிப்பதிவு பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், தெளிவாக, வித்தியாசமான பிரேம்களாக ரசிக்கும்படி வைத்திருந்தார்.ஆவணப்படத்தின் நிறைவில், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்,கவிஞர் ஜெயபாஸ்கரன் 'தாய்மொழி நாள்' என்ற தலைப்பில் மிக அருமையாக பேசினார், ஆவணப்படம் குறித்து பேசும் போது நம்மிடம் அதிகம் போனால் நுாறு ஆளுமைகள் இருப்பர், அவர்களைப் பற்றி பேச, எழுத ஆவணப்படம் எடுக்க இயலாமல் போவது வருத்தம் தருகிறது, அந்த வருத்தத்தை துடைக்கும் முயற்சியாக இந்த ஆவணப்படம் வந்திருப்பதாக குறிப்பிட்டார்,சிவகுமார் தலைமை தாங்கினார் அஜயன் பாலா வாழ்த்துரை வழங்கினார்.இயக்குனர் பிருந்தா சாரதி ஏற்புரை நிகழ்த்தினார் அவரது ஏற்புரையில் கவிக்கோ ஆவணப்படம் இரண்டாம் பகுதியும் வெளிவருகிறது என்றார். மற்றும் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களுடன் இணைந்து, தமிழ்க் கவிதை உலகில் முக்கியமான பங்களிப்பை செய்தவர். அவரது படைப்புகள் மூலம் தமிழ்க் கவிதை வடிவத்தை செழுமையாக்கினார். தமிழில் ஹைக்கூ, கஜல் போன்ற பிறமொழி இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்துவதிலும், பரப்புவதிலும் முக்கியப் பங்காற்றினார். அவரது முதல் கவிதைத் தொகுப்பான 'பால்வீதி' மூலம், உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழியாக கவிதையை வெளிப்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். 'ஆலாபனை' என்ற கவிதைத் தொகுப்புக்காக 1999 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், 2017 ஜூன் 2 அன்று காலமானார். அவரது நினைவாக, கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ பரிசுப் போட்டி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறந்த கவிஞர்களுக்கு பரிசு வழங்குவதற்கு தேவையான வைப்பு நிதிக்காக தனது வீட்டையே விற்கச் சொன்னார் ,சினிமாவிற்கு பாட்டெழுத பலமான அழைப்பு வந்தபோதும் மறுத்துவிட்டார் என்பது உள்ளீட்ட பல தகவல்கள் மூலம் கவிக்கோ மீதான மரியாதையை அதிகப்படுத்தும் அந்த ஆவணப்படம் அடுத்த முறை எங்காவது திரையிட்டால் அவசியம் பாருங்கள்..dinamalar ட மாலையில் நடைபெற்ற படிப்போம் பகிர்வோம் நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை அறிமுகம் செய்து பலர் பேசினர். நூலகர் இந்துமதி .. தூரிகை சின்ன ராஜ்.சிரிராம் ஆகியோரின் ஒருங்கிணைப்பு.