சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

          திருமதி பிரேமா நந்தகுமார் அவர்களின் கடிதம் :

அன்புள்ள திரு சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு
நமஸ்காரம்.
நூல்கள், கனவு இதழ்கள் ஆயிரம் விஷயம் தாங்கி வந்துள்ளன. மிக்க நன்றி.  தங்களது பொறுமை அசாத்தியமானது.  ஆதிவாசிக்கவிதைகள் படிக்கும்போது எப்படி உன்னிப்பாக அனைத்தையும் கவனித்திருக்கிறீர்கள் என்று ஆச்சரியப்படுகிறேன். "பத்து ருபா வெத்தலைக்கு உங்க கிட்ட கை ஏந்தரம்.  எவ்வளவு ஏக்கம், வேதனை, இதுதான் வாழ்க்கை என்று அந்த குமிழிக்குள் முழுகிப்போவது -- என்ன உலகமடா!
இப்பொழுது பணத்தில் புரளும் புரட்டு மனிதர்களைப்பார்த்து மேலும் வ்யிறு  எரிந்திட வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன.

தாங்கள் இது பற்றி  எல்லாம் நிறைய எழுதி வருவதும், மற்றவர்கள் எழுதுவதை ஊக்குவிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது, புது மாதிரியான சிறுவர் கதைகள். என் கணவர் ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி நடத்தும் ஆறு பள்ளிகளுக்கு Hon.correspondent. இன்று பிரச்சினையே பள்ளிப்படிப்பு என்று ஆகிவிட்டது.
குகைகளின் நிழலில்  நூலைக் கடைசியாக எடுத்தேன், ஒரு இனிய அதிர்ச்சி!  எனக்கு சமர்ப்பணம் செய்துவிட்டீர்களே!  நான் செய்ததேதும் இல்லையே!  உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.  சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் -- மலாயா சென்றிருந்தேன்.  உலகத்தமிழ் மாநாட்டில் பாரதி பற்றி பேசும் வாய்ப்பு.  அதைவிட, ஒரு வார காலம் கி.வ.ஜ'; மு.வ., ஐராவதம் மகாதேவன் போன்ற வர்களுடன் பழகும் வாய்ப்பு, இதெல்லாம் நினைவில் மலர்ந்தன. செரம்பான் முதலிய சில இடங்களுக்குப்போய் பேசியது நினைவுக்கு வந்தது.  , ஜெர்மனி, பிரான்ஸ் தேசத்தவர்கள் தமிழில் பேசியது  எனக்கு மிகவும ஆச்சரியமாக இருந்தது. நான் ஆந்திராவிலேயே வளர்ந்து, பிகாரில் வாழ்ந்து வந்ததும் ஒரு காரணம்.
எனக்கு முதுகில் ஏற்பட்ட disc prolapse காரணமாக என்னால் முன்போல் எழுத முடிவதில்லை. இரண்டு மாதங்கள் படுக்கையிலேயே இருக்கவேண்டியதாயிற்று (இதுவரை இப்படி ஏதும் எனக்கானதில்லை) டாக்டர் சிரிக்கிறார்:  மாமி! "வயசை மறந்துடறேளே! " வீட்டு வேலை செய்தும், எழுதியும், படித்தும் பழகிவிட்டது.  கூடியவரை  செய்கிறேன்.  இதுவும் ஒரு பரீக்ஷைதான்! பாஸ் பண்ண முயற்சிக்கிறேன்!
குகைகளின் நிழலில் நான் அறிந்திராத மனிதர்களை, சம்பவங்களை முன் வைக்கிறது.  அதனால்தான் முதலிலேயே எழுதினேன்: நீங்கள் அனுப்பிய நூல்கள் ஆயிரம் விஷயம் தாங்கி வந்துள்ளன.  அதனால் தங்க்ளது கதைகளைப்படிப்பதும் turns out to be an education in sociology!
மீண்டும் நன்றி.
அன்புடன்
பிரேமா நந்தகுமார்