Friday, August 21, 2009

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா

சாகித்திய அகாதமி: புதுவையில் இலக்கிய திருவிழா
========================================================


சாகித்திய அகாதமி மூன்று நாள் நிகழ்ச்சிகளை புதுவையில் நடத்தியதி.


முதல் நாள் நிகழ்ச்சி: புதுவை சிவம் பற்றியது. ஒரு நெசவாளியாக வாழ்ந்தவரின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்ககையை பிரதிபலிப்பதை கவிஞர் சிற்பி பால சுப்ரம்ணியன் விளக்கினார். அ மார்க்சின் உரை அவரின் அரசியல் போராட்டத்தில் இலக்கியம் ஒரு ஆயுதமாகப் பயன் பட்டதை விளக்கியது முக்கிய கோணமாக இருந்தது.ராம குருநாதன் தலைமை உரை, இளங்கோவனின் அறிமுக‌ உரை
ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அரசு கலந்து கொள்ளாதது குறை.
சிவ இளங்கோவின் குடுப்பத்தினர் சரியான வகையில் நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி: ஆனந்தம் ரங்கம் பிள்ளையின் நினைவு நாள் நிகழ்ச்சி. பிரபஞ்சனின் உரையில் ஆனநத்ம் பிள்ளை டைரிக் குறிப்புகளை முன் வைத்து புதுவை கலாச்சாரம் பற்றிய ஆழமான ஆய்வாக இருந்தது. இரா மோகன், இந்திரனின் மே சு ராசுகுமார் கட்டுரைகளில் பிரஞ்சு கலாச்சாரம் தந்த பாதிப்புகளைப் பற்றிய நிறைய தகவல்கள் அமைந்திருந்தன. ஆனந்தம் ரங்கம் பிள்ளை பற்றி செல்வராசுவின் சாகித்திய அக்காதமி நூல் வெளியிடப்பட்டது.

மூன்றாம் நாள்: ஆரோவில்லில் சிறப்பாக நடை பெற்றது. சிற்பியின் உரை வ வே சு அய்யர், அரவிந்தர், பாரதியின் சிந்தைகள் தமிழில் நவீன கவிதைக்கு உரம் சேர்த்ததை விள்க்கியது. அரவிந்தரின் Future Poetry உண‌ர்வுகளை மறுத்து, ஏகாந்த‌த்த்தை விள்க்குவத்யும்,உரத்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை விள‌க்கினார்.கே எஸ் சுப்ரமணியத்தின் கட்டுரை விளிம்பு நிலை மக்களை பிரதிநிதிப்படுத்தும் கவிதகளை அடையாளப் படுத்தும் விதமாய், இருந்ததையும், சபல்ட்ரான் ஆராச்சியின் அம்சங்களையும் கொண்ட ஒரு சிறந்த் கட்டுரையாக அமைந்திருந்தது,



கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு இல தங்கப்பா தலைமை தாங்கினார். மாலதி மைதிரி, தங்கம் மூர்த்தி, பழமலை, விழி பா இதய வேந்தன், அன்பாதவன், சுப்ரபாரதிமணியன், மகரந்தன், மீனாட்சி, சேதுபதி , சிற்பி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். சிற்பியின் கவிதைகள் ஈழத்தின் நிலைமைகளை படிமமாக்கியிருந்தன‌. பழ‌மலையின் ஒரு கவிதை "சவரம் ' பற்றியதாக இருந்த‌த்தால் பல் பெண்கள் வெளி நடப்பு செய்தனர். ஆன்மீகக் கவிஞர் தலை குனிந்திருந்தார்.ராஜ்ஜாவும் சவரத்தைத் தொடர்ந்து ம‌யிர் கவிதைகளை வாசித்தார். அரவிந்தரின் சாவித்திரியிலிருந்து ஒரு பகுதி அன்னையிஅன்னையின் குரலில் ஒலிபரப்பட்டது வித்தியாசமான அனுபவ‌மாக இருந்து. இளம் பாரதி, பாரதி வசந்தன், புதுவை ரஜினி, குணவதி மைந்தன் , தமிழ் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்