சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 9 மே, 2008

சுப்ரபாரதிமணியன் : படைப்பும், பகிர்வும்"




ஒரு படைப்பிற்கான எல்லை என்பதை வரையறுக்க முடியாது. வாசிப்பு, விமர்சனம், விமர்சனத்தின் மீதான விமர்சனம் என் படைப்பு மீதான கருத்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. படைப்பு மீதான விமர்சனம் ஒரு படைப்பு எனவே கொள்ளும் வகையில் உள்ளது. படைப்பு மீதான விமர்சனங்கள் தொகுக்கப்படுவது இன்றைய சூழ்நிலையில் புதியதல்ல. ஒரே படைப்பாளியின் பல்வேறு படைப்புகள் மீதான பல்வகை விமர்சனங்களின் தொகுப்பாக வந்துள்ள நூல் " சுப்ரபாரதிமணியன்: படைப்பும், பகிர்வும் " என்பதாகும். சுப்ரபாரதிமணியன் தமிழின் மிக முக்கிய எழுத்தாளர். மூத்த, இளைய படைப்பாளிகளுக்கு பாலமாக இருப்பவர். எதார்த்தத்துக்கும், நவீனத்துவத்துக்கும் இடைப்பட்ட வெளியில் சஞ்சரிப்பவர்..இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இவரின் படைப்புகளில் தேநீர் இடைவேளை ( நாவல்), சமையலறைக்கலயங்கள் ( நாவல் ), சாயத்திரை (நாவல்), பிணங்களின் முகங்கள் (நாவல்) , சுடுமணல் (நாவல் ) , மற்றும் சிலர் (நாவல்), தொலைந்து போனக் கோப்புகள் (சிறுகதைத் தொகுப்பு) உட்பட 15 சிறுகதைத்தொகுப்புகள், படைப்பு மனம் ( கட்டுரைகள்),மண் புதிது ( பயண அனுபவம் ) ஆகிய நூல்கள் பற்றின ஆய்வுகள், விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பு இது. இப்படைப்புகளை கோவை ஞானி, நகுலன், மேலாண்மை பொன்னுசாமி, ஜெயமோகன், மோகனரங்கன், உட்பட பத்தொன்பது படைப்பாளிகள் ஆய்வும் விமர்சனமும் செய்திருக்கின்றனர். இவர்கள் மூன்று தலைமுறை படைப்பாளிகள். இக்கட்டுரைகள் சுப்ரபாரதிமணியன் பற்றின ஒரு கருத்தரங்கில் இடம் பெற்றவையும், முன்பு வெளி வந்த சில கட்டுரைகளும் ஆகும். ஒவ்வொரு பார்வையும் ஒவ்வொரு நோக்கில் உள்ளது. "தேநீர் இடைவேளை " குறித்து எழுதிய கோவை ஞானி " பின் நவீனத்துவ சித்தரிப்புகள் என்பன தமிழ் இலக்கிய சூழலில் ஒரு பெரும் கவர்ச்சியாகப் பேசப்பட்டு வருவதில் இருந்து படைப்பாளிகள் தப்ப முடியவில்லை. சுப்பாரதிமணியனும் "சாயத்திரை " நாவல் தொடங்கி இத்தகைய எழுத்துமுறையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்" என ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார். மார்சியப் பார்வையில் எழுதப்பட்ட விமர்சனமாக உள்ளது. ஞானி போல அவரவர் பார்வையில் விமர்சனத்தை வேறு வேறு கோணத்தில் முன் வைத்தாலும் பெரும்பான்மையானவை சுப்ரபாரதிமணியனின் பொதுப்பண்புகளான எழுத்து ஆற்றல், பாத்திரப் ப்டைப்பு, சமூக அக்கறை, வடிவ யுத்தி, வெளிப்பாட்டு நேர்மை ஆகியவற்றை சுட்டுக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரபாரதிமணியனின் பன்முகத்தன்மையை எடுத்துக் காட்டுகின்றன. சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் வாழ்வியல் பிரச்சனைகளை முன்வைத்துள்ளது. சூழல் குறித்தும், தொழிலாளர் வஞ்சிக்கப்படுவது குறித்தும் பெண்கள் சுரண்டல் குறித்தும் படைப்புகளிலிருந்து உள்வாங்க முடியும்."சமையலறைக் கலயங்கள் " ஒரு பெண்ணிய நாவல் என் அடையாளைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நாவல் குறித்து விமர்சித்த பத்மாவதி விவேகானந்தன் " 21ம் நூற்றாண்டின் புதுயுகப் பெண்களை இந்த நாவலில் காட்டியிருப்பதற்கு பெண்ணுலகம் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறது. " என் புகழாரம் சூட்டி இருக்கிறார். இது பெண்ணியப் பார்வை எனினும் உண்மையே. அவரின் படைப்பெங்கும் பெண்ணிய சிந்தனை விரவிக் கிடக்கிறது என்பதை வசிப்பினூடே அறிந்து கொள்ள இயலும்.தன் அனுபவத்தையோ அல்லது பிறர் அனுபவத்தையோ உள்வாங்கி கலந்து எழுதும் படைப்பே வெற்றி அடைகிறது. நவீன இலக்கியத்தை எழுத வரும் படைப்பாளன் மற்றொரு சவாலையும் எதி கொள்ள வேண்டியுருக்கிறது.சமூக அவலங்களையும் சுட்டிக் காட்ட வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படுகிறது.அதுவும் சிற்றிதழ் எழுத்தாளர்கள வணிக இதழ்கள் அவ்வப்போது தத்தெடுத்துக் கொள்ளும் இன்றைய சூழலில் சிற்றிதழ் சார்ந்து இயங்குபவர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டி உள்ளது. கம்பி மேல் நடக்கும் இக்காரியத்தில் தவறி விழுந்து புரண்டு போகாமல் இருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுப்ரபாரதிமணியன் " என படைப்பாளி மீதான தன் கருத்தைத் தெரிவித்துள்ளார் வளவ துரையன். இவரும் ஒரு சிற்றிதழாளர், சிறுகதையாளர் என்பது இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது. விமர்சகர் குறிப்பிட்டது உண்மையே என் சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் பறைசாற்றுகின்றன. அவரின் படைப்புகளில் அனுபவம் ஒரு மையப்புள்ளியாக உள்ளது. என இதர விமர்சகர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். " பிறரின் அனுபவங்களை தன் அனுபவம் போல் எழுத வல்லவனே நிலைத்து எழுத முடியும். ஆனால் இது சாதாரண விசயம் அல்லவே.கொஞ்சம் புரண்டாலும் இவன் வேறு அவன் வேறு என்றாகி விடும். இது ஒரு திறமை. டெலிபதி போல் பிறனில் இருக்கிற தன்னை வாங்கிக் கொண்டு மொழி பெயர்ப்பது இந்தத் திறமை அபாரமாக வாய்த்திருக்கிறது. " என ஜெயந்தன் அக் கூற்றை உறுதிப்படுத்தியுள்ளார்.. ஒரு படைப்பாளன் தனக்கு நேரிடும் அனுபவங்களை படைப்பாக்குவது பற்றி விளக்கமாகச் சொல்கிறார்." என " படைப்பு மனம்" குறித்த தன் கருத்தை முன் வைக்கிறார் பேராசிரியை புவனேசுவரி.சுப்ரபாரதிமணியன் ஒரு தொடர் படைப்பாளி. எழுத்தை ஓர் இயக்கமாகவே கொண்டு இயங்குபவர். அவரின் இடைவிடாத செயல்களுக்கு அடிப்படை திருப்தியின்மை என்னும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது. சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் ஒரு பார்வை " மூலம் க மோகனரங்கன் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளார்." எழுத்தாளனின் இந்த சுயதிருப்தியின்மை என்பதுதான் அவன் எழுத்தை அதன் தீவிரத்தன்மையைக் காக்கிறது எனலாம். " என்கிறார். எழுதியதைத் திரும்பப் படிப்பது எனக்கு அதிருப்தி தருகிறது. திருப்தியின்மை விசூவரூபம் எடுக்கிறது. ' என சுப்ரபாரதிமணியனின் கூற்றையே சான்றாகக் கூறியுள்ளார் எந்தவொரு படைப்பாளிக்கும் இது பொதுவான குணமே. அதிருப்தியுறும் மனமே அடுத்த படைப்புக்கு ஆயத்தமாகிறது, படைப்பு மனம் தன்னிறைவு பெற்று விட்டால் படைப்பு தொடராது.ஒரு படைப்பாளியின் படைப்புகள் குறித்து பலர் எழுதியுள்ள இத்தொகுப்பில் ஒரு படைப்பாளரான சுப்ரபாரதிமணியனே " நானும் என் படைப்புகளும் " என்னும் கட்டுரையை இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க காலத்தில் சுய அனுபவம் இருந்தாலும் பின்னர் வேறு முகங்களுடனேயேவெளிப்பட்டது என்கிறார். " எழுத்தும் சமூகமும்" மூலமும் படைப்போடு எப்படி தன்னைப் பொருத்திக் கொள்வது எழுத்தாளனின் அனுபவத்தை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பது தேர்ந்த வாசகனுக்கு பெரிய சிக்கலாய் அமைவதில்லை என வாசகன் குறித்து விவரம் தருகிறார். நிறைவாக " குரல் கொடுக்க முடியாதவர்களின் குரலாக அவன் வெளிப்படுகிறான். இந்தக் குரலே சமூகத்தின் குரலாகவும் அமைந்து எழுத்தாளனை சமூக மனிதனாக்குகிறது" என்பது ஒரு படைப்பாளனை பெருமைப்படுத்துவது ஆகும். படைப்பாளன் சமூக சிந்தனை உள்ளனவனாகவே இருக்க வேண்டும் என்கிறார். அவ்வாறே சுப்ரபாரதிமணியனையும் அடையாளம் காண்கின்றனர் விமர்சகர்கள். இலக்கிய உலகத்துக்கும் அடையாளப்படுத்தியுள்ளனர்.கனிமொழி கருணாநிதி, கா சு வேலாயுதன், செ. ராதா ஆகியோர் படைப்பாளரை நேர் கண்டதும் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன. நேர்காணலில் படைப்பாளரின் முமுமை வெளிப்பட்டுள்ளது. வாழ்வின் பின்புலமும், படைப்பின் மூலமும் அலசப்பட்டுள்ளது." சுப்ரபாரதிமணியன் : படைப்பும், பகிர்வும் " என்னும் இத்தொகுப்பு அவரின் பன்முகத்தன்மையை, படைப்பாளுமையை, படைப்பின் பின் புலத்தையும் படைப்பாளியின் பலம், பலவீனத்தை குறித்து ஒரு புரிதல் ஏற்படுத்தியது. ஒரு படைப்பு குறித்து அல்லாமல் பல்வேறு படைப்பு பற்றி கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது சிறப்பு. ஒரு படைப்பாளியின் படைப்பு மீதான விமர்சனங்களை தொகுத்துத் தருவது படைப்பாளரை கெளரவப்படுத்தும் செயல். தொகுத்த கே பி கே செல்வராஜ் பாராட்டுக்குரியவர். இலக்கிய உலகம் தொகுத்தவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது. ஒரு படைப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான பல கூறுகளை உள்ளடக்கியுள்ளன கட்டுரைகள். ஒரு விமர்சனம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கும்சான்றாகவும் உள்ளன. விமரிசனங்கள் படைப்புகள் குறித்தே பேசியுள்ளன. படைப்பாளியை எங்கும் காயப்படுத்தாது விமர்சனங்கள் நேர்மையாக இருப்பது ஆரோக்கிய இலக்கியத்திற்கு அடிப்படை. இத்தொகுப்பு படைப்பாளருக்கு ஒரு கையேடு. விமர்சகர்களுக்கு ஒரு வழி காட்டி. ஆராயச்சியாளர்களுக்கு ஒரு பெட்டகம் என பலருக்கும் பயன்பாடுமிக்கது.வெளியீடு: காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்,