சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

வியாழன், 16 மார்ச், 2017

          கனவு இலக்கிய வட்டம் - உலக கதை சொல்லி  தினம்  “
----------------------------------------------------------------------
* கனவு இலக்கிய வட்டம்   சார்பில் ““ உலக கதை சொல்லி  தினம்  “
 20/3/17 திங்கள் காலை 11.00 மணி :
தாய்த்தமிழ்ப்பள்ளி  பாண்டியன் நகர் விரிவு, பி.என். சாலை. திருப்பூர்
* “ கதை சொல்லி ”   சிறுவர் கதை எழுதும் போட்டிப் பரிசளிப்பு
* உலக கதை சொல்லி  தினம்  “  உரைகள்
* “ கதை சொல்லும் கலை “ சுப்ரபாரதிமணியனின் சிறுவர் நூல் மறுபதிப்பு வெளியீடு
* The art of story telling  “ சுப்ரபாரதிமணியனின் புதிய  சிறுவர் நூல்
 ஆங்கிலபதிப்பு வெளியீடு
பங்குபெறுவோர் :
* கீதா ( மனநல ஆலோசகர் )
* கலாமணி ( சக்தி மகளிர் அறக்கட்டளை  )
* எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
* எழுத்தாளர் ஜோதி
* மருத்துவர் முத்துச்சாமி (  பள்ளி தாளாளர் )
வருக..