சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

புதன், 22 மார்ச், 2017


கனவு இலக்கிய வட்டம்: உலக கதை சொல்லி தினம் - விழா

              1         
 கனவு இலக்கிய வட்டம் சார்பில்  “உலக கதை சொல்லி தினம் - விழா “ கொண்டாடப்பட்டது கனவு ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான கதை எழுதும்    “ கதை சொல்லி.. “ போட்டியை நடத்தி வருகிறது. இவ்வாண்டில் அப்போட்டிக்கு தமிழகம் முழுவதுமிருந்து 146 கதைகள் வந்திருந்தன. அதில் 20 கதைகள் தேர்வு செய்யப்பட்டு ரூ5000 பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு தபாலில் பரிசுகள் அனுப்பட்டன.
        திருப்பூர் பகுதி பள்ளிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு  20/3/17 திங்கள் காலை 9-30 மணி : முருகு மெட்ரிக்குலேசன் பள்ளி , கூத்தம் பாளையம், அண்ணாநகர் விரிவு, பி.என். சாலை. திருப்பூர்   நடைபெற்றது. மனநல ஆலோசகர் கீதா பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
அன்றைய பெற்றோர்கள்   உணர்வு   பூர்வமாக குழந்தைகளை வளர்த்தனர். இன்றைய பெற்றோர்கள்  உணர்ச்சி  பூர்வமாக வளர்க்கின்றனர்.
இரண்டுக்கும் வித்தியாசம்  உணர்வு என்பது  உடல்  மனத்தேவைகள் அனைத்தையும் உணர்துகொண்டு செயல்படுவது
உணர்ச்சி என்பது  அந்த நேரத்தில் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வது.
நமது நிறைவேறாத கனவு குழந்தையின் தலையில் ஏற்றப்படுகிறது. எல்லா குழந்தைகளும் 100 க்கு 100 வாங்கமுடியுமா? குறைவான மதிப்பெண் பெறும் குழந்தை வேறு ஏதோ ஒன்றில் சிறந்து விளங்கும். அதுவே எதிர் காலவிதை விதையுங்கள்  என்றார் .
பாண்டியன் நகர், கூத்தம்பாளையம் பிரிவு, பெருமாநல்லூர் பகுதிகளைச் சார்ந்த 13 குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்,  பள்ளி நிர்வாகி பசுபதி, முதல்வர் சசிகலா  உட்பட்டோர் கலந்து கொண்டனர். கதைகளை தேர்வு செய்த செல்வராஜ் கவுரவிக்கப்பட்டனர்.  கதை சொல்லும் பயிற்சியைப் போல் கதை எழுதும் முறைகளை குழந்தைகள் கடைபிடிக்க வேண்டியது பற்றி பலரும் பேசினர் .
 கனவு இலக்கிய வட்டம்  “ சார்பில் சுப்ரபாரதிமணியன் பேசியபோது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசியது: கதை சொல்லும் மரபு விடுபட்டு விட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். பாட்டிகளும் முதியோர்களும் முதியோர் இல்லங்களில் தஞ்சமடைகிறார்கள்.தொலைக்காட்சிகள் அந்த இடத்தை  எடுத்துக் கொள்ளமுடியாது. கதை சொல்லலில் கற்பனைத் திறன் வளரும். பேச்சில் கூச்சம் இல்லாமல் போகும். தன்னம்பிக்கை வளரும். கதை கேட்காத,  கதை சொல்லாத தலைமுறைகளால் மொழித்திறன் வளராமல் போகும். மேலை நாடுகளில் கதை சொல்லல்  பாடத்திட்டத்தில்  ஒரு பகுதியாக உள்ளது. பாடப்பகுதிகளை கதைகளாகச் சொல்வதும் மாணவர்களுக்கு பாடங்களை எளிதில் புரிய வைக்க உதவும். இலக்கியப் பகுதிகளை கதைகளாக்கி  பாடங்களை மனப்பாடம் செய்வதைத் தவிர்க்கலாம் என்றார்.
             2
    உலக கதை சொல்லி தினம் -விழா பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பாள்ளியில் “நடைபெற்றது   1. * “ கதை சொல்லும் கலை “ சுப்ரபாரதிமணியனின் சிறுவர் நூல் மறுபதிப்பு வெளியீடு , * 2 . The art of story telling  “ சுப்ரபாரதிமணியனின் புதிய  சிறுவர் நூல்  ஆங்கிலபதிப்பு வெளியிடப்பட்டன. சக்தி மகளிர் அறக்கட்டளை தலைவர் கலாமணி, சைராபானு ஆகியோர் வெளியிட்டனர். கீதா, கிருஷ்ணகுமாரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர் .
புகைப்படத்தில்: கிருஷ்ணகுமாரி, சைராபானும் கலாமணி, கீதா , சுப்ரபாரதிமணியன்
புகைப்படங்கள்: முகநூல் :Kanavu subrabharathimanian tirupur

செய்தி : சுப்ரபாரதிமணியன்