சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

சனி, 30 ஜனவரி, 2016

திருப்பூர் புத்தகக் கண்காட்சி : முதல் நாள் எழுத்தாளர்களுக்குப்  பாராட்டுக்கு..
---------------------------------------------------------------------------------------------------------------
           
            குழந்தைகள் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே எனது வாழ்நாள் லட்சியமாகும்' என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தி சமீபத்தில் தெரிவித்தார். அவர் தொன்னூறுகளில் குழந்தைத் தொழில் ஒழிப்புப் பணியில் திருப்பூரில் ஈடுபட்டிருந்தார். அவருடன் இணைந்து செயல்பட்டிருக்கிறேன்.
ஆரோக்கியம், கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு, சட்டங்கள் என அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து, வலுவான திட்டம் ஒன்றை உருவாக்கும் பணியில் குழந்தைகளுக்கான எதிர்காலத் திட்டங்களில் அவர் ஈடுபட்டுவருகிறார் தற்சமயம்..

இன்னும் எத்தனை நாள்களுக்குதான் திரைப்பட நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் நமது நாயகர்களாக நினைத்துக் கொண்டிருப்பது? குழந்தைகள் அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் புதிய தலைமுறை நாயகர்களை நாம் உருவாக்குவோம் என்கிறார் கைலாஷ் சத்யார்த்தி.


புதிய கதாநாயகர்கள் மாற்று கதாநாயகர்களாகவும் எதிர் கதாநாயகர்களாகவும் இருக்க வேண்டும். மாற்று அரசியல் , மாற்று கலாச்சாரத்தை உருவாகுக்கும் எதிர் கதாநாயகர்களாக அவர்கள் இருக்கவேண்டும். அந்தப்பணியில் இந்தப்புத்தகக் கண்காட்சியின் இந்த நூல்கள் ஈடுபடும். புதிய கதாநாயகர்களை இந்தப்புத்தகங்கள் உருவாக்கும். அதை உணர்த்தவே படைப்பாளிகளுக்குத் தரும் இந்த பாராட்டு ஒரு குறியீடாக அமைந்திருக்கிறது.

--- சுப்ரபாரதிமணியன்