சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

இந்து தமிழ் : கனவு இதழ் அறிமுகம்
---------------------------------------
தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளரும் நாவலாசிரியருமான சுப்ரபாரதி மணியன் 30 ஆண்டுகளாக நடத்திவரும் சிற்றிதழ் `கனவு'. ஆந்திர மாநிலத்திலுள்ள செகந்திராபாதில், தெலுங்கு இலக்கியத்தைத் தமிழர்களிடம் அறிமுகம் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இதழ் இது.1993-ம் ஆண்டு ஏப்ரலிலிருந்து திரூப்பூரை மையமாக வைத்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதுவரை 81 இதழ்கள் வெளிவந்துள்ளன. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோருக்கான சிறப்பிதழ்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் சலனத்தை ஏற்படுத்தியவை. ஆதிவாசிக் கவிதைகள் சிறப்பிதழாகத் தற்போது `கனவு' வெளிவந்துள்ளது.

> 94861 01003, 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602. ஆண்டுக்கு ரூ 100
>>subrabharathi@gmail.com