ஆவணப்பட இயக்குனர்: மைக்கல் மூர்
====================================
34 வது டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழா 10 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கல்மூரின் " Capitalism, A Love story " என்ற ஆவணப்படம் குறிப்பிட்ட கவனம் பெற்றிருக்கிறது.
" நான் பொருளாதாரவாதியல்ல. மாற்றுப் பொருளாதாரத்திட்டத்தை தருவதற்கு நான் இல்லை, நான் ஒரு திரைப்பட கலைஞன்.நான் பின்தங்கிய மக்களுக்காக குரல் கொடுக்கிறேன்.கார்ப்பரேட் முதலைகள் அவர்களின் பணத்தை மட்டும் நேசிப்பதில்லை. உங்களின் பணத்தையும் நேசிக்கிறார்கள். போதும் என்ற வார்த்தை அவர்களின் அகராதியில் இல்லை." அமெரிக்காவின் பொருளாதாரநிலைகளை தொடர்ந்து விமர்சிக்கிறார்.
அவரின் " சிக்கோ ' ஆவணப்படம் பற்றி ' கனவு " 60 வது இதழில் ஒரு கட்டுரை எழுதிஉள்ளேன். அமெரிக்கா வலிமையான தேசம். பிச்சைக்காரர்கள் இல்லாத தேசெம் . செல்வம் கொழிக்கும் பூமியில் மருத்துவ வசதிக்குக் குறைவில்லை . அமெரிக்கர்கள் சுபிச்சமாக வாழ்கிறார்கள் என்ற வழக்கமான சாமான்ய கருத்துக்கள் பல ஆண்டுகளாக தகர்ந்து கொண்டிருக்கின்றன். மூரின் :" சிக்கோ" ஆவணப்படம் அமெரிக்காவில் இருக்கும் மருத்துவ பாதுகாப்பு இன்சூரன்ஸ் பர்றிய உண்மை நிலையை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது வெற்றிப்படங்களின் வசுல் தரத்தில் இந்த ஆவணப்படம் நல்ல வசூலை திரட்டியிருக்கும் அளவு அப்படத்தை மக்கள் பாரத்திருக்கிறார்கள் . குடிமககளின் உடல்நல பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தராத அமெரிக்காவின் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றின கேள்வியை மைக்கல் மூர் வெகு திடத்துடன் இப்படதி முன் வைத்திருக்கிறார்.
இக்கட்டுரையின் முழுமைக்கு கனவு 60ம் இதழ் படியுங்கள் ( 8./2635 பாண்டியன் நகர் , திருப்பூர் 641 602 ., ஆண்டு சந்தா ரூ50 )