அஞ்சுவண்ணம் தெரு=தோப்பில்மீரானின் நாவல்
===============================================
இஸ்லாம் சமூகம் பற்றிய யதார்த்தமான சித்தரிப்பை மனிதாபிமானம் ததும்ப தன் படைப்புகளில் கையாள்கிறவர் தோப்பில் முகமது மீரான். அவரின் துறைமுகம்,சாய்வு நாற்காலி, கடலோரத்து கிராமத்துக் கதை போன்ற நாவல்களுக்குப் பிறகு தற்போது வெளிவந்திருக்கும் நாவல் " அஞ்சுவண்ணம் தெரு " மூஸ்லீம் சமுக மக்களின் மரபான வாழ்க்கையை தொன்மங்களோடும் ஆசாரங்களோடும், சிதைந்த அவர்களின் கனவுகளோடும் சித்தரிக்கிறது.
" அஞ்சு வண்ணம் தெரு " வில் வெவ்வேறு வகைப்பட்ட கதாப்பாத்திரங்களை விவரித்துக்கொண்டு போவதாலே முஸ்லீம் சமூகம் பற்றிய மாற்றங்களையும் , கால மாற்றத்தின் முன் அச்சமூகம் திணறி, மூச்சுத்திணறும் ஜாதிய முரண்பாட்டுச் சூழல்களையும் முன் வைக்கிறார்.
வழக்கமான யதார்த்த கதை சொல்லல் பாணியே தோப்பிலின் பாணியாகும். அந்தப் பாணியில் தான் அறிந்த முஸ்லீம் சமூக மக்களின் வாழ்க்கையை திறம்பட எளிமையுடனும் எள்ளல் தன்மையுடனும் சொல்வது அவருக்கு இயல்பாக இருக்கிறது. நாஞ்சில்நாட்டின் ஒரு சிறிய தெருவின், மனிதர்களின் வாழ்க்கையை சமூக ஆவணச் சாட்சிகளாக நிலைநிறுத்துகிறார்.
=சுப்ரபாரதிமணியன்
( முழுமையான கட்டுரைக்கு " தீராநதி " செப்டம்பர் இதழ் பாருங்கள் )
அஞ்சுவண்ணம் தெரு =தோப்பில் மீரான் நாவல்
அடையாளம் வெளியீடு , 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி
விலை ரூ 130/