சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

செவ்வாய், 25 அக்டோபர், 2016

“ நைரா “ இறையன்பு –கேள்வி பதில் பகுதியில் ( ராணி )
சுப்ரபாரதிமணியன் எழுதிய “ நைரா “ என்கிற நாவலைப் படிக்க நேர்ந்த்து. உலகமயமாக்கலின் பக்கவிளைவுகளை பக்காவாகப் பேசுகிறது. அன்னிய நாட்டில் இருந்து வருபவர்கள் ஏற்படுத்தும் பண்பாட்டுத் தாக்கத்தையும் பணத்தின் பின்னால் ஓடுபவர்களுடைய பரபரப்பு விதி மீறல்களையும் சொல்லிச் செல்லும் புதினம். இடையிடையே பல க்குறியீடுகளைச் சொருகி, புதினத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறார். சுற்றுச்சூழல், மானுட விடுதலை குறித்தும் தொடர்து சிந்திக்கும் இவரின் முக்கியமான படைப்பு இது ( ரூ 180, என்சிபிஎச் வெளியீடு )