சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

வெள்ளி, 24 மார்ச், 2017

அஞ்சலி  : அமரர் அசோகமித்திரனோடு....
---------------------------------------
நான் வெளியிட்ட கனவு இதழின் அசோகமித்ரன் சிறப்பிதழ்.்நன்றி கட்டுரைகளைத் தொகுத்த ஜெயமோகன். கனவு இதழ் 21 .1993
அசோகமித்ரன் 77 என்றுு அவர் படைப்புகள் பற்றி ஜெயமோகன், அரவிந்தன், திலீப்குமார் உட்பட பலரின் 10 கட்டுரைகள் தொகுத்து புத்தகம் கொண்டு வந்திருக்கிறேன். இப்போது அவருக்கு 85. முன்பு அவரைப்பற்றி கனவு ஒரு சிறப்பிதழ் கொண்டு வந்தது. பின்னால் அதுவே ஒருதொகுப்பாக சில கட்டுரைகள் சேர்த்து கொண்டு வந்தேன் .இப்போது அசோகமித்ரன் 77
அசோகமித்திரனின் இரு கதைகளைச் சொன்னேன் மாணவர்களிடம்..ஒரு கதை..
ரிக்‌ஷா..
1. வெளியே போகணும் . ரிக்‌ஷா கூட்டி வா .. ரிக்‌ஷா சொல்லு
2. ரிஷ்கா 
1. ரிக்‌ஷா இல்லே ரிக்‌ஷா
2. ரிஷ்கா 
1. ரிக்‌ஷா இல்லே ரிக்‌ஷா
2. ரிஷ்கா 
1. ரிக்‌ஷா இல்லே ரிக்‌ஷா ரி க்‌ ஷா..
2. . ரிஷ்கா 
1. ரிக்‌ஷா இல்லே ரிக்‌ஷா.. ரி க் ‌ஷா
2. . ரிஷ்கா 
1.  செரி போய் ஒரு  ரிஷ்கா  கூட்டிட்டு வா..