சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 18 ஏப்ரல், 2019

கழிவு நீர் மேலாணமை:
சுப்ரபாரதிமணியன் குங்குமம் இதழில் வெளிவந்தது 4/19
நோட்டா கழிவு நீருக்கு... ஓட்டு சுத்திகரிப்பு நீருக்கு
நாம் குடிப்பது கழிவுநீர் தானே..! கழிவு நீர் மேலாணமை: :             சுப்ரபாரதிமணியன்
பருவமழை பெய்கிறது. தண்ணீரும் பாய்ந்து ஓடி ஆறு, குளம், குட்டை, ஏரிகளில் கலக்கிறது. ஆனாலும் அவற்றை குடிநீராகப் பயன்படுத்த முடிவதில்லை. கார்ப்பரேட் கம்பனிகளால் கழிவு நீராக்கப்பட்ட நீரை சுத்திகரித்து குடிநீராகக் குடித்துக் கொண்டிருக்கிறோம்.
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகம் முழுவதும் ஆறு, குளம் , குட்டை கால்வாய்கள் அனைத்திலும் நல்ல தண்ணீராகவே    இருந்தது. ஆனால் இன்றைக்கு  அனைத்தும் சாக்கடை நீராக மாற்றப்பட்டு விட்டது. இது எப்படி நடைபெற்றது. கழிவுநீர் மேலாண்மையைச் சரியாகச் செய்யாததே காரணம். நல்ல தண்ணீரில் மீன், தவளை, புழு, பூச்சி என் அனைத்தும் வாழ்ந்து தண்ணீரைச் சுத்தப்படுத்தின. ஆனால் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கழிவுநீரை நல்ல தண்ணீரில் கலந்து விட்டு நீர் வாழ் உயிரினங்களை அழித்து விட்டோம். சாக்கடையான கழிவு நீரை நிலத்தடியில் படிப்படியாக இறக்கி குடிப்பதற்கு தகுதியில்லாத நீராக மாற்றி விட்டோம். இன்றைக்கு தொழில்நுட்பம் என்ற பெயரில் சுத்திகரித்து குடித்து வருகிறோம்.,
நன்னீர் ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், குட்டைகளும் சாக்கடை நீராக ஆக்கப்பட்டுவிட்டன. நிலத்தடி நீரை ஆழ்துறை கிணறுகள் அமைத்து உறிஞ்சுவதோடு அல்லாமல் நிரப்பரப்பில் ரசாயனங்களை தூவி குடிப்பதற்கு தகுதியில்லாத நீராக மாற்றிவிட்டோம். பின்னர் அந்த கழிவுநீரையே சுத்திகரித்து குடித்துக் கொண்டும் இருக்கிறோம். இதற்கெல்லாம் கழிவுநீர் மேலாண்மையை சரியாக செய்யாததே காரணம்.

சிங்கப்பூரில் திருப்பூர்காரர் ஒருவரைச் சந்தித்து உணவு விடுதி மேசையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது எதிரில் இருந்த மினரல் வாட்டர் பாட்டிலைப் பார்த்தபடி அவர் சொன்னார்:
“ திருப்பூர்க்காரர்கள் சாயப்பட்டறை நீரை  , கழிவு நீரை இப்படி பாட்டிலில் அடைத்து குடிக்கும் காலம் பத்து ஆண்டுகளில் வந்தாலும் ஆச்சர்யமில்லை “ என்றார்.  திருப்பூரின் சாயம் சார்ந்த சுற்றுச்சூழல் பிரச்சினை, கழிவு நீர் மேலாண்மையில் அக்கறையில்லாதது குறித்த கோபத்தில் அவரின் வார்த்தைகள் என நினைத்தேன்.. சிங்கப்பூர் உணவு விடுதியில் உட்கார்ந்ததும் நம் ஊர் போல் தண்ணீர்  தர மாட்டார்கள் . தண்ணீ என்ன வேணும்  “ என்று கேட்பார்கள். மினரல் வாட்டரா, குளிர்பானமா, பீரா என்ற கேள்வி அதில் இருக்கும்.
இங்க இருக்கற மினரல் வாட்டர் அல்லது குடிக்கிற நீர் எங்க கழிவு நீரிலிலிருந்து தயாரிக்கப்பட்டது . எங்களின் 20 சதவீதம் குடிநீர் இப்படித்தான் கழிவு நீரிலிருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாய் மலேசியாவிலிருந்துதான்  சிங்கப்பூருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இங்கு வீட்டுக் கழிவு நீரை ஒன்றிணைத்து   கடலில் கலக்க வைத்து இவர்கள் எதிர்கொண்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தனி  “  என்றார். 
சிங்கப்பூரில் இருக்கும் பல பறவைகள் சரணாலயங்களுக்கும் காட்டுப்பகுதிகளுக்கும் சென்றால் அவர்கள் கழிவு நீர் மேலாண்மையில் அக்கறை கொண்டு  சக உயிரின்ங்களோடு எவ்வள்வு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பது தெரியும்
2030ல் இந்தியா குடிநீர் பற்றாக்குறை நாடாகும் போது கழிவுநீரிலிருந்து குடிநீர் தயாரிப்பது கட்டாயமாகிவிடும் . கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிப்பது கானல் நீர் போல் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஆகும் செலவு மிக அதிகம்.
தொழில்நுட்பங்களும் , தேவையும் கழிவு நீரை சுத்தமாக்கி குடி நீராகவும் விவசாயத்திற்கும் வீட்டு உபயோகத்திற்கும் ய்யன்படுத்த உந்திக்கொண்டிருக்கின்றன. வீட்டுக்கழிவு நீரை ( கழிப்பறை, குளியலறை சமையலறை )  உண்டாகும் இடத்திலேயே மூடிய நிலையில் வைத்து நுண்ணுயிர்கள், பூஞ்சைகள், அவற்றின் நொதிகளைக் கொண்டு சுத்திகரிக்கும் உயிரிய தீர்வை தண்ணீர் பற்றாக்குறை உள்ள பல நாடுகள் பின்பற்ற ஆரம்பித்து விட்டன. நெருக்கடி சூழல்கள் நம்மையும் நெருக்குகின்றன் அதை நோக்கி.
திருப்பூர் நொய்யல் முதல் சென்னை சைதாப்பேட்டை பகுதி வரை தெளிந்த நீர் ஓடியதை குளிக்க, குடிநீருக்கென்று பயன்படுத்திய காலம் இருந்தது.  இன்று திருப்பூரின் நொய்யல் சாயப்பட்டறை கழிவுகளாலும் வீட்டு கழிவு நீர் பெருக்காலும் ஓடுகிறது. சைதாப்பேட்டயில் கழிவு நீரே கறுத்த சாக்கடையாக ஓடுகிறது.
நிலத்தடி நீரின் மாசு பாட்டால் நிலத்தடி நீரின் ருசி மாறிப்போய் விட்ட்து. குளோரின் கலந்த நீரே எல்லாருக்க்கும்  என்றாகிவிட்டது. கோவையின் அத்திக்கடவு நீரின் ருசி அதை ஓடும் தங்கம் என்று சொல்ல வைக்கும் . தங்கம் என்றாலே விலை உயர்வுதானே. தண்ணீருக்கும் இந்த விலை உயர்வு எப்போதும்தானே... அல்லது அல்லது.. நெல்லிக்காய் போட்டு வைத்த ருசியா
 திருச்செந்தூர் நாளிகிணற்று நீர் கடலின் அருகில் இருந்தாலும் உப்பு கரிக்காமல் ருசியுடன் இருப்பது  தமிழ்க்கடவுள் முருகனின் அருமை என்றார் என் மனைவி. ராமேஸ்வரத்தில் இருக்கும் 27 தீர்த்தங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. அதற்கெல்லாம் காரணம் நிலத்தடி நீர் அந்தந்த இடத்தின் தன்மை, ருசியால் அமைந்திருப்பதுதான்.  இந்த அளவிலான நிலத்திற்கென்றான ருசி இன்று இல்லாமல் போய் விட்டதற்கு கழிவுநீர் நிலத்துள் சென்று கலப்பதேயாகும். முன்பெல்லாம் கழிவு நீரைத் தேக்க கண்மாய்கள் இருக்கும். இப்போது நதிகள் கழிவுகளின் ஓட்டமாகி விட்டது.திருப்பூரில் நொய்யலில் ஓடும் சாயப்பட்டறை நீரைத்தேக்க ஒரத்துப்பாளையம் அணை என்று ஒன்று வந்து ரொம்ப காலமாகிவிட்டது.
சாதாரண தொழில் நுட்பத்தில் கழிவு நீர் குடிநீராகி விடும்  அல்லது பயன்பாட்டிற்கான நீராகி விடும். . கழிவு நீர் தொட்டி அமைக்கையில் வாஸ்து பார்ப்பதில் உடன்பாடு இல்லாமல், தெற்குதான் சரி, கிழக்குதான் சரி என்று அது கட்டப்படாமல் இருக்கும் பல வீட்டுக்கதைகளும் உள்ளன.
     குடிநீர் பிரச்சினையின் முக்கிய சவால் இந்த் கழிவு நீர் தான். கழிவு நீர் மேலாணமை :இந்த பிரச்சினையைச் சுலபமாக்கிவிடும். கிராம்ம், ஊராட்சி, என்று ஆரம்பித்தால் போதும். சரி செய்து விடலாம். பாக்டீரியாக்கள் எதிலிருந்து உருவாகிறது என்பது ஆச்சரியமான விஷயமாகும். அவற்றை உருவாக்க எந்த ஆராய்ச்சிக்கூடமும் வேண்டியதில்லை. சாதாரணமாக நாம் பார்க்கும் குதிரையின் சாணத்தில் அந்த வகை பாக்டீரியாக்கள் தாமாகவே உருவாகும். பேசில்லஸ் பாக்டீரியாக்கள் அல்லது நொதிக்க வைக்கும் என்சைம்கள் தயார்
அவற்றை வாங்கி குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை கழிவறை பேஸினுக்குள் போட்டு, தண்ணீர் ஊற்றிவிட்டால் அவை உள்ளே சென்றுவிடும்.
இன்னொருவர் சொன்னது அனுபவத்தில்  : அதேமாதிரி, உதிர்ற இலை, பூக்கள் எல்லாத்தையும் ஒரு மூலையில் போட்டு சாணத்தைக் கரைச்சு தெளிச்சுவிட்டா, அதுல மண்புழுக்கள் உருவாகிடும். அதை வெச்சு மண்புழு உரம் வரும் ..  செப்டிக் டாங்க் கழிவு நீர்ல 'பேசிலஸ் சப்டாலிஸ்ங்கிற பாக்டீரியாவைக் கலந்து, அந்தத் தண்ணீரை நேரடியா செடிகளுக்கு விடலாம். இந்த பாக்டீரியா, மலத்தை சாப்பிடும். வெறும் தண்ணிதான் வெளியவரும். அவ்வளவு சுத்தமாக்கும்

சில மனித முயற்சிகள் இதன் சாதனைகளாக சமீபத்தில் நிற்கின்றன. இரண்டு உதாரணங்கள் கழிவு நீரை விவசாயத்திற்குப் ப்யன்படுத்தி வெற்றி கண்டிருப்பவர்கள் திருனெல்வேலி மாவட்டம் கீழ்ப்பாவூர் ஊராட்சியைச்சார்ந்த அதிசய புரம் மக்கள் . தமிழ்நாட்டின் முதன் முறையாக
வெற்றி பெற்ற இடம் அதிசயபுரம்.
 இன்னொன்று : தூத்துக்குடி கிருபை நகரைச்சார்ந்த ஜெல் ஜோசப் என்ற் ஓய்வு பெற்ற் 74 வயது அரசு ஊழியர். அவர் இதைச் சாதித்திருக்கிறார்
2030ல் இந்தியாகுடிநீர் பற்றாக்குறையாகும்  என்ற எச்சரிக்கையிலிருந்து விடுபட திருனெல்வேலி அதிசயபுரமும், தூத்துக்குடி கிருபை நகரும்   நம்பிக்கையாக நிற்கின்றன. ஓட்டளிப்போம் அதிசயபுரத்திற்கும் கிருபை நகருக்கும். 
குளம், குட்டைகள், ஆறுகளை ஆழப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும், தண்ணீர் சிக்கனம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளதால், கழிவு நீரைக் கூட ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
கழிவு நீர் தொட்டிச் சுத்தீகரிப்பில் உயிர் இழந்தவர்கள் தமிழகத்திலேயே  ஆயிரக்கணக்கான பேர். அவர்களுக்கும் அஞ்சலியாகவாவது நோட்டா கழிவு நீருக்கு... ஓட்டு சுத்திகரிப்பு நீருக்கு. என்று கோஷம் போடலாம்.
  .. subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com

Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003