சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 21 ஜூன், 2020

ஜீன் 5 உலக சுற்றுச்சூழல் தினம்:
குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களம் அமைப்பின் இணைய தள சந்திப்பில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கலந்து கொண்டு பேசினார். குறிஞ்சி மகளிர் சிந்தனைக் களம் அமைப்பினைச் சார்ந்த   சுபசெல்வி, வில்வம், நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் :
 எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசியது

நீர் என்பது அடிப்படை உரிமை என்பதற்கு பதிலாக அடிப்படை தேவை என்று சொல்லப்படும் சூழல் வந்துவிட்டது. உரிமை என்றால் ஒவ்வொருவருக்கும் அளிப்பது என்றாகும். தேவை என்பது விலை கொடுத்து வாங்க வலியுறுத்துவது.
            வளர்ந்த நாடுகளில் நீர் விநியோகம் என்பது பொதுத்துறையின் கீழ் உள்ளது. ஆனால் பொதுத் துறையின் கீழ் இருந்து தனியார் துறைக்கு செல்லும் பாதைக்கு வளர்ந்த நாடுகள் திட்டமிட்டு வலியுறுத்துகின்றன. எனவே அவை தாம் கடன் கொடுக்கும் நாடுகளிடம் தனியார் மயமாக்கலை வற்புறுத்தி நிர்பந்திக்கின்றன.
            விற்பனை நீரை தொடர்ந்து மக்கள் பருக விளம்பரங்கள் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சுவை கூடுவதற்கு ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில் பல பூச்சிக் கொல்லி மருந்துகளும் உள்ளன. இவை உடல் நலத்தை பாதிப்படையச் செய்பவை.
            இவற்றை வியாபார நோக்கம் கொண்டு பெரும் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கையில் எடுத்துக் கொண்டு லாபம் சம்பாதிக்கின்றன. இது சாதாரண மக்களைச் சுரண்டவும் ஊழல் பெருகவும் வழி வகுத்து விட்டது.
                        குடிநீருக்கே இப்பிரச்னைகள் என்கிறபோது விவசாயம் இன்னும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. மானாவாரி விவசாயம், பாசன விவசாயம் என்று விவசாயம் நடைபெறுகிறது. இவை இன்று வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. நீர்நிலைகள் பொது சொத்தாக அறிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மிக முக்கியம். தூர்வாரலும், தடுப்பணைகளும் நீர் தேக்க பயன்படும். தொடர்ந்து மழை நீர் சேமிப்பு திட்டங்கள் அமுல்படுத்தவும் வேண்டியுள்ளது தனியார்கள் ஆழ்குழாய்களை அமைத்தலை முற்றிலும் தடை செய்ய வேண்டும். நீர் விளையாட்டுக்கு அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதும் தடை செய்யப்பட வேண்டியுள்ளது.
            "நீர் சிக்கல் என்பது ஒரு சூழலியல் நெருக்கடி. இதற்கு வியபார ரீதியாக தீர்வு என்பது பூமியை நாசப்படுத்தும். சூழலியல் சிக்கலுக்கு சூழலியல் ரீதியில்தான் தீர்வு காண முடியும்"  என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். பூமியின் வெப்பம் அதிகரிப்பது என்பது சமீப ஆண்டுகளில் அதிகரித்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கும் ஆண்டு தோறும் 3 லட்சம் பேர் பூமியின் சூட்டின் காரணமாக மரணமடையக் கூடும் என்று கூறுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் இது ஒன்றரை லட்சமாக இருந்தது.
கொரானா பாதிப்பு கூட பூமியின் சூட்டின் காரணமாகத்தான். இதிலிருந்த மக்கள் தங்களைக்காப்பாற்ற சுயகட்டுப்பாட்டுடன் கூடிய மருத்துவ அறிவுரைகளைக் கைக்கொள்ள வேண்டும்  என்றார்.