சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

செவ்வாய், 21 ஜூலை, 2020

சீனப்பட்டாசு திருப்பூரில் வெடிகுண்டாய்.. சுப்ரபாரதிமணியன்  /       ( 15/ 7/2020 )
சீனப் பொருட்கள் கட்டுப்பாட்டால் திருப்பூர் பின்னலாடை  ௨ற்பத்தி பாதிப்பு ஏற்படும் .கொரானா ஊரடங்கிற்குப் பின்னால உள்ளூர் தொழிலாளர்களின் உழைப்பு, தைரியம் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்னலாடைத் தொழில்  இந்த வாரத்திலே இப்படி முடங்க ஆரம்பித்துள்ளது .

* பிரிண்டட் லேபிள் சாட்டின் துணி கிடைப்பதில்லை
ஒரு சில குறிப்பிட்ட பட்டன்கள் கிடைப்பதில்லை
ஜிப்புகள் கிடைப்பதில்லை
கிடைத்தாலும் விலையை ஏற்றி விட்டார்கள் காரணம் சீனாவிலிருந்து சப்ளை இல்லை என்கிறார்கள்
கூடிய விரைவில் சாயப் பொருட்கள் விலை கூடலாம்
அடுத்து குளிர்கால (வின்டர் ஆர்டரை ) ஆடைத்தயாரிப்புக்காக திருப்பூர் எதிர்பார்ப்பதால் பெரும்பாலும் குளிர்கால ஆடைகளுக்கு சீனா துணியையே திருப்பூர் நம்பியிருக்கிறது அதற்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்.
* இபோதே சில வகைத்துணிகளுக்கு  அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு டோக்கன் கொடுத்து காத்திருக்கச் சொல்கிறார்கள். ரேசன் கடை டோக்கன் போலாகி விட்டது .
இது பற்றி யுவராஜ் சம்பத் சொல்லும் அபாய சங்கொலியையும் கேளுங்கள்:
 யுவராஜ் சம்பத்: 20/6/2020
“ கொடிய நோய் கொராணாவின் தாக்கத்தில் ,பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, சாதாரண குடிசைத் தொழிலில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்...
ஆனால் இதை இன்னும் அரசுகள் கண்டுகொள்வதில்லை. காரணம், இவர்கள் வங்கிப் பரிமாற்றம் செய்வதில்லை, ஜிஎஸ்டி கட்டுவதில்லை, தங்கள் தொழிலுக்கு எந்தவிதமான கணக்கு வழக்குகளையும் அரசுக்கு சமர்ப்பிப்பது இல்லை, வங்கிகளில் கடன் வாங்குவதில்லை, யாருக்கும் வட்டிக்கு கடன் கொடுப்பதும் இல்லை.. அவர்கள் செய்த ஒரே தவறு குருவி சேர்த்தார் போல் பல்வேறு வழிகளில் ஒவ்வொரு ரூபாயாக சேர்த்த சிறிய முதலீட்டைக் கொண்டு ,அன்றாடம் தேவையான துணி மற்றும் அதன் தொடர்பான பொருட்களை, குறைந்த விலைக்கு வாங்கி ,தன் குடும்ப உறுப்பினர்களை கொண்டு, பனியன் ,ஜட்டி, மாஸ்க் ஏதாவது ஒன்றை தயார் செய்து திருப்பூரில் இதற்கெனவே இருக்கிற சிறிய சிறிய சந்தைகளில் விற்று தங்கள் குடும்பங்களை நடத்துகிற அளவுக்கு பொருள் ஈட்டுவார்கள் .இவர்களுக்கும் இன்று வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு  இருக்கிறது.. இதை கேட்பதற்கு யாருமில்லை....

அதே நேரத்தில் சிறு,குறு ஏற்றுமதியாளர்களும், தயாரிப்பாளர்களும் ஏற்கனவே தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய தோழர்களை இழந்திருக்கிறார்கள்.. வெளிமாநில தொழிலாளர்களைப் பயன்படுத்தி வேலை வாங்குவதில் சிரமம் இருக்கிறது.. அப்படி அவர்களுக்கு வேலை அளித்தாலும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொடக்கத்திலிருந்தே பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன.. அதனால் அவர்களும் தங்கள் தொழிலை தொடங்க முடியாமலும் ,தொடங்கினால் நடத்த முடியாமலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..

அதைப்போலவே உள்ளூர் வணிகம் என்று சொல்லுகிற இந்திய சந்தைக்கு தயார் செய்து விற்பனை செய்து கொண்டு இருக்கிற பல்வேறு நிறுவனங்களுக்கும், வரவேண்டிய பணம் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கிறது.. ஏற்றுமதியாளர்களுக்கு இருப்பது  போன்ற  காப்பீடு கிடையாது என்பதால், அவர்களும் வருத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்..

ஏற்றுமதியாளர்கள் நிலைமையும் சொல்லவே வேண்டாம். சற்றேறக்குறைய பத்தாயிரம் கோடிக்கு மேல் வராத கடன் இருக்கும் என்று சொல்லப்படுகிற அளவுக்கு மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி இந்தியாவை வளர்ந்த நாடுகளின் பட்டியலில் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும், ஆயத்த ஆடை ஏற்றுமதியை பொருத்தவரை இது ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது. காரணம் இந்திய தயாரிப்புகள் வங்கதேசத்து தயாரிப்புடன் அல்லது வியட்னாம் தயாரிப்புடன் போட்டி போட முடியாத நிலை... இந்திய தயாரிப்புகளை விட அவருடைய தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரியும் மற்ற சலுகைகளும் அதிகம் இருப்பது தான் காரணம்..
       சீனப் பொருட்களைத் தடை செய்யும் திட்டத்தில் இன்னும் பல வெடிகுண்டுகள் வந்து சேரலாம்.
வெடிகுண்டுகளுக்காய் காத்திருக்கும் நேரம் இது . கொரானாவை விடப் பெரிய வெடிகுண்டுகள் அவை