சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

செவ்வாய், 22 மார்ச், 2016

               உலக வன நாள்
---------------------------------------------------------------
பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் உலக வன நாள் திங்களன்று கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி  தலைமை தாங்கினார்.

சமூக ஆர்வலர் அ.மனோகர் சிற்ப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

 எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கலந்து கொண்டு பேசுகையில் உலகில் காடுகள் 50 சதவீதம் உயிரினங்கள் வாழும் இடமாக  உள்ளது. அந்த உயிரினங்களைக் காப்பாற்றவும்  மனித குலம் உயிர் வாழ ஆதாரமான குடிநீருக்கும், விவசாயத்திற்கும் மழையை தரும் மரங்களின் மூலமானக் காடுகளைப் பேண வேண்டிய அவசியம்  பற்றியும் எடுத்துரைத்தார்


கீழ்க்கண்ட இரு நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1. சிறுவாணி- கோவையின் குடிநீர் .சிஆர் இளங்கோவன் எழுதியது.  2. சூழல்-  சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் கட்டுரைகள்   . ஆசிரியை பிரியா நன்றி கூறினார்.