சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

காடுகள் : உலகின் உயிர் மண்டலம்
ஓவியர் ந.தமிழரசனின் சுற்றுச்சூழல்  ஓவியக்கண்காட்சி  3/2/16  புதன் அன்று
ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.  

கே .சரவணன்( முதல்வர் ), பி.சிவகுமார் ( முதன்மை செயல் அலுவலர்)
ஓவியர் ந.தமிழரசன் , பேரா.சதீஷ்குமார்  ஆகியோரும் இயறகையைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினர்.

ஓவியர் ந.தமிழரசன்  மாவட்டத்தில் ஒரு நாள் என்று தமிழகம் முழுவதும் இக்கண்காட்சியை நடத்தி  வருகிறார்.  நேற்று திருப்பூரில் நட்த்தினார்.

 அவர் பேசுகையில் ;

நாட்டின் எதிர்கால சந்ததிகளான மாணவ சமுதாய்ம் இயற்கையைப் பேணிப் பாதுகாக்க வேண்டும, அதற்கான மன எழுச்சியை இது போன்ற கண்காட்சி மூலம் பெற வேண்டும். இயற்கையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை பிறரிடம் ஏற்படுத்த வேண்டும்

 ஈர நிலம் “ என்ற சுற்றுச்சூழல் அமைப்பு தமிழகம் முழுவதும் இந்தக்கண்காட்சியை தினம் ஒரு மாவட்டம் என்ற வகையில் நடத்தி  வருகிறது. 
மாணவர்கள் பெரும் திரளாக கண்காட்சியைக்கண்டு நவீன ஓவியம் பற்றிய பல் எண்ணங்களியும் பகிர்ந்து கொண்டனர்.