சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 20 பிப்ரவரி, 2019

கலாப்ரியாவின் நாவல் வேனல்   
கோவை வாசக சாலை இலக்கியச்சந்திப்பில் நான் பங்கு பெற்ற கலாப்ரியாவின் நாவல் வேனல்  பற்றிய என் கட்டுரை இந்த் வாரம் புதிய தலைமுறை இதழில் சுருக்கப்பட்டு வெளிவந்திருக்கிறாது. முழு கட்டுரையை என் இணைய தளத்தில்



கலாப்ரியாவின் வேனல் நாவல்: சுப்ரபாரதிமணியன்

மிக நுணுக்கமான வாசிப்பைக்கோரும் இந்நாவலில் கலாப்ரியாவின் கை தேர்ந்ததாய் மிளிர்கிறது. கவிஞர்கள்  உரைநடையாளர்களாக மாறும் போது ஏற்படும் நடையில் காணப்படும் மிகை மினுக்கம் இந்நாவலில் இல்லை. காரணம்  முன்பே கலாப்ரியா எழுதிய கட்டுரை நூல்களும் சசிப்ரியா என்ற பெயரில் எழுதிய கதைகளும் அவரின் பயிற்சிக்களங்களக இருந்துள்ளன. திருனெல்வேலி பிள்ளைமார் சமூகம் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு இந்நாவல் பல சிரமங்களைக் கொண்டிருக்கும். ஆண் பெண் கதாபாத்திரங்களின் பெயர்களே ஆரம்பத்தில் மிரட்சி கொள்ளச் செய்யும். உதாரணமாய் குளத்து, திரவியம், வேயண்ணா போன்றவை ஆண் பெயரா, பெண் பெயரா என்றக் குழப்பம் எனக்கு முதலில் வந்தது, நாவலில் கால அளவை தெரிந்து கொள்ளவும் நுணுக்கமான வாசிப்பு அவசியமானது. காமராஜ் முதல்மைச்சர், சென்னை பெயர் மாற்ற, என்னெஸ் கிருஷ்ணன் படங்கள், கலைஞரின் கதைகள், பெரியாரின் பேச்சு , படகோட்டிப் படம் வெளியானது, திமுகவின் எழுச்சி போன்றவையே நாவலின் காலம் பற்றி யூகிக்க முடிகிற களங்கள்.உரையாடலில் கொட்டேசன் போன்றவை பயன்படுத்தப்படாமல் வரிசையாக சொல்லப்படுவதும் வாசிப்பை நுணுக்கமாக்குகிறது. பல சமயங்களில் குழப்பமாக்குகிறது..அதிலும் பிளாஸ்பேக் எது, நிகழ் காலம் எது என்று தெளிய நேரம் அக்ப்படும் வரை சிரமம்தான் .  திருனெல்வேலியைச் சார்ந்த நாலைந்து வீதி மக்களின் வாழ்க்கை சொல்லப்பட்டதில்  நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள். அதிலும் பெரும்பான்மை பெண்கள்.  என்னை பாதித்த இரு பெண்கள் மீனாவும், சாந்தாவும். மீனா மனநல பாதிப்புற்று சிரமப்படுவதால் குடுமபம் அல்லல்படுகிறது. சாந்தாவின் அலைக்கழிப்புகள் நாவல் முழுக்க நிரம்பியுள்ளது.கேரளப் பெண் நாடகம் போடுவது . நடிக்க ஆர்வம் உள்ளவள். கைவைத்தியம் சமையலில் தேர்ந்தவள். ஒரு நிலையில் குழந்தை இல்லாமல் போவது அவளை வெகுவாக பாதிக்கிறது.சிவசுப்ரமணியம் என்ற ரிஜிஸ்தார் குடும்பம் முக்கியமாகிறது  நெல்லையப்பர் கோவிலைச் சுற்றியிருக்கும்   பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்த சிலகுடும்பங்கள். தெய்வு சாந்தா ஒருதம்பதி. திரவியம் மீனா இன்னொரு தம்பதி. சாந்தா மீது சிலருக்கு சபலம் திரவியம் போன்றோருக்கு வெளியிலும் பெண் சகவாசம்.செலவாளி .கடன். சொத்து விற்று ஜப்தியாகும் நிலை கூட.கணவன் பெயரைக் கூட வெளிப்படையாகச் சொல்லத்தயங்கும் பெண்கள்.  . காங்கிரஸ் முக்கியக்  கட்சியாக இருந்த காலம். திமுக எழுச்சி பெற்று வந்த நிலைகள். இளைஞர்கள் திமுகவில்.சிறுகடைகள் வைத்திருப்போர். அதில் வேலை செய்பவர்களுக்கும் முதலாளிக்கும் தொழிலாளி முதலாளி உறவு இல்லை. நெருக்கமாகவே இருக்கிறார்கள். விசாசம் என்றால் தெருவில் உள்ளவர்கள் கூடுவது, திருவிழா விசேசங்கள் முக்கியமானவை. உறவுச்சிக்கலகள் . குடும்பங்களில் பாலியல் வெளிப்டையாக இல்லாமை. தகாத உறவில் பிறந்து பெண்ணை திருமணம் செய்ய நிணைக்கும் ஒருவன். சீர்திருத்தக் கல்யாண எழுச்சி.பிள்ளை வளர்ப்பு முறை , ஜாதகம் அலைக்கழிப்பு  . சபலப்புத்தி கொண்ட ஆண்கள். அன்பின் வெளிப்பாடு இல்லாத்தும், புரிதல் இல்லாத்தும் பலரை சிக்கலாக்குகிறது. மரியாதை மூதவர்களுக்கு.. அம்மா மகள் , மாமியார் மருமகள் ஒரே சமயத்தில் கர்ப்பிணிகளாகும் விசயங்கள், திருனெல்வேலி மக்களின் கேலி, கிண்டல், நக்கல் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தெய்வு சிறு ஜவுளிக்கடை  வைத்திருப்பவன். அவனின்பிறருடனான நெருக்கமான உரையாடல்கள். மனைவி சாந்தா நாடாகக்கிறுக்கு. கைவைத்தியம்( மலையாள வைத்தியர் கெட்டான் போங்கள்) , கைச் சமையலில் நேர்ச்சியானவள். ஏற்றிய விளக்கின் சுடர் போன்றவள். ஆனால் குழந்தையில்லை, கணவனுடன் நெருக்கமாக இல்லை என்பது பிரதானமாக இருக்கிறது. சபலப்புத்தி கொண்ட பல ஆண்களில்  மந்திரம் முக்கியமானவன். அவன் சாந்தாவின் மேல் மையல் கொண்டு நெருங்குகையில்  அவளே ஆடையை களைந்து விட்டு உக்கிரமாகி அவனை எதிர்க் கொண்டு அவனை நடுங்கச் செய்கிறாள் ( அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலில் சந்திரசேகர் மதக்கலவரச் சூழலில் எதிர்க் கொள்ளும் ஒரு முஸ்லீம் பெண் தன் ஆடைகளைக்களைந்து விட்டு நிர்வாணமாக்கிக் கொண்டு  தன் உயிரைக்காப்பாற்ற நிற்பாள்.) அதுவே தெய்வுடனான உறவை பல நாட்கள் பாதிக்கிறது.பிறகு அவனுடன்  நெருக்கமாகி தாய்மையை அடைகிறாள். இந்திய மரபில் தீர்த்த யாத்திரை, சமயம் சார்ந்த சடங்குகள், லவுகீக வாழ்க்கையின் சாதரணத்தன்மையோடு நாவல் முழுக்க கட்டமைக்கப்பட்டிருக்கிறது.வீரலட்சுமி என்ற பெண் கணவன் இல்லாதவன்  மகள் இருப்பது வெளியில் தெரியாமலே வாழ்கிறவள்.. சாந்தாவின் மலையாளச் சூழல் பல இடங்களி சொல்லப்பட்டிருக்கிறது.  என்ன விசயமானாலும் சத்தம் பற்றிக்க மாட்டான், மலையாளப் பெண் சொல்லாமலே பறையாமலே போயிட்டா போன்ற சொல்லாட்சிகள் புரியவில்லை.
  நுணுக்கமான விவரிப்பில் கலாப்ரியா கை தேர்ந்தவராக இருக்கிறார், பனைநார்  ஈச்சம் சேரில் முடையிட்ட கொசுக்கள். பேச்சில் எஙழ்ழா போனே , தோசை வார்த்தல். லட்டு பிடிப்பு, சடங்குகளின் விஸ்தாரம் எல்லம் பிரமிப்பூட்டுபவை.. சாதி சமூக நிலைகள் தெளிவாகச் சொல்லப்பட்டாலும் அதன்  முரன்பாடுகள்  அதிகம் சொல்லப்படவில்லை. சமூக வாழ்வியலில் தென்படும் மனிதர்கள் சுலபமான லவுகிக வாழ்க்கைச் சிமிழுக்குள் அடைபட்டுப் போகிறார்கள். இவர்களின் மறுபக்கமாய் ஜாதிய முரண், கீழ்மேல் படிநிலை, திராவிட அரசியல் தந்த மாயமோ,விசித்திரமோ, அப்பகுதியின் வெவ்வேறு போராட்ட நிலைகளோ சொல்லப்படவில்லை.  கலைடாஸ் ஸ்கோப் போன்று விதவிதமான மனிதர்கள் ..மைக்றாஸ்கோப் பார்வையில் அவர்களின் வாழ்க்கை நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருகிறது . பழைய துணி தானா தொலைஞ்சா சனியன் விட்டது போன்ற பழைய மனிதர்கள் தொலைந்து போகிறார்கள். மிக நுணுக்கமான வாசிப்பைக்கோரும் இந்நாவலில் கலாப்ரியாவின் கை தேர்ந்ததாய் மிளிர்கிறது
( கோவை வாசக சந்திப்பு நிகழ்ச்சியில் டிசம்பர் மாதம் பேசியது )
( ரூ350 சந்தியா பதிப்பகம் ., சென்னை வெளியீடு )