சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

சனி, 29 அக்டோபர், 2016

           பாண்டியன்நகர்  தாய்த்தமிழ்ப்பள்ளி
              8/134 பாண்டியன் நகர், திருப்பூர் 

தாய்மொழிக்கல்வி தரும் மேம்பாட்டுச் சிந்தனைகளை தமிழர்களை விட மற்றவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.உதாரணமாக நான் வாழும் ஒடிசாவில் வாழும் அம்மாநில மக்கள்  அவர்களின் தாய்மொழியை உயிருக்கு ஒப்பாக எண்ணுகிறார்கள். அவ்வகையான எண்ணங்கள் தமிழர்கள் மத்தியில் பெருகவேண்டும். ஒடிசா புவனேசுவர் தமிழ்ச்சங்கம் வெளிமாநிலத்தில் இருக்கும் தமிழர்கள் தமிழினை நன்கு கற்றுக் கொள்ளும் வகையில் விடுமுறை நாட்களில் ஒடிசா புவனேசுவர் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வகுப்புகளை நட்த்துகிறோம்.  ஒடியா எழுத்தாளர்களை அழைத்து வந்து அவர்களின் கலாச்சார அம்சங்களை விளக்கச் சொல்கிறோம். வெவ்வேறு மாநிலத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்கள்  ஒடிசா புவனேசுவர் தமிழ்ச்சங்கத்திற்கு வந்து தங்கள் படைப்புகளை  எங்கள் மாநில தமிழர்களுடன் பரிமாறிக்கொள்கிறார்கள் “ என்று  ஒடிசா புவனேசுவர் தமிழ்ச்சங்கம் தலைவர் துரைசாமி பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் வியாழன் அன்று மாணவர்கள் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டார்.
திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த ஒடியா எழுத்தாளர் ஜேபிதாசின் “ உயில் மற்றும் பிற கதைகள் “ நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.அந்நூலில் ஜேபிதாசின் 20 ஒடியாச் சிறுகதைகளை ஆங்கிலவழியில் சுப்ரபாரதிமணியன் மொழிபெயத்திருக்கிறார். 260 பக்கங்கள் ரூ 160 . வெளியீடு சாகித்ய அகாதமி, சென்னை வெளியீடு. ஒடிசா புவனேசுவர் தமிழ்ச்சங்கம் தலைவர் துரைசாமி பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளிக்குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசளித்தார்.
கூட்டத்தில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், மருத்துவர்  முத்துச்சாமி, த்லைமையாசிரியை கிருஷ்ணகுமாரி , கல்வி ஆலோசகர் தங்கவேல், மனோகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.