சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 30 மார்ச், 2019

எல்லோருக்குமான சூழலியல் : சுப்ரபாரதிமணியன்



 இயற்கை,  பூமி இவை மனிதனின் சாதாரணமான ஆசைகளை சாதாரணமாகவே நிறைவேற்றும் ஆனால் மனிதனின் பேராசையை நிறைவேற்றாது “  என்ற காந்தியின் வாசகம் சூழலுடன்  ஒவ்வொரு கணத்திலும் இணைக்கப்படுகிறது
மனிதனின் பேராசையும் இயற்கையைச் சுரண்டி சூழல்களை தொடர்ந்து நாசம் செய்து கொண்டிருக்கிறது .இயற்கை வளங்களை மனிதர்கள் அதிக உரிமை எடுத்துக் கொண்டு சுரண்டு வருவதும் மனிதனின் பயன்பாட்டிற்காகவே இருப்பதாக எண்ணிக்கொண்டு செயல்படுவதை மறுக்கும்  சூழலியல் என்ற கோட்பாட்டை  ஆர்ணே  நேஸ் என்ற இயற்கையாளர் முன்வைக்கிறார் .
மனிதர்களை மையம் கொண்டிருக்கிற இந்த வகை அணுகுமுறையை இந்தச் சூழலியல் கொள்கைகள் விமர்சிக்கின்றன. பூமி மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. தங்களுக்காக இயற்கையை மாற்றி கொள்ளலாம்.  அது ஒருவகையில் எப்போவதாவது பெரிய அளவில் கேட்டை உருவாக்கும். .அப்படி கேடுகளை கட்டிக்கொண்டு மனிதனை பாதுகாத்துக்கொள்ள புது வரையறைகளை  உருவாக்கிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுவதை சூழலியல் கொள்கைகள் விமர்சிக்கின்றன.

 இதன் மூலம் கானுயிர் பல்லுயிர் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இயற்கை பின்பற்றி எளிய வாழ்க்கை நெறிகளை கடைபிடிக்க வேண்டும்.  இயற்கையை பெருமளவில் சேதப்படுத்தாமல் இருக்க அளவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையே சாரமாக இருக்க வேண்டியிருக்கிறது
.பூமியில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் சமமான உரிமை உண்டு. ஓர் உயிரினம் மீது மற்றொரு உயிரினம் அதிகாரம் செலுத்த எந்தவித உரிமையும் இல்லை . மனித உயிர்கள் மற்றும் மனிதர் அல்லாத பிற உயிரினங்களின் வாழ்வு மனிதர்களின் பயன்பாட்டிற்கான அளவுகோலை சார்ந்ததல்ல . மனிதன் தன் அடிப்படை தேவைகளை பூமியை கொண்டு நிறைவேற்றிக் கொள்ளலாம் . அதை மீறி பூமியின் செழுமையை சுரண்ட  மனிதர்களுக்கு உரிமையில்லை
         பெரியது , சிறப்புடையது   என்ற கருதுகோள்களில் உடன்பாடு இல்லாமல் எல்லா உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதை ஆர்ணே  நேஸ்  நேஸ் வலியுறுத்தி இருக்கிறார். .இயற்கை மனிதனால் சுரண்டப்படுகிறது.பூமியில் வாழும்  பிற உயிரினங்களும் சுரண்டப்படுகிறது. அதேபோல் சமூகச் சூழல்களில் பெண்களும் சுரண்டப்பட்டு வருகிறார்கள் . என்பதை ஆண் சூழலியல் அடிப்படைவாதம் என்று சொல்லப்படுவதுண்டு. இதற்கு எதிராக பெண் சூழலியல் முன்வைக்கப்படுகிறது.சூழலியலில்தான் எத்தனை பிரிவுகள்..
 உயிர்களை ஒருவரின் விருப்பமும் தேவையும் சார்ந்து பயன்படுத்திக் கொள்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று ஆர்ணே  நேஸ் சூழலியல் சொல்கிறது . மனிதர்களை முதன்மைப்படுத்தும் சூழலியல்  அணுகுமுறைக்கு  எதிரானதாக இருக்கும் வேளையில் மனிதனுக்கு எவ்விதத்திலும் எதிரானதல்ல என்று தீர்க்கமாகச் சொல்லப்படுகிறது .
      . இயற்கை சூழலில் தான் தேவை என்று வலியுறுத்திய ஆர்ணே  நேஸ்  காந்தியத்தில் நம்பிக்கையுடைய்வர்.  2009இல் l மரணமடைந்த நார்வேக்காரர்.  அவருக்குப் .  பிடித்தமானதை பற்றி பட்டியலிடலாம் ..
பிடித்த வர்ணம் பச்சை,  பிடித்த விலங்கு எலி பன்றி , , அவருக்குப் பிடித்த படம் ஆட்டன் பரோவின்  காந்தி திரைப்படம்  .
 கொல்ல வருவது பசுவென்றாலும்  கொன்று விடு என்றார் காந்தி. காயப்பட்டு துடிக்கும் விலங்குகளை காப்பாற்றுவதை விட கொல்வது சிறந்தது என்பார் அர்னே. 96 வயதில் இறந்தார் .
காந்தியைப் போலவே அவரை  பாதித்தவர் ராக்சல் கார்சன் . அவரின் மௌன வசந்தம் நூல் மூலமாகவும் . நல்ல மலையேற்ற பயிற்சியாளராகவும் விளங்கினார் . பெரிய அணைகளை கட்டுவதற்கு இடம் எதிராக போராட்டங்களை நடத்தியவர்.  இளம்வயதில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
 புரட்சி என்பது மனதில் அடியில் இருந்து தொடங்கப்பட வேண்டும். அது கொண்டு செல்லப்படும்  நோக்கம்,  செயல் முறைகள் குறித்து தெளிவாக சிந்தனைவேண்டும்.  புரட்சியோ போராட்டங்களோ மனிதர்களின் நுகர்வு வாழ்க்கைக்கு அல்ல எல்லாமும்.   இயறகைக்காகவும் பிற உயிரினங்களின் வாழ்வுரிமைக்காகவும்  அவை   என்பதை வலியுறுத்தியவர் .
அவர் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில்  அக்கறை கொண்டு கருத்துக்களை முன்வைக்கிறார் ஒரு நாளைக்கு 100 உயிரினங்கள் வீதம் ஒரு வருடத்திற்கு ஒன்றரை  லட்சம் உயிரினங்கள் மனிதர்களால் அழிகின்றன . இது இயற்கை ஏற்படுத்தும் உயிரின அழிவை விட பத்தாயிரம் மடங்கு அதிகம்.  சூழல் சமன்பாட்டை உருவாக்க உலக மக்கள் தொகை 100 மில்லியன் அளவிற்கு இருக்க வேண்டும் என்றார்.
 மனிதர்களுக்கு பூமி மீது எவ்வளவு உண்மையோ அதே அளவு உரிமை மற்ற உயிரினங்களுக்கும் உண்டு என்பதை நம்பியவர் . ஆர்ணே  நேஸ்.
அதை நம்பாமல் நம் நுகர்வு வாழ்க்கை இயற்கையிலிருந்து விலகி ரொம்ப தூரமாய் போய்க் கொண்டிருக்கிறது .வியாதிகளும் மருத்துவமனைகளும் நெருங்கி வந்து விட்டன.
8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003