சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

செவ்வாய், 21 ஜூலை, 2020

விரைவில் வெளிவர உள்ள கொரானா காலம் நூலில் இடம் பெறும் படைப்பு ( வெளியீடு கனவு, திருப்பூர் )            ஜெயா வெங்கட்ராமன்                  பெங்களூரு

Dr.புரூஸ் லிப்டன் என்பவர் சொல்கிறார்fear breeds stress and the fear of corona virus is more deadly than viirus”அதாவது கொரானா வைரஸை விட அது பற்றிய பய உணர்ச்சியே மக்களைக் கொல்கிறது. என்கிற வரிகளே உண்மை யானது. முகக் கவசம்,தனித்திருந்தல், போன்றவைகள் மூலமே இதைக் கட்டுப் படுத்த முடியும் என்கிற நம்பிக்கை நட்சத்திரம் உதிக்கிறது.

இப்படி ஒரு உலகளாவிய நோயை நாம் நமது தலைமுறையில் இப்பொது தான் சந்திக்கிறோம். இதற்கு முன்னர், பெரிய அம்மை(small pox),காலரா, மலேரியா போன்றவைகள் தோன்றி,கணிசமான உயிர்களைப் பலி வாங்கிய பின்னர்தான் இவற்றை  விரட்டியடிக்க முடிந்தது. மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டன. இருப்பினும் ,காசநோய்(TB),காலரா, போன்றவைகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டாலும் இன்றும் அவற்றின் தாக்கம் இருக்கின்றன

முதல் உலக மகா யுத்தத்தின் விளைவாக 22 மில்லியன் மக்கள் மடிந்தனர், 1918-19 களில் 50 மில்லியன் மக்கள் ஸ்பானிஷ்  ஃப்ளுஎன்கிற நோயின் காரணமாக மரணித்தார். இரண்டாவது உலக மகா யுத்தம்,ஹிட்லரின் நாஜி ஆட்சியின் மூலம் 60 மில்லியன் மக்கள் உயிர் நீத்தனர். இது தவிர கொரியன்,வியட்நாம் போர்கள் மூலம் ஏராளமான மக்கள் மடிந்தனர்.

இதேபோல கர்நாடகத்தைப் பொறுத்தமட்டில் ஏராளமான மக்கள்பிளேக் என்னும் உயிர்கொல்லி நோய்க்குப் பலியாயினர்.கன்னடத்தில் ஞானபீட விருதுபெற்ற டாக்டர்.யு.ஆர். அனந்த மூர்த்தியவர்கள் இதன் பின்னணியில்ஸம்ஸ்காரா என்கிற நாவலை எழுதினார். அவர் பிறந்த உடுப்பி மாவட்டம், தூர்வாசபுரம்,மேலிக்கே போன்ற ஊர்கள் பாதிக்கப் பட்ட பல ஊர்களில் இவைகளும் ஒன்று. அதன் பாதிப்பை இந்தியாவில்பிளேக் எனும் நோயால் ஏராளமான உயிர்கள் பலியான காலகட்டத்தில், இவரது கிராமத்தை அடுத்த சேரியில்  மருத்துவர்கள் ஊசிபோடக்கூட உள்ளே நுழைய மறுத்தார்கள் என்பதுடன், தீண்டாமை பிளேக்கை வீடாக கொடுமையான நோய் என்பதை இந்த நாவலில் வலியுறுத்துகிறார்.

இதேபோல புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா அவர்கள்.தனது பித்தி என்கிற சுயசரிதை நூலில்,இவ்வாறு எழுதுகிறார்.--

1944 - இரண்டாவது உலக மகா யுத்தம் உச்சத்தில் இருந்தபோது,சந்தோஷிவாரா எனும் பின் தங்கிய கிராமத்தில், தெருவில் புழுதியில் ஒன்பது வயதுச் சிறுவன் தனது மூத்த சகோதரன்,சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது  இவன் கண்ணெதிரே இருவரும் செத்து விழுகின்றனர். வயிற்றின் அள்ளைப் பகுதியில் கட்டி,வலி என்று ஆரபித்து,மரணத்தில் முடிந்தது. இதுபோல எந்தவிதமான மருத்துவ உதவியும் இல்லாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. உலகப் போரின் தீவிரம் அந்தக் கிராமத்தின் மக்களுக்குத் தெரியாது. ஆனால் யுத்தத்தைவிட கொடுமையானபிளேக் எனும் உயிர்க்கொல்லி நோய் ஏராளமானவர்களின் உயிரைப் பலிவாங்கிக் கொண்டிருந்தது. எட்டாவது படிக்கும் 16 வயதுச் சிறுவனின் எட்டு வயது சகோதரன் இறந்துபோனபோது இறுதிச் சடங்கைச் செய்ய யாரும் முன்வரவில்லைதம்பியின் பிணத்தை சைக்கிளில் வைத்துத் தள்ளிக்கொண்டுபோய் சவ அடக்கம் செய்தான் அந்தச் சிறுவன் என்று எழுதுகிறார்.

அதேபோல பெரியம்மை,தொடர்பான நோய்கள் மக்களிடையே பரவலாக இருந்தபோது மக்கள் அதைத் தெய்வமாக வைத்து வணங்கினர். ஒரு கால கட்டத்தில் இந்த நோய்க்கு மருந்து எதுவும் கிடையாது. நீங்கள் வழக்கமாகச் செய்யும் மஞ்சள்,வேப்பிலை மருத்துவத்தையே செய்யுங்கள் என்றனர். அந்த நேரத்தில் மஞ்சள்,வேப்பிலை கிருமிநாசினிகள் என்பது அவர்களுக்குத் தெரிந்தியிருக்கவில்லை. எனவே மஞ்சளையும்,வேப்பிலையையும் மாரியம்மனாகக் கருதி , கோயில்கள் கட்டி வழிபட்டனர். இது போன்ற  எல்லாத் தொற்று நோய்களுக்கும் முதன்மையான மருந்து தூய்மை!.  சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொண்டால் நோய்களின் பாதிப்புக் குறைந்து விரைவில் குணமடையும். வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில்  அம்மை நோய்க்கு மிக அதிகமாகப் பயந்தனர். அம்மை போட்டியிருக்கும் வீட்டுக்குள் நுழைய மாட்டார்கள்அம்மை கண்டிருக்கிறது என்று வீட்டு வாசலில் வேப்பிலையை சொருகி வைத்துவிட்டு எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காப்பாற்றியதாகக் கதைகள் உண்டு. இன்றைய கொரோனா நோயும் மருந்தாக அதையே வலியுறுத்துகிறது.

TB எனப்படும் காச நோயில் கூட தொற்றும் தன்மையுள்ளது, தொற்றாதது (Dry,Wet) என்று இரண்டு வகைப்படும். இருப்பினும் காச நோயால் பாதிக்கப் பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமைப் படுத்தி வைப்பதுதான் சரியான முறை. முழுவதுமாக சரியாகிவிட்டாலும் கூட மக்கள் அருகில் வர பயப்படுவார்கள்கொரோனாஎனும்  உயிர்க் கொல்லி 

            ஜெயா வெங்கட்ராமன்                பெங்களூரு

            கொரோனாவின் தாக்கம் பற்றி  நமக்கு அதிகம் தெரிந்தது இந்த வருட ஆரம்பத்தில்தான்ஆனால் மார்ச் முதல் வாரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட பின்னர்தான் இதைப் பற்றிய பயம் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட ஏற்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய மருத்துவமனை சீனாவில் ஒன்பது நாட்களுக்குள் ஏராளமான படுக்கை வசதிகளுடன் கட்டப் பட்ட செய்தி அறிந்தபோது வியப்படைந்தோமே தவிர , கொரோனா பாதிப்பு அப்போதே துவங்கி விட்டது என்பது நமக்கு தாமதமாகவே தெரித்தது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி, இத்தாலி, அமெரிக்கா,ரஷ்யா பிரேசில் ,நியூசிலாந்து  போன்ற நாடுகளில் பரவி அது இந்தியாவிற்கும் காலடியெடுத்து வைத்தபோதுதான் நாம் உணரத் தொடங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி னோம் சிக்கன் குனியா , புளு,டெங்கு, பன்றிக்காய்ச்சல்போன்றவைகள் போலத்தான் இதுவும் சாதாரணமானது என்று நம்பி ஏமாந்தோம். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முடிந்த நிலையிலும் கூட இதற்கு இன்னமும் ஒரு விடிவுகாலம் ஏற்படவில்லை என்பதுதான் நிஜம் இன்று சரியாகும், நாளை சரியாகும் என்று கனவு கண்டதுதான் மிச்சம். பொருளாதாரம் பயங்கரமாக வீட்சியடைந்தது  ஏராளமான பேர்கள் மனச் சிதைவுகளுக்கு ஆளானதுதான் மிச்சம்.

இந்தியாவில், குறிப்பாக கர்நாடகத்தில் கொஞ்சம் விழிப்புடன் இருந்து ஊரடங்கு, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக தாக்கம் கொஞ்சம் குறைந்தது. சர்வதேச விமான தளங்கள் உள்ள இடங்களில்  மும்பை, டெல்லி கல்கத்தா,சென்னை, பெங்களூரு, கொச்சின் போன்ற இடங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இது பரவுவதை தவிர்க்க முடியவில்லை. போக்குவரத்து பாதிக்கப் பட்டதால் மக்கள் பொறுமையிழந்து மனஉளைச்சலுக்கு ஆளாகினர் . உதாரணத்திற்கு, மும்பை நகரம்(மகாராஷ்டிராவின் எல்லை) கர்நாடகாவை ஒட்டி இருப்பதால் வட கர்நாடகம்,முழுவதும் பாதிக்கப்பட்டு கல்புர்கி,ஹாஸன்  பெங்களூரு, மைசூரு போன்ற நகரங்களையும் பாதிக்கத் தொடங்கியது. நிலை ஓரளவுக்கு சீரடைந்த நிலையில் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தியபோது மீண்டும் வேகமாகத் தாக்கத் தொடங்கிவிட்டது. அரசு செய்வதறியாது விழிக்கிறது! மீண்டும் 14 ஜூலை முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியுள்ளனர், இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

அவரவர்களுக்கு நம்பிக்கையுள்ள, ஆயுர்வேதம்,யுனானி,ஹோமியோபதி இவைகளுடன் பரம்பரியமுறை நாட்டு வைத்தியங்களைப் பின்பற்றுங்கள் என்று வாட்ஸ் ஆப்,குறுஞ்செய்திகள் மூலம் வதந்திகளைப் பரப்பி  மக்களைப் பைத்தியம் பிடிக்க வைக்கின்றனர். இருந்தும் இன்றுவரை இதற்கு சரியான மருத்துவம் கண்டு பிடிக்க வில்லை என்பதுதான் நிஜம். இந்த பாதிப்பிலிருந்து என்று விடுபடுவோம் என்பதை விடை தெரியாத கேள்வியாக நம் முன் பூதாகாரமாக எழுந்து நிற்கிறது.                                    .

            Dr.புரூஸ் லிப்டன் என்பவர் சொல்கிறார்fear breeds stress and the fear of corona virus is more deadly than viirus”அதாவது கொரானா வைரஸை விட அது பற்றிய பய உணர்ச்சியே மக்களைக் கொல்கிறது. என்கிற வரிகளே உண்மை யானது. முகக் கவசம்,தனித்திருந்தல், போன்றவைகள் மூலமே இதைக் கட்டுப் படுத்த முடியும் என்கிற நம்பிக்கை நட்சத்திரம் உதிக்கிறது.

இப்படி ஒரு உலகளாவிய நோயை நாம் நமது தலைமுறையில் இப்பொது தான் சந்திக்கிறோம். இதற்கு முன்னர், பெரிய அம்மை(small pox),காலரா, மலேரியா போன்றவைகள் தோன்றி,கணிசமான உயிர்களைப் பலி வாங்கிய பின்னர்தான் இவற்றை  விரட்டியடிக்க முடிந்தது. மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டன. இருப்பினும் ,காசநோய்(TB),காலரா, போன்றவைகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டாலும் இன்றும் அவற்றின் தாக்கம் இருக்கின்றன

முதல் உலக மகா யுத்தத்தின் விளைவாக 22 மில்லியன் மக்கள் மடிந்தனர், 1918-19 களில் 50 மில்லியன் மக்கள் ஸ்பானிஷ்  ஃப்ளுஎன்கிற நோயின் காரணமாக மரணித்தார். இரண்டாவது உலக மகா யுத்தம்,ஹிட்லரின் நாஜி ஆட்சியின் மூலம் 60 மில்லியன் மக்கள் உயிர் நீத்தனர். இது தவிர கொரியன்,வியட்நாம் போர்கள் மூலம் ஏராளமான மக்கள் மடிந்தனர்.

இதேபோல கர்நாடகத்தைப் பொறுத்தமட்டில் ஏராளமான மக்கள்பிளேக் என்னும் உயிர்கொல்லி நோய்க்குப் பலியாயினர்.கன்னடத்தில் ஞானபீட விருதுபெற்ற டாக்டர்.யு.ஆர். அனந்த மூர்த்தியவர்கள் இதன் பின்னணியில்ஸம்ஸ்காரா என்கிற நாவலை எழுதினார். அவர் பிறந்த உடுப்பி மாவட்டம், தூர்வாசபுரம்,மேலிக்கே போன்ற ஊர்கள் பாதிக்கப் பட்ட பல ஊர்களில் இவைகளும் ஒன்று. அதன் பாதிப்பை இந்தியாவில்பிளேக் எனும் நோயால் ஏராளமான உயிர்கள் பலியான காலகட்டத்தில், இவரது கிராமத்தை அடுத்த சேரியில்  மருத்துவர்கள் ஊசிபோடக்கூட உள்ளே நுழைய மறுத்தார்கள் என்பதுடன், தீண்டாமை பிளேக்கை வீடாக கொடுமையான நோய் என்பதை இந்த நாவலில் வலியுறுத்துகிறார்.

இதேபோல புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா அவர்கள்.தனது பித்தி என்கிற சுயசரிதை நூலில்,இவ்வாறு எழுதுகிறார்.--

1944 - இரண்டாவது உலக மகா யுத்தம் உச்சத்தில் இருந்தபோது,சந்தோஷிவாரா எனும் பின் தங்கிய கிராமத்தில், தெருவில் புழுதியில் ஒன்பது வயதுச் சிறுவன் தனது மூத்த சகோதரன்,சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது  இவன் கண்ணெதிரே இருவரும் செத்து விழுகின்றனர். வயிற்றின் அள்ளைப் பகுதியில் கட்டி,வலி என்று ஆரபித்து,மரணத்தில் முடிந்தது. இதுபோல எந்தவிதமான மருத்துவ உதவியும் இல்லாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. உலகப் போரின் தீவிரம் அந்தக் கிராமத்தின் மக்களுக்குத் தெரியாது. ஆனால் யுத்தத்தைவிட கொடுமையானபிளேக் எனும் உயிர்க்கொல்லி நோய் ஏராளமானவர்களின் உயிரைப் பலிவாங்கிக் கொண்டிருந்தது. எட்டாவது படிக்கும் 16 வயதுச் சிறுவனின் எட்டு வயது சகோதரன் இறந்துபோனபோது இறுதிச் சடங்கைச் செய்ய யாரும் முன்வரவில்லைதம்பியின் பிணத்தை சைக்கிளில் வைத்துத் தள்ளிக்கொண்டுபோய் சவ அடக்கம் செய்தான் அந்தச் சிறுவன் என்று எழுதுகிறார்.

அதேபோல பெரியம்மை,தொடர்பான நோய்கள் மக்களிடையே பரவலாக இருந்தபோது மக்கள் அதைத் தெய்வமாக வைத்து வணங்கினர். ஒரு கால கட்டத்தில் இந்த நோய்க்கு மருந்து எதுவும் கிடையாது. நீங்கள் வழக்கமாகச் செய்யும் மஞ்சள்,வேப்பிலை மருத்துவத்தையே செய்யுங்கள் என்றனர். அந்த நேரத்தில் மஞ்சள்,வேப்பிலை கிருமிநாசினிகள் என்பது அவர்களுக்குத் தெரிந்தியிருக்கவில்லை. எனவே மஞ்சளையும்,வேப்பிலையையும் மாரியம்மனாகக் கருதி , கோயில்கள் கட்டி வழிபட்டனர். இது போன்ற  எல்லாத் தொற்று நோய்களுக்கும் முதன்மையான மருந்து தூய்மை!.  சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொண்டால் நோய்களின் பாதிப்புக் குறைந்து விரைவில் குணமடையும். வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில்  அம்மை நோய்க்கு மிக அதிகமாகப் பயந்தனர். அம்மை போட்டியிருக்கும் வீட்டுக்குள் நுழைய மாட்டார்கள்அம்மை கண்டிருக்கிறது என்று வீட்டு வாசலில் வேப்பிலையை சொருகி வைத்துவிட்டு எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காப்பாற்றியதாகக் கதைகள் உண்டு. இன்றைய கொரோனா நோயும் மருந்தாக அதையே வலியுறுத்துகிறது.

TB எனப்படும் காச நோயில் கூட தொற்றும் தன்மையுள்ளது, தொற்றாதது (Dry,Wet) என்று இரண்டு வகைப்படும். இருப்பினும் காச நோயால் பாதிக்கப் பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமைப் படுத்தி வைப்பதுதான் சரியான முறை. முழுவதுமாக சரியாகிவிட்டாலும் கூட மக்கள் அருகில் வர பயப்படுவார்கள்

அதேபோலத்தான் மிகவும் பழமையான பெருவியாதி(lepracy) . இது பைபிள் காலத்திற்கு முற்பட்டது. இந்த நோய் கண்டவர்களை மக்கள் கல்லால்  அடித்து விரட்டினர் என்று பைபிள் சொல்கிறது. இப்போதும் அதே நிலை, கொரோனா சரியாகிவிட்டாலும் மீண்டும் வருமா என்கிற பயம் மக்களிடையே இருக்கிறது.

இதைக் கண்டு பயந்து ஓடுவதைவிட, யாரோ ஒருவர் சொன்னதுபோல இதனுடன் சேர்ந்து வாழக் கற்றுக் கொள்ளவேண்டும் . ஆனால் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படித் தனித்திருப்பது ? ஒரு இடத்திற்கும் செல்லாமல் , நல்லது கெட்டது போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கூடக்  கலந்து கொள்ளாமல் இருப்பது ? உடல் உழைப்பைத்தவிர வேறு எதுவும் தெரியாத அன்றாடங்கா
காய்ச்சிகள்,ஏழை எளிய மக்களின் கதி என்னவாவது? கொரோனாவின் பாதிப்பினால் உயிரைவிட்டவர்களின் எண்ணிக்கையைவிட பசி பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு உண்டு. அந்த நிலை வருவதற்குள் இந்தக் கொரோனாவை இந்தப் புவியிலிருந்து  துரத்த வேண்டும். இதைப் பற்றி சிந்தித்தே பலர் மன நோயாளியாகி  உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் யார்தான் என்ன செய்ய முடியும்?

1930 களில்  மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி  ஏற்பட்டது. அப்போது கடுமையான பஞ்சம். வேலையில்லாத் திண்டாட்டம். ஸ்டாக் மார்க்கெட் பயங்கரமாக வீழ்ச்சியடைந்தது. பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போனது. ஆயிரக்கணக்கான வங்கிகள் மூடப்பட்டன!. பதிமூன்று லட்சத்திற்கும் மேலான மக்கள் வேலையிழந்து தெருவுக்கு வந்த நேரம்! முன்னாள் கோடீஸ்வரர்கள் செய்வதறியாது மனவுளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டனர்  மிகப் பெரிய நிறுவன நிர்வாகிகள் தெருவில் ஆப்பிள் விற்றுக் கொண்டிருந்தனர்.
  
அப்போது ஒரு மருந்துக் கடையில் டெலிவரி பாயாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் எதிர் காலம் இருண்டு விட்டது இனி என்னசெய்வது என்று செய்வதறியாமல்  தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தான். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்தனது திட்டத்தை நிறைவேற்ற முயன்றபோது அவன் தந்தை தீடீரென அங்கு வந்து தற்கொலை யின் காரணமறிந்து திடுக்கிட்டார். பின்னர் அவனை வெளியில் கூட்டிச் சென்று அவனுடன் பேசி அவனைத் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினார்.

அப்போது அவர் சொன்ன அறிவுரை எல்லோருக்கும் இப்போதும் பொருந்தும். அவர் சொன்னார் நாளைக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது! வாழ்க்கை என்பது ஒரு நாவலைப் போன்றது. முழுவதும் மர்மங்களடங்கியது. அடுத்த பக்கத்தைப் புரட்டும் வரை என்ன நடக்கவிருக்கிறது என்பது தெரியாது.
ஒவ்வொரு நாளும் ஒரு வித்யாசமான பக்கம்!. அவை முழுவதும் மர்மங்கள் அடங்கியது. ஆனால் அடுத்த பக்கத்தில் என்ன நிகழவிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளத் தவறி, புத்தகத்தை மூடிவைக்க முடிவு செய்கிறாய்! அடுத்த பக்கத்தை நீயே எழுதப் போகிறாய். அவ்வளவு சீக்கிரத்தில் புத்தகத்தை மூடிவிடாதே.! சில அற்புதங்கள் நாளை நிகழலாம்! என்று மனதை மாற்றுகிறார். அன்று தற்கொலை செய்து கொள்ள முயன்ற அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்,திரைப்பட இயக்குனர்,கதை, வசன கர்த்தா ,பிராட்வேயின் நாடக உலகத்தில் கொடிகட்டிப் பறந்தவர் என்கிற பல முகங்களைக் கொண்ட அற்புதமான எழுத்தாளராக மலர்ந்தசிட்னி ஷெல்டன் என்கிற அமெரிக்க எழுத்தாளர். இந்த விவரங்களை The Other side of Me  என்கிற அவரது சுய சரிதையில் எழுதுகிறார். இன்று மனச் சிதைவுகளுக்கு ஆளாகி தற்கொலை செய்ய முயல்பவர்களுக்காக இந்த வரிகளை எழுதினேன். எந்த ஒரு சூழலிலும் மனத்தைத் தளரவிடாதீர்கள்!

            அம்மை நோயின் காரணமாக ஊருக்குப் பத்து மாரியம்மன் கோவில்கள் எழும்பியதுபோல இப்போது கேரளாவில்கடைக்கால் என்னுமிடத்தில் கொரோனாவுக்காக ஒரு கோவில் எழுப்பியிருக்கிறார்களாம். பெங்களூரு கண்டோன்மெண்ட் பகுதியில் ஒருபிளேக்மாரியம்மன் கோவில் இருக்கிறது . இன்றும் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சினிமா நடிகைகள் நக்மா, குஷ்பு வுக்கு கோவில் கட்டுவதை விட இது மேல் அல்லவா? என்ன செய்வது? எதைத் தின்றால் பைத்தியம் தீரும் என்று மக்கள் செய்வதறியாமல் விழிக்கிறார்கள் . அந்த நம்பிக்கையே நம்மை இந்தப் பெரும் இடரிலிருந்து காப்பாற்றும் என்று நம்புவோம்
                                    “கடவுள் இல்லை என்று யார் சொன்னது?
                                    கண்ணுக்குத் தெரியாதவன் கடவுள்!
                                    அவனுக்கு சாதி,மத பேதமில்லை!
                                    ஏழை ,பணக்காரன் என்கிற பாகுபாடில்லை!
                                    அவன் நினைத்தால் எல்லோரையும் அழித்துவிடுவான்
                                    அந்த வகையில் கொரோனாவும் கடவுளே!
                                    போதும் நிறுத்து! எங்களை வாழவிடு!!

                                                                        -------------