சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 19 அக்டோபர், 2023

எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் 9486101003 இயக்குநர் இரா. ரவிக்குமார் குறும் படம் சுமங்கலி - இரா. ரவிக்குமார் - ஒரு பார்வை - பொன். குமார் மாற்று ஊடக முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருபவர் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். உலகப்படங்களையும் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வருபவர்., குறும்பட, ஆவணப்படத் துறையிலும் பங்கெடுத்து வருபவர். எட்டாம் வகுப்பு, சுழல் என்னும் குறும்படங்கள் மூலம் குறும்பட உலகில் ஓரிடத்தைப் பிடித்து இருப்பவர் இரா. ரவிக்குமார். இருவரும் இணைந்து அளித்திருக்கும் குறும்படம் ' சுமங்கலி'. எழுத்து சுப்ரபாரதிமணியன். ஒளிப்பதிவு இயக்கம் இரா.ன்ன ரவிக்குமார்.னனனனன்ன மில் முதலாளிகள் பெண் தொழிலாளிகளுக்கு ' சுமங்கலி' திட்டம் என்னும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தி மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்து மூன்றாண்டுகளுக்குப் பின் தொகை தருவதாகக் கூறி பின்னர் ஏமாற்றி வருகிறது. ஏமாற்றுவது என்பது பெண்களை ஒழுக்கம் கெட்டவள் என குற்றஞ்சுமத்தி வெளியேற்றுவது. இத்திட்டத்தில், இம் மாய வலையில் ஏராளமான பெண்கள் சிக்கியுள்ளனர். இப்பிரச்சனை திருப்பூர் மில்களில் மிகுதியாக நடைமுறையில் உள்ளன. ' தேநீர் இடைவேளை' என்னும் நாவல் உள்பட பல படைப்புகளின் மூலம் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் இத்திட்டத்தை எதிர்த்துள்ளார். அம்பலப்படுத்தியுள்ளார். பெண்களுக்கு புரியச்செய்துள்ளார். விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். ' கூண்டில் அடைபட்ட பெண் தொழிலாளர்கள்' என்னும் கட்டுரைத் தொகுப்பு மூலமும் இச் ' சுமங்கலி' திட்டத்தை விரிவாக எழுதி அதன் உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளார். இத்திட்டத்தை மனிதத் தன்மையறறது மற்றும் சுரண்டல் தன்மையானது என சாடியுள்ளார். இத்துடன் இத்திட்டத்தை மையமாக்கி ' சுமங்கலி ' என்னும் தலைப்பிலே ஒரு கவிதையும் எழுதியுள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். கவிதையைக் காட்சிப்படுத்தியதே ' சுமங்கலி' என்னும் இக்குறும்படம். வரிக்கு வரி அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவு செய்து இயக்கிய இரா. ரவிக்குமார். காட்சிகளின் மூலம் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார். கவிதையின் கருவைச் சிதையாமல் தந்துள்ளார். கவிதை பெண் குரலாக ஒலிக்கிறது. பெண்களின் பிரதிநிதியாக பேசுகிறது. ' சுமங்கலி' திட்டத்தைக் கூறி '" முப்பதாயிரம்' கனவை ஏற்படுத்தி பெண்களை அழைத்து வந்ததைக் கூறுகிறது. முப்பதாயிரம் தொகையை எத்தனை பெண்கள் வாங்கியிருப்பார்கள் என்னும் வினாவையும் எழுப்புகிறது. தினமும் 16 மணி நேரம் பணி என்றும் மாதத்தில் ஒரு நாளே விடுமுறை என்னும் உழைப்புச் சுரண்டலையும் சொல்கிறது. ஊருக்குப் போன பெண்களில் பலர் பணிக்கு திரும்பவில்லை என்றும் சுவரேறி தப்பித்துச் சென்று விட்டனர் சிலர் என்றும் கூறுகிறது. பெரும்பாலும் மச்சான்கள் குடித்து விட்டுத்தான் வருவார்கள் என்பது ஆண்கள் மீதான விமர்சனம். ' சுமங்கலி' என்னும் அட்டை கழுத்தில் தொங்கவிட்படுவதை அவமானமாகக் கருதுகிறாள். ஒரு நாயின் கழுத்தில் தொங்கவிடப்பட்டது போல கூசுகிறாள். ' சுமங்கலி' என திட்டத்தின் பேரால் அழைக்கப்பட வேண்டாம் என்றும் உண்மையிலேயே ' சுமங்கலி' யாக விரும்புவதாகவும் கவிதை விவரிக்கிறது. தாலியைக் கொடுத்து விட்டு சுமங்கலி அட்டையை வாங்கிக் கொண்டாலும் சரி என்னும் இறுதி வரிகள் பெண்களின் கோரிக்கையாக வெளிப்பட்டுள்ளது. இக்கவிதை' ச்மங்கலி' திட்டத்தை மறுக்கிறது உழைப்பைச் சுரண்டும் முதலாளிகளை எதிர்க்கிறது சிக்கிச்சுழலும் பெண்களுக்கு விடுதலையைக் கோருகிறது. இருப்பவர்களுக்கு எச்சரிக்கிறது. விழிப்புணர்வை ஊட்டுகிறது. கவிதையாக வாசிப்பதை விட காட்சியினூடாக கவிதையைக் கேட்பது தாக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. எழுதிய சுப்ரபாரதி மணியனும் இயக்கிய இரா. ரவிக்குமாரும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்துள்ளனர். உடன் நடித்து உதவியது சு. சுபமுகி. கவிதையின் நாயகியாக குறும்படத்தில் காணப்படுகிறார். இயல்பாக இயக்கத்திற்குக் கட்டுப்பட்டுள்ளார். படைப்பின் தன்மையை அவரிடம் முழுமையாகக் காணமுடியவில்லை. பெயர். சு. சுபமுகி. இவர் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் மகள் இவரும் ஒரு கவிஞர். கவிதையைக் காட்சிப்படுத்துவது குறும்படத்துறையில் புதிதல்ல எனினும் ' சுமங்கலி' என்னும் ஏமாற்றுத் திட்டததை வெளிச்சப்படுத்தியிருப்பதால் சிறப்புப் பெறுகிறது. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனுக்கும் இயக்குநர் இரா. ரவிக்குமாருக்கும் பாராட்டுக்கள். குறும்படத்துறையில் ஒரு கலைக் குடும்பத்தின் வாரிசாக பிரவேசித்திருக்கும் சு. சுபமுகி வாழ்த்துகள். வழங்கியிருக்கும் ' திருப்பூர் மக்கள் அமைப்பு' க்கு தன்றி. தொடர்புக்கு எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் 9486101003 இயக்குநர் இரா. ரவிக்குமார் 9894982525. நன்றி : கனவு