சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 11 நவம்பர், 2025
இந்த வாரம் பயணித்தவை:
1. உத்தரகோசமங்கை 2. திருப்புல்லாணி 3. ஏர்வாடி 4. மதுரை
1. மாணிக்கவாசகர் எனும் எழுத்தாளர்:
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.[1] இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இங்கு ஐந்தரை அடி உயர மரகதத் திருமேனியுடன் நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார்.[2][3] இது உலகின் பழமையான சிவன் கோயில் என்று கருதப்படுகிறது.[சான்று தேவை]
இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவனைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிடும் அளவுக்குப் பெருமை வாய்ந்த திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[4] தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை.
இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர்.
இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாற்றப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு./[சான்று தேவை]
இக்கோயிலில் மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் சன்னதிகளும், நடராஜர், சுயம்புலிங்கம், பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பாலபைரவர் துணைக்கோயில்களும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட அரசகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளன. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும்.
0
மாணிக்கவாசகர் (Manikkavacakar) சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் திருவாசகமும் திருக்கோவையாரும் ஆகும். இவர் பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டின் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார்.
மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (பொ.ஊ. 863–911) காலத்தில் வாழ்ந்தவர்.[1]
மாணிக்கவாசகர் பாடிய பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. "சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" (பா.392) என்பதாலும், "இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும் வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படுகிறது.
ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).
இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், மணிமொழியார், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.
தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: "திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரமராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார்.
உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.
மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு என்றும் பொ.ஊ. 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.[2] சுந்தரருக்குப் பிற்பட்ட காலத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலரால் கருதப்படுகிறது.[3]
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார்.[4]
2. பழ்மையான வைணவத்தலம்
திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் (அல்லது ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் கோயில்) தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[2] இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் சேதுக்கரை உள்ளது. இராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர்.[3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 35 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 9°16'57.7"N, 78°49'27.8"E (அதாவது, 9.282700°N, 78.824400°E) ஆகும்.
• புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம். இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு இராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார்.
• சீதையை மீட்க இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்க சமுத்திர ராஜனை அழைக்க, மீன்களுக்கு இடையேயான வழக்கை தீர்த்து வைக்கச் சென்றதால், அழைப்பிற்கு உடனே வராமல் சமுத்திர ராஜன் தாமதிக்கவே, கரையில் மூன்று நாட்கள் இராமபிரான் தங்கியிருந்த திருத்தலம். தாமதமாக வந்த சமுத்திர ராஜன் காரணம் கூறி மன்னிப்பு வேண்டினார். இந்த சமுத்திரராஜன் சமுத்திரராணியுடன் சயனராமர் சன்னதியின் முன்மண்டபத்தில் அமைந்துள்ளனர்.
இக்கோயிலில் ஆதிஜெகநாதப்பெருமாள், பத்மாசனி சன்னதிகளும், ஆண்டாள், தர்ப்ப சையனராமர், சந்தானகிருஷ்னர், பட்டாபிஷேகராமர் உபசன்னதிகளும் உள்ளன. இங்கு, கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளது.
3. ஏர்வாடி : மனநல மையம்
ஏர்வாடி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் . இது கீழக்கரை தாலுகா மற்றும் பேரூராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது . மதுரையுடன் தொடர்புடைய வரலாற்று ஆட்சியாளரான குதுப்-உஸ்-சுல்தான் சையத் இப்ராஹிம் பாட்ஷா ஷாஹீத்தின் கல்லறை மற்றும் சன்னதியைக் கொண்ட கிராமம் இது . [ எப்போது? ]
ஏர்வாடி முதலில் கடலாடி சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது , இது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது . 2009 ஆம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏர்வாடி ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இணைக்கப்பட்டது .
ராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய்க்கு ஏர்வாடி இரண்டாவது பெரிய பங்களிப்பாளராகக் கருதப்படுகிறது.
சையத் இப்ராஹிம் ஷாஹீத் தனது ஆட்சிக் காலத்தில் ஏர்வாடியில் அச்சிட்ட நாணயம்.
உள்ளூர் மரபுகளின்படி, சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத் தனது தளபதி சிக்கந்தர் பாதுஷாவை மதுரையில் உள்ள பாண்டிய ஆட்சியாளர் திரு பாண்டியனிடம் இஸ்லாத்திற்கு மாற்றும் நோக்கத்துடன் அனுப்பினார். இந்த சலுகை நிராகரிக்கப்பட்டபோது, ஒரு போர் வெடித்தது, இதன் விளைவாக ஷாஹீத்தின் படைகள் வெற்றி பெற்று சுல்தான் சிக்கந்தர் பாதுஷா மதுரையின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார் .
இதைத் தொடர்ந்து, ஷாஹீதின் படைகள் பவுத்திராமணிக்கப்பட்டினம் (இன்றைய கீழக்கரை ) நோக்கி முன்னேறின. அங்கு, ஷாஹீத் மன்னர் விக்ரம பாண்டியனை இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார். ராஜா மறுத்து ஷாஹீதை ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறச் சொன்னார், ஆனால் ஷாஹீத் மறுத்துவிட்டார், தனது பணியை நிறைவேற்றாமல் தான் வெளியேற மாட்டேன் என்று கூறினார். தொடர்ந்து தொடர்ச்சியான போர்கள் நடந்தன, ஒவ்வொன்றும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை நீடித்த பத்து போர்கள். இந்த மோதல்களின் போது, ஷாஹீத்தின் ஒரே மகன் சையத் அபு தாஹிர், அவரது சகோதரர் சையத் இஸ்மாயில், அவரது மைத்துனர் ஜைனுல் அபிதீன் மற்றும் பல அமைச்சர்கள் உட்பட அவரது குடும்பம் மற்றும் நிர்வாகத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. [ 2 ] [ சிறந்த ஆதாரம் தேவை ]
இறுதியில், மன்னர் விக்ரம பாண்டியன் மற்றும் அவரது மகன்களான இந்திர பாண்டியன் மற்றும் சந்திர பாண்டியன் ஆகியோர் கொல்லப்பட்டனர், ஷாஹீத் வெற்றி பெற்றார். அவர் பன்னிரண்டு ஆண்டுகள் பௌதிராமணிக்கப்பட்டினத்தை ஆட்சி செய்ததாகவும், தெற்கு தமிழ்நாட்டில் இஸ்லாம் பரவுவதில் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது . சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத்தின் ஆட்சியின் போது அச்சிடப்பட்ட நாணயங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. [ 3 ] [ சிறந்த ஆதாரம் தேவை ]
மதீனாவின் மன்னராகவும் , இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் 18வது தலைமுறை வம்சாவளியைச் சேர்ந்தவராகவும் நம்பப்படும் அல் குத்புல் ஹமீத் வல் கௌசுல் மஜித் பாதுஷா சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத், 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், நபியின் விருப்பத்திற்கு இணங்க இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கத்துடன், இந்தியாவிற்கு ஒரு பயணத்தின் போது எர்வாடிக்கு (அப்போது பௌதிராமணிக்கப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது) [ எப்போது? ] வந்ததாகக் கூறப்படுகிறது . [ 4 ]
ஏர்வாடி சந்தனக்கூடு விழா
[
உருஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தர்காதர்கா வளாகத்திற்குள் ஒரு மினாருடன் கூடிய மசூதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா இஸ்லாமிய மாதமான துல்-கீதாவில் நடத்தப்படுகிறது . இந்த விழா குதுப் சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹித் பாதுஷாவின் "ஷஹாதத்" (தியாக நினைவு நாள்) நினைவாக நடத்தப்படுகிறது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களால் கூட்டாகக் கொண்டாடப்படுகிறது. [ 5 ] ( இணைய தளக்குறிப்புகள்
4. மதுரை

