சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

செவ்வாய், 21 ஜூலை, 2020

பாண்டிச்சேரி பற்றிய  முக்கிய ஆவணம்
கிராவின் வேட்டியும் பிரபஞ்சனின் அப்பாவின் வேட்டியும்
 தமிழ் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் புதுவை யுகபாரதி –
சுப்ரபாரதிமணியன்
இந்த நூல் ஒருவகையில் பாண்டிச்சேரி பற்றிய  முக்கிய ஆவணம் என்று சொல்லலாம். பெரும்பாலும் இதில் உள்ள கட்டுரைகள் பாண்டிச்சேரி சார்ந்தே உள்ளன என்று சொல்லலாம். பாண்டிச்சேரியின் பண்பாட்டு அடையாளம் பாண்டிச்சேரி சார்ந்த எழுத்தாளருடைய படைப்புகள் பற்றிய கட்டுரைகள், அதிலும் மூத்த படைப்பாளிகள் என்ற வகையில் பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்ஒளி வாணிதாசன், உசேன் போன்றவருடைய படைப்புகள் பற்றிய கட்டுரைகள் ,,பாண்டிச்சேரி சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்புகளின்  செயல்பாடுகள் பாண்டிச்சேரி சமயங்களும் பொதுவுடமை இயக்கங்களும் பற்றியகட்டுரை போன்றவையெல்லாம் மனதில் வரும் போதே இது பாண்டிச்சேரி சார்ந்த ஒரு முக்கிய ஆவணமாக மனதில்  வந்து நிற்கிறது. அதை தவிர சில கட்டூரைகள் மட்டுமே பொதுவான அர்த்தத் தளத்தில் உள்ளன.அவையும் இந்நூலுக்கு உரம் சேர்ப்பவை
 பிரபஞ்சன் தமிழ்நாட்டில் வசித்து வந்தாலும் படிப்பும் வாழ்க்கையும் என்று அவருடைய பெரும்பான்மை காலம் பாண்டிச்சேரியில் இருந்திருக்கிறது..பண்பாடு  என்று ஒன்றுக்கொன்று இணைந்தப்  பண்பாட்டு அடையாளத்தை கொண்டிருந்தார் பிரபஞ்சன் .அப்படியே படைப்புகளில் வழியே இந்திய பிரஞ்ச் தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் கொண்டிருந்தார் என்பதை புதுவை யுகபாரதி நிரூபிக்கிறார்.              கி ராஜநாராயணன் கரிசல் காட்டில் பிறந்தாலும்  வாழ்வின் பின்பகுதியை பாண்டிச்சேரியில் கழித்துக்கொண்டு கொண்டிருக்கிறார். அவருடைய வேட்டி என்ற ஒரு கதை மற்றும் பிரபஞ்சனின்  வேட்டி என்ற ஒரு கதை இரண்டையும் எடுத்துக் கொண்டு இந்த இரண்டு ஆளுமைகள் எப்படி தமிழிலக்கிய சூழலுக்கு பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் .பாரதிதாசனைப் பொருத்த அளவில் தமிழரை எவராலும் அழிக்க இயலாது என்று இறுமாந்து பாவேந்தர் தமிழ் இயக்க குறியீடாக பன்முகத்தன்மை வாய்ந்த படைப்புகளை உருவாக்கி இருப்பதை  ஒரு கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
பாண்டிச்சேரியில் தனது முதுமை காலத்தை கழித்த மா. அரங்கநாதனின்  முத்துக்கருப்பன் என்ற கதாபாத்திரத்தையும் அதன் தனித்தன்மையை பற்றிச் சொல்கிறபோது காவியா சண்முகசுந்தரம் அவர்களுடைய சிறுகதைகளில் வரும் ஆறுமுகத்தை பற்றியும் ஒரு ஒப்பீட்டு அளவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.அரங்கநாதன் முத்துக்கருப்பன் கதாபாத்திரத்தின் மூலமாக குமுகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு குமுகத்தை  பார்ப்பவன் ஆனால் .காவியா சண்முகசுந்தரம் - சுந்தரபாண்டியனின் சிறு கதைகளில் காணப்படும் ஆறுமுகம் குமுகத்தோடு  ஊடாடி மனிதஉறவைப் பார்ப்பவன். முத்துக்கருப்பன் புதுகுரலில்  பேசுபவன் ஆறுமுகம் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய குரலில்  பேசுபவன் என்ற வகையில் ஒப்பீட்டுக் காண்பிக்கிறார் .இதில் மலையருவி என்னும் மயக்கும் பெயர்கொண்ட பாவலர் ,ஓடை என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியவர் நான் ஒரு நிரந்தர நாத்திகன் என்று உறுதிமொழி பத்திரம் எழுதித் தந்த பாவேந்தர் வழிவந்த பகுத்தறிவு பாவலர் ,.அவர் எப்படி தன்னுடைய பாட்டு உலகத்தை சிவப்புப் பாட்டை கொண்டு நிரப்பியிருக்கிறார் என்று ஒரு நல்ல கட்டுரை .அருமையாக இருக்கிறது புதுச்சேரியில் பல்வேறு சமூக மக்களை சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் . அந்த மக்களுடைய வாழ்க்கையை அனுபவங்கள் சடங்குகள் சிந்தனைகளோடு அவர்கள் எப்படி பன்முகத்தன்மை வாய்ந்த பரிமாணத்திற்குள் இருந்திருக்கிறார்கள் என்பதை ஒரு கட்டுரை சொல்கிறது
 பாரதிதாசன் பரம்பரை என்று ஒன்று இருப்பதை பல கவிஞர்கள் மறுத்திருக்கிறார்கள். ஆனால் அவருடைய பரம்பரையில் உள்ள பல்வேறு எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம்  ஒரு கட்டுரையாய் நீண்டப் பட்டியலிடப்பட்டிருக்கிறது .அது பெருமைப்படக்கூடிய பட்டியலாக இருக்கிறது புதுச்சேரி என்னுடைய மண்ணின் மைந்தனாக தமிழ் ஒளி  இருந்திருக்கிறார் அவரின் மே தின பாடல் பற்றிய ஒரு முழு கட்டுரை அவரின் பொதுவுடமை சார்ந்த ஈடுபாட்டையும் தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்வு கொடுத்து அவர் கவிதைகள் விளங்கி இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறது வாணிதாசன் ஒரு குழந்தை பாடலாசிரியராக நிறுவுவதில் ஒரு கட்டுரை வெற்றி பெற்றிருக்கிறது. பல்வேறு சிறுகதை எழுத்தாளர்கள் பாண்டிச்சேரி இருந்தாலும் அதிகம் பேசப்படாத உசேன் அவர்களின் சிறுகதைத் தொகுப்புகள் இரண்டை மையமாகக் கொண்டு ஒரு கட்டுரை இந்த நூலில் உள்ளது .பாரதிதாசன் வாணிதாசன் தமிழ் ஒளி  போன்ற புகழ் வாய்ந்தவர்கள்  கவிதை இலக்கியத்தைப் போன்று சிறுகதை இலக்கியத்திற்கு  படைப்புகளை அளித்துள்ளார்கள் . பாடல் இலக்கியத்தில் சிறப்பான கவனம் பெற்ற உசேன் அவர்கள் சிறுகதைகளிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார் அந்த முத்திரையை  ஒவ்வொரு கதையாக  எடுத்துக்கொண்டு விரிவாக ஒரு கட்டுரை பேசுவது சிறப்பாக இருக்கிறது. பாரதிதாசனின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற கட்டுரை பன்முகப்பார்வை கொண்டது .பல்வேறு சிந்தனைகளை வெளிப்படுத்துவது அந்த வகையில் அழகியல் பார்வையும் பெண்ணியப் பார்வையும் தமிழியப் பார்வையும் குமுகாயப் பார்வையும் எப்படி கொண்டிருக்கிறது என்பதை பற்றிய கட்டுரையில் பாவேந்தர் பாரதிதாசன் உடைய இன்னொரு முகத்தை காட்டுவதாக இருக்கிறது. அது அரசியல் பகுத்தறிவு சார்ந்த முகமாகவும் இருக்கிறது. தமிழில் சொல்லாட்சியும் தமிழையும் சொல்லாட்சியும் கொண்ட்தாக ஏறக்குறைய வைத்திருந்தாலும் தருகின்ற பொருள் , பாட்டின் தன்மை  வாணிதாசன் உடைய கவிதைகள் ஒரு முக்கிய இடத்தைப் பெறுவதைப் இன்னொரு கட்டுரை சொல்கிறது.
 பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் பாண்டிச்சேரியில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. சாதனைகளை செய்கின்றன அந்த வரிசையில் உள்ள சுமார் 50 இலக்கிய அமைப்புகள் பற்றிய ஒரு கட்டுரை ஆச்சரியம் தருகிறது .காரணம் வெவ்வேறு வகையான கொள்கையும் மற்றும் இலக்கிய ஆர்வம் இருந்தாலும் அவை இலக்கியம் சார்ந்து இப்படி எல்லாம்  இருக்கின்றன என்பது அதில் காட்டப்படுகிறது இது ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கிறது .அதிலும் நண்பர்கள் தோட்டம் என்ற அமைப்பின் செயல்பாடுகள் பெருமை தரத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. பல்வேறு இலக்கிய அமைப்பின் செயல்பாடுகள் மூலமாக பாண்டிச்சேரியில் தமிழ் இலக்கியம் சார்ந்த பார்வை எப்படி இருக்கிறது என்பதை இந்த நூல் சொல்கிறது
 சுமார் இருபத்தைந்து பல்வேறு வகைப்பட்ட நூல்களையும் 5 குறும்படங்களையும் 4 ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிற புதுவை யுகபாரதி .பாண்டிச்சேரி இலக்கிய முகத்தை இந்த நூலில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்

  தான் பிறந்த மண்ணுக்கும் மொழிக்கும் ஏதாவது செய்தே தீரவேண்டும் என்னும் தீராக்காதல் கொள்கையும் சிந்தனையும் கொண்டு தொடர்ந்து தனித்த தமிழில் பேசி தனித்தமிழ் எழுதிவருபவர்  யுகபாரதி என்று சுந்தரமுருகன் அவர்கள்  அணிந்துரையில் அறிமுகப்படுத்துகிறார் .எழுத்தாளர்கள் உள்ளூர் வரலாற்றை அறிந்து கொள்வது ரொம்ப முக்கியம் .பொதுவுடைமை என்பது ஏற்றத்தாழ்வற்ற எல்லோரும் ஓர் குலம் என்ற  எண்ணமும் எல்லாவற்றுக்கும் உழைப்பே மூலதனம் என்று கூறுகிற உயர்ந்த சிந்தனை என்ற விளக்கம்  புதுமொழி ரகசியம் பற்றி சொல்கிறார் .தமிழ் தேசியமும் பொதுவுடைமை இயக்கமும் அவை சார்ந்த ஆழமான புரிதலோடு யுகபாரதி இந்தக்  கட்டுரை  நூலை எழுதி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் தமிழ்மொழி, பாண்டிச்சேரி இலக்கியம் ,பாண்டிச்சேரி படைப்பாளிகள் குறித்து ஒரு முக்கிய பெரிய  ஆவணத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை சொல்கிறது இந்நூல் . ( வெளியீடு காவ்யா பதிப்பகம் ரூபாய் 230... 220 பக்கங்கள் )