சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 31 மே, 2021

கோமணம்-சுப்ரபாரதி மணியன் முன்னேற்றப் பதிப்பகம்-முதல் பதிப்பு 2016 விலை-80/ பக்கங்கள்- 112 வகை: நாவல் தைப்பூசத்திற்காக பழநிக்குச் செல்லும் ஒரு பாதயாத்திரைக் குழுவில் உள்ள கதாப்பாத்திரங்களின் வேறுபட்ட சிந்தனையோட்டத்தோடு சமகாலச் சமாச்சாரங்களையும் நாவலாசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார். அளவில் சிறிய, வாசிப்பதற்கு எளிய நாவல். உரையாடல் மொழிகளும் சரி, விவரணைகளும் சரி மிக நேரடியாக உள்ளன. கொங்கு வட்டார மொழி கதாப்பாத்திரங்களின் உரையாலில் உள்ளது. அதுவும் கதாப்பாத்திரங்கள் திருப்பூர்வாசிகள் என்பதால் வட்டார வழக்கோடு நகர வழக்கும் கலந்துள்ளன என்பதையும் நாம் கவனிக்கலாம். கோமணம் என்ற தலைப்பு முருகனின் ஆண்டிக் கோலத்திற்கான குறிப்பு. அதை ஏலம் கூட விடுவார்கள். முருகனின் கோவணத்தை வைத்திருந்தால் அது நன்மை தரும் என்பது பக்த நம்பிக்கை. நெசவாளிகள், பனியன் உற்பத்தியாயாளர்கள், தொழிலாளர்கள் என்று ஒரு அய்ம்பது பேர் கொண்ட சிறு குழு அப்பகுதியிலுள்ள பூசாரி ஒருவரின் ஒருங்கிணைப்பில் பழநிக்கு யாத்திரை செல்கிறது. அவர்கள் நடந்தும், களைப்புறும்போது வாகனங்களிலும் தங்கள் வழியைக் கடக்கின்றனர். இடையில் அங்கங்கே தோட்டங்களிலும், வீடுகளிலும் ஓய்வெடுத்துச் செல்கின்றனர். அப்போது அதற்காக இடத்தின் உரிமையாளர்களுக்குத் தொகை செலுத்தும்படி காலம் மாறிப்போனதையும், பக்தர்களைவிட குடிகாரர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்ற கவலையுடனும் பூசாரி ஜெகந்நாதன் இருக்கிறார். தோட்டத்தின் உரிமையாளர் சாயப்படட்டறை எப்படித் தன் நிலத்தை மலடாக்கி, நீரை நஞ்சாக்கியிருக்கிறது என்று நகரத்தின் மக்கள் பொருளுற்பத்தியில் கொண்டுள்ள பற்றுதான் இந்தத் தொழில்களை வரைமுறையின்றிச் செய்ய வைக்கிறது என்று ஆதங்கிக்கிறார்.தமிழத்தின் இரசாயன உரப் பயன்பாட்டைப் பற்றிய விவரணைகள் ஒரு கதாப்பாத்திரம் வாசிக்கிற கட்டுரையில் வருகிறது. இந்த பக்தர் கூட்டத்தில் இரண்டு நாத்திகவாதிகள் இணைந்து பயணிக்கிறார்கள்; ஒரு அனுபவத்திற்காக. எவ்வளவு நாள் இவர்களுடன் இருக்க முடிகிறது என்று முயன்று பார்க்கிறார்கள். தங்கள் அடையாளம் வெளிப்பட்டுவிடாமலும் அதேநேரம் தங்கள் கொள்கைகளுக்கு விரோதமில்லாமலும் தாமரையிலைமேல் நீர்போல அவர்கள் செல்கிறார்கள்; ஒருவேளை உண்மை தெரிந்துவிட்டால் கிளம்பிவிடலாம் என்ற முடிவோடு. ஒருநாள் இரவு தங்கியிருக்குமிடத்தில் இருவரு.கும் பூசாரி விபூதி இடுகிறார். மறுக்கமுடியாது என்பதால் பேசாமல் இருக்கிறார்கள். அடுத்தநாள் நாராயணன் மட்டும் யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்குக் கிளம்பிவிடுகிறான். பிறகு இராவணன் என்கிற மணியைத் தொடர்பு கொண்டு அவர் எப்போது விரும்புகிறாரோ அப்போது வந்துகொள்ளச் சொல்கிறான். கழகவாசியான மணி தன்னையும் மீறி ஓரிரு இடங்களில் கடவுள்மீதான ஐய்யப்பாட்டை லேசாக வெளிப்படுத்திவிடுகிறார். அதோடு பக்தர்களான அவர்கள் எவ்வாறெல்லாம் தங்கள் கருத்திலேயே முரண்படுகிறார்கள், சமரசமடைகிறார்கள் என்பதை கவனித்து.கொண்டேயிருக்கிறார். வழியில் ஒரு யாத்ரீகர் வாகனம் மோதி இறக்கும்போது கடவுளைப் பார்க்கப் போகிறவர்களைக்கூட கடவுள் கைவிட்டால் எப்படி என்ற சதாரண அவநம்பிக்கைதான் அவருக்கும் குழுவுக்குமான முரண்பாடே. அதில்தான் அவர்கள் இயங்குகிறார்கள்.தரிசனம் முடிந்தபிறகு ஊரில் நடந்த சில விபரீதங்களும், பிரச்சினைகளும் பக்தியால் தீர்த்துவிடாதவை என்ற யதார்த்தத்தை உரைத்தாலும் அவர்கள் முருகன் இதையெல்லாம் தீர்த்திடுவான் என்று வணங்குகிறார்கள். அந்த விடாப்பிடியான நம்பிக்கைதான் அவர்களை யாத்திரைக்கு ஊக்கப்படுத்துகிறது போல. ஆனால் கண்மூடித்தனமான பக்தி என்பதும் கண்டிக்கத்தக்கதே. விரும்பு கருத்துத் தெரிவி பகிர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வரை திரு.கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்கள் (1)தி பிளேக்(தமிழாக்கம்-கொள்ளை நோய்) (ஆல்பர்ட் காமுஸ்) (2)அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ) (3)வெண் முரசு(ஜெய மோகன்) (4)புயலிலே ஒரு தோணி (ப.சிங்காரம்) (5)அழகர் கோவில் (தொ.பரமசிவன்) (6)அடிமையின் காதல் (ரா.கி ரங்கராஜன்) (7)மிர்தாதின் புத்தகம் (புவியரசு) (8)எஸ்தர்-சிறுகதை (வண்ண நிலவன்) (9)தொடுவானம் தேடி(தில்லைராஜன்,அருண்குமார்,சஜி மேத்யூ) (10)கோபல்லபுரத்து மக்கள்(கி.ராஜநாராயணன்) (11)நாளை மற்றுமொரு நாளே (ஜி.நாகராஜன்) (12)ஜே.ஜே:சில குறிப்புகள் (சுந்தர ராமசாமி) (13)கரைந்த நிழல்கள்(அசோகமித்திரன்) (14)கூள மாதாரி (பெருமாள் முருகன்) (15)நிறங்களின் மொழி (தேனி சீருடையான் ) (16) வாசிப்பது எப்படி? (செல்வேந்திரன்)