சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 9 மே, 2008

Thursday, May 8, 2008

சோமனதுடி : சோமனின் உடுக்கை:நாவல் : கன்னட மூலம் : சிவராமகரந்த் : தமிழில்: தி. சு. சதாசிவம்
பல்வேறுத் தளங்களில் இந்த நாவலின் மொழிபெயர்ப்பு மிகவும் முக்கியத்துவம் கொண்டதாகும். தலித் இலக்கிய படைப்புகளின் தீவிரமான எழுச்சி ,வெளிப்பாட்டை கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எழுபதாண்டுகளுக்கு முற்பட்ட இப்படைப்பை தலித் இலக்கிய வகையில் முன்னோடியாகச் சுலபமாக சுட்டிக் காட்ட ஏதுவாகிறது. 1931ல் சிவராம்கரந்த் இந்நாவலை கன்னடத்தில் எழுதியுள்ளார். ஒரு படைப்பாளியின் பல்வேறுதுறை சார்ந்த ஈடுபாடுகளின் சிறந்த குறியீடாகவும் கரந்த் விளக்கியுள்ளார். 40 நாவல்கள், 40 நாடகங்கள் மட்டுமில்லாமல் குழந்தை இலக்கியம், பாமரனுக்கான அறிவியல், பயணநூல்கள் நாட்டுப்புற மற்றும் பிற இந்தியக் கலைகள் குறித்த நூல்கள் என்று வெவ்வேறு துறை சார்ந்த ஈடுபாட்டை பதிவு செய்திருப்பதில் முன்னோடியாக இருந்திருக்கிறார். 1975ம் ஆண்டு நெருக்கடி நிலையை எதிர்த்து 'பத்மபூஷன்' விருதை திருப்பியளித்தவர். பதினான்கு பதிப்புகளைக் கண்டிருக்கும் இந்நாவல் தமிழில் வெளிவருவதற்கு 73 ஆண்டுகளாகியுள்ளது என்ற துரதிர்ஷ்டமும் இப்பட்டியலில் அடங்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் இப்படைப்பின் சிரஞ்சீவித் தன்மை யதார்த்தமும் , உண்மையும் சார்ந்த படைப்புகளின் அழியாத் தன்மையைக் கொண்டாடுகின்றன. இந்நாவல் முன்வக்கும் தலித்துகளின் பிரச்சனைகளும், சமூக வாழ் நிலையும் இன்னும் மாறாமல் இருப்பதற்கு இப்படைப்பே சாட்சியாகிறது. இப்படைப்பின் சிரஞ்சீவித் தன்மையை உறுதி செய்கிறது.சோமனின் உடுக்கை தலித்துகளின் எழுச்சிக் குரலின் வெளிப்பாடாகும். அவன் தன் கோபத்தை வருத்தங்களை மகிழ்ச்சியை வெளிப்படுத்த எண்ணுகிற போதெல்லாம் உடுக்கையை முழங்க வைக்கிறான். அவனின் குரல் சமூகத்தில் எடுபடாதபோது அவனின்குரலாய் உடுக்கையாலி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. உடுக்கையொலி காட்டின் அமைதியை மட்டுமா குலைக்கிறது. காடு மற்றும் நிலம் சார்ந்த உடைமையாளர்களின் ஆதிக்கக் குரலுக்கு எதிர்வினையாகவும் இருக்கிறது. அவனின் உடுக்கையின் வேகத்திற்கு அவனின் குடும்பத்தினர் கூட ஆட முடியாத வேகம். அசுர வேகத்துள் அடங்கிய நூற்றாண்டுகளின் கோபம். அடிமையாகவே இருந்து அடிமையாகவே சாகப் பிறந்தவர்களின் கோபம். இந்தக் கோபமும் ஆற்றாமையும் தான் இந்த நாவலை உன்னதப் படைப்பாக்கியிருக்கிறது.அவனது வாழ்க்கைக்குச் சிறப்பென்று எதுவும் இல்லாதது போலவே அவனின் உடுக்கைக்கென்றும் தனிச் சிறப்பு எதுவும் இல்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அவனின் வயது அவனுக்குத் தெரியாது. நூறு வயசு இருக்குமா என்றால் என்னமோப்பா இருக்கும் என்பான். பெரிய எசமானுக்கும் எனக்கும் ஒரே வயசுதானாம் என்று குறிப்பிடிபவனுக்கு தன் வாழ்நாள் ஆசையாகவும், தலை முறைக் கனவாகவும் "நாலு வெரப்பாடு நீளத்துக்கு ஒரு துண்டு நெலம் எனக்கு குத்தகைக்கு" என்பதாகத்தான் இருக்கிறது. சொந்த நிலம் என்ற கனவைக்கூடத் தகர்த்துவிட்டு குத்தகைக்கு நிலம் என்றே சுருக்கிக் கொள்கிறான். புலையன் விவசாயி ஆவதா என்றக் கேள்வியால் நிலவுடமையாளர்களின் புருவங்கள் உயர்வதிலிருந்து, தவிர்க்க இயலவில்லை. அவனின் கனவை சமூகம் நிராகரித்தே வந்திருக்கிறது. கிரிஸ்துவனாகிவிடு நிலம் கிடைக்கும் என்ற கோரிக்கைவிடுகிறபோது சபலப்படுகிறான். புலயன் வாழ்க்கை, வட்டிக்காரனின் கொடுமை, கடனைத் தீர்க்க வெவ்வேறு காடுகளுக்குச் சென்று வேலை செய்து உழக்க வேண்டிய கட்டாயம், தனது குடும்பத்தினரை இந்த உழைச்சலில் பறிகொடுப்பது போன்றவை அவனை சஞ்சலப்பட வைக்கின்றன. உழைப்பு, பெண் என்பதாலான உடம்பின் ஆக்கிரமிப்பு இவையெல்லாம் உணர்ந்த அவனின் மகள் பெள்ளிக்கு இந்த சஞ்சலத்தில் உடன்பாடு வந்துவிடுகிறது.அவன் வழக்கமாய் தினமும் கடந்து போகிற பஞ்சுர்லி பூத கோயில் முன் தன்னையறியாமல் தடுமாறி நின்று " தான் பாதிரி மதத்துல சேரப் போறவன். இதுக்கு மேலே பஞ்சுர்லிக்கு முட்டி போடுவதா" என்ற சஞ்சலம் ஆட்டுவிக்கிறது. அந்த சஞ்சலம் ஒரு பெரிய நாவலுக்கான விடயம். ஆனால் அதை கரந்த் ஒரு பத்தியில் முடிவுக்குக் கொண்டு வந்து விடுகிறார் இப்படி:" தலை முறத் தலைமுறையாக நம்பி வந்திருக்கிற தெய்வத்தை மறந்துவிட்டு தான் இப்படியொரு அடாத செயலை செய்வது சரியில்லையென்று பட்டது அவனுக்கு.பாதிரி மதத்துக்காரங்க சாவறதில்லையா. சுகம் துக்கம் இரண்டுமே எப்பிடியோ ஒரு வகையில் கிறித்துவங்களுக்கும் வரத்தானே செய்யுது. என்பதைப் போன்ற எண்ணங்கள் அவனை குழப்பின. ஒரு பக்கம் தான் நம்பிய தெய்வத்தை - பஞ்சுர்லி பூதத்தை மறந்து போய்விட்டால் சாகிற வரைக்கும் அதோட தொல்லையிலிருந்து தப்ப முடியாதே என்ற அச்சம் தோன்றியது.அங்கேயே நின்று யோசித்துப் பார்த்தான். கடைசியில் துணிவோடு "என்னவானாலும் சரி, இருக்கிறபடியே இருந்துவிட்டு , வந்ததை பட்டுட்டு போறேன்" என்று எண்ணிக் கொண்டு குடிசைக்கு திரும்பினான்.ஒரு மகா நாவலில் 1000 பக்கங்களுக்கு மேல் விவரிக்க வேண்டியத் தளம் இந்நாவலுக்கு இருந்தாலும் அதை 150 பக்க நூலாக கரந்த் உருவாக்கியிருப்பதில் படைப்பின் தீவிரம் இன்னும் கூடுகிறது.(மகா நாவல்களையே கனவாகக் கொண்டிருக்கும் தமிழ் படைப்பாளிகளுக்கு இச் செய்தி)பெள்ளி தன்னை இழந்து போகிற செய்தி அவனை மோசமாக்கிவிடுகிறது. அவனது உடம்பு அவனது குடும்பம் வாழ எந்த வகையிலும் உடந்தையாக இருந்துவிடக்கூடாது என்ற நினைப்பில் எல்லாவற்றையும் இழக்கிறான். பெண்மையின் மீதான களங்கத்தை அவனால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அது சாவுக்கு இணையானது. அதற்கு காரணமாய் தானும் இருப்பது அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. எல்லா நன்றிக் கடனையும் தீர்க்கிறான். கலப்பையையும் உடைத்து தீயிடுகிறான். சாம்பலாவதை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனின் ஜீவ ஆதாரம் உடுக்கை ஒலி தொடர்கிறது அவனின் மரணம் வரைக்கும்.இந்த நாவலில் காடு மட்டும் காடு சார்ந்த களத்தை விவரிப்பதிலும் , அவர்களின் மொழியை கையாள்வதிலும் தேர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கன்னட மொழிச் சொற்களில் சிலதை தமிழ் வாசகனும் சரியாகொணர்ந்து மொழிபெயர்ப்பின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் அச்சொற்களில் சிலதை அடைப்புக் குறிக்குள் கோடிடுகிறார். அவர் அவ்வாறு அடிப்புக் குறிக்குள் தந்திருக்க வேண்டிய அவசியம் பற்றியும் சில வார்த்தைகள் மேலும் யோசிக்க வைக்கின்றன. கன்னடம், மலையாளம் , ஆங்கிலப் படைப்புகளைத் தொடர்ந்து மொழி பெயர்ப்பு செய்து வரும் சாகித்திய அகாடமி பரிசு பெற்ற தி.சு. சதாசிவம் என்ன வகையான படைப்புகள் கன்னடத்திலிருந்து தமிழுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பதில் சரியான தேர்வும் , அக்கறையும் கொண்டு செயல்படுவதன் அடையாளமே இந்த நாவல்.'சோமனதுடி' திரைப்படம் தரும் பாதிப்பை மீறி நல்ல இலக்கிய வாசிப்பு அனுபவத்தை இந்த நாவல் தர வேண்டும் என்ற அக்கறையில் அவர் செயல்பட்டிருப்பதில் பல்வேறு திரைப்பட , சின்னத்திரைத் தொடர்தீவிர முயற்சிகளில்